Jump to content

கனடாவின் பாரிய மாநிலம் ஒன்ராரியோவின் 1 கோடியே 46 லட்சம் மக்கள் செவ்வாய் நள்ளிரவில் இருந்து இரு வாரங்கள் முடக்கப்படுகின்றனர்


Recommended Posts

கனடாவின் பாரிய மாநிலம் ஒன்ராரிகனடாவின் பாரிய மாநிலம் ஒன்ராரியோவின் 1 கோடியேபடம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், உரை 46 லட்சம் மக்கள் செவ்வாய் நள்ளிரவில் இருந்து இரு வாரங்கள் முடக்கப்படுகின்றனர்யோவின் 1 கோடியே 46 லட்சம் மக்கள் செவ்வாய் நள்ளிரவில் இருந்து இரு வாரங்கள் முடக்கப்படுகின்றனர்

https://www.680news.com/2020/03/23/premier-ford-announces-the-shutdown-of-non-essential-services/

 

நாளாந்தம் பாவிக்கும் மருந்து, மாத்திரை, insulin போன்றவற்றை 3 வாரத்திற் தேவையானவற்றைஎடுத்து வையுங்கள்

உங்கள் குடும்ப வைத்தியருடைய தொலைபேசி எண்ணை சரி பார்த்துக் கொள்ளுங்கள்

உங்கள் வழமையான மருந்தகத்தின் Pharmacy தொலைபேசி எண்ணை எழதி வையுங்கள்.

வீட்டிலே ஓய்வாக இருங்கள்

இந்த நாட்களும் கழிந்து போகும்

 

பெரும் குடிமக்களே! ஒன்ராரியோவில் மதுபானக் கடைகள் மூடப்படமாட்டா.. விற்பனைக்காக திறந்திருக்கும்.. எல்லாம்.. துட்டு.. மணி.. மணி.. 😂

 

லிபோனியாவில் ஆரம்பித்த முடக்கம் நியூயோர்க் இலினோய்ஸ் நியூஜேசி ஒகாயோ என நகர்ந்து தற்போது ஒன்ராரியோ கியூபெக் என வியாபித்துள்ளது..

Link to comment
Share on other sites

கனடாவில் கோவிட் வைரஸ் தொற்று எண்ணிக்கை இன்று இதுவரை 621 ஆக உயர்வு

இதற்கு முன்னர் கடந்த சனி எண்ணிக்கை 241

Link to comment
Share on other sites

அன்பான கனடியத் தமிழ் மக்களே,
 
உலகெங்கும் பரவிவரும் இந்த கோவிட்-19 என்ற நோய், கனடாவிலும் எல்லா இடங்களிலும் பெருகி வருகின்றது. உலகம் முன்னெப்போதும் சந்திக்காத காலத்தில் நாம் இருக்கிறோம். எம்மைச் சுற்றி மிகுதியான நிலையற்ற தன்மையும், கலக்கமும் நிலவுகின்றது. கனடியத் தமிழர் பேரவை எமது சமூக மக்களின் நலனில் மிகவும் அக்கறையாக உள்ளது. உங்களைப் போலவே நாமும் வரலாறு சந்தித்த பல தொற்று நோய்களைப் போல் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
 
எமது சமூகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் இந்த இடரிலிருந்து கூடிய வலுவுடன் மட்டுமல்லாது, கூடிய சமுதாய அக்கறையுடன் வெளிவரும் என்று திடமாக நம்புகிறோம்.
 
கனடிய அரசும், நாடளவில் இயங்கும் ஏனைய அரசுகளும், மக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் உதவ பல சிறப்பான நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார்கள். எமது சமூகத்துக்கு உதவும் வகையில் கனடியத் தமிழர் பேரவை, கனடிய அரசின் ஆதரவு நடவடிக்கைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் சுருக்கமாகத் தரவுள்ளது.
 
இத்தகைய இக்கட்டான காலத்தில், எமது மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும், வாணிப ஊழியர்களும், இன்றியமையாத கடமைகளை செய்யும் ஊழியர்களும், பல தொண்டர்களும் தன்னலமற்ற சேவைகளை வழங்கிவருகிறார்கள்; அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். அதேவேளை, நாமும் கோவிட்-19 பரவுவதைக் குறைப்பதற்கும், விரைவில் இந்நிலையிலிருந்து வெளிவருவதற்கும் எமது பங்கை ஆற்றவேண்டும்.
 
நாம் எமது சமூக இடைவெளியை உறுதிப்படுத்த வேண்டும். இது அனைவருக்குமே கடினமானது தான், ஆனாலும் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேறெந்த வழியுமில்லை. நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான பயனுள்ள இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன:
 
உலக சுகாதார அமைப்பு
 
கனடிய அரசு
 
நாங்கள் எல்லோரும் ஒரே சூழ்நிலையில் இருக்கின்றோம். இந்நிலை உறுதியாக மாறும். தயவுசெய்து வீட்டில், பாதுகாப்பாகவும், நம்பிக்கையுடனும் இருங்கள்.
 
உங்களுக்கு ஏதேனும் விபரங்கள் பற்றிய வினாக்களோ, ஐயங்களோ இருப்பின் எம்மை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்: info@canadiantamilcongress.ca
 
 
இப்படிக்கு உண்மையுள்ள,
 
 
சிவன் இளங்கோ
தலைவர்
கனடியத் தமிழர் பேரவை

590471ca-f6ed-4d97-8227-d082e3b2ce4b.jpg

Link to comment
Share on other sites

5 hours ago, ampanai said:

பெரும் குடிமக்களே! ஒன்ராரியோவில் மதுபானக் கடைகள் மூடப்படமாட்டா.. விற்பனைக்காக திறந்திருக்கும்.. எல்லாம்.. துட்டு.. மணி.. மணி.. 😂

மதுபான கடைகளை பூட்டினால் வேறு சிக்கல்கள் வரும் என்கிறது மாநில அரசு. ஆனால், என்ன மாதிரி சிக்கல்கள் என விளக்கம் தரவில்லை. 😉

Link to comment
Share on other sites

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

https://www.ontario.ca/page/how-your-organization-can-help-fight-coronavirus

 

வைத்தியசாலைக்கு செல்லாமல் உங்களுக்கு கோவிட்டின் தாக்கம் இருக்குமா இல்லையா என்பதை  சுய பரிசோதனை செய்யலாம் :

https://covid-19.ontario.ca/self-assessment/#q0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ampanai said:

மதுபான கடைகளை பூட்டினால் வேறு சிக்கல்கள் வரும் என்கிறது மாநில அரசு. ஆனால், என்ன மாதிரி சிக்கல்கள் என விளக்கம் தரவில்லை. 😉

குடிமகன்களுக்கு..... கைநடுக்கம் வந்திடும் என்று, மாநில அரசு பயப்பிடுது போலை.... 🤣

Link to comment
Share on other sites

கனடாவின் மூன்று நிலை அரசுகளின் கீழும் பல தனியார் நிறுவனங்கள் வருகின்றன. அதாவது மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மாநகர சபைகள். தற்போதைய நிலையில் ஒவ்வொரு ஆட்சி அலகும் பல்வேறு அறிவுறுத்தல்களை தொடர்ந்தும் விடுத்து வருகின்றன. இது எனக்கு பொருந்துமா? என்ற கேள்வி எழுவது சகஜமே. இங்கு மத்திய அரசின் கீழ் வருகின்ற தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் பட்டியல் வருமாறு

Banks
Marine shipping, ferry and port services
Air transportation, including airports, aerodromes and Airlines
Railway and road transportation that involves crossing provincial or international borders
Canals, pipelines, tunnels and bridges (crossing provincial borders)
Telephone, telegraph and cable systems
Radio and television broadcasting
grain elevators, feed and seed mills
uranium mining and processing
businesses dealing with the protection of fisheries as a natural resource
many First Nation activities

Link to comment
Share on other sites

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 'Ontario COVID-19 Update: March 20 Expanding screening and testing capacity Launched interactive of the self- elf-assessment tool Waiving the ree-month waiting period for OHIP coverage Covering the cost COVID-19 services for uninsured people who do not meet the criteria for coverage Measures to help contain spread of COVID-19 Only essential visitors allowed hospitals Helping students learn from the safety their own home with the new Learn at Home Portal Limiting the spread of COVID-19 in the correctional 8' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

Ontario continues to take steps to expand screening and testing capacity, while increasing measures to help contain the spread of #COVID19. Here’s today’s update. Let's all continue doing our part to #FlattenTheCurve.

Link to comment
Share on other sites

இடர்கள் நிறைந்த நேரத்தில் எமது பிரதமரால் அறிவிக்கப்பட்ட வீபரங்களை தமிழ் மொழியில் தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்

பாராளுமன்ற உறுப்பினர் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு தெரிவிப்பு

ஸ்காபுறோ ரூஜ்பார்க் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கி அவ்கள் எமது ஆசிரிய பீடத்திற்கு அனுப்பி வைத்த தமிழாக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது

கனேடியமத்திய அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக இணைக்கப்பட்டவை கீழே காணப்படுகின்றன

கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று பின்வரும் விடயங்களை அறிவித்தார்:

• மக்களுக்கு விரைவாக உதவியை வழங்குவதற்கான அவசர சட்டமூலம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆந் திகதி அதிகாலை நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் தற்போது செனட்சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும், மார்ச் 18 ஆந் திகதி அறிவிக்கப்பட்ட முதற்கட்ட அவசர நடவடிக்கைகளைச் செயற்படுத்திக் கனடியர்களுக்குத் தாமதமின்றி நிதி உதவியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கக் கூடியதாயிருக்கும்
• விண்ணப்ப நடைமுறையை எளிதாக்குவதற்கும், இலகுவாக நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்குமாக கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவைக் (Canadian Emergency Response Benefit (CERB)) கனேடிய அரசு அறிவித்துள்ளது:
- கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அவசர பராமரிப்பு உதவி, அவசர ஆதரவுக் கொடுப்பனவு ஆகிய இரண்டுக்கும் பதிலாக கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு (Canadian Emergency Response Benefit (CERB)) நடைமுறைப்படுத்தப்படும். மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறாகவும், நடைமுறையை எளிதாக்குவதற்காகவும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
- கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவின் (Canadian Emergency Response Benefit (CERB)) மூலம், கோவிட்-19 காரணமாக வருமானத்தை இழந்த பணியாளர்களுக்கு எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு மாதமொன்றுக்கு 2,000 டொலர் வீதம் வழங்கப்படும். இதில் பின்வருவோரும் அடங்குகிறார்கள்:
கோவிட்-19 காரணமாக வேலை இழந்த முழு நேர அல்லது ஒப்பந்த அல்லது சுய தொழில்புரியும் பணியாளர்கள்,
நோயுற்ற அல்லது கட்டாய மருத்துவ தனிமைப்படுத்தலுக்கு (quarantine) உட்படுத்தப்பட்டுள்ள அல்லது கோவிட்-19 தொற்றிய யாரையாவது பராமரிக்கும் பணியாளர்கள்,
பிள்ளைகளைப் பராமரிப்பதற்காகச் சம்பளம் இன்றி வீட்டில் தங்கியிருப்போர்
வேலை இருந்தாலும், நெருக்கடி நிலையால் சம்பளம் வழங்கப்படாதிருப்போர்.

- கோவிட-19 காரணமாக வேலையில் பாதிப்பை எதிர்கொள்ளும், வேலைக் காப்புறுதிக் கொடுப்பனவைப் பெறுவதற்குத் தகுதி பெற்றவர்களும் கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு (CERB) விண்ணப்பிக்கலாம்.
வேலைக்காப்புறுதி (EI) அல்லது வேலைக்காப்புறுதி சுகவீன கொடுப்பனவுக்கு (EI sick benefits) ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
தற்போது வேலைக்காப்புறுதிக் கொடுப்பனவைப் பெறுவோர், அவர்களது வேலைக்காப்புறுதிக் கொடுப்பனவு 2020 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மூன்றாந் திகதிக்கு முன்பாக முடிவடைந்தால், அது முடிவடைந்ததும் கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு (CERB) விண்ணப்பிக்கலாம்.
கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு (CERB) வழங்கப்படும் 16 வார காலத்தின் பின்னரும் வேலைவாய்ப்பு அற்றிருக்கும், வேலைக்காப்புறுதிக்குத் தகுதியான பணியாளர்கள், வழமையான வேலைகாப்புறுதிக் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இணையப் பக்கம் ஒன்றைக் கனடா வருமானவரி முகவரகம் (CRA) இயலுமான விரைவில் அமைக்கும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பத்து நாட்களுக்குள் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும்.

• கடந்த வாரத்தில் மட்டும் வேலைக்காப்புறுதிக் கொடுப்பனவுக்காக ஒரு மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. வழமையான காலத்தில் சராசரியாக 27,000 விண்ணப்பங்களே சமர்ப்பிக்கப்படும். அதிகரித்த தேவையை எதிர்கொள்வதற்காக:
- அரச பணியாளர்கள் இரவு பகலாகப் பணிபுரிகிறார்கள்,
- மார்ச் 16 ஆந் திகதியில் இருந்து ஏற்கனவே 143,000 வேலைக்காப்புறுதி விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுவிட்டன,
- அதிக எண்ணிக்கையான விண்ணப்பங்கள்; குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியிருப்பதால், வேறு திணைக்களங்களில் இருக்கும் பணியாளர்களையும் அரசு பயன்படுத்துகிறது,
- கடந்த பத்து நாட்களில் வேலைக்காப்புறுதி விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 1,300 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது,
- விண்ணப்ப நடைமுறையை வேகப்படுத்துவதற்காக, விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் தேவையான அதிகரித்த வல்லமையைக் கொண்டுள்ள கனடா வருமானவரி முகவரகம் கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான (CERB) விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளவுள்ளது.

• இந்தப் புதிய அறிவிப்புகள் கோவிட்-19 நெருக்கடியை எதிர்கொள்வதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளில் அடங்குகின்றன. மாறிவரும் சூழ்நிலையை எதிர்கொள்வதற்குத் தேவையான புதிய திட்டங்களும், உதவிகளும் எதிர்வரும் நாட்களிலும், வாரங்களிலும் செயற்படுத்தப்படும்.
• இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு ஏதாவது உதவிகளைச் செய்ய முடியுமாவெனச் சிந்திக்குமாறு அனைத்துக் கனேடியர்களிடமும் பிரதம மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.
• கோவிட்-19 இற்கான பரிசோதனை, பரிசோதனை முடிவுக்கான காத்திருப்பு நேரம் ஆகியவற்றை உள்ளடக்கிய முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும், அனைவருக்கும் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வதற்கும் கனேடிய அரசு மாகாணங்களுடனும், பிராந்தியங்களுடனும், முதற்குடிகள் (First Nations), இனுயிட் (Inuit), மேட்டி தேசம் (Metis Nation) ஆகிய சமூகங்களுடனும் இணைந்து செயலாற்றி வருகிறது. அத்துடன், முகமூடிகள், சுவாச உதவிக் கருவிகள், தடுப்பு மருந்துகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் என்பவற்றைத் தயாரித்து விநியோகம் செய்வதற்காக நிறுவனங்களுடனும், ஆய்வுகூடங்களுடனும், விஞ்ஞான நிறுவனங்களுடனும் அரசு செயலாற்றி வருகிறது.
• கனடாவில் தற்போது நாளொன்றுக்குப் 10,000 பேர் பரிசோதனை செய்யப்படுகிறார்கள். கனடாவின் தலைமைப் பொதுச் சுகாதார அதிகாரி மருத்துவர் தெரீசா ராம் (Dr.Theresa Tam) வெளியிட்ட இந்தப் புள்ளிவிபரம், கனடாவின் பரிசோதனை வல்லமை குறுகிய காலத்தில் மாபெரும் அதிகரிப்பைக் கண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.
• இந்த நெருக்கடி தொடர்பாகக் கனடா எமது சர்வதேச பங்காளிகளுடனும் செயலாற்றி வருகிறது.
- மார்ச் 25 ஆந் திகதி பிரதம மந்திரி சில தலைவர்களுடன் உரையாடினார்:
செனெகலின் ஜனாதிபதி சோள் (Sall), ருவாண்டாவின் ஜனாதிபதி ககாமே (Kagame) ஆகியோருடனான உரையாடலின்போது, மக்களைப் பாதுகாப்பதற்கான மூலோபாயங்கள் குறித்தும், இந்த உலகளாவிய பெருந்தொற்று நோயால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்iபை எதிர்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது.
எதியோப்பிய பிரதம மந்திரி அபிய் (Abiy), கென்ய ஜனாதிபதி கென்யாட்டா (Kenyatta) ஆகியோருடன், சர்வதேச ஒத்துழைப்புக் குறித்து அவர் ஆராய்ந்தார்.
- நாளை மார்ச் 26 ஆந் திகதி, கனடாவின் பதில் நடவடிக்கைகளை உலகளாவிய ரீதியில் மேலும் ஒருங்கிணைப்பது குறித்து ஜீ-20 நாடுகளின் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடுவார்.

• கனேடியர்களுக்கு உடனடிச் செய்திகளும், தகவல்களும் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடனும், ஊடகவியலாளர்கள் அவர்களது இன்றியமையாத பணியைத் தொடர்வதை உறுதி செய்யும் நோக்கத்துடனும் அவர்களுக்கு உதவியான புதிய நடவடிக்கைகளை அரசு அறிவிக்கவுள்ளது. கனேடிய பாரம்பரியம் தொடர்பான அமைச்சர் ஸ்ரீவென் கில்போ (Steven Guilbeault) பொதுச் சுகாதார விளம்பரங்களைக் கனேடிய ஊடகங்களில் வெளியிடுவதற்கு 30 மில்லியன் டொலரை ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக, ஊடகவியல் வரிச் சலுகைகளைப் பெறுவதற்குத் தகுதியுள்ள ஊடகங்கள் குறித்த சுதந்திர, பல்கலாச்சார, பல்லின ஆலோசனைச் சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஊடகவியல் வரிச் சலுகைகளைப் பெறுவதற்குத் தகுதியான ஊடக நிறுவனங்களுக்கு இருக்கவேண்டிய - தகுதிபெற்ற கனேடிய ஊடகவியல் அமைப்புக்கான (Qualified Canadian Journalism Organization - QCJO) தராதரங்களை இந்தச் சபை முடிவு செய்யும்

• அனைவரும் சமூக இடைவெளியைப் பேணுவதன் முக்கியத்துவதை மீண்டும் வலியுறுத்திய பிரதம மந்திரி, இந்த முக்கியமான நேரத்தில் கனேடியர்களுக்கு உதவிபுரிவதற்காகக் கடுமையாக உழைக்கும் சுகாதாரத்துறைப் பணியாளர்களுக்கும், அரச பணியாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

• மருத்துவ தனிமைப்படுத்தல் சட்டம் ( Quarantine Act ) இன்று நள்ளிரவு முதல் (12:00am March 26th, 2020) நடைமுறைப்படுத்தப்படுமெனச் சமஷ்டி சுகாதார அமைச்சர் பட்டி ஹய்டு (Patty Hajdu) அறிவித்துள்ளார். இதன்படி, கனடாவிற்குள் வரும் அனைவரும் கனடாவை வந்தடைந்ததில் இருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவேண்டியது சட்டப்படி கட்டாயமாக்கப்படுகிறது.

சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்ட பயணிகள், 14 நாட்களுக்குப் பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள் உட்பட்ட எந்தத் தேவைக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியே செல்வதற்குத் தடை விதிக்கப்படுகிறது. நோய் அறிகுறிகளைக் கொண்டிருப்போர், தொலைபேசி மூலம் அவர்களது உள்ளுர் பொதுச் சுகாதார அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மருத்துவ உதவி கோரவேண்டும்.

சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு முன்னர் விடுக்கப்பட்ட அறிவிப்புத் தற்போது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைப் பேணுதல், தனிமைப்படுத்திக் கொள்ளல் என்பன தொடர்பான விதிகள் பின்பற்றப்படாவிட்டால், மேலும் கடுமையான நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தப்படுமெனக் கனேடிய அரசு மீண்டும் வலியுறுத்துகிறது.

மேலதிக தகவல்களுக்கும், ஊடகங்களின் கேள்விகளுக்கும்:
டொறீன் சவுந்தரநாயகம்
Gary.Anandasangaree.C1A@parl.gc.ca
416 559 1749

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சனிபுறோக் மருத்துவமைனக்கு சென்று வருவது வழமை ..அந்த வகையில் இன்றும் போய் வந்தேன்..ஒரு குறிப்பிட்ட யூனிற்குள் சென்ற போது அங்கு நின்ற வைத்தியர் சிவரோடு சாய்ந்து நின்று மேலே பார்த்துத்த வாறு நின்றார்..இது எங்கே போய் முடியப் போகிறதோ என்ற எண்ணப்பாடு போலும்...இப்படியாகத் தான் வைத்திய  வட்டாரங்களின் நடை முறை இருக்கிறது.

 

 

Link to comment
Share on other sites

எனது (இந்திய) நண்பர் ஒருவர். முதன்மை வெளி மக்கள் வைத்தியர் (Chief emergency medical doctor) , வீட்டிற்கு வருவதில்லை. இரண்டு மகன்களை ஒருதடவை மட்டுமே வந்து பார்த்துள்ளார், கடந்த ஒரு மாதத்தில். 

அவர், தற்பொழுது உயிலை இலத்திரினியல் ஊடாக எழுதி உள்ளார். 

Link to comment
Share on other sites

 
Every Canadian who earned at least $5000 in the past year (regardless of eligibility for EI) and who has lost their income due to Covid-19 will soon be eligible for $500/week through the Canada Emergency Response Benefit. Sign up through your My CRA account

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

Link to comment
Share on other sites

ஸ்காபரோ முதியோர் தொடர்மாடிக் குடியிருப்பில் வசிக்கும் முதியோர்களுக்கான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை ஸ்காபரோ வணிகர்கள் வழங்கினர்.

ஸ்காபரோ முதியோர் தொடர்மாடிக் குடியிருப்பில் வசிக்கும் முதியோர்களுக்கான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை ஸ்காபரோ வணிகர்கள் வழங்கினர்.

ஏப்ரல் 6ஆம் திகதி, திங்களன்று, ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்கள், திரு. மனோ சுப்பிரமணியம் (TDOT Auto Collision) மற்றும் திரு. நவநீதன் கந்தசாமி (Allied Community Legal Services) ஆகியோருடன் இணைந்து 'ஸ்பிரெட் கைன்ட்னஸ்' எனும் முதியோர்களுக்கு உதவிக் கரம் கொடுக்கும் முயற்சியினூடாக ஸ்காபரோவிலுள்ள தொடர்மாடிக்குடியிருப்பில் வசிக்கும் 180 முதியோர்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வழங்கினர்.

'ஸ்பிரெட் கைன்ட்னஸ்' என்ற முயற்சி முதியோர்களுக்கு உதவிக் கரம் கொடுக்கும் வகையில் மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் விதத்தில் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொண்டுள்ள முதியோர் இல்லத்தில் வாழும் முதியோர்கள் அவர்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக விஜய் தணிகாசலம் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்ததையிட்டு இவர் இம்முயற்சியினை ஆரம்பித்து வைத்தார்.

"முதியோர் குடியிருப்பில் வாழும் ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து 120 முதியோர் இல்லங்களுக்குத் தேவையான பால், பாண், பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட உணவுகள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உடனடியாகத் தேவைப்படுவதாகத் தெரிவித்தார். எனவே, அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதையிட்டு நான் எனது நண்பர்களுடனும் எனது பகுதியிலுள்ள வணிகர்களுடனும் கலந்துரையாடினேன். இத்தருணத்தில் ஆச்சரியமளிக்கும் வகையில் முழுக் குடியிருப்புகளுக்குமான மளிகைப் பொருட்கள் அனைத்தையும் தாமே வழங்க முன்வந்த மனோ சுப்பிரமணியம் அவர்களையும் நவநீதன் கந்தசாமி அவர்களையும் நான் பாராட்டுகிறேன். இக்கட்டான இச்சூழ்நிலையில் ஒருவரையொருவர் பராமரிக்கும் ஒன்ராறியோவின் மாண்புக்கு இவர்கள் முன்னுதாரணமாக விளங்குகிறார்கள்" என சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார்.

"இக்கட்டான இவ்வேளையில் நாம் ஒரே சமுகமாக இணைந்து எமது முதியவர்களுக்கு ஆதரவளிப்பது இன்றியமையாதது. மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு பேசிய உடனேயே முதியோருக்கு உதவ ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைந்ததுடன், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உடனடியாகவே அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வழிவகைகளையும் மேற்கொண்டோம்" என மனோ சுப்பிரமணியம் (TDOT Auto Collision) தெரிவித்தார்.

இதுபற்றி நவநீதன் கந்தசாமி (Allied Community Legal Services) அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, "எம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பராமரிப்பதும் அவர்களைப் பாதுகாப்பதும் எமது கடமையாகும். சூழ்நிலைக்கேற்ப எமது முதியோர்கள் தம்மைத் தனிமைப்படுத்தும் சரியான முடிவை மேற்கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் தம்மையும் தம்மைச் சூழ உள்ளவர்களையும் பாதுகாக்க மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பது முக்கியமானதாகும்" என்றார்.

"வாரந்தோறும் முதியோர் குடியிருப்பில் உள்ள வயதானவர்களுக்குமான அத்தியாவசிய மளிகைப் பொருள்களை தன்னார்வலர்கள் வழங்கவுள்ளனர். இதன்போது, இவர்கள் உடல் ரீதியான சமுக இடைவெளி விதிகளைப் பேணுவதுடன், தொற்றுநோய் பரவல் தடுப்பு வழிமுறைகளையும் கடுமையாகக் கடைப்பிடிப்பர். கருணை மட்டுமே நாம் இத்தருணத்தில் பிறரிடம் பரப்பவேண்டியதொன்றாகும்" என மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்கள் தெரிவித்தார்.

நெருக்கடியான இவ்வேளையில், உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ மளிகைப் பொருட்கள், மருந்துகள் அல்லது அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படின், ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களின் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு vijay.thanigasalam@pc.ola.org என்ற மின்னஞ்சலில் அல்லது (416) 283-8448 என்ற எண்ணில் உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணுடன் தகவலையும் பதிவுசெய்யுங்கள்.

நன்றி

விஜய் தணிகாசலம்
ஸ்காபரோ - றூஜ் பார்க்கிற்கான மாநில சட்டமன்ற உறுப்பினர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் மேஜை

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார், காலணிகள், சூட் மற்றும் வெளிப்புறம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராடடப படவேண்டிய விடயம்.      நன்றி

Link to comment
Share on other sites

For a long time, the messaging from Canadian health officials was that the novel coronavirus outbreak risk for Canadians was low and that efforts would be concentrated on containing the spread. Government officials were also guided by advice from the World Health Organization, which had initially discouraged travel restrictions, border closures and the wearing of masks, positions that were later criticized as the spread became increasingly dire in many countries.

As the tally of cases grew in Canada, an increasing number involved travel to and from the United States, where the current number of identified cases alone is fast approaching half a million.

Residents in both countries together made more than 65 million cross-border trips in 2017, according to Statistics Canada; the level of movement between the two countries made containment impossible without drastic measures. The 8,891 kilometre-long border was closedto non-essential travelby March 20.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.