• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

ஒலிம்பிக்கைப் பிற்போடுமாறு ஐ.ஓ.சி.யிடம் உலக மெய்வல்லுநர் சங்கம் வலியுறுத்தல்

Recommended Posts

கொரோனா என்ற கொடிய நோய்த் தாக்கம் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பிற்போடுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் (ஐ.ஓ.சி.) உலக மெய்வல்லுநர் சங்கம் (வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ்) வேண்டுகோள் விடுத்துள்ளது.

முழு உலகமே கொடிய நோய்த் தாக்கத்தினால் பீதிக்குள்ளாகியுள்ள நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவை திட்டமிட்டவாறு ஜூலை, ஆகஸ்ட் காலப்பகுதியில் நடத்துவது சாத்தியமானதோ விரும்பத்தக்கதோ அல்லவென சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச்சுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் உலக மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவர் செபெஸ்டியன் கோ குறிப்பிட்டுள்ளார்.

'விளையாட்டு விழாவை பிற்போடுமாறு கடிதம் மூலம் தங்களைக் கோருகின்றேன்' என கோ அனுப்பியுள்ள கடிதத்தல் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பிற்போடுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவை வலியுறுத்தியுள்ள முதலாவது சர்வதேச விளையாட்டுத்துறை சங்கம் உலக மெய்வல்லுநர் சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிகளில் நியாயம், கொவிட்-19 பரவுவதன் காரணமாக முறையான பயிற்சிகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை மற்றும் வீர, வீராங்கனைகள் எதிர்கொள்ளும் உயிராபத்துக்கள் அல்லது உபாதைகள் ஆகிய மூன்று பிரதான விடயங்களை காரணம் காட்டியே ஒலிம்பிக்கை பிற்போடுமாறு செபெஸ்டியன் கோ கேட்டுக்கொண்டுள்ளார்.

'டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு புதிய திகதிகளை ஒதுக்குவதற்கு எப்போதும் ஒத்தாசை புரிய உலக மெய்வல்லுநர் சங்கம் தயாராக இருக்கின்றது' என அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

'ஒலிம்பிக் விளையாட்டு விழா பிற்போடப்படுவதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் நான் பகிரங்கமாக கூறியதன் பிரகாரம் என்ன விலைகொடுத்தேனும், குறிப்பாக போட்டியாளர்களின் உயிர்களைப் பணயம் வைத்து விழா நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே ஒலிம்பிக் தொடர்பாக வெளிப்படையாகவும் அவசரமாகவும் முடிவு எடுக்கப்படவேண்டும்' என கோ கேட்டுக்கொண்டுள்ளார்.

'விளையாடடு வீர, வீராங்கனைகளுக்கு ஒய்வையும் மனஅமைதியையும் கொடுக்கவேண்டிய கடமையும் கடப்பாடும் எமக்கு உள்ளது என நம்புகின்றேன்' எனவும் அவர் தனது கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/78495

Share this post


Link to post
Share on other sites

கனேடிய ஒலிம்பிக் கமிட்டி தாங்கள் இந்த வருடம் நடந்தால் போகமாட்டோம் என்றுள்ளார். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நல்லூர் கந்த சுவாமி கோவில் 19 ம் நாள் மாலை கார்த்திகை உற்சவம்  
  • இயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் யானைகள் தினம் இருக்கும்; யானைகள் இருக்காது! – சீமான் எச்சரிக்கை அறிக்கை: இயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் யானைகள் தினம் இருக்கும்; யானைகள் இருக்காது! – சீமான் எச்சரிக்கை | நாம் தமிழர் கட்சி உலகில் வேகமாக அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றான யானைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக ஆண்டுதோறும் ஆகத்து 12 ஆம் நாள் உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், காடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல், தந்தத்திற்காக வேட்டையாடப்படுதல், வாழ்விடங்கள் அருகுதல், வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுதல், மின்சார வேலிகள், தண்டவாளங்கள் , தோட்ட வெடிகள், உணவு வழங்கும் காடுகள் அழிக்கப்படுதல் உள்ளிட்ட மனிதர்களால் உருவாக்கப்படும் இன்னல்களால் யானைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாகக் குறைந்து வருவது பெரும்வேதனையளிப்பதாக உள்ளது. விலங்கினங்களில் தனித்துவமிக்கச் சிறப்பு வாய்ந்த உயிரினம் யானை. மனிதர்களோடு நெருங்கிப் பழகும் தன்மை கொண்டது. உயிரினங்களில் அதிக நினைவுத்திறனும் உடையவை. யானைகள் காடுகளில் இருக்கும்போது, பெரிய மரங்களின் இளம் கிளைகளை ஒடித்து உணவாக உட்கொள்கின்றன. மேல்மட்ட கிளைகளை ஒடிப்பதால், சூரிய ஒளி அடர்ந்த காட்டின் தரையை அடைய முடிகிறது. தேவையான சூரிய ஒளி கிடைப்பதால், புற்கள் அதிகம் வளர்ந்து, தாவர உண்ணிகளுக்கு உணவாகின்றன. மேலும், கீழே விழும் இலை தழைகளையும் மற்ற தாவர உண்ணிகளான முயல், மான், காட்டெருமை போன்றவை உணவாக்கிக் கொள்கின்றன. தாவர உண்ணிகள் அதிகரிக்கும்போது ஊன் உண்ணிகளான சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்டவைகளுக்கு உணவு கிடைக்கின்றது. எனவே உணவுச்சங்கிலியில் யானைகள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. யானைகள் ஒரு நாளில் 300 முதல் 350 வரை விதைகளை விதைக்கிறது. தன் வாழ்நாளில் சராசரியாக 18 இலட்சம் மரங்கள் வளரக் காரணமாக உள்ளது. இத்தகைய பல்லுயிர்ச்சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த யானைகள் மனிதர்களின் தன்னலத்தால் அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றாக மாறிவிட்டது என்பதுதான் மறுக்கவியலா உண்மை. ஆதிகாலத்தில் உலகில் வாழ்ந்த 24 வகை யானைகள் இனங்களில் இதுவரை 22 வகைகள் அழிந்து தற்போது, உலகில் ஆப்பிரிக்கா, ஆசியா என இருவகை யானைகள் மட்டுமே உள்ளன. 1900 ஆம் ஆண்டுவாக்கில் ஒரு கோடியாக இருந்த யானைகளின் எண்ணிக்கை 1990-களில் பத்து இலட்சமாகக் குறைந்தது. தற்போது ஆப்பிரிக்காவில் 5 இலட்சம் யானைகளும் , ஆசியாவில் 1 இலட்சம் யானைகள் மட்டுமே உள்ளன. 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், இந்தியாவில் ஏறத்தாழ 31,000 யானைகளும் தமிழகத்தில் 3,500 யானைகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் 3000 யானைகள் வேட்டையாடப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் மாதந்தோறும் 8க்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பதாகவும், இதில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 17 யானைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாகவும் வெளியாகும் செய்திகள் பேரதிர்ச்சியைத் தருகின்றன. யானைகளைப் பாதுகாக்கும் வகையில் வனங்களில் இயற்கை வளம் குன்றாமல் பாதுகாப்பது அவசியம் எனப் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (IUCN) எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு எத்தனை பாதுகாப்புச்சட்டங்கள் இயற்றியிருந்தாலும், அரசுசாரா நிறுவனங்களும் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டிருந்தாலும், யானைகள் அழிக்கப்படுவதும் அழிவதும் குறைந்தபாடில்லை. இயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் யானைகள் தினம் இருக்கும்; யானைகள் இருக்காது. மிருகக்காட்சி சாலைகளிலும், திரைப்படங்களிலும், புகைப்படங்களிலும் , புத்தகங்களிலும் மட்டுமே பார்க்கும் அரிய வகை உயிரினமாக யானைகள் மாறிப்போகும். ஏற்கனவே, மனிதர்களால் முற்றாக அழிந்துபோன உயிரினங்களால் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல், அதிக வறட்சி, குறுகிய நாளில் அதிக மழைப்பொழிவு, திடீர் புயல்கள் எனப் பல்வேறு இயற்கை சீற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம். பல்லுயிர்ச்சூழலில் உணவுச்சங்கிலி அறுபடாமல் பாதுகாக்கும் யானைகளின் அழிவு, அவற்றையெல்லாம் விடப் பல மடங்கு தாக்கத்தை, ஆபத்தைச் சூழலியலில் ஏற்படுத்தக் கூடியது என்றால் மிகையல்ல. ஆகவே, இவற்றையெல்லாம் உணர்ந்து மத்திய-மாநில அரசுகள், யானைகள், புலிகள் உள்ளிட்ட வன உயிரினங்களையும், அவற்றின் வாழ்விடங்களான காடுகள், மலைகள், ஆறுகள் உள்ளிட்டவற்றையும் பாதுகாக்கும் சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டுமே தவிர பன்னாட்டு பெருநிறுவனங்களின் வளவேட்டைக்காகத் தளர்த்திட முனையக்கூடாது. அது வனவிலங்குகளுக்கும் நாட்டின் வளங்களுக்கும் மட்டுமின்றி எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கே தவிர்க்கமுடியாப் பேராபத்தினை விளைவிக்கக் கூடும். மேலும், சூழலியல் பாதுகாப்பு குறித்த அரசின் சட்டங்களையும், செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிப்பதும், தவறான சட்டங்களை எதிர்த்துப் போராடுவதும், சரியான சட்டங்களை மதித்து முறையாகப் பின்பற்றுவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். தன்னலம் விடுத்துத் தம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களையும், மலைகள், அருவிகள், ஆறுகள், காடுகள் உள்ளிட்ட இயற்கையின் பல்வேறு கூறுகளையும் நேசித்து, பாதுகாத்து இப்புவியை உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்ததாக அடுத்தத் தலைமுறைக்குக் கையளிப்பதே நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை என்பதை உணர வேண்டும். – சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி https://www.naamtamilar.org/there-will-be-no-elephants-yet-we-may-commemorate-elephants-day-in-the-near-future/
  • அமெரிக்க உப ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மசாலா தோசை சுடுகின்றார். கமலா அன்ரி   
  • உங்களை அப்படி செயற்பட அரசாங்கமும், அதன் வருடிகளும் விடுவார்கள் என்றால், எப்பவோ அது தொடங்கப்பட்டிருக்கும். அபிவிருத்தி உங்களிடம், அதிகாரம் அவர்களிடம், நினைத்தவுடன் பிடுங்கப்படும்.  தெரியும் தமிழன் சும்மா இருக்கமாட்டான், ஏதோ முன்னேறிக்கொண்டே இருப்பான். முடிந்தவுடன் அதிகாரம் வேலை செய்யும். கொழும்பில் இருந்து விரட்டுவது, பின் திரும்ப வந்து கட்டியெழுப்புமட்டும் கொள்ளை அடித்ததை முழுங்கி விட்டு தூங்குவது. பின் எழும்பி விரட்டி விட்டு பொறுக்குவது. இதென்ன புதிதா இந்த நாட்டுக்கு? 
  • கானமழை பொழிகின்றான்-கண்ணன் யமுனாதீரத்தில் யாதவகுலம் செழிக்க (கானமழை)   ஆனந்தமாகவே அருள்பெருகவே முனிவரும் மயங்கிடும் மோகனரூபன் (கானமழை)   குயிலினம் கூவிட மயிலினம் ஆடிட ஆவினம் கரைந்திட அஞ்சுகம் கொஞ்ச கோவலர் களித்திட கோபியர் ஆட கோவிந்தன் குழலூதி (கானமழை)