shanthy

கொரோனோ காலத்தின் கதையொன்று.

Recommended Posts

கொரோனோ காலத்தின் கதையொன்று.
----------------------------------------------
போர்க்காலத்தில் பிள்ளைகளை உறவுகளைப் பிரிந்திருந்து அவலமுற்ற அம்மமாக்களும் உறவுகளும் இப்போது கொரோனோ காலத்தை கடந்து செல்ல அடையும் துயரத்தை எழுதவோ விளக்கவோ வேண்டியதில்லை.

கொரோனோ காலம் எனக்குத் தந்த அனுபவம் பற்றியதே இப்பகிர்வு.

மகள் இத்தாலி றோம் நகரின் பல்கலைக்கழகம் ஒன்றில் ஒருவருட  கல்விக்காக கடந்த வருடம் போயிருந்தாள். இவ்வருடம் யூன்மாதம் படிப்பு முடிந்து திரும்பவிருக்கிறாள்.
யேர்மனியில் படித்தவரை மாதம் ஒருமுறை மவளைச் சந்திக்க ரயிலேறிவிடுவேன். அதுபோல மகனையும் சந்திக்க ரயிலேறுவது வளமை.  அந்த நாட்களை எண்ணியபடியே எல்லாத் துயர்களையும் கடக்கும் தைரியம் பிள்ளைகளும் அவர்களது சந்திப்புகளும் தான்.

இத்தாலிக்கு மாதமொருமுறை போய்வரும் நிலமையில்லை. விமானமேறி அடிக்கடி போய்வர பொருளாதாரம் இடம்தராத நிலமை. இதோ இன்னும் 4மாதம் 3மாதம் என காலத்தை எண்ணிக் கொண்டிருக்க இத்தாலி உட்பட ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளைப் பூட்டிவிட்டது.

பல பிள்ளைகள் நாடு திரும்பிக் கொண்டிருக்க மகளையும் ...,

வாங்கோவனம்மா திரும்பி ?

கேட்ட போது அவள் சொன்ன பதில்.
அம்மா உலகமெல்லாம் கொரோனோ பரவிக் கொண்டிருக்கு. நான் யேர்மனி வந்தாலும் இத்தாலியில் இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் பயப்பிடாமல் யோசிக்காமல் இருங்கோ. முடிந்தவரை தற்பாதுகாப்பு சுத்தத்தை பேணுங்கோ. அதைமீறி வந்தால் வரட்டும். இங்கே என்னோடு 3பிள்ளைகள் இருக்கினம். அவையும் அவையின்ரை வீடுகளுக்கு போகேலாது இஞ்சை தானிருக்கினம்.

இதற்கு மேலும் பலதடவை பிள்ளை அருகில் வந்திருந்தால் போதுமென்ற மனநிலையில் கேட்டும் அவள் மறுத்துவிட்டாள்.

என்னைப்போல இங்கையும் மனிதர்கள் தானம்மா இருக்கினம். அவைக்கானது தான் எல்லோருக்கும் என்றாள்.

அவள் வெளியில் போவது உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்ய மட்டுமே. அதுவும் 2மீற்றர் இடைவெளிவிட்டு வரிசையில் மணித்தியாலக்கணக்காக காத்திருந்து பொருட்களை வாங்கி வந்து சமைத்துச் சாப்பிடுவதை அடிக்கடி வட்ஸ்அப்பில் காட்டுவாள்.

மகன் படிக்கும் யுனி. சார்லாண்ட் மானிலத்தில். தற்போது அதிகம் கொரோனா எச்சரிக்கையும் ஊரடங்கு தடையும் விதிக்கப்பட்ட இடம். அவனும் வீட்டில் இருக்கிறான். மகள் போலவே தற்பாதுகாப்பு சுத்தம் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளச் சொல்லி இருக்கிறான்.

ஒருதடவை மகனைப் போய் பார்த்துவரலாமெனக் கேட்டால் அந்த நகருக்குள் போவது தடைசெய்யப்பட்டிருப்பதால் அனுமதி இல்லை.

நாங்கள் 3பேரும் 3திசைகளில் இருக்கிறோம். ஒவ்வொரு தடவையும் சமைக்கிற போது சாப்பிடுகிற போது பிள்ளைகள் ஞாபகத்தில் வந்துவிடுவார்கள். பிள்ளைகளின் ஞாபகங்கள் கண்ணீரை வரவைக்கிறது. எதுவோ ஒன்றாயிருந்தால் போதுமென்கிறது மனசு.

ஆனால் கொரோனோ பற்றிய நக்கல் நையாண்டிளை எழுதும் பகிரும் உறவுகளை நினைக்க வருத்தமாக இருக்கிறது. 

உலகமே இந்தக் கொள்ளை நோயிலிருந்து மீளும் வகைதேடி அவலமுறும் இத்தருணத்தில் மீம்ஸ் போடுவதும் ரசிப்பதும் அதற்கென்றே ஒரு குழுமம் மினக்கெடுவதும் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமன்றி தொலைபேசியில் அல்லது தொடர்பூடகங்களில் அழைத்து...,

இன்னும் கொரோனோ உங்களுக்கு வரேல்லயோ ? 

என்ற எரிச்சலூட்டும் கேள்விகளையும் கடப்பதே பெரும் சவாலாக இருக்கிறது.

உலகமே சாவின் கணங்களை எண்ணிக் கொண்டு உயிர்காக்கும் அவசரத்தில் இருக்க மனிதாபிமானமே இல்லாத நக்கல் நையாண்டிகளைப் பார்க்க இப்படி செய்வோருக்கு இந்த நோய் வந்து இவர்களுக்கு அனுபவத்தைக் கொடுக்காதா இயற்கை ? 

இப்படியும் எண்ணுகிறது மனசு.
இது மனிதாபிமானமில்லாத சிந்தனையாக இருக்கும் பலருக்கு. 

ஆனால் பலரது கண்ணீரை அந்தரிப்பை ரசிக்கும் மனநிலையாளர்களுக்கு வேறெந்த அனுபவம் வேண்டும் ?

நோயோ அல்லது உயிரிழப்போ பிரிவுகளோ அவற்றை அனுபவிக்காதவரை யாருக்கும் அது புரியாது.

அதற்காக இறந்துதான் மரணத்தின் துயரை அறிய வேண்டுமென்றில்லை. இந்தக்கால அவலத்தை புரிந்து செயற்படுவோம்.

எங்கோ ஒரு மூலையில் எத்தனையோ அம்மாக்களும் உறவுகளும் தங்கள் பிள்ளைகளுக்காக அவர்களின் அமைதிக்காக பாதுகாப்புக்காக கண்ணீர் விடுவதையும் அந்தரிப்பதையும் அம்மாவாக நான் புரிந்து கொள்கிறேன்.

சாந்தி நேசக்கரம்
24.03.2020

  • Like 6
  • Sad 1

Share this post

Link to post
Share on other sites

வ‌ண‌க்க‌ம் சாந்தி அக்கா ,
இந்த‌ நூற்றாண்டில் நாம் நினைப்ப‌து ஒன்று ந‌ட‌ப்ப‌து ஒன்று அதுக்கு எடுத்து காட்டு எம் போராட்ட‌ம் 2009/

உங்க‌ள் ம‌க‌ள் ப‌த்திர‌மாய் வீடு வந்து சேர‌ கட‌வுளை பிராத்திக்கிறேன் / 

கூட‌ யோசிக்காம‌ ம‌க‌ளோட‌ தின‌மும் போனில் க‌தையுங்கோ , கொரோனாவை ப‌ற்றி அதிக‌ம் யோசிச்சா எங்க‌ட‌ மூளைக்கு தான் ஆவ‌த்து , 

கொரோனா ப‌ல‌ரை திகைக்க‌ வைத்து விட்ட‌து , சில‌ர் இப்ப‌வும் விளையாட்டு த‌ன‌மாய் இருக்கின‌ம் , கொரோனா அவைக்கு வ‌ந்தா தான் அத‌ன் வ‌லியும் வேத‌னையும் புரியும் /

இத்தாலி நில‌மை கொஞ்ச‌ம் க‌வ‌லைக்கிட‌ம் தான் என்ன‌ செய்வ‌து திடிர் திடிர் என்று எல்லாம் மாறுது  😓/

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

இந்த கவலை படிக்கிற மற்றும் வேலை செய்கிற பிள்ளைகளைப்  பெற்ற பெற்றவர்களுக்கு பொதுவானதுதான் சகோதரி.எமக்கும் இந்தப் பிரச்சினை உண்டு. இந்தநேரத்தில் வாட்ஸப் போன்ற தொழில் நுட்பத்தால் கொஞ்சம் ஆறுதல்......!  🤔

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

துயரங்களையும் இழப்புகளையும் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி கடப்பார்கள்.. சிலர் உள்ளே அழுதபடி வெளியே மற்றவர்களை சிரிக்கவைத்து மற்றவர்களின் மன அழுத்தத்தை போக்குபவர்களும் இருக்கிறார்கள். இது இணைய யுகம். முகம் தெரியா எத்தனையேபேர் இணையத்தில் எல்லோரையும் சிரிக்கவைப்பவர்களை நேரில் சந்தித்தால் ரத்தக்கண்ணீர் வரும் கதைகளை சுமந்து திரிபவர்களாக இருப்பார்கள்.எல்லோரும் எங்களைப்போல்தான் வலிகளை இழப்புகளை கடப்பார்கள் என்று எதிர்பார்க்ககூடாது. அப்படி இருந்தால் இந்த உலகத்தில் ஒப்பாரிச்சத்தம் மட்டும்தான் கேட்கும்.நமக்கு பிடிக்கவில்லை எனில் அதை வாசிக்காது கடந்துவிடலாம். இணையம் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை எனவே பகிடிகளால் உங்கள் மனம் நொந்தால் அவற்றிடம் இருந்து விலகி இருங்கள் ஆனால் ஒட்டுமொத்த உலகும் என்னைப்போல இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா. பல்வேறு விதமான எண்ணங்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் கொண்டவர்களால் ஆனதுதான் உலகு. 

நிற்க..!

உங்கள் பிள்ளைகள் உங்களிடம் விரவில் வந்துசேர்வார்கள். தைரியமாக இருங்கள். யுனிவர்சிற்றி படிக்கிற பிள்ளைகள் ஆகையால் அவர்கள் இந்த சிற்றுவேசனை அவதானமாக கையாள்வார்கள். மனச்சோர்வடையாதீர்கள் உங்களையும் கவனித்துக்கொள்ளுங்கள்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
41 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்படியான கருத்தைதான் நானும் எழுதலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன்.

Share this post

Link to post
Share on other sites

பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். தைரியமாக இருங்கள் சாந்தி. அம்மாவின் மனமென்பது அமைதியடையாது. ஆனால்  பிள்ளைகள் தெளிவானவர்கள். எனவே யோசிக்கத் தேவையில்லை.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

குசா தாத்தாவும் ச‌ரி
ஓணாண்டியும் ச‌ரி
நானும் ச‌ரி நாங்க‌ள் வெளியில் சிரிச்சு ம‌ற்ற‌ உற‌வுக‌ளை சிரிக்க‌ வைப்ப‌து , உற‌வுக‌ளை யோசிக்க‌ விடாம‌ல் மூளைக்கு பிர‌ச்ச‌னை வ‌ராம‌ல் இருக்க‌ , ந‌ம‌க்குள்ளும் சோக‌ம் இருக்கு அதையே யோசிச்சா த‌ல‌ வெடிக்கும் என்ற‌ ப‌டியால் தான் யாழ் த‌ந்த‌ ந‌ல்ல‌ உற‌வுக‌ளுட‌ன் அன்பு ச‌ண்டை போட்டு ம‌கிழ்வாய் இருக்கிறோம் 

சில‌ர் வெளியில் போக‌ வேண்டாம் என்று சொல்லியும் க‌ட‌ல் க‌ரையில் போய் கூத்து போடுதுக‌ள் இங்கை , அதுங்க‌ளுக்கு கொரோனா வ‌ந்தா தான் அத‌ன் வ‌லியும் வேத‌னையும் அவ‌ர்க‌ளுக்கு தெரியும் 

Share this post

Link to post
Share on other sites

கருத்திட்ட பையன் சுவியண்ணா, பாலபத்திர ஓணாண்டி , குமாரசாமி , நொச்சி அனைவருக்கும் நன்றி. காலம் இக்கடும் துயரையும் கடத்திச் சென்று எல்லோரையும் மீட்க வேண்டும். அனைவரின் அன்புக்கும் நன்றிகள்.

Share this post

Link to post
Share on other sites

சாந்தி உங்கள் பிள்ளைகளை இறைவன் தன் பாதுகாப்பில் வைத்து கண்மணிபோல் காப்பார் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். எனது மகள் கனடாவில் இருந்தும் நாங்கள் சந்திக்காமல் தூரத்தில் இருப்பதால் ஸ்கைப்பில் தான் குழந்தையையும் பார்த்து மகிழ்கிறேன். இது அனைவருக்கும் ஒரு சவாலான காலம்தான். மனம் தளராமல் உறுதியுடன் இருங்கள். 

Share this post

Link to post
Share on other sites

பிள்ளைகளை விட்டு பிரிந்திருக்கும் பெற்றோருக்கு இருக்கும் மனவேதனைகள் சொல்லி மாளாது. இருந்தும் சகலதையும் மனம்விட்டு கதைத்தால் மனது ஓரளவிற்கு அமைதியாகும்.என்ன பிரச்சனைகள் வந்தாலும் அனைத்தையும் கடந்து போகவேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேம்.இப்படியான காலங்களில் மன உறுதி அவசியம்.

Share this post

Link to post
Share on other sites

 உங்கள் மனவேதனை புரிகின்றது அக்கா, அவர்கள் விரைவில் நலமுடன் உங்களுடன் சேருவார்கள்

Share this post

Link to post
Share on other sites
On 27/3/2020 at 15:07, Kavallur Kanmani said:

சாந்தி உங்கள் பிள்ளைகளை இறைவன் தன் பாதுகாப்பில் வைத்து கண்மணிபோல் காப்பார் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். எனது மகள் கனடாவில் இருந்தும் நாங்கள் சந்திக்காமல் தூரத்தில் இருப்பதால் ஸ்கைப்பில் தான் குழந்தையையும் பார்த்து மகிழ்கிறேன். இது அனைவருக்கும் ஒரு சவாலான காலம்தான். மனம் தளராமல் உறுதியுடன் இருங்கள். 

உங்கள் அன்புக்கு நன்றி அக்கா.

On 27/3/2020 at 15:19, குமாரசாமி said:

பிள்ளைகளை விட்டு பிரிந்திருக்கும் பெற்றோருக்கு இருக்கும் மனவேதனைகள் சொல்லி மாளாது. இருந்தும் சகலதையும் மனம்விட்டு கதைத்தால் மனது ஓரளவிற்கு அமைதியாகும்.என்ன பிரச்சனைகள் வந்தாலும் அனைத்தையும் கடந்து போகவேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேம்.இப்படியான காலங்களில் மன உறுதி அவசியம்.

உங்கள் அன்புக்கு நன்றி குமாரசாமி. ஓரடி முன்னேற பேரிடி வந்துவிடுகிறது. இன்று நாளையென்று நாட்களை கடக்க வேணடியுள்ளது.

On 28/3/2020 at 10:39, உடையார் said:

 உங்கள் மனவேதனை புரிகின்றது அக்கா, அவர்கள் விரைவில் நலமுடன் உங்களுடன் சேருவார்கள்

உங்கள் அன்புக்கு நன்றி உடையார்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.