Jump to content

காயமே இது பொய்யடா !! -  புனைவுச் செய்திகளை தவிருங்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காயமே இது பொய்யடா !! -  புனைவுச் செய்திகளை தவிருங்கள்

அன்பான “அறிவுள்ள” தமிழ்ப் பெருங்குடி மக்களே !!!

தமிழன் மட்டும்தான் எல்லாவற்றுக்கும் முன்னோடி என “தமிழேண்டா” என்று காலரைத் தூக்கிவிடும் ஏழாம் அறிவுள்ள உங்களில் சிலரின் அலப்பறை தாங்கமுடியவில்லை.

உங்களுக்கு என்னதான் பிரச்சினை? பொய்யான செய்தி பரப்புவதற்கு ஒரு அளவில்லையா? எத்தனை தரம் சொன்னாலும் எத்தனை விதமாக சொன்னாலும் ....!  முடியலடா சாமி !!!

என் நண்பன் சொன்னான் இந்த எமனேறும் பரிகளுக்கு சுயபுத்தியும் கிடையாது, சொல்புத்தியும் கிடையாதென்று. அது உண்மையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

இத்தாலி அதிபர் அழுகிறார் என்று பிரேசில் அதிபர் எப்பவோ அழுத படத்தை போடுகிறார்கள்.

ஜஸ்டின் ரூடோவின் மனைவி வைத்தியசாலையில் இருந்து மக்களுக்கு அறிவுரை சொல்கிறார் என்று வேறு யாரோ பெண்ணின் வீடியோவைப் பகிர்கிறார்கள்.

அந்த நாடு மருந்தைக் கண்டுபிடித்துவிட்டது, இந்த நாடு கண்டுபிடித்து விட்டது என்ற ஆதாரமற்ற பதிவுகளை பாராட்டிச் சீராட்டுகிறார்கள்.

அமெரிக்கரின் கால் படாத கியூபாவிலும் வடகொரியாவிலும்  ஒருவருக்கும் கொரோனா வரவில்லை என்று சதிக் கோட்பாடு நிறுவுவோர் இன்னொரு புறம்.

 தொண்டைக்குள் நான்கு நாட்கள் கொரோனா வாடகை தராமல் குடியிருக்குமாம். அதன்பிறகு வாஸ்து சரியில்லை என்று முடிவெடுத்து நுரையீரலுக்கு குடிபெயர்ந்து விடுமாம். தொண்டையில் குடியிருக்கும்போதே  அடிக்கடி நீர் குடித்தால் கொரோனா கால் வழுக்கி வயிறுக்குள் விழுந்து விடுமாம். அதன்பிற வயிற்றில் உள்ள அமிலத்தில் மூழ்கி இறந்துவிடுமாம்.

இன்னும் சிலர், உப்பு வினிகருடன் வெதுவெதுப்பான நீரால் வாய் கொப்புளித்தால் சூடும் எரிச்சலும் தாங்காமல் கொரோனா வெளியே எகிறிக் குதித்து ஓடிவிடுமாம்.

தங்கத் தமிழ்நாட்டினர் தம் பங்குக்குக் உள்ளியைத் தின்னச் சொல்கிறார்கள். பேரூந்துகளுக்கும் வேப்பிலை அடிக்கிறார்கள். உள்ளிக்கு பல மருத்துவ குணங்கள் உள்ளனதான். அதற்காக உள்ளியை அள்ளிப் பச்சையாகச் சாப்பிட்டால் வேறு உடல் உபாதைகள் வரும் என்பதை மறக்க வேண்டாம். 

இரு நாட்களுக்கு முன்னர் திடீரெண்டு ரஷ்ய அதிபர் எண்ணூறு சிங்கங்களை ரோடில அவிழ்த்து விட்டிட்டாராம். அதனால சனம் பயத்தில வீட்டுக்குள்ளயே இருந்திட்டுதாம்.  முதலில் புடின் அவ்வளவு சிங்கத்தையும் இவ்வளவு நாளும் எங்கே வைத்திருந்தார் என்று யாருமே கேட்கவில்லை. ரஷ்யாவில் அவ்வளவு சிங்கங்கள் இருக்கின்றனவா என்றும் யோசிக்கவில்லை.

என்னுடைய நாட்டிலையும் ஒருத்தர் அதை நம்பி இங்கேயும் சிங்கங்களை ரோட்டில விடவேணும் எண்டு சொல்லுறார். அது பொய்யான செய்தியென்று நான் சொன்னதும் அவர்  அப்படியே ஷாக் ஆயிட்டார். தலையும் சுத்திச்சுதோ தெரியேல்ல. சொன்னவர் சிங்கத்துக்கு எங்கே போவார் என்றும் தெரியவில்லை. நடிகர் சூர்யாவைக் கேட்பாரோ என்றும் எனக்கு சந்தேகம் வந்தது.

இப்பிடியான பொய் செய்திகளைப் பரப்புவோர் தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே, மற்றவர்களை பயமுறுத்துகிறார்கள் அல்லது முட்டாளாக்குகிறார்கள். தவறான ஆலோசனையை தம் நண்பர்களுக்கு வழங்குகிறார்கள்.

நண்பர்களே, 
உங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால், அது உண்மைதானா என்று தேடிப்பாருங்கள். அனுப்பியவரிடமே இதற்குரிய ஆதாரம் என்னவென்று கேளுங்கள். கொரோனா பரவுவதை மட்டுமல்ல, இது தொடர்பான வதந்தி பரவுவதையும் தடுப்போம்.!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் தமிழேண்டா தமிழன் சொன்னதை தான் உலகம் இன்று செய்கிறது அலப்பறை தாங்கமுடியவில்லை😂
படத்தில் உள்ள பலமானவர் தமிழனா?

90509897_144927343681693_442948219278721

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில உள்ள ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருக்க.. நம்மாளுங்க எல்லாம் கொரோனோ மருந்தை வாட்ஸப் பேஸ்புக்கில் சேர் பண்ணுவதில் பிசியாக இருக்கிறாங்கள்.. தமிழண்ணா  கெத்து..

💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை தான் தமிழேண்டா தமிழன் சொன்னதை தான் உலகம் இன்று செய்கிறது அலப்பறை தாங்கமுடியவில்லை😂
படத்தில் உள்ள பலமானவர் தமிழனா?

90509897_144927343681693_442948219278721

மீசையையும் இடைக்கச்சையின் சைஸையும் பார்த்தால் தமிழன் மாதிரித்தான் இருக்கு😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

நண்பர்களே, 
உங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால், அது உண்மைதானா என்று தேடிப்பாருங்கள். அனுப்பியவரிடமே இதற்குரிய ஆதாரம் என்னவென்று கேளுங்கள்.

4 hours ago, கிருபன் said:

அதற்காக உள்ளியை அள்ளிப் பச்சையாகச் சாப்பிட்டால் வேறு உடல் உபாதைகள் வரும் என்பதை மறக்க வேண்டாம். 

கிருபன்,

இதற்கான ஆதாரத்தை தரமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிரபா said:

கிருபன்,

இதற்கான ஆதாரத்தை தரமுடியுமா?

Times of India ஐ நம்புவீர்கள் என்றால் கூகிளில் தேடியபோது கிடைத்தது.

அள்ளிச் சாப்பிட்டால் என்பதைக் கவனியுங்கள்.

https://recipes.timesofindia.com/articles/health/10-harmful-effects-of-garlic-that-you-should-know/photostory/64355960.cms?picid=64355972

ஈரலுக்குக் கூடாதாம்

Heartburn வரலாம்

வயிற்றோட்டம் வரலாம்

மிச்சம் சாப்பிட்டு பார்த்துத்தான் சொல்லலாம்😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் கிருப‌ன் அண்ணா /
என‌து சிறு வ‌ய‌து தோழ‌னுக்கு யாரோ சொல்லி இருக்கின‌ம் போல‌ அல்ல‌து முக‌ நூலில் வாசித்து தெரிந்து கொண்டானோ தெரியாது /

அமெரிக்காவில் இருந்து பிரிந்து போன‌ நாடு கியூபா என்று /

ந‌ண்ப‌னுக்கு நான் சொன்னேன் கியூபா எப்ப‌வும் த‌னி நாடாக‌ தான் இருந்த‌து அமெரிக்க‌ கியுபாவை த‌ங்க‌ளின் நாட்டுட‌ன் இணைக்க‌ ப‌ல‌ முய‌ற்சி எடுத்து அது தோல்வியில் முடிஞ்ச‌து என்று /

எங்க‌டைய‌ல் முக‌ நூலில் ம‌ற்றும் சில்ல‌ரை ஊட‌க‌ங்க‌ளில் புர‌ளிய‌ கில‌ப்பி விடுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர்க‌ள் /

த‌மிழ‌ன் அதை ஆண்டான் இதை ஆண்டன் என்று எழுதும் கூட்ட‌ம் , இந்த‌ பூமி ப‌ந்தில் த‌மிழ‌னுக்கு என்று ஒரு நாடு இல்லை , 

இது ஒட்டு மொத்த‌ த‌மிழ் இன‌த்துக்கே கேவ‌ல‌ம் / 70ஆயிர‌த்துக்கு குறைவான‌ ம‌க்க‌ளை கொண்ட‌ நாடு இந்த‌ உல‌க‌த்தில் இருக்கு 10கோடி த‌மிழ‌ர்க‌ள் வாழும் இந்த‌ உல‌கில் த‌மிழ‌ருக்கி என்று ஒரு நாடு இல்லை 😓😡

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.  இதனைக் குறிப்பாக தமிழர்கள் பலர் உண்மையாக நம்பிக் கொள்கின்றனர். இந்தப் புதிய வைரசின் உயிரியல் தரவுகள் எதையுமே தெரியாமல் அதற்குரிய நிவாரணிகளை எவ்வாறு இவர்களால் பரிந்துரை செய்ய முடியும் என்று எண்ணிப் பாருங்கள்.

இத்தகைய புரளிகள் தொடர்பான சர்வதேச சுசுகாதார அமைப்பின் பதில்கள் சிலவற்றைப் பாருங்கள்.

சூடான பானங்கள் கொரோனா வைரசை அழிக்கும்
இதில் எந்தவித உண்மையும் இல்லை. தொற்று ஏற்பட்ட உடைகளை வெயிலில் போடுவதும் அதிக பயன் தராதாம்.
 
சூடான நீரில் குளித்தல்
இதுவும் பயனற்றது. எவ்வளவு சூடாகக் குளித்தாலும் உடல் வெப்பநிலை 37 டிகிரியைத் தாண்டாது.
 
உள்ளி சாப்பிடுதல்
உள்ளிக்குச் சில நுண்ணுயிர்களை அழிக்கும் ஆற்றல் இருந்தாலும் கொரோனா வாரசுக்கு எதிராக எந்த எதிர்ப்புச் சக்தியையும் தராது.
 
புளியான உணவுகள்
விற்றமின் சீ தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்பட்டாலும் எதுவும் இந்த வைரசுக்கு எதிராகச் செயற்படுவதாக நிரூபிக்கப்படவில்லை. உடல் ஆரோக்கியத்தைப் பேண்ட் விற்றமின் சீ சாப்பிடலாம். ஆனால் நாளாந்தம் அளவுக்கதிகமான (ஏறத்தாள 110 மில்லி கிராமுக்கு மேல்) விற்றமின் சீ சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும்.
 
சிறுநீரால் கழுவுதல்
குறிப்பாக இந்தியாவில் மாட்டுச் சிறுநீர் கிருமியை அழிக்கும் என்று கருதுகிறார்கள். இது தவறானதுடன் வேறு கிருமித் தொற்றுதலையும் ஏற்படுத்தலாம்.
 
இது மட்டுமல்ல, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எந்த ஒரு நவீன மருந்தையோ இரசாயனப் பொருளையோ வைத்தியரின் அனுமதியின்றி உட்கொள்ள வேண்டாம்.  மலேரியா மருந்து கொரோனா வைரசுக்கு எதிராக கணிசமான பலன் தந்தாலும் ஒருவருடைய உடல் நிலையை ஆராய்ந்த பின்னர் வைத்தியரின் ஆலோசனையுடன் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த மருந்து உயிருக்கு ஆபத்தாக முடியும்.

https://fr.news.yahoo.com/coronavirus-boissons-chaudes-urine-cocaine-attention-fake-news-114748750/photo-little-girl-sitting-toilet-peeing-111229176.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, இணையவன் said:

முற்றிலும் உண்மை இணைய‌வ‌ன் அண்ணா /

ஏன் இவ‌ர்க‌ள் இப்ப‌டி செய்கிறார்க‌ள் என்று புரிய‌ வில்லை /

த‌லைவ‌ர் எங்க‌ எல்லாருக்கும் சொன்ன‌ ஒரு விடைய‌ம் உன‌க்கு தெரிந்த‌தை ம‌ற்ற‌வைக்கும் சொல்லி குடுக்க‌ சொல்லி /

என‌க்கு தெரிந்த‌ சில‌ உண்மைக‌ளை ந‌ண்ப‌ர்க‌ளுக்கு சொல்லுவ‌துண்டு அண்ணா / 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.