Sign in to follow this  
பிழம்பு

144 தடை: காய்கறிகளை வாங்க கிருஷ்ணகிரி சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Recommended Posts

தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்த உள்ள காரணத்தால் காய்கறிகளை வாங்க கிருஷ்ணகிரி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை 144 தடை உத்தரவை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், மக்களின் அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், மளிகைப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவை கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அரசின் இந்த 144 தடை உத்தரவை அறிந்த மக்கள் உடனடியாக ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிப் பொருட்களை வாங்கத் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

அதன்படி, கிருஷ்ணகிரியில் நாள்தோறும் அதிகாலையில் நடைபெறும் சந்தையில் இன்று வழக்கத்தை விட பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு காய்கறிகளை வாங்கிச் சென்றனர். மக்கள் கூட்டம் ஒரே நேரத்தில் திரண்டதால் சந்தை நடக்கும் சாலையே மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது.

https://www.hindutamil.in/news/tamilnadu/545943-people-crowded-at-krishnagiri-market.html

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நல்ல கருத்து. ஆரம்பத்தில் இருந்து, முக்கியமான கருத்து ஒன்றினை நானும் வைக்கிறேன். தமிழகத்தின் சாதிய அவலம் காரணமாகவே தமிழரல்லாத வெளி ஆட்கள் தலைவராக வர வேண்டிய நிலை. இதனால், வெளியராயினும், தமிழராகிய பிரபாகரனை தலைவராக கொண்டு செல்ல வேண்டிய நிலையில் நாம் தமிழர் உள்ளனர். அது கணிசமான வெற்றியினை பெறுகையில், அதனால் பாதிப்பு உண்டாகலாம் என்பதால், இப்போது பிரபாகரன், சீமான் அளவுக்கு எதிர்க்கப்படுகின்றார்.  
  • நீங்கள் கூறுவது தமிழக  மக்களின் பிரச்சனை. அவர்கள் அதைப் பார்ததுக் கொள்வார்கள். அது எமது பிரச்சனை அல்ல. எமக்கு  போராட்டம் தொடங்கிய  காலத்தில் இருந்து  தன்னலம் கருதது உதவியவர்களை   துரோகிகள் என்று  செய்நன்றி  மறந்து ஏன்  திட்டுகின்றீர்கள்  என்று கேட்டால் அது பற்றி பதில்  இல்லை. எமது தோல்விக்கு புலிகளின் அரசியல் துறையின்  பல தவறுகள் முக்கிய காரணம். அது பற்றி பேசுங்கள். எமது தோல்விக்கான எமது பக்க பாரிய தவறுகளை மறைக்க முழுப்பழியையும்  திராவிடத்தின் மீது போடும் அயோக்கியத்தனத்தைக்  கைவிட்டு எமது தவறுகளைப் பற்றிப் பேசுங்கள். அதுவே எமக்குள்  தெளிவைக் கொண்டுவரும். அது பற்றி பேசுவதைத்  தவிர்ககவே நீங்கள் திராவிடம், தமிழ் தேசியம் என்ற பூச்சாண்டியை காட்டுகிறீர்கள்.  அடுத்த  நாட்டில்  சீமானின் அரசியலுக்காக தூண்டி விடப்பட்ட  அந்த இனவெறி அரசியலை தமிழக மக்கள் பார்ததுக் கொள்வார்கள். அது அவர்கள் பிரச்சனை. இந்தியாவிலேயே  முதன்மை மிக்க முன்னேறிய  மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தை மேலும் முன்னேற்ற சீமான்  தனது பங்களிப்பை செய்யட்டும். அதற்கான தார்மீக உரிமை அவருக்கு உள்ளது. திராவிடம் என்றால் என்ன சமூகநீதி என்றால் என்ன என்ற நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை படிக்க பல ஆயிரம் அறிவார்ந்த  புத்தகங்கள் இருக்க நாம்  தமிழர் கட்சியின் இன வெறிப்  பிரச்சார காணொளிகளில் தங்கி இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில்  நான் இல்லை.   
  • வேறு வழியில்லை. அவரவர் உய்த்துணரும் தன்மையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஊடக செய்திகள், ஆராய்ச்சி கட்டுரைகள் கூட உள்நோக்கம் கொண்டவையாக இருக்கலாம். தனிப்பட நான் ஒபாமாவையும் நம்பியதில்லை. ட்ரம்பையும் நம்பியதில்லை. ஹிலரியையும் நம்பியதில்லை. அவர்கள் ஏற்கனவே வரைந்த வேலைத்திட்டத்தில்தான் இயங்குவார்கள், வெளியுறவை பொறுத்தவரையில். மற்றும் அமெரிக்க மக்களில் ஒரு தொகுதியினர் பெரும் முட்டாள்கள் என்பது எனது கருத்து. ஆனால், ஆகச்சிறந்த மதிநுட்பம் கொண்ட ஒரு சிறு தொகையினர் அதிகாரத்தை கைப்பற்றி நாட்டை வார்த்தெடுத்துள்ளார்கள். ட்ரம்ப் வெற்றி பெற்றார் என்பதே அமெரிக்க வாக்காளரின் தன்மையை உணர்த்துகிறது. 2020 இல் வெற்றி பெற்றாலும் ஆச்சரியம் இல்லை.
  • ரமடான் விருந்தை முடித்து கொண்டு வாக்குகளை கவருவதற்கான அடுத்த ஜஸ்டின் ட்ரூடோவின் நடவடிக்கை.
  • என்னத்தைக் குழம்புறது... பிரேமருக்கு வெடி போட்டது புலி எண்டுவியல்.  இல்லை, இந்தியன் ஆமியை ஓடுங்கோ நாட்டினை விட்டு என்று அனுப்பியதால், அவமானப்பட்ட இந்திய ரா எண்டுவேன்.... நம்பவா போறியள்? 😎 கதிர்காமர் இருந்தது கொழும்பு 7.... சந்திரிகா, ரணில் என்று பெரும் அரசியல் வாதிகள் வாழ்ந்த high security zone. கதிர்காமர் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த வயதான தமிழ் தம்பதிகளின் வீட்டின் மேல்மாடியில், ஒரு அறையில், அவையளுக்கே தெரியாமல் உங்கடை வன்னி ஆக்கள், ஒளிஞ்சு ஒரு கிழமையா இருந்து, ஆயுதம் (சினிப்பர்), சாப்பாடு கொண்டு போய், வெடி வச்சுப்போட்டு, பத்திரமா வெளியில ஓடி வந்திட்டினம் எண்டால் நம்பிறன், பிடி பந்தயம் எண்டுவியல். போலீஸ்காரரும் அந்த தமிழ் தம்பதிகளுக்கு ஒன்றுமே தெரியாது எண்டது உண்மைதான் எண்டு வழக்கு பதியாமல் இருந்த அதிசயமும் நடந்ததே. காமினியும், லலித்தும், பிரேமரின் அரசியலுக்கு எதிராளிகளாய் இருந்த மேல்தட்டு வர்க்கத்தினர். அவர்களை இல்லாமல் செய்ய வேண்டிய தேவை அவருக்கு, மிக அவசரமாக இருந்ததோ இல்லையா? 🤔