Sign in to follow this  
பிழம்பு

அரிசி முதல் 50 லட்சம் பணம், ரஜினி முதல் ஹரீஷ் கல்யாண் - துயர் துடைக்க திரண்ட கலைஞர்கள் Corona Relief Work

Recommended Posts

கொரோனா தொற்றினை தவிர்ப்பதற்காக இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், அனைத்து இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் மாமன்றம் உட்பட அனைத்து அமைப்புகளும் திரைப்படப் பணிகளைக் கடந்த 19ஆம் தேதி முதல் நிறுத்தி வைப்பது என முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரப் படங்கள் போன்ற அனைத்துப் பிரிவு திரைப்படப் பணிகளையும் நிறுத்து வைப்பது எனவும் முடிவு செய்துள்ளதாகவும் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ்: அரிசி முதல் 50 லட்சம் பணம், ரஜினி முதல் ஹரீஷ் கல்யாண் - துயர் துடைத்த கலைஞர்கள்படத்தின் காப்புரிமை Getty Images

வேண்டுகோள்

இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கத்தின் தலைவர் செந்தில் குமாரிடம் பிபிசி தமிழுக்காக அளித்த பேட்டியில், 'பத்து நாட்கள் ஷூட்டிங் நடைபெறாது என்றாலும் ஓரளவாவது அவர்களை சமாளிக்க சொல்லலாம். காலவரையறை இல்லாமல் எனக் கூறும்போது தான் சிக்கல் ஏற்படுகிறது. எத்தனை நாட்கள் கடன் வாங்குவார்கள். அந்தக் கடனை அவர்களால் எப்படி திரும்ப கொடுக்க இயலும். பெரிய நடிகர்கள் யாராவது முன்வந்து அவர்களுக்கு பணரீதியாக உதவிகள் செய்யாவிட்டாலும், அரிசி மூட்டை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்காவாவது உதவி செய்யலாம்.' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, உறுப்பினர்களுக்கு உதவக்கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவருடைய வேண்டுகோளை ஏற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பெப்ஸி தொழிலாளர்களுக்கு பல்வேறு நடிகர்கள் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

நடிகர் சிவக்குமார் தன்னுடைய குடும்பத்தினர் சார்பாக பத்து லட்சம் ரூபாயை ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக வழங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து நடிகர் சிவக்கார்த்திகேயன் பத்து லட்சம் ரூபாயை அளித்திருக்கிறார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் ஐம்பது லட்சம் ரூபாய் அளித்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக பத்து லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் 25kgs எடையுள்ள அரிசி மூட்டைகள் 150 வழங்கியிருக்கிறார். தயாரிப்பாளர் லலித்குமார் பத்துலட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். நடிகர் ஹரீஷ் கல்யாண் ஒருலட்ச ரூபாயை ஃபெப்ஸி ஊழியர்களுக்காக வழங்கியிருக்கிறார்.

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவி

நடிகர் சங்கத்தின் முன்னாள் அறக்கட்டளை உறுப்பினர் பூச்சி முருகன் நடிகர் சங்க சிறப்பு அலுவலருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ' நடிகர் சங்கத்தில் 90 சதவீத உறுப்பினர்கள் அன்றாடம் நடைபெறும் சினிமா படப்பிடிப்புப் பணிகளையே நம்பி இருப்பவர்கள். இவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் ஃபெப்ஸி சார்பில் பெரிய நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டு, உதவிகளும் வந்து கொண்டிருக்கின்றன. அது போல நமது சங்கம் சார்பிலும் சங்க வங்கிக் கணக்கு எண்ணைக் குறிப்பிட்டு உதவி கோரினால் நிச்சயம் உதவி கிடைக்கும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் அந்த வேண்டுகோளை ஏற்று இன்று சிறப்பு அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ' நமது சங்க உறுப்பினர்கள் வேலைவாய்ப்பின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே, அவர்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியதும், அவர்களுக்கு உதவுவதும் நமது தலையாய கடமையாகும் எனக் குறிப்பிட்டு சங்கத்தின் வங்கிக் கணக்கு எண்ணையும் அந்த அறிக்கையில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து, வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் பத்து லட்சம் ரூபாயை நிதியாக அளித்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-52024444

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • உண்மை நாதா , இவ‌ரை 2005ம் ஆண்டு போட்டுத் த‌ள்ள‌ தானே புலிக‌ளுக்கு ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து , இவ‌ன் இற‌ந்த‌ போது ச‌ந்திரிக்கா ம‌ருத்துவ‌ம‌னையில் ம‌ருத்துவ‌ர்க‌ளின் கையை பிடித்து க‌த‌றி அழுதா எப்ப‌டியாவ‌து காப்பாற்ற‌ சொல்லி , ஆனால் அவ‌ரின் உட‌ம்  அதிக‌ தோட்டா பாய்ந்து விட்ட‌து , அவ‌ரின் உயிர் ம‌ருத்துவ‌ம‌னையில் பிரிந்த‌து  / ச‌ந்திரிக்காவுக்கு எவ‌ள‌வு ந‌ல்ல‌வ‌னாய் இருந்து இருக்கிறான் என்ப‌த‌ இப்ப‌ உண‌ர‌ முடியுது 
  • `அன்னாசிப் பழமல்ல... தேங்காய்; தேடப்படும் எஸ்டேட் உரிமையாளர், மகன்!’ -யானை மரணத்தில் என்ன நடந்தது? இந்தக் குற்றத்தில் குறிப்பிட்ட மூவருக்கும் பங்கு இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. வில்சனை மட்டும் கைது செய்திருக்கிறோம். தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரையும் விரைவில் கைது செய்வோம்’ - போலீஸார் கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் தினமும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆரம்பத்தில் யானை மலப்புரம் மாவட்டத்தில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் அது பாலக்காடு மாவட்டம் என்று மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அன்னாசிப் பழத்தில் வெடிமருந்து நிரப்பி யானைக்கு கொடுக்கப்பட்டதாகத் தவல்கள் வெளியான நிலையில், `யாரும் யானைக்கு கொடுத்திருக்க வாய்ப்பு இல்லை. காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை யானை எடுத்து சாப்பிட்டு இருக்கலாம்’ என கேரள வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், யானையின் உடலை ஆய்வு செய்த மருத்துவர்கள், யானை வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசி பழம் சாப்பிட்டதற்கான சான்று இல்லை என்றும், அது உயிரிழப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் இந்த வெடிப்பு நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இந்தத் தகவல்களின் அடிப்படையில் வனத்துறையும், காவல்துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், நேற்று வில்சன் என்னும் ரப்பர் எஸ்டேட் ஊழியர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட விஷயத்தை காவல்துறையும் மாநில வனத்துறை அமைச்சரும் உறுதி செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ரப்பர் எஸ்டேட் உரிமையாளர் அப்துல் கரீம் என்பவரையும் அவரின் மகன் ரியாசுதீன் என்பவரையும் போலீஸார் தேடி வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அந்த எஸ்டேட் அம்பலப்பரா என்னும் பகுதியில் இருக்கிறது. இது சைலன்ட் வேலி தேசியப் பூங்கா எல்லைப் பகுதியின் அருகிலேயே இருக்கிறது. இதுதொடர்பாக பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், `தேங்காயில் வெடிமருந்துகளை நிரப்பி, காட்டுப்பன்றிகளுக்காக வைத்திருக்கிறார்கள். இந்தக் குற்றத்தில் குறிப்பிட்ட மூவருக்கும் பங்கு இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. வில்சனை மட்டும் கைது செய்திருக்கிறோம். தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரையும் விரைவில் கைது செய்வோம்’ என்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக, வில்சனை குறிப்பிட்ட ரப்பர் எஸ்டேட்டுக்கு போலீஸார் மற்றும் வனத்துறை அழைத்துச் சென்றனர். அங்கு வெடிமருந்துகள் சட்டவிரோதமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   தொடர்ந்து போலீஸார், `மரணமடைந்த யானை மே மாதம் 12-ம் தேதி வெடிமருந்து நிரப்பப்பட்ட தேங்காயை சாப்பிட்டுள்ளது. அதன் காரணமாக அதன் வாயில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. நாங்கள் சந்தேகிக்கும் நபர்களுக்கு, யானை காயமடைந்தது அன்றைய தினமே தெரியும். அடுத்த இரு வாரங்களுக்கு யானை அங்கும் இங்கும் சுற்றித் திரிந்திருக்கிறது. கடுமையான வலியால் உணவு உண்ண முடியாமலும், தண்ணீர் அருந்த முடியாமலும் சிரமப்பட்டுள்ளது. பின்னர் 25-ம் தேதி யானை வெள்ளியார் ஆற்றின் அருகே காயங்களுடன் காணப்பட்டது. பொதுமக்கள் தகவல் அளித்ததும் வனத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். இரண்டு கும்கி யானைகள் மூலம் யானையை மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கடைசியாக மே மாதம் 27-ம் தேதி யானை உயிரிழந்தது’ என்றனர். அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ``இங்கு காட்டு யானைகள் மற்றும் பன்றிகள் அடிக்கடி வரும். பயிர்களை நாசம் செய்வதால் இது தொடர்பாக பலமுறை வனத்துறையிடம் முறையிட்டுள்ளோம். ஆனால் அதற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய செயல்களைச் செய்ய மாட்டோம்” என்கின்றனர்.   https://www.vikatan.com/news/india/one-arrested-two-on-search-police-in-kerala-pregnant-elephant-death    
  • ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் நாள் - கோவிட்-19: முதல் குற்றவாளி யார்?   ஆதி வள்ளியப்பன் உலகமே தன் காலடியில் விழுந்து கிடக்கிறது என்று எப்போதும் இறு மாப்புடனே வலம்வரும் மனித குலம், ஒரு குட்டியூண்டு வைரஸிடம் இன்றைக்கு மண்டியிட்டுக் கிடக்கிறது. ஒரேயொரு முற்றுப் புள்ளிக்குள் லட்சக்கணக்கான வைரஸ்களை அடைத்துவிட முடியும். அதன்காரணமாகத்தான் அது வெறும் கண்களுக்குத் தெரிவதில்லை, மாயவித்தைக்காரன் போல் எளிதாகத் தொற்றி விடுகிறது. பிறகு நம் உடலை ஆட்டிப்படைத்து தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறது. மனித குலம் பூவுலகின் முதலாளிகளாகப் பிரகடனம் செய்ய முடியாது என்பது, மீண்டும் ஒரு முறை தெளிவாகியிருக்கிறது. சரி, இந்த நாவல் கரோனா வைரஸை யார் கண்டுபிடிச்சது, சற்று விளக்கமாகக் கேட்க வேண்டுமென்றால், நாவல் கரோனா வைரஸ் இப்படி உலகை ஆட்டிப் படைப்பதற்கு முதல் காரணம் யார்? ‘வூகான் இறைச்சிச் சந்தைக்கு வந்த அலங்கு (எறும்புத்தின்னி) அல்லது மரநாய்தான் காரணம்' என்று சிலர் சொல்லலாம். ‘இல்லையில்லை, அவற்றுக்கு தொற்றுவதற்கு முன்பு வைரஸ் தேக்கியாக இருந்த வௌவால்தான் காரணம்' என்று வேறு யாரேனும் சொல்லலாம். ‘எல்லாத்துக்குமே இந்த சீனாக்காரன்தான் சார் காரணம்' என்று பொத்தம்பொதுவாகவும் கூறலாம். ஆனால், இவை சரியான பதில்கள் தானா? பழைய கதை இந்தக் கேள்விக்கு விடை தேட சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். நவீன அறிவியல், அதன் விளைவாகத் தொழிற்புரட்சி தொடங்கும்வரை, மனித குலம் இயற்கையை தன் முழு அடிமையாக பாவிக்கவில்லை. இயற்கை மீதான மதிப்பும், நுண்ணுணர்வும் எஞ்சியிருந்தன. ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி தொடங்கிய பின் முதலாளித்துவமும் நாடுகளை நிர்வகித்துவந்த அன்றைய அரசாட்சிகளும் லாபம் மீது பெருவெறி கொள்ளத் தொடங்கின. பெரிய பெரிய இயந்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு மூலப்பொருள் எனும் தீனியைப் போட்டாக வேண்டும். அதற்காக இயற்கை வளமும் மனித வளமும் நிறைந்திருந்த ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளை காலனி ஆட்சியாளர்கள் அடிமைப்படுத்தத் தொடங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு உலக மக்களில் பெரும்பாலோர் மேற்கத்தியம் புகுத்திய நவீன அறிவியலின் காலடியில் வீழ்ந்துகிடக்கிறோம். இந்த இடத்தில் நவீன அறிவியலுக்கும் அறிவியல் மனப்பான்மைக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். அறிவியல் மனப்பான்மை என்பது அனைத்தையும் பகுத்தாராய்ந்து முடிவெடுக்கச் சொல்வது. இந்த பகுத்தாராயும் பண்பு விலங்குகளுக்கு இல்லாததால்தான், அவை இயற்கையைக் கட்டுப்படுத்தாமல் இயைந்து, இணக்கமாக வாழ்கின்றன. அதேநேரம் பகுத்தாராயும் பண்பு இருந்ததால்தான் மனித குலம் உலகில் வேறு எந்த உயிரினமும் அடையாத வளர்ச்சியைப் பெற்றது. ஆனால், அதே பகுத்தாராயும் பண்பு சுயநலமாக, பக்கச்சார்புடையதாக மாறும்போது அதனுடன் சேர்ந்து பிரச்சினைகளும் பூதாகரமாகத் தொடங்கிவிடுகின்றன. அறிவியல் யாருக்கானது? நெருப்பையோ, சக்கரத்தையோ கண்டறிந்த நம் மூதாதையர் அதை தனி உடைமையாகவோ, லாபம் தரும் ஒரு பொருளாகவோ பார்க்க வில்லை. அனைவருக்கும் அந்த அறிவைப் பகிர்ந்துகொண்டதன் விளைவாகவே மனித குலம் அடுத்தடுத்த வளர்ச்சி கட்டங்களை நோக்கி நகர்ந்தது. ஆனால், இன்றைக்கு அறிவைப் பகிர்ந்துகொள்வது லாபத்தைப் பறித்துவிடும் என்று தடுக்கப்படுகிறது அல்லது புதிய கண்டுபிடிப்புகள் விற்பனைப் பண்டமாக மாற்றப்படுகின்றன. மேற்கத்திய அறிவியல் அனைத்துத் துறைகளிலும் தன் ஆராயும் பார்வையைச் செலுத்தியது என்றாலும், காலனி ஆதிக்கக் காலம் முதல் இன்றுவரை நவீன அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெரும்பாலும் லாபத்துக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. அவை பொது நன்மைக்காக முழுமையாகப் மாற்றப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல் தொழில்நுட்பமும், அது சார்ந்த பெரும் தொழிற்சாலைகளும் மட்டுமே உலகை ரட்சிக்க வந்த ஒரே அறிவியல் பிரிவு என்பது போன்றதொரு மாயை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களின் பின்னணியில் தொழிற் புரட்சியின் தொடக்கக் காலத்தில் அழிக்கப்படத் தொடங்கிய காடுகள் இன்றுவரை இடைவெளி இல்லாமல் கபளீகரம் செய்யப்பட்டுவருகின்றன. 93 லட்சம், கிட்டத்தட்ட 1 கோடி ஏக்கர் காடு, அதாவது ஸ்விட்சர்லாந்து நாட்டின் பரப்பளவுள்ள காடு 2019-ல் அழிக்கப்பட்டிருக்கிறது. காட்டைச் சுற்றிச் செல்லும் சாலைகள் நம்மை அயர்ச்சி அடைய வைக்கின்றன. ஒரு தாளில் சிறு கோட்டை வரைவதைப் போல் காட்டுக்குள் ஒரு சாலை, பாலம், ரயில்பாதை போன்றவற்றை அமைப்பது நமக்கு அத்தியாவசியத் தேவை என்பதுபோல் மாற்றப்பட்டுவிட்டது. இவ்வளவு காலம் சுற்றி சென்றுவந்திருந்தாலும் இப்போது வேகமே நம்முடைய ஒரே தாரக மந்திரம். தாமதமாகப் போனால் லாபம் குறைந்துவிடும், வளர்ச்சியில் பின்தங்கிவிடுவோம் என்று பொருளாதார மேதாவிகள் அச்சுறுத்துவார்கள். மற்றொருபுறம் காடுகளுக்குள் உறங்கிக் கிடக்கும் மரங்கள், கனிமங்கள் பெருமுதலாளி கள், அரசியல்வாதிகளின் கண்களை உறுத்திக்கொண்டே இருக்கின்றன. கனிமங்கள் காட்டுக்குள் உறங்குவதால் யாருக்கு லாபம்? எடுத்து விற்றால் தானே அனைவருக்கும் உணவிட முடியும் என்று அரசியல்வாதிகள் இனிப்பு தடவிப் பேசுவார்கள். காடு அழிப்பு அமைச்சகம் கோவிட்-19 நெருக்கடி காலத்திலும் மத்திய சுற்றுச்சூழல்-காடு அமைச்சகம் ஒரேயொரு பொத்தானை அழுத்தி 30 கன்னிக் காடுகளை அழிப்பதற்கான அனுமதியை சில மணி நேரத்தில் கொடுத்தி ருக்கிறது. இந்தக் காடுகளை அழிப்பதற்கான விலையை ஒரு வேளை நாம் நேரடியாகவோ முழுமையாகவோ கொடுக்காவிட்டாலும்கூட, நம் சந்ததிகள் நிச்சயம் கொடுக்கத்தான் போகிறார்கள். நம் சொத்து நம் சந்ததிகளுக்குப் போவதுபோல், நாம் மேற்கொள்ளும் அழிவின் பலனும் அவர்களைத்தானே சென்று சேரும். காலனி ஆதிக்க வனத்துறையைப் போல் காடுகளை அழிப்பதற்கும், காடழிப்புக்குக் கதவைத் திறந்துவிடுவதாகவும் சுற்றுச்சூழல்-காடு அமைச்சகம் செயல்பட்டுவருகிறது. மத்திய அரசுத் தரவுகளின்படி கடந்த 30 ஆண்டுகளில் 23,716 தொழிற்சாலை திட்டங்களுக்காக 14,000 சதுர கிலோமீட்டர் காடு அழிக்கப்பட்டிருக்கிறது. இது நாகாலாந்து மாநிலத்தின் பரப்புக்கு இணையானது. ஒரு நாடு ஆரோக்கியமாக இருப்பதற்கு மூன்றில் ஒரு பங்கு காடாக இருந்தாக வேண்டும். இந்தியா 22 சதவீதத்தைத் தொடவே தடுமாறுகிறது. இத்தனைக்கும் உலக அளவில் அதிக காடுகளைக் கொண்ட 10-வது நாடு இந்தியா என்பது நினைவில் கொள்ளத்தக்கது. நஷ்டமும் வருமல்லவா! இப்படியாக இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் காடுகள் கட்டுமீறி அழிக்கப்படு கின்றன. அங்கு யுகம்யுகமாய் இயற்கையோடு ஊடாடி தன் உணவையும் வாழ்க்கையையும் தகவமைத்துக்கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்து வரும் தாவர, உயிரினங்களை மனிதர்களின் மின் ரம்பங்களும் புல்டோசர்களும் ஒரு சில மணி நேரங்களில் அறுத்தும் நசுக்கியும் போட்டுவிடுகின்றன. இப்படிக் காடுகள் அழிக்கப்படுவதால், ஏற்படும் விளைவுகளைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அதனால் கிடைக்கும் மூலதனமற்ற லாபத்தில் மட்டுமே கண்ணாக இருக்கிறோம். ஓர் அம்சம் அல்லது ஒரு பொருள் வியாபாரமாக-லாபமாக மட்டுமே பார்க்கப்படும்போது, அதில் நஷ்டத்துக்கான கூறுகளும் இருக்கத்தானே செய்யும். அந்த நஷ்டம்தான் நாவல் கரோனா வைரஸ் போன்ற வடிவத்தில் நம்மைத் துரத்திக்கொண்டிருக்கிறது. காடழிப்பு, உயிரினங்களைத் தொந்தரவுக்கு உள்ளாக்குவதற்கும் இதுபோன்ற பெருந்தொற்று மனிதர்களிடையே பரவுவதற்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்கிறது. எந்த வௌவாலும் மரநாயும் தானாக வைரஸை பரப்புவதில்லை. அவற்றின் உடலில் உள்ள வைரஸ் மரபணு திடீர்மாற்றம் (Mutation) அடையாமல் நம் மீது தொற்றவும் முடியாது. காடுகளை அழிப்பதன் மூலம், இந்த உயிரினங்களை நாம் நெருங்கிச் செல்கிறோம் அல்லது அவை வேறு வழியில்லாமல் ஊர்களை நோக்கி நகர வழிவகுக்கிறோம். பிறகு மனிதர்களுக்கு எல்லாமே பிரச்சினையில் சென்று முடிகிறது. உலகில் இதுவரை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய பெரும்பாலான கொள்ளைநோய், பெருந்தொற்றுகளின் மூலகாரணம் காடுகளின் மீது மனிதர்கள் இடை விடாது கைவைத்துக்கொண்டே இருப்பதுதான். யார் காரணம்? இப்போது நாம் மீண்டும் தொடக்கக் கேள்விக்கு வருவோம். நாவல் கரோனா வைரஸ் என்ற தூங்கிக்கொண்டிருந்த பூதத்தை தட்டியெழுப்பியது யார்? வௌவாலா, அலங்கா, மரநாயா? நிச்சயமாக ஒரு உயிரினமோ, நிகழ்வோ இதற்குக் காரணமில்லை. தன்னிச்சையாக எதுவும் நடைபெறவும் இல்லை. கடந்த ஆண்டின் இறுதியில் கோவிட்-19 நோய்த்தொற்று தொற்றத் தொடங்கியதற்கும், இன்றைக்கு அது கணக்கு வழக்கில்லாமல் பரவிவருவதற்கும், நாளை அது ஏற்படுத்தப் போகும் பாதிப்புகளுக்கும் ஒரேயொரு காரணம் மட்டுமே நம்முன் இருக்கிறது. அந்த முதல், கடைசி குற்றவாளிகள், மனிதர்களான நாம்தான். நம் போக்கை நாம் மாற்றிக்கொள்ளாதவரை, நமக்கு இருக்கும் ஆபத்தும் நிச்சயமாகத் தன் போக்கை மாற்றிக் கொள்ளாது என்பது மட்டுமே நிரந்தர உண்மை.   https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/558104-covid19-6.html  
  • மீரா, முழு விபரம் இல்லாமல் மேலோட்டமாக சொல்ல முடியாது. முக்கியமாக, சிறுவர்களை இயக்கத்தில் சேர்ப்பது, பெண்பிள்ளைகளை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பது, அவர்கள் இயக்கத்தில் இருக்கும் போது கருவுறின் கட்டாய கருக்கலைப்பு செய்வது போன்றவை சர்வதேசத்துக்கு சொல்லிய வகையில், தமிழர் கதிர்காமர் சிங்களத்துக்கு செய்த பெரும் கைங்கரியம். இதனால் தான், புலிகள் பயங்கரவாதிகள் லிஸ்ட்ல சேர்க்கப்பட்ட்னர். அதனை மறுக்க முடியுமா, போல் நியூமானால்? இந்த விடயங்கள் சர்வதேசத்தில் எடுபடும் என்று கதிர்காமருக்கு தெரியும். ஏனெனில் இங்கு ராணுவத்தில் ஆண், பெண் உறவு சாதாரணம். கருத்தடை மாத்திரையுடன் விசயம் முடியும்.  ஆனால், அங்கே, கலாசாரம் வேறு என்பதால், புலிகள் அப்படி செய்தார்கள் என்று சொன்னார்.அதாவது, இங்கு ராணுவத்தில் போலவே, அங்கும் உறவுகள் இருந்தன. ஆனால், பிள்ளைகளை பெற்றுக் கொள்ள போனால் போராட முடியாது என்றுதான் அவ்வாறு செய்தார்கள் என்ற கதிர்காமர் செய்த இந்த ஜிகாலடி வேலையினால், புலிகள் பெரிதும், சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது உண்மை. அன்று மேலை நாடுகளில் படித்தவர்கள் யாருமே இவைகளை மறுதலிக்க புலிகள் பக்கம் இருக்கவில்லை. அவருக்கு பிரதமர் பதவிக்கு சந்திரிகா நியமிக்க இருந்தார். ஆனாலும் மகிந்தா வெடி வைத்து, புலிகள் தலையில் போட்டார்.
  • மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் -முதல்வர் பழனிசாமி   மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். பதிவு: ஜூன் 06,  2020 14:10 PM சென்னை மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர். மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார். மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.  இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார்.  மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.   தனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  மாணவி நேத்ராவின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.அமைச்சர்கள் செலூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பாராட்டினர் இந்த் நிலையில் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த நேத்ராவிற்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்து உள்ளார். த.ன்னலம் கருதாமல் அர்ப்பணிப்புடன் செயல்படும் நேத்ராவின் செயலை அங்கீகரிக்கும் வகையில் நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என கூறி உள்ளார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/06141007/Madurai-student-pays-for-higher-education-he-Government.vpf