Sign in to follow this  
poet

கொரோனாவை தாண்டி. - வ.ஐ.ச.ஜெயபாலன்

Recommended Posts

BEYOND THE CORONA VIRUS
கொரோனாவை தாண்டி.
- வ.ஐ.ச.ஜெயபாலன்
*
மலர்கிறது முல்லை
கமகமவென சுவர்க்கமாய் உயர்கிறதே
என் மாடித்தோட்டம்.
கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின்
மரண அமைதி அதிர
கருவண்டுகள் இசைக்கிறது
”அஞ்சாதே தோழா” என்னும் பாடல்.
*
அமேசன் காட்டுத் தீயையும் மிஞ்சி
உலகை வேட்டையாடுதே கொரோனா .
அடாது கொட்டும் வெண்பனியையும்
வீழாவாய் கொண்டாடும்
ஒஸ்லோ நகரும் முடங்கியதே.
கூதிரில் தனித்த என் மனைவிக்கு
பூக்களும் இல்லை.
எனினும் எனினும்
இடுக்கண் வருங்கால் நகைக்கும்
புதல்வர்களை விட்டு வந்தேனே..
.*
வெற்றியெனக் கோரோனோ கிருமிகள் துள்ளும்
பெசன்ற்நகர் கடற்கரையில்
கைவிடப்பட்ட படகுகளில் அஞ்சாமல்
நண்டுகள் தொற்றும் இரவில்.
குடிசைகளுள்
படகெனத் துயிலும் பெண்டிர் மார்பில்
வலிய விரல்கள் ஊர்கின்றன.
*
சாத்தானே அப்பாலே போ.
மனிதர்கள் கைவிடப்படுவதில்லை.
ஒருபோதும் வெல்லப் படுவதுமில்லை.
 
.
கூதிர் - WINTER

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

வெல்லப்பட முடியாதவர்கள் மனிதர்கள் என்று சொல்லாதீர்ர்கள்.. மனிதர்களின் ஆணவத்தை தான் என்ற அகந்தையை இந்த பூமி எல்லா உயிரினங்களுக்குமானது என்றதை கிஞ்சித்தும் எண்ணிப்பார்க்காத மனிதனின் சுயநலத்தை பேராசையை என்று எல்லாவற்றையும் வென்று விட்டிருக்கிறது இந்தவைரஸ்.  

காலப்பெருவெளியில் நமக்கான பாத்திரமென்று ஏதேனும் உண்டா..? மணல் துகளொன்றை கோடியாய் வெட்டி, அதிலொன்றின் அளவை நம் வாழ்வுடன் ஒப்பிட்டால், காலத்தின் சாட்சியாய் வெளியெங்கும் வேவு பார்க்கும் காற்றும் கைகொட்டி சிரிக்கும். அற்பத்தின் அருஞ்சொற்பொருள்தானே இவ்வாழ்வு..? 

சீமான் சொல்வதுபோல் பூமி நமக்கானது மட்டும் அல்ல நம்மை சுற்றி உள்ள உயிர்களுக்கும் வருங்கால சந்ததிக்கும் உரியது..அதை அவர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கவேண்டியது நம் பொறுப்பு.. ஆனால் மனித இனம் என்ன செய்கிறது..? அபிவிருத்தி பொருளாதரம் என்ற பெயரில் காட்டையும் மலைகளையும் வெட்டி பால் குடிக்க வேண்டிய பூமித்தாயின் முலையை அறுத்து இரத்தம் குடிக்கிறது..

தாங்குமோ இயற்கையும் பொறுக்குமோ..?
 

எத்துணை சிறியது இவ்வாழ்வு... அதை எண்ணிப்பார்க்காத மனிதனின் பேராசைதான் எத்தனை பெரியது..?

 

கவிதை.. கம்பனின் கவிதை கால் இடறுமோ..? அது வழமைப்போல் ஆற்று வெள்ளம்போல் பாய்ந்து வந்திருக்கிறது தங்கள் தமிழ் மலையில் இருந்து..

 

Edited by பாலபத்ர ஓணாண்டி

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 ஆனால் மனித இனம் என்ன செய்கிறது..? அபிவிருத்தி பொருளாதரம் என்ற பெயரில் காட்டையும் மலைகளையும் வெட்டி பால் குடிக்க வேண்டிய பூமித்தாயின் முலையை அறுத்து இரத்தம் குடிக்கிறது..

தாங்குமோ இயற்கையும் பொறுக்குமோ..?
 

 

 

ஆமாம். 

”அமேசன் காட்டுத் தீயையும் மிஞ்சி
உலகை வேட்டையாடுதே கொரோனா .” என்று எழுதினேன் ஐயா. இன்னும் எழுதியும் இருக்கலாம்தான். உங்களைப்போல வாசிப்பவர்கள் யோசிக்கிறபோது  உயிர்த்த கவிதை துளிர்த்துத் தழைக்குமே. அதுவும் போதுமன்றோ ஐயா? . தவறெனில் மன்னிக்கவும்.. அன்புக்கு நன்றி
Edited by poet

Share this post


Link to post
Share on other sites

2005 மே தினத்தன்று யாழ் குடும்பத்தில் இணைந்திருக்கிறேன். 14 வருடங்கள் என் கவிதைகளுக்கு  இடந்தந்த யாழ் சங்கப் பலகைக்கு நன்றி.   2 எச்சரிக்கை புள்ளிகளுகளுக்கான குற்றங்களுக்கு நெறிமிகு யாழ் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறேன். என்னை இணைத்த மோகனையும் அனுமதித்த யாழ் குடும்பத்தையும் வாழ்தி யாழ் கள கவிதைப்பூங்காட்டில் இருந்து விடை பெறுகிறேன். இது சங்க புலவர்களது மரபுதான். தொடர்ந்து சிலகாலம் யாழ் உரைப்பகுதியில் சந்திப்போம் நண்பர்களே. 

Share this post


Link to post
Share on other sites
On 3/25/2020 at 3:49 PM, poet said:

2005 மே தினத்தன்று யாழ் குடும்பத்தில் இணைந்திருக்கிறேன். 14 வருடங்கள் என் கவிதைகளுக்கு  இடந்தந்த யாழ் சங்கப் பலகைக்கு நன்றி.   2 எச்சரிக்கை புள்ளிகளுகளுக்கான குற்றங்களுக்கு நெறிமிகு யாழ் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறேன். என்னை இணைத்த மோகனையும் அனுமதித்த யாழ் குடும்பத்தையும் வாழ்தி யாழ் கள கவிதைப்பூங்காட்டில் இருந்து விடை பெறுகிறேன். இது சங்க புலவர்களது மரபுதான். தொடர்ந்து சிலகாலம் யாழ் உரைப்பகுதியில் சந்திப்போம் நண்பர்களே. 

ஏன் இப்படி ஒரு முடிவு .ஈழதின் தமிழ் தந்த புலவரில் அற்புதமான கவிஞரில் நீங்கள் ஒருவர்.எத்தனை எத்தனை கவிகள் உங்களில் பிறந்தது.தொடர்ந்து எழுத்துங்கள் பொயட்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • படிக்காமல். சரஸ்வதியை வணங்குமாறு எங்கு குறிபாபிடப்பட்டுள்ளது. சும்மா இங்கு வந்து ஏதோ நியாயம் கதைப்பது போல் வேடம் போட வேண்டாம். சும்மா சாட்டுக்கு ஏதோ எல்லா மதத்தையும் கண்டிப்பது போல் நடிக்க வேண்டாம். உங்களுடைய. இலக்கு சைவமும் தமிழும் மட்டுமே.  
  • சிவகங்கை அருகே உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கவுன்சிலர்     சிவகங்கை அருகே உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு அப்பகுதி ஒன்றியக் கவுன்சிலர் மகேஸ்வரி கண்ணன் உதவிகரம் நீட்டினார். சிவகங்கை அருகே ஒக்கூர் இலங்கை தமிழர் முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள் கூலித் தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் இலங்கை தமிழர்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே முடங்கினர். மேலும் வேலைக்குச் செல்லாததால் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் மகேஸ்வரி கண்ணன் இலங்கை தமிழர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார். அவர் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை உணவுப் பொருட்கள் வழங்க உள்ளார். மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிப்பதற்கான கருவியும் இலவசமாக வழங்கினார். அவரது செயலை இலங்கை தமிழர்கள் மனதார பாராட்டினர். https://www.hindutamil.in/news/tamilnadu/548053-councilor-help-sri-lankan-tamils-who-were-left-without-food-near-sivaganga.html  
  • ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு  கண்காணிப்பு:  கலெக்டர் கதிரவன் பேட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய நவீன கிருமிநாசினி தெளிப்பான் எந்திரத்தை பார்வையிட்ட கலெக்டர் கதிரவன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:- ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து ஈரோடு கிழக்கு ,கோபி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பில் நவீன கிருமிநாசினி தெளிப்பான் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற எந்திரம் தேவைப்பட்டால் எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்க தயாராக இருக்கிறார்கள் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது நேற்று கூட முதலமைச்சர் கடைகளின் நேரங்களை குறைத்து அறிவித்துள்ளார். ஈரோடு பொருத்தவரை மக்கள் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். 28 பேருக்கு கரோனா தொற்றுக் உறுதி செயப்பட்டுள்ளது. நாலு பேர் கோயம்புத்தூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றுவரை 89 பேர் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதில் ஏற்கனவே 28 பேருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 பேரின் ரத்த, சளி மாதிரிகள் முடிவு இன்னும் வர வேண்டியுள்ளது. 46 பேருக்கு தொற்று இல்லை என உறுதியாகி உள்ளது. இதுபோக கோபி இரண்டு பகுதியில் கோபி டவுன் கரட்டடிபாளையம், நம்பியூர் பவானியில் கவுந்தப்பாடி சத்தியமங்கலம் மற்றும் ஈரோடு மாநகர் பகுதியில் 10 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது 29,809 குடும்பங்கள் உள்ளன. ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 809 பேர் உள்ளனர் அவர்கள் வீடுகளில் கண்காணிப்பில் உள்ளனர். நேற்று உள்ளாட்சி அமைச்சர் அனைத்து வீடுகளிலும் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் அதற்கான அறிவிப்பு இன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம். அறிவிப்பு வந்ததும் எல்லா வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யப்படும். ஈரோடு பொறுத்தவரை மளிகை பொருட்கள் தட்டுப்பாடு இல்லை இதுகுறித்து ஏற்கனவே கூட்டம் நடத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கரோனா குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. இதுவரை சமூக தொற்றாக அது மாறவில்லை. தேவையான முன்னெச்சரிக்கை நாம் எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தென்னரசு எம்எல்ஏ மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உள்பட பலர் உடனிருந்தன   https://www.hindutamil.in/news/tamilnadu/548036-over-1-lakh-people-isolated-and-monitored-in-erode-district-1.html  
  • செந்தில் தேத்தண்ணீர் கடை பகிடி.😊  
  • யாழில் ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவு! சுகாதார அதிகாரிகள் குற்றச்சாட்டு Report us Vethu 5 hours ago கொரோனா நோயாளியான சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வட மாகாண சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. அரியாலையில் சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 200 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படாமல் மறைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டவர்களில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தள்ளார். முதலில் ஒரு நோயாளியும் பின்னர் தலா மூன்று நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று 16 பேரின் இரத்த மாதிரிகள் சோதனையிட்ட போது எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றுமொரு தொகுதியினரின் மருத்துவ அறிக்கைகள் இன்று வெளியாகும் என பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். https://www.tamilwin.com/security/01/242722?ref=home-top-trending