Jump to content

கொரோனாவை தாண்டி. - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

BEYOND THE CORONA VIRUS
கொரோனாவை தாண்டி.
- வ.ஐ.ச.ஜெயபாலன்
*
மலர்கிறது முல்லை
கமகமவென சுவர்க்கமாய் உயர்கிறதே
என் மாடித்தோட்டம்.
கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின்
மரண அமைதி அதிர
கருவண்டுகள் இசைக்கிறது
”அஞ்சாதே தோழா” என்னும் பாடல்.
*
அமேசன் காட்டுத் தீயையும் மிஞ்சி
உலகை வேட்டையாடுதே கொரோனா .
அடாது கொட்டும் வெண்பனியையும்
வீழாவாய் கொண்டாடும்
ஒஸ்லோ நகரும் முடங்கியதே.
கூதிரில் தனித்த என் மனைவிக்கு
பூக்களும் இல்லை.
எனினும் எனினும்
இடுக்கண் வருங்கால் நகைக்கும்
புதல்வர்களை விட்டு வந்தேனே..
.*
வெற்றியெனக் கோரோனோ கிருமிகள் துள்ளும்
பெசன்ற்நகர் கடற்கரையில்
கைவிடப்பட்ட படகுகளில் அஞ்சாமல்
நண்டுகள் தொற்றும் இரவில்.
குடிசைகளுள்
படகெனத் துயிலும் பெண்டிர் மார்பில்
வலிய விரல்கள் ஊர்கின்றன.
*
சாத்தானே அப்பாலே போ.
மனிதர்கள் கைவிடப்படுவதில்லை.
ஒருபோதும் வெல்லப் படுவதுமில்லை.
 
.
கூதிர் - WINTER
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெல்லப்பட முடியாதவர்கள் மனிதர்கள் என்று சொல்லாதீர்ர்கள்.. மனிதர்களின் ஆணவத்தை தான் என்ற அகந்தையை இந்த பூமி எல்லா உயிரினங்களுக்குமானது என்றதை கிஞ்சித்தும் எண்ணிப்பார்க்காத மனிதனின் சுயநலத்தை பேராசையை என்று எல்லாவற்றையும் வென்று விட்டிருக்கிறது இந்தவைரஸ்.  

காலப்பெருவெளியில் நமக்கான பாத்திரமென்று ஏதேனும் உண்டா..? மணல் துகளொன்றை கோடியாய் வெட்டி, அதிலொன்றின் அளவை நம் வாழ்வுடன் ஒப்பிட்டால், காலத்தின் சாட்சியாய் வெளியெங்கும் வேவு பார்க்கும் காற்றும் கைகொட்டி சிரிக்கும். அற்பத்தின் அருஞ்சொற்பொருள்தானே இவ்வாழ்வு..? 

சீமான் சொல்வதுபோல் பூமி நமக்கானது மட்டும் அல்ல நம்மை சுற்றி உள்ள உயிர்களுக்கும் வருங்கால சந்ததிக்கும் உரியது..அதை அவர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கவேண்டியது நம் பொறுப்பு.. ஆனால் மனித இனம் என்ன செய்கிறது..? அபிவிருத்தி பொருளாதரம் என்ற பெயரில் காட்டையும் மலைகளையும் வெட்டி பால் குடிக்க வேண்டிய பூமித்தாயின் முலையை அறுத்து இரத்தம் குடிக்கிறது..

தாங்குமோ இயற்கையும் பொறுக்குமோ..?
 

எத்துணை சிறியது இவ்வாழ்வு... அதை எண்ணிப்பார்க்காத மனிதனின் பேராசைதான் எத்தனை பெரியது..?

 

கவிதை.. கம்பனின் கவிதை கால் இடறுமோ..? அது வழமைப்போல் ஆற்று வெள்ளம்போல் பாய்ந்து வந்திருக்கிறது தங்கள் தமிழ் மலையில் இருந்து..

 

Link to comment
Share on other sites

4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 ஆனால் மனித இனம் என்ன செய்கிறது..? அபிவிருத்தி பொருளாதரம் என்ற பெயரில் காட்டையும் மலைகளையும் வெட்டி பால் குடிக்க வேண்டிய பூமித்தாயின் முலையை அறுத்து இரத்தம் குடிக்கிறது..

தாங்குமோ இயற்கையும் பொறுக்குமோ..?
 

 

 

ஆமாம். 

”அமேசன் காட்டுத் தீயையும் மிஞ்சி
உலகை வேட்டையாடுதே கொரோனா .” என்று எழுதினேன் ஐயா. இன்னும் எழுதியும் இருக்கலாம்தான். உங்களைப்போல வாசிப்பவர்கள் யோசிக்கிறபோது  உயிர்த்த கவிதை துளிர்த்துத் தழைக்குமே. அதுவும் போதுமன்றோ ஐயா? . தவறெனில் மன்னிக்கவும்.. அன்புக்கு நன்றி
Link to comment
Share on other sites

2005 மே தினத்தன்று யாழ் குடும்பத்தில் இணைந்திருக்கிறேன். 14 வருடங்கள் என் கவிதைகளுக்கு  இடந்தந்த யாழ் சங்கப் பலகைக்கு நன்றி.   2 எச்சரிக்கை புள்ளிகளுகளுக்கான குற்றங்களுக்கு நெறிமிகு யாழ் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறேன். என்னை இணைத்த மோகனையும் அனுமதித்த யாழ் குடும்பத்தையும் வாழ்தி யாழ் கள கவிதைப்பூங்காட்டில் இருந்து விடை பெறுகிறேன். இது சங்க புலவர்களது மரபுதான். தொடர்ந்து சிலகாலம் யாழ் உரைப்பகுதியில் சந்திப்போம் நண்பர்களே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2020 at 3:49 PM, poet said:

2005 மே தினத்தன்று யாழ் குடும்பத்தில் இணைந்திருக்கிறேன். 14 வருடங்கள் என் கவிதைகளுக்கு  இடந்தந்த யாழ் சங்கப் பலகைக்கு நன்றி.   2 எச்சரிக்கை புள்ளிகளுகளுக்கான குற்றங்களுக்கு நெறிமிகு யாழ் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறேன். என்னை இணைத்த மோகனையும் அனுமதித்த யாழ் குடும்பத்தையும் வாழ்தி யாழ் கள கவிதைப்பூங்காட்டில் இருந்து விடை பெறுகிறேன். இது சங்க புலவர்களது மரபுதான். தொடர்ந்து சிலகாலம் யாழ் உரைப்பகுதியில் சந்திப்போம் நண்பர்களே. 

ஏன் இப்படி ஒரு முடிவு .ஈழதின் தமிழ் தந்த புலவரில் அற்புதமான கவிஞரில் நீங்கள் ஒருவர்.எத்தனை எத்தனை கவிகள் உங்களில் பிறந்தது.தொடர்ந்து எழுத்துங்கள் பொயட்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.