• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

கொரோனா வைரஸ் : 12 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டுமா?

Recommended Posts

கொரோனா வைரஸ் : 12 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டுமா?

மைக்கேல் ராபர்ட் பிபிசி சுகாதார பிரிவு ஆசிரியர் 
கொரோனா வைரஸ் : 12 வாரங்களுக்கு தனிமைப் படுத்தப்பட வேண்டுமா ?Getty Images

உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தில் உள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். 

ஆனால் தற்போது நிலவும் நெருக்கடி சூழலில் 12 வாரங்கள் தங்களை தானே வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டு தற்காத்து கொள்ளும் புதிய திட்டம் பலரால் முன்னெடுக்கப்படுகிறது. 

உயிரைக்காக்கும் இந்த புதிய திட்டத்தை ஷீல்டிங் என்று அழைக்கின்றனர். பிரிட்டனில் இந்த ஷீல்டிங் முறையை பலர் பின்பற்ற துவங்கியுள்ளனர். 

Banner image reading 'more about coronavirus' Banner

ஷீல்டிங் என்றால் என்ன ?

ஷீல்டிங் என்றால் நாள் முழுக்க வீட்டில் இருக்க வேண்டும். கடைகளுக்கோ, பொது இடங்களுக்கோ செல்ல கூடாது. ஆனால் உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால் அங்கு நடைபயிற்சி மேற்கொள்ளலாம். ஆனால் வீட்டிற்குள் உங்களை தவிர யாரும் வர அனுமதிக்கக்கூடாது. 

உங்களை கவனித்துக்கொள்ள யாரையாவது அனுமதித்தால் அவர்களும் தங்கள் கைகளை கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். 

கொரோனா வைரஸ் : 12 வாரங்களுக்கு தனிமைப் படுத்தப்பட வேண்டுமா ?Getty Images

உங்கள் வீட்டில் உள்ளவர்களும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவர்களும் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது. தங்கள் அலுவலக பணிகளை வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளலாம். அவர்களிடம் இருந்தும் நிங்கள் இரண்டு மீட்டர் தூரம் விலகி இருக்க வேண்டும். வீட்டில் உள்ள ஜன்னல்களை திறந்து வைத்துக்கொள்ளலாம். 

ஒருவர் பயன்படுத்திய துணியை வேறுயாரும் பயன்படுத்த கூடாது. முடிந்தால் தனித்தனி கழிப்பறைகள் மற்றும் படுக்கை அறைகளை பயன்படுத்தலாம். அல்லது கழிப்பறைகளை பயன்படுத்திய பின்னர் நிச்சயம் சுத்தம் செய்ய வேண்டும். 

சமையலறையில் இருந்து சமைத்து முடித்துவிட்டு, உணவை எடுத்து சென்று உங்கள் அறையில் அமர்ந்து உண்ணவும். உணவு சமைக்க தனித்தனி பாத்திரங்களை பயன்படுத்தவும். ஆனால் சோப், அல்லது தண்ணீர் ஊற்றி கழுவினால் வைரஸ் பரவாது என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா வைரஸ் : 12 வாரங்களுக்கு தனிமைப் படுத்தப்பட வேண்டுமா ?Getty Images

கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அனைவரும் பழகும் விதத்தையே மாற்றியுள்ளனர். ஒருவரிடம் இருந்து மற்றொவர் விலகி இருக்கின்றனர். நோய் தொற்று பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் உலகவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் ஏற்கனவே உடலில் பிரச்சனை உள்ள நபர்கள் இந்த நேரத்தில் தங்களை தற்காத்து கொள்வது அவசியமாக கருதப்படுகிறது.

யாரெல்லாம் 12 வாரங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் ?

கொரோனா வைரஸ் : 12 வாரங்களுக்கு தனிமைப் படுத்தப்பட வேண்டுமா ?Science Photo Library
 • ஏற்கனவே உடலில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள்
 • புற்று நோய் பாதிப்பிற்காக சிகிச்சை பெற்றுக்கொள்பவர்கள். 
 • நோய் எதிர்ப்பு சக்திக்காக மருந்து உட்கொள்பவர்கள்.
 • கர்பிணி பெண்கள் மற்றும் இதய நோய் உள்ளவர்கள். 
 • சுவாச பிரச்னையுள்ளவர்கள். 
 • மிகவும் அரிய நோயால் பாதிக்கப்பட்டு, உடலில் எதிர்ப்பு சக்தியும் இல்லாதவர்கள் நிச்சயம் தங்களை தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும். 

குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் உள்ள அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதாவது பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். ஆனால் ஷீல்டிங் முறையை பின்பற்ற வேண்டுமா ? என்பதை உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்துக்கொள்ளலாம். 

ஷீல்டிங் என்பது நம்மை நாம் தற்காத்துக்கொள்வதற்கான முயற்சி மட்டுமே.
 

https://www.bbc.com/tamil/global-52006264

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • தற்கொலை அல்ல விடை Depressed minds ! Difficult to handle failure !"Suicide" - Not the Answer !Depression is a serious disease !Let's openly talk about Mental HealthThank you Young friends of Kopay College of Education, Jaffna Sri Lanka March 6, 2020 by Dr V.    
  • (எம்.எப்.எம்.பஸீர்) கண்டி, அக்குரணை பகுதியில் இந்தியா சென்று திரும்பிய கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்புகள், சென்றுவந்த இடங்களை ஆராய்ந்த சுகாதார தரப்பும் பாதுகாப்புத் தரப்பும், அக்குரணை நகரை முற்றாக இன்றுமுடக்கின. கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் பரவுவதை தடுப்பதை நோக்காக கொண்டு அந்த நகரம் முற்றாக வெளித் தொடர்புகளில் இருந்து முடக்கப்பட்டதாகவும், அங்கு உள் நுழையவோ வெளிச் செல்லவோ எவருக்கும் அனுமதியளிக்கப்படாது எனவும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர். ஏற்கனவே டுபாய் சென்று திரும்பிய  நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அதன் பரவலை கருத்தில் கொண்டு களுத்துறை, பண்டாரகம பொலிஸ் பிரிவின் அட்டுலுகம பிரதேசம் முற்றாக முடக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நகராமக அக்குரணை நேற்று முடக்கப்பட்டது. கண்டி வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற பரிசோதனைகளின் போது, அக்குரணையைச் சேர்ந்த தொற்றாளர் கண்டறியப்பட்டார். இந்நிலையில் அவரது நெருங்கிய தொடர்பாளர்களை சுகாதார துறையும் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையும் தேடிய போது முழு அக்குரணையும் கொரோனாவால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பிரதேசமாக கண்டறியப்பட்டதையடுத்து, அது குறித்து ஆராய்ந்து கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையம் அக்குரணையை முடக்க ஆலோசனை முன்வைத்து நடை முறைப்படுத்தியது. இந் நிலையில் புத்தளம் - கடையான்குளம் பகுதிஇன்று காலை முற்றாக வெளித்தொடர்புகளில் இருந்து முடக்கப்பட்ட போதும், பின்னர் அந்த ஊர் மக்கள் அனைவரும் பாடசாலை ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் மையத்துக்கு மாற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விஷேடமாக அண்மையில் மலேஷியா மற்றும் இந்தோனேஷியாவுக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற குழுவில் அடங்கிய ஒருவரும் கொரோனா தொற்று தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவ்வாறு சென்று திரும்பிய மூன்று குழுக்கள் கொரோன அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன. மலேஷியாவில் குறித்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்ற பலருக்கு வெளிநாடுகளில் கொரோனாதொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தக் குழுக்களை உளவுத்துறை அடையாளம் கண்டுள்ள நிலையில் , அக்குழுவில் உள்ளடங்கிய ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் அக்குரணை, புத்தளம், பாலாவி மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்தோர் என கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவ தளபதியும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார். இந்த ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய முதல் குழுவில் அக்குரணை மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் உள்ளடங்குவதாகவும் அந்த குழு கடந்த 13 ஆம் திகதி நாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளில் இருந்தோர் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். 2 ஆம் குழுவில் 5 பேர் உள்ளடங்குவதுடன் அவர்கள் பாலாவி மற்றும் புத்தளத்தை சேர்ந்தோர் எனவும் அவர்கள் கடந்த 15 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளதாகவும் உளவுத்துறை கண்டறிந்துள்ளது. அத்துடன் 6 பேரை உள்ளடக்கிய மூன்றாம் குழு 17 ஆம் திகதி நாடு திரும்பியுள்ள நிலையில் அக்குழுவில் உள்ளடங்குவோர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தோர் என லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா கூறினார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் அவ்வாறு சென்று வந்த அனைவருக்கும், அவர்களுடன் தொடர்புகளை பேணியோருக்கும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட சுகாதார துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதேவேளை கொழும்பு - ராஜகிரிய பகுதியின் ஒபேசேகர புர மற்றும் ஸ்ரீ ஜயவர்தன புறக்கோட்டை மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட அருனோதய மாவத்தை ஆகியவை தற்காலிகமாக இன்றுமுடக்கப்பட்ட நிலையில் மாலையாகும்போது சாதாரண ஊரடங்கின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் இருந்து கொரோனாதொற்று அறிகுறிகளுடன் சிறுவர்கள் உட்பட சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாரு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அந்த பகுதிகள் கடும் சுகாதார கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாமல் ஊர் முழுதும் சுற்றித் திறிந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து முஸ்லிம் கிராமம் ஒன்று முற்றாக முடக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் , பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டுலுகம முஸ்லிம் ஊரே இவ்வாறு வெளித் தொடர்புகளில் இருந்து முற்றாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஊரை சேர்ந்த சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரம் பேர்வரை இவ்வாறு அவர்களது வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த தொற்றாளரின் தந்தை மற்றும் சகோதரிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவர்களும் தற்போது அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகமல் இருப்போர் அது தொடர்பில் சுகாதார மற்றும் பாதுகப்பு அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய அறிவுறுத்தல்களைப் பெற்று தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு சுகாதார, பாதுகாப்புத் தரப்புக்கள் பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன. https://www.virakesari.lk/article/78913
  • " இந்து மதம் கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்கு கொண்டுவரப் பட்டது " : எந்த திகதியில் என்று கேட்பது வறட்டு கேள்வியாக இருக்கும் 🤣🤣🤣 🤣🤣🤣 🤣🤣🤣
  • (எம்.எப்.எம்.பஸீர்) 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தற்கொலை தாக்குதல்தாரியை அழைத்துச் சென்று வழிநடத்தியதாகக் கூறப்படும் முக்கிய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சியோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்திருந்ததுடன், 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 21/4 - 2019 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிரதான குற்றவியல் விசாரணைகளில் பிரதான சந்தேக நபர் ஒருவர் இன்று சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி வீதி, கல்கிசை எனும் முகவரில் வசித்த பிரதான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவும் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் , மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபரை அங்கு அழைத்துச் சென்று, அவரை வழி நடாத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்ததாகவும் அதனை தொடர்ந்தே பிரதான சந்தேக நபராக குறித்த நபரைக் கைது செய்துள்ளோம். அவரிடம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார். இந் நிலையில் இதுவரையிலான விசாரணையில் இந்த சந்தேக நபர் கொழும்பு - கொச்சிக்கடை தேவாலய தற்கொலை குண்டுதாரியையும் வழி நடாத்தியமை தெரியவந்துள்ளதாகவும், ஏனைய குண்டுதாரிகளுடன் சந்தேக நபருக்கு இருந்த தொடர்ப்பு, இந்த பயங்கர்வாத நடவடிக்கையின் பின்னனியில் இருந்தவர்கள் தொடர்பில் அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, 21/4 - 2019 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல் தொடர்பில் சி.ஐ.டி.யினர். ஆரம்பத்தில் சிறப்பான விசாரணைகளை முன்னெடுத்தனர். இடை நடுவே சிற் சில குற்றச்சாட்டுக்கள் பொலிசார் மீது சுமத்தப்படவே, அதனை கருத்தில் கொண்டு விசாரணை அதிகாரிகளை மாற்றியேனும் விசாரணைகளை முன்னெடுக்க பதில் பொலிஸ் மா அதிபர் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார். அதனையடுத்து விசாரணை அதிகாரிகள் பலரும் மாற்றப்பட்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் தொலைபேசி பகுப்பாய்வுத் தகவல்கள், தற்கொலை குண்டுதாரிகளின் பயணப் பாதை பகுப்பாய்வு உள்ளிட்டவற்றை ஆராய்ந்த போதே இந்த சந்தேக நபர் சிக்கினார். தர்போது இந்த விடயம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 31 பேர் சி.ஐ.டி.யில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 60 பேர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.' என்றார். கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின. கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவாப்பிட்டி - புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகியன தாக்குதலுக்கிலக்கான கிறிஸ்தவ தேவாலயங்களாகும். இதனைவிட கொழும்பு காலி முகத்திடலுக்கு சமீபமாகவுள்ள ஷங்கிரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஆகிய மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. மேற்படி ஆறு தாக்குதல்களும் இடம்பெற்றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையிலான 45 நிமிட இடைவெளியிலேயே ஆகும். இந் நிலையில் அன்று பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ' நியூ ட்ரொபிகல் இன்' எனும் சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் பதிவானது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.15 மணியளவில், குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளை இலக்கு வைத்து தெமட்டகொட மஹவில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால் தாக்குதல் நடாத்தப்ப்ட்டது. இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 278 பேர் கொல்லப்ப்ட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர். இந் நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பில் சி.ஐ.டி.இன் 12 சிறப்பு குழுக்களும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவும், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/78905
  • இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு (எம்.எப்.எம்.பஸீர்) கொரோனா வைரஸ் குடும்பத்தின்  கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டோர் 117 பேர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி இன்று  இரவு 7.45 மணியாகும் போது மொத்தமாக இரு வெளிநாட்டவர்கள் உட்பட 106 பேர் 3 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இரு வெளிநாட்டவர்கள் உட்பட 96 பேர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும், 9 பேர் வெலிகந்தை ஆதார வைத்தியசாலையிலும் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ள நிலையில், அவர்கள் அவ்வந்த வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று மட்டும் சிலாபம் மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் இருந்து இருவரும் நேற்று 9 பேரும் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டிருந்தனர். இதனிடையே தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு நாளை காலை 6.00 மணிக்கு 19 மாவட்டங்களில் தளர்த்தப்படவுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலேயே இவ்வாறு ஊரடங்கு நாளை காலை தளர்த்தப்படுகின்றது. அவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீள பிறப்பிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. எனினும் கொரோனா தொற்று பரவலை மையப்படுத்தி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கானது மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றால் பதிவான முதல் மரணம் நேற்று சம்பவித்திருந்தது.  60 வயதான மாரவில பகுதியைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்ட 4 ஆவது தொற்றாளராக அடையாளம் கணப்பட்ட நபரே இவ்வாறு உயிரிழந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே சில வருடங்களுக்கு முதல் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டிருந்த நிலையில்,  கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலதிகமாக நீரிழிவு மற்றும் அதிக இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில், உயிரிழந்த குறித்த நபரின் இறுதிக் கிரியைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் நியமங்கள் மற்றும் தொற்று நோய் சட்ட விதிகளுக்கு அமைய கொட்டிகாவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றது. சட்டவைத்திய அதிகாரி சன்ன பெரேராவின் மேற்பார்வையில் பொது சுகாதார பரிசோதகர்கள், முல்லேரியா பொலிசாரின் கட்டுப்பாட்டில் இந்த இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. இதன்போது, உயிரிழந்த நபரின் உறவினர்கள் இருவர் மட்டும் பங்கேற்றிருந்தனர். அவரது மனைவி பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பங்கேற்கவில்லை. குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாக முதல், ஜேர்மனியில் இருந்து வந்த சுற்றுலா குழுவொன்றுக்கு வழிகாட்டியாக செயற்பட்டிருந்தார். இதனிடையே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரில் அதிகமானோர் கொழும்பிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் அடையாளம் காணப்பட்டோர் 29 பேராவர். களுத்துறையில் 17 பேரும் புத்தளத்தில் 12 பேரும் கம்பஹாவில் 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரியில் அடையாளம் காணப்பட்டுள்ளோர் நால்வராவர் இதனிடையே மேலும் 117 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 21 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/78916