Sign in to follow this  
colomban

கொரோனா வைரஸ் தொற்றில் மரணம் சம்பவித்தால் (எந்த சமயத்தவர்கள் ஆக இருந்தாலும்) உடலை தகனம் செய்வது கட்டாயம்.

Recommended Posts

கொரோனா வைரஸ் உள்ளாகி நோயாளி ஒருவர் மருத்துவமனையில்

 மரணத்தை தழுவினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய தர செயற்பாட்டு நடைமுறைகள் குறித்து சட்டம் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
கோவிட் 19 நோயினால் ஒருவர் மரணம டைந்தால் இந்த தர செயற்பாட்டு நடைமுறைகளின் பிரகாரம் அவர்கள் எந்த சமயத்தை சேர்ந்தவர்களாயின் 24 மணித்தியாலத்துக்குள் தகனம் செய்யப்பட வேண்டும்.
 
சட்ட மருத்துவ அதிகாரிகளின் திணைக் களத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஆவணம் ஒன்றை எக்னோமிக் நெக்ஸ்ட் இணையத்தளம் பார்த்திருப்பதாக கூறுகின்றது. 
 
அத்துடன் மரணம் தீவிர சிகிச்சைப் பிரி வில் அல்லது இந்த சிகிச்சைக்கான நோக்கத் துக்காக விசேட பிரிவில் சம்பவித்தால் பிரேத பரிசோதனை தேவைப்படாது எனவும் அதில் 
குறிப்பிட்டுள்ளது.
 
அதேவேளை இறந்தவர்களின் சடலங்கள் பொதியிடப்பட்டு நெருங்கிய உறுப்பினர்கள் சடலத்தை பார்ப்பதற்கு வரையறுக்கப்பட்ட காலமே வழங்கப்படும். 
 
பார்வையிடுவதும் மருத்துவமனை வளாகத்தின் உட்புறத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும். உறவினர் க ளுக்கு 
முக வசனங்கள் வழங்கப்படும்
 
இறந்தவரின் முகம் மட்டுமே மூடப்பட்டி ருக்காது. உடலை தொடுவதற்கு அனுமதி வழங்கப்படாது. அதன் பின்னர் சடலம் இறுதிகிரியை மேற்கொள்வோரிடம் கைய ளிக்கப்படும்.
 
பிரேத பரிசோதனை செய்வது தடை செய் யப்பட்டுள்ளது. அத்துடன் இறந்தவரின் இல்லத்திலோ ஏனைய இடங்களில் இறுதி கிரிகைகளை மேற்கொள்வது நோய் பரவுவ தற்கான சாத்தியத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேவேளை சீல் பண்ணிய பூதவு டல் தாங்கிய பேளை மலர்சாலையில் அல் லது இல்லத்தில் சமய கிரியைகளுக்காக மட் டும் வைக்க முடியும். அதேவேளை இறுதி கிரியைகளில் மக்கள் ஒன்றுகூட அனுமதிக்க முடியாது
 
இதே வேளை நேற்று   வரை கொரோனா வைரஸ் தொற் றுக்கு 102 பேர் இலக்காகி இருப்பதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 
 
அவர்களில் 2 பேர்  தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் ஆபத்தான நிலையில் இருவர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேவேளை நால்வர் குணமடைந்திருப்பதாக சீன சுற்றுலா பணிகள் மட்டுமே மருத்துவ மனையை விட்டு சென்றியிருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இலங்கையில் இன்னும் கொரோனா வைரஸ் மரணம் நிகழவில்லை என்பதும் நோய தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடைந்து வெளியேறுவதும்
 ஆறுதலான ஒரு செய்தி.

Share this post

Link to post
Share on other sites

அறிவியல் முன் சமயம் பின்.😀

Share this post

Link to post
Share on other sites

இந்து, பௌத்த மதத்தவர் வழமையா பின்பற்றும் சுகாதாரமான முறை!

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Rajesh said:

இந்து, பௌத்த மதத்தவர் வழமையா பின்பற்றும் சுகாதாரமான முறை!

சைவ சமயத்தவர் இதற்குள் இல்லையா ?🤔

Share this post

Link to post
Share on other sites

Image may contain: one or more people, outdoor and nature, possible text that says 'இந்த புகைப்படத் த்தை பார்க்கும்போது மனம் ஏதோ செய்கிறது சொத்து சொந்தம் பந்தம் புகழ் பதவி சாதனை எல்லாமே இருந்து ஒரு நோய் தொற்றினால் மனைவி மகன் சொந்தம் பந்தம் எதுவும் பக்கத்தில் பார்க்கக்கூட முடியாத இறப்பு இறப்பிற்கு பின்னும் ஈமசடங்குகள் கூட செய்யமுடியாத நிலை.... இதில் சாதி மதம் மயிறு மட்டை'

  • Sad 1

Share this post

Link to post
Share on other sites
17 minutes ago, Kapithan said:

சைவ சமயத்தவர் இதற்குள் இல்லையா ?🤔

தமிழ்நாட்டில் சில இடங்களில்  இன்றும் ஒரு வழக்கம் உள்ளது.அதாவது கோவில் திருவிழாக்காலங்களில் காப்புக்கட்டினால் வெளி ஊரவரும் உள்ளே வரமுடியாது.உள் ஊரவரும் வெளியே செல்லமுடியாது. சன நெரிசலில் கண்ட கண்ட களிசறைகள் வராமல் இருப்பதற்காகவும் இருக்கலாம். 🧐

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
26 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டில் சில இடங்களில்  இன்றும் ஒரு வழக்கம் உள்ளது.அதாவது கோவில் திருவிழாக்காலங்களில் காப்புக்கட்டினால் வெளி ஊரவரும் உள்ளே வரமுடியாது.உள் ஊரவரும் வெளியே செல்லமுடியாது. சன நெரிசலில் கண்ட கண்ட களிசறைகள் வராமல் இருப்பதற்காகவும் இருக்கலாம். 🧐

 ... சமயத்தை நீங்கள் இப்படி கூறுவது உங்களுக்கு அழகல்ல சாமியாரே.☹️

நல்ல காலம் இலங்கையில் இது நடைமுறையில் இல்லை. அப்படி இருந்தால் தமிழரில் அரைப் பங்கினருக்கு மேல் ஊருக்கு வெளியில்தான் நிற்கவேண்டியிருந்திருக்கும் 😀

Edited by Kapithan
மேலதிக இணைப்பு

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

சீனாவில, முதல் செத்த ஆட்களின் உடல்களை கிளறி எடுத்து, வெட்டி பார்த்து கொரோனா என்ன கூத்து ஆடி, அவையளின்ட உசிரை பறித்தது எண்டு ஆராயினம்  எண்டு  தாரோ அவிச்சு இறக்கிச்சினமே.... அத்தனையும் பொய்யா.... கோபாலு... ச.... சா... கொலம்பான்...

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
37 minutes ago, Kapithan said:

 ... சமயத்தை நீங்கள் இப்படி கூறுவது உங்களுக்கு அழகல்ல சாமியாரே.☹️

நல்ல காலம் இலங்கையில் இது நடைமுறையில் இல்லை. அப்படி இருந்தால் தமிழரில் அரைப் பங்கினருக்கு மேல் ஊருக்கு வெளியில்தான் நிற்கவேண்டியிருந்திருக்கும் 😀

ஊரில் எந்த இடம் நீங்கள் ?

வடமராட்சி பக்கம் போவதில்லையோ ?

சில இடங்களில் பகல் பொழுது மட்டுமே வெளியூர் ஆட்க்கள் போய்  வரலாம் .

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
48 minutes ago, பெருமாள் said:

ஊரில் எந்த இடம் நீங்கள் ?

வடமராட்சி பக்கம் போவதில்லையோ ?

சில இடங்களில் பகல் பொழுது மட்டுமே வெளியூர் ஆட்க்கள் போய்  வரலாம் .

ஒருமுறை எனது ப்ல்கலைக் கழக  நண்பனுடன் அவரின் சொந்த ஊரான வட்டுக்கோட்டைக்குச் சென்றிருந்தேன். சாப்பிட்டுக் களையாறியபின் ஊரைச் சுற்றிப்பார்க்கலாமென்று கிளம்பினோம். மரத்தில் சாத்தியிருந்த துவிச்சக்கர வண்டியை  எடுத்தபோது பக்கத்து வளவிலிருந்த புளியமரதிலிருந்து நண்பனின் வளவிற்குள் நீண்டு வளைந்திருந்த கொப்பில் காய்த்திருந்த புளியம் பிஞ்சு ரெண்டை பறித்து வாயில் போடும்போது நண்பன் பதறியபடி ஓடிவந்து என் கையிலிருந்த புளியம் பிஞ்சுகளைத் தட்டிவிட்டான். நான் அதிர்ச்சியுடன் ஏனடா தட்டினனி என்றேன். 

அவன் சொன்னான் "அது வேற சாதியாட்கள். அந்த பிஞ்சுகளைச் சாப்பிட்டா எங்கள மதியாயினம்"

நான் அதிர்ந்து போனேன். என்ர அதிகைப்பைப் பார்த்துவிட்டு "வாங்கோ அண்ணன். நான் ஊர சுத்திக் காட்டுறன். அதுக்குப்பிறகு உங்களுக்கு எல்லாம் விளங்கும்"

அன்று பார்த்தவை கேட்டவை எல்லாமே என் வாழ்னாள் முழுதும் மறக்க முடியாது.

என் சமூகத்தின் மீதான கோபம் அன்றிலிருந்துதான் ஆரம்பமானது.😡

3 minutes ago, Kapithan said:

Edited by Kapithan
தவறுதலாக இரண்டுதடவை வந்துவிட்டது

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, Rajesh said:

இந்து, பௌத்த மதத்தவர் வழமையா பின்பற்றும் சுகாதாரமான முறை!

வௌவால் வீட்டுக்குள் பறந்தால் தீமை வருமென முன்னோர்கள் சொன்னார்கள்.
அதே போல் இன்றைய வைரஸ்களும் வௌவாலில் இருந்து வருகின்றதென ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

Share this post

Link to post
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

வௌவால் வீட்டுக்குள் பறந்தால் தீமை வருமென முன்னோர்கள் சொன்னார்கள்.
அதே போல் இன்றைய வைரஸ்களும் வௌவாலில் இருந்து வருகின்றதென ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

இலங்கையில் மாம்பழ (பழம்) வெளவால்களை உணவாக உட்கொள்ளும் பழக்கம் உண்டு.  கிராமங்களில் உணவுக்காக இவற்றைப் பிடிக்கும் பொறிமுறையை அவதானித்துள்ளேன்.🤔

Share this post

Link to post
Share on other sites

கொரோனா வைரசுகளுக்கு சார்பாக பின்னணி சூழ்நிலைகள் இருக்கேக்க கொரோனா வைரசுகளின் மரண தாண்டவம் தானே மிஞ்சி நிற்கும்.

Share this post

Link to post
Share on other sites
On 3/26/2020 at 9:14 PM, Kapithan said:

ஒருமுறை எனது ப்ல்கலைக் கழக  நண்பனுடன் அவரின் சொந்த ஊரான வட்டுக்கோட்டைக்குச் சென்றிருந்தேன். சாப்பிட்டுக் களையாறியபின் ஊரைச் சுற்றிப்பார்க்கலாமென்று கிளம்பினோம். மரத்தில் சாத்தியிருந்த துவிச்சக்கர வண்டியை  எடுத்தபோது பக்கத்து வளவிலிருந்த புளியமரதிலிருந்து நண்பனின் வளவிற்குள் நீண்டு வளைந்திருந்த கொப்பில் காய்த்திருந்த புளியம் பிஞ்சு ரெண்டை பறித்து வாயில் போடும்போது நண்பன் பதறியபடி ஓடிவந்து என் கையிலிருந்த புளியம் பிஞ்சுகளைத் தட்டிவிட்டான். நான் அதிர்ச்சியுடன் ஏனடா தட்டினனி என்றேன். 

அவன் சொன்னான் "அது வேற சாதியாட்கள். அந்த பிஞ்சுகளைச் சாப்பிட்டா எங்கள மதியாயினம்"

நான் அதிர்ந்து போனேன். என்ர அதிகைப்பைப் பார்த்துவிட்டு "வாங்கோ அண்ணன். நான் ஊர சுத்திக் காட்டுறன். அதுக்குப்பிறகு உங்களுக்கு எல்லாம் விளங்கும்"

அன்று பார்த்தவை கேட்டவை எல்லாமே என் வாழ்னாள் முழுதும் மறக்க முடியாது.

என் சமூகத்தின் மீதான கோபம் அன்றிலிருந்துதான் ஆரம்பமானது.😡

நீங்கள் கூறிய விடயம் உண்மையான விடயமாயினும் எமது தமிழ் சமூகத்தின் எதிர்மறையான களைய படவேண்டிய  விடயங்களை பற்றி பேசி அவற்றை தவறு என்று நீங்கள்  திரும்ப திரும்பசுட்டிக்காட்டினாலும் அதை எதுவமே நடக்காத்து போல் அதை கடந்து போய்  தமிழரின் வீண் வெட்டி வீரம் பேசுவதை தான் பெரும்பாலனோர் விரும்புகின்றனர. 

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, tulpen said:

எப்படி களையலாம் அல்லது எப்படி களைய வேண்டும் என இங்கே உங்கள் அறிவுரைகளை அல்லது ஆலோசனைகளை சொல்லுங்கள். 😎

Share this post

Link to post
Share on other sites
56 minutes ago, குமாரசாமி said:

எப்படி களையலாம் அல்லது எப்படி களைய வேண்டும் என இங்கே உங்கள் அறிவுரைகளை அல்லது ஆலோசனைகளை சொல்லுங்கள். 😎

ஒவ்வொருவரும் நான் சாதி பார்க்கேன் என்று தீர்மானம் எடுத்து நடைமுறைப்படுத்தினால் போயிற்று ! 👍 (தனக்குத்தானே உண்மையாகவிருத்தல்)

1 hour ago, tulpen said:

நீங்கள் கூறிய விடயம் உண்மையான விடயமாயினும் எமது தமிழ் சமூகத்தின் எதிர்மறையான களைய படவேண்டிய  விடயங்களை பற்றி பேசி அவற்றை தவறு என்று நீங்கள்  திரும்ப திரும்பசுட்டிக்காட்டினாலும் அதை எதுவமே நடக்காத்து போல் அதை கடந்து போய்  தமிழரின் வீண் வெட்டி வீரம் பேசுவதை தான் பெரும்பாலனோர் விரும்புகின்றனர. 

உண்மைதான் துல்பன். பல்வேறு நாட்டவருடன் பெண் எடுத்து பெண் கொடுக்க ஆயத்தமாயிருக்கும் நம்மவர்களில் பலர் தான் சார்ந்த சமூகத்தில் மட்டும் சாதியும்  சமயமும் பிரதேசமும் பார்க்கத் துணிவர். ☹️

Share this post

Link to post
Share on other sites
On 3/26/2020 at 4:14 PM, Kapithan said:

என் சமூகத்தின் மீதான கோபம் அன்றிலிருந்துதான் ஆரம்பமானது.😡

எமக்கு என்று ஒரு சமூகம் இல்லாமல் போய்விட்டதே !  

அப்படி  ஏதும் மிஞ்சி இருந்தால், அதுவும் அடுத்த தலைமுறையுடன் போய்விடும். 
இல்லை, இருப்பதை காப்பாற்றி, வளம்படுத்த  வேண்டும்.

Share this post

Link to post
Share on other sites

பல்கலையில் பயிலும் காலத்தில் இதே கேள்வியை என் தகப்பனாரிடம்  கேட்டேன். அவர் கூறியது " தம்பி இதைத் தெரிந்துகொண்டு  என்ன செய்யப்போகிறாய் ? " அன்றிலிருந்து நான் இதைப்பற்றி அலட்டிக்கொண்டதேயில்லை.

சாதியை தெரிந்துகொள்ள முடியாமைக்கு பல காரணங்கள் இருந்தன. முதலாவது நான் யாழ்ப்பாணத்தின் முன்ணணிக் கல்லூரிகளிலொன்றின் மாணவர் விடுதியிலேதான் என் பெரும்பாலான மாணவப் பருவம்  கழிந்தது. எனது பெற்றோர் ஆசிரியர்கள். இலங்கையின் பலபாகங்களிலும் கடமையாற்றியிருந்தனர். இறுதியாக தமிழீழத்தின் தலை நகரில். 

எனது பெற்றோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அதி தீவிர ஆதரவாளர்.

*******

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, Kapithan said:

********

நித்திரையில் இருப்பவனை எழுப்பலாம்.நித்திரை போல் நடிப்பவனை எழுப்ப முடியாது.இதில் நீங்கள் இரண்டாம் ரகம்.😁
உங்களுடன் விவாதித்து பயனில்லை.
இன்னுமொன்று....நானும் என் சொந்த பந்தங்களும் இனி  இல்லையென்ற கூட்டணி விசுவாசிகள் தான். ஆனாலும் விவாதங்களுக்கு அது மூலதனம் அல்ல.:)
வணக்கம்.:cool:
 
Share this post

Link to post
Share on other sites
6 hours ago, குமாரசாமி said:

நித்திரையில் இருப்பவனை எழுப்பலாம்.நித்திரை போல் நடிப்பவனை எழுப்ப முடியாது.இதில் நீங்கள் இரண்டாம் ரகம்.😁
உங்களுடன் விவாதித்து பயனில்லை.
இன்னுமொன்று....நானும் என் சொந்த பந்தங்களும் இனி  இல்லையென்ற கூட்டணி விசுவாசிகள் தான். ஆனாலும் விவாதங்களுக்கு அது மூலதனம் அல்ல.:)
வணக்கம்.:cool:
 
என்னை நீங்கள் நம்பவேண்டுமென்று நா உங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் நான் எப்போதுமே எனக்கு உண்மையாக இருப்பவன்.😎

*******

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this