Sign in to follow this  
ampanai

அமெரிக்காவில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைச் சீரமைக்க 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி

Recommended Posts

கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சீரமைக்க 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்க நாடாளுமன்றமும், அதிபர் டிரம்பும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா பரவலைத் தடுக்கத் தனியார் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி எரிக் ஊலேண்ட் தெரிவித்துள்ளார்.

இந்த மாபெரும் நிதியுதவித் திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் உடனடியாக ஒப்புதலைப் பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி வேலையின்மையால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கச் சிறு வணிக நிறுவனங்களுக்கு 36 ஆயிரத்து 700 கோடி டாலர் வழங்கப்படும். பெருந்தொழில் நிறுவனங்களுக்கு மானியக் கடன் உள்ளிட்ட வகைகளில் ஐம்பதாயிரம் கோடி டாலர் வழங்கப்படும்.

https://www.polimernews.com/dnews/104911/அமெரிக்காவில்வீழ்ச்சியடைந்தபொருளாதாரத்தைச்-சீரமைக்க-2லட்சம்-கோடி-டாலர்-நிதியுதவி

 

 

Share this post


Link to post
Share on other sites

கோவிட் 19 ஆல் உருவாகியுள்ள அசாதரண சூழ்நிலை ஒரு பொருளாதார யுத்தமும் கூட. 

இலங்கை உட்பட பலா நாடுகளில் விலை 20-30% குறைந்துள்ள  உள்ள தேசிய வளத்துடன் சம்பந்தப்பட்ட பொது நிறுவனங்களின் பங்குகளை சீன அரசு வேண்டியவண்ணம் உள்ளது. 

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, ampanai said:

கோவிட் 19 ஆல் உருவாகியுள்ள அசாதரண சூழ்நிலை ஒரு பொருளாதார யுத்தமும் கூட. 

இலங்கை உட்பட பலா நாடுகளில் விலை 20-30% குறைந்துள்ள  உள்ள தேசிய வளத்துடன் சம்பந்தப்பட்ட பொது நிறுவனங்களின் பங்குகளை சீன அரசு வேண்டியவண்ணம் உள்ளது. 

தவிச்ச  முயல் அடிப்பது போல் சீனர்கள்  பங்குகளை வாங்கி குவிப்பதுதான் எல்லா நாடுகளுக்கும் பிரசனையாகி விட்டது .

Share this post


Link to post
Share on other sites

ஐரோப்பாவிலும் பெரிய நிறுவனங்களின் பங்குகளின் விலை ஏறத்தாள அரைவாசியாகச் சரிந்துள்ளது. பணம் உள்ளவர்கள் இப்போது வாங்கிக் கொண்டால் சில மாதங்களில் நிலமை ஓரளவு சரியாகினாலும் கொள்ளை இலாபம் ஈட்டலாம். 

Aribus பங்குகள் 123 ஈரோவிலிருந்து ஒரு மாதத்தில் 55 ஈரோவாக வீழ்ந்துள்ளது.

aribus.png

Share this post


Link to post
Share on other sites

Negative rates come to the US: 1-month and 3-month Treasury bill yields are now negative

The coronavirus crisis has brought another first to U.S. financial markets — negative yields on government debt.

Yields on both the one-month and three-month Treasury bills dipped below zero Wednesday, a week and a half after the Federal Reserve cuts its benchmark rate to near-zero and as investors have flocked to the safety of fixed income amid general market turmoil.

The U.S. now joins large swaths of Europe and Japan that also have negative-yielding debt.

In Germany, the move was even more prevalent, with all government fixed income instruments except the 30-year bond carrying rates below zero.

https://www.cnbc.com/2020/03/25/negative-rates-come-to-the-us-1-month-and-3-month-treasury-bill-yields-are-now-negative.html

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிவு

கடந்த மூன்று நாட்களில் பெரிய அளவில் ஏற்றங்களை சந்தித்த அமெரிக்க பங்குச் சந்தைகள், இன்று மீண்டும் சரிவை எதிர்கொண்டுள்ளன.

இரண்டு மில்லியன் டாலர் அளவு சலுகைகளை அமெரிக்க அரசு அறிவித்த பின்னர் பங்குச்சந்தைகள் அங்கு ஏற்றம் கண்டன.

எனினும் உலகிலேயே அதிகமான கொரோனா பாதிப்பு கொண்ட நாடக அமெரிக்கா உருவெடுத்தபின் சரிவு மீண்டும் தொடங்கியது.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • unarmed black  சர்வதேச ஊடகங்களை பார்த்தீர்கள் என்றால் ஒவ்வோரு தடவையும்unarmed black man என்ற வசனத்தை பாவிப்பார்கள்.....இது புலம் பெயர்ந்த எமது சிறார்களுக்கு மனதில் இலகுவாக படிந்து விடுகிறது... எமது மக்கள் இறந்த கதையை கேட் கவோ சொல்லவோ யாருமில்லை... எமது மக்களே அடுத்த சந்ததிக்கு சொல்ல முயலவில்லை என்பது கவலையளிக்கும் விடயம்... கறுப்பர்கள் இன ஒதுக்கலுக்கு ஆளாகின்றனர் என்று மார்டின் லூதர் காலத்துக்கு முன்பிருந்தே சொல்லிகொண்டிருப்பதால் ஒரு சிறு சம்பவம் பெரிய எழுச்சியை உண்டாக்கின்றது....
  • இந்த கருத்தின் மூலம் உங்கள் இயலாமையையும் ,கீழ்த்தர புத்தியையும் காட்டி விட்டீர்கள் …"கத்தரிக்காய் மலிந்தால் சந்தைக்கு வந்து தான் ஆகோணும் ".   "புலிகளை வைத்து அரசியல் செய்யம் தகுதி  சீமானுக்கு  இல்லை" . இந்த பதில் போதுமா 🙂  
  • அயல்நாடுகளை ஆக்கிரமித்து சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு உருவாகி  பிறகு உடைந்தது போன்று சீனாவும் உடையும், நில ஆக்கிரமிப்பு செய்வது தான் தற்போதய சீனாவின் நிலை....மாவோவும் சித்தாந்தவாதிகளும் தங்களது அரசியலை உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் புகுத்த பல வருடங்களாக முயன்றுவருகின்றனர்...1975 ஆண்டுக்கு முன்பு புரட்சிகர அமைப்புக்களை உருவாக்கி ஆயுத போராட்டங்களை மறைமுகமாக ஊக்கப்படுத்தினார்கள் ...தற்பொழுது சோசலிசம் பேசும் முதலாளிகளை உருவாக்கி அவர்களுக்கு பணம் கொடுத்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள்... "மொழி, இனம் ஒன்றா? " தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கினறது.. சீனா இந்தியாவின் சீக்கிம்  பிராந்தியத்தை ஆக்கிரமிக்க கூறும் காரணம் பெளத்தமும் சீனர்களும் என்ற அடையாளமா? தீபேத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு 800 வருடங்களுக்கு முந்திய சரித்திரம் பேச முடியாது தானே.... இனிவரும் காலங்களில் இனம் மொழி பிரிவினையை விட ,புதிய அரசியல் ஆக்கிரமிப்புக்கு மதங்களை .... பயன்படுத்துவார்கள்...மொழி இனங்களை விட மதங்கள் இலகுவாக மக்களை வெறிகொள்ள வைக்கும்... இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாம்,பெளத்தம் நாகரீக போர்கள் நடக்க வாய்ப்புக்கள் இருக்கு
  • நெடுக்காலபோவான் அவர்களே கதையோட கதையாக சப்ரா யுனிக்கோ எனும் பெயரில் அந்தவேளைகளில் குடாநாடுச்சனத்திட்டை கொள்ளையடிச்ச காசையும் ஆயுள்வேத வைத்தியர் பசுபதி அவர்களது கஸ்தூரியார் வீதிக் காணியையும் எப்போ திருப்பிக்கொடுக்கப்போகிறீர்கள் என ஒருக்கால் கேட்டுச் சொல்லுங்கோ. 
  • ஒழுக்கத்தின் நிழலில் அவதூறு: இந்திய பெற்றோர்களை சாடும் யுனிசெஃப்! மின்னம்பலம்   குழந்தைகளை ஒழுங்குபடுத்தும் முயற்சி என்ற பெயரில் குழந்தைகள் மீது இந்திய பெற்றோர்கள் 30 வகையான உடல் மற்றும் வாய்மொழி அவதூறுகளை பயன்படுத்துவதாக யுனிசெஃப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 'பெற்றோருக்குரிய விஷயங்கள்: பெற்றோரின் அணுகுமுறைகள் மற்றும் நடைமுறைகளை ஆய்வு செய்தல்' என்ற ஆய்வு யுனிசெஃப் மூலம் நடத்தப்பட்டது. இதில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் தலா இரண்டு மாவட்டங்களிலும், ராஜஸ்தானில் மூன்று மாவட்டங்களிலும், மகாராஷ்டிராவின் நான்கு மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கோள்ளப்பட்டது. இதன் மூலம், தண்டனை என்பது குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கான பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாக இருக்கிறதென்று யுனிசெஃப் கருத்து தெரிவித்துள்ளது.   நேற்று(ஜூன் 3) இந்த அறிக்கையின் வெளியீட்டில் பேசிய இந்தியாவின் யுனிசெஃப் பிரதிநிதியான யாஸ்மின் அலி ஹக், "குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு வகையான வன்முறைகளில் உடல் ரீதியான வன்முறை (சூடுவைத்தல்; கிள்ளுதல்; அறைதல்; குச்சி, பெல்ட்கள், தண்டுகள் போன்ற சாதனங்களால் அடிப்பது) வாய்மொழி துஷ்பிரயோகம் (குற்றம் சாட்டுதல்) ; விமர்சித்தல்; கூச்சலிடுதல்; தவறான மொழியைப் பயன்படுத்துதல்; உடல் ரீதியான வன்முறைகளைக் கண்டறிதல் மற்றும் உணர்ச்சி ரீதியான அவமதிப்பு (இயக்கத்தை கட்டுப்படுத்துதல்; உணவை மறுப்பது; பாகுபாடு காட்டுதல்; பயத்தைத் தூண்டுவது) உள்ளிட்ட 30 வகைகள் இதில் அடங்கியுள்ளது" என்று அவர் விவரித்தார். அத்துடன், "எபோலா நெருக்கடி போன்ற தொற்றுநோய்களின் போது, குடும்பங்கள் சமாளிக்க போராடுகையில், சிறு குழந்தைகள் வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றை அனுபவிக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை எங்கள் அனுபவம் காட்டுகிறது. இந்த தொற்றுநோய் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் இந்த குடும்ப வன்முறை வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று அவர் கவலை தெரிவித்தார். இந்த கொரோனா தொற்று காலத்தை குறிப்பிட்டு பேசிய யுனிசெஃப், குழந்தைகள் பாதுகாப்பு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக நியமிக்க வேண்டிய உடனடி தேவை உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. பாதுக்காப்பு சேவைகளில் முக்கியமாக - உடல்நலம் மற்றும் சமூக நலன், குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள், மனநலம் மற்றும் உளவியல் ஆதரவு, மாற்று பராமரிப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை இருக்க வேண்டும் என மேற்கோள் காட்டியுள்ளது. யாஸ்மின் அலி ஹக் கூறும்போது, "இந்த சேவைகள் குழந்தைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் உட்பட அனைவருக்கும் கிடைக்க வேண்டும், பெற்றோர் இல்லாதவர்கள், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் விளக்கினார்.   "சிறுமிகளும் சிறுவர்களும் மிகச் சிறிய வயதிலிருந்தே மிகவும் வித்தியாசமாக வளர்க்கப்படுகிறார்கள் என்பதையும் காட்டும் ஆய்வு வீட்டு வேலைகளின் சுமை, அன்றாட கட்டுப்பாடுகள் ஆகியவை சிறுமிகள் மீது அதிக அளவு திணிக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது. குழந்தைகளுக்கு தாய்மார்கள் முக்கிய பராமரிப்பாளர்களாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் தந்தைகள் மிகவும் குறைவாகவே ஈடுபடுகிறார்கள். இருப்பினும், ஆய்வில் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் ஈடுபட விரும்புகிறார்கள். ஆனால் எப்படி என்று அவர்களுக்கு தெரியவில்லை" என்கிறார் யாஸ்மின் அலி ஹக். மகாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர், அசாம், ராஜஸ்தான் மற்றும் உ.பி. போன்ற மாநிலங்களில் நடைபெற்ற இந்த பெற்றோருக்கான திட்டங்களை அம்மாநிலங்கள் செயல்படுத்துவதில் கண்டறிந்தது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் இதை பின்பற்றலாம் என யுனிசெஃப் பரிந்துரைத்துள்ளது. மேலும், கதைசொல்லல், பாடுதல் மற்றும் குழந்தையுடன் விளையாடுவதன் மூலம் பெற்றோரின் அக்கறை அதிகளவில் குழந்தைகள் மீது ஈடுபட வழிவகுத்திருக்கிறது. இது குறித்து குறிப்பிடும் யுனிசெஃப், "இவை அனைத்தும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானவை" என குறிப்பிட்டுள்ளது.   https://minnambalam.com/entertainment/2020/06/04/22/unicef-report-says-about-indian-parenting