Jump to content

சுவிற்சர்லாந்தில் பண மோசடியில் ஈடுபட்ட தமிழர் நிறுவனம் தொடர்பில் சுவிஸ் தொலைக்காட்சி விபரணம்

Recommended Posts

Spitex என்பது சுவிற்சர்லாந்தில் பிரபலமான தனியார் வைத்திய பராமரிப்பு நிறுவனமாகும். இது சுவிற்சர்லாந்தில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ள   நோயுற்றவர்களையும் வயதானவர்களையும் வீட்டிற்கு சென்று தொடர்ச்சியாக பராமரிப்பு சேவை செய்யும் நிறுவனமாகும்.  வைத்திய பராமரிப்பில்  (Nursiing Care) தொழில்சார் தகைமை உடையவர்கள் Spitex நிறுவன உரிமத்தை எடுத்து தனியார் வைத்திய பராமரிப்பு நிலையங்களை உருவாக்கி கொள்ளலாம். அந்த வகையில் தமிழர்களால் நடத்த‍ப்படும் Spitex Seeblick என்ற நிறுவனம் பல்வேறு வகையான பண மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டதாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை சுவிற்சர்லாந்தின் தேசிய தொலைக்காட்சியான  Schweizer Fernsehen  ஆவணபடுத்தியுள்ளது. இது தொடர்பாக 22 நிமிட ஆவண படம் ஒன்றை தனது Kassensturz நிகழ்சியில் 2020  மார்ச 10 ம் திகதி ஒளிபரப்பி உள்ளது. 

இதில் முதலாவது முறைப்பாடு இந்த நிறுவனத்தில்  பணிக்கு அமர்த்தபட்ட இரண்டு போலந்து பெண்களை சட்டத்திற்கு புறம்பாக 24 மணித்தியாலம் வேலை செய்ய கட்டாயப்படுத்ததியதாகவும்  மிக குறைந்த சம்பளம் வழங்கபட்டதாகவும் அவர்களின் சம்பள கொடுப்பனவுகளில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளாதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. அந்த இரண்டு போலந்து பெண்களையும் தொலைக்காட்சி நேர்காணல் செய்துள்ளது.  அதில் அந்த இரு பெண்களும்  வேலை இவ்வாறு 24 மணி நேரம் On call service  செய்வது கடினம் என்று கூறிய போது இல்லை சுவிற்சர்லாந்தில் இது சாதாரணமானது என்று அவர்களுக்கு தெரிவிக்கபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜேர்மன் மொழியறிவு குறைந்த அப்பெண்களிடம் தவறான ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாகவும் சில நேரங்களில் தமது கையழுத்தை அவர்களே வைத்த‍தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

காப்புறுதி நிறுவனங்களிடம் மோசடி

அத்துடன் மேலதிகமாக பல வைத்திய காப்புறுதி நிறுவனங்களிடம் இருந்து தவறான சேவைகட்டண பில்களை கொடுத்து பல ஆயிரம்  (f)பிராங்களை  மோசடி செய்த விடயத்தையும் அத்தொலைக்காட்சி அம்பலபடுத்தியுள்ளது  இது தொடர்பாக  Spitex Seeblick நிறுவனத்தினை  SF தொலைக்காட்சி  தொடர்பு கொண்ட போது  அந்நிறுவனத்தின் உரிமையாளர் லதன் சுந்தரலிங்கம்  இது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக கடமையாற்றும் ஜன‍ன‍ன் நடேசலிங்கம் தமது நிறுவனத்தின் நிர்வாகப்பிரிவில் ஏற்பட தவறுகளே இதற்கு காரணம் என்று மன்னிப்பு கேட்டதுடன்  மேலதிகமாக அறவிடபட்ட பணம் திரும்ப மீள‍ளிக்கப்படும் என தெரிவித்தார்.  ஒரு விடயத்தில் தவறு ஏற்படுவது சாதாரணம் ஆனால் நிறுவனத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் பல தவறான ஆணவங்களில் முறைகேடுகள் நடைபெற்றுளதே அது ஏன்? அது எப்படி நடைபெற்றது  என்று தொலைக்காட்சி நிருபர் திரும்ப திரும்ப  கேட்ட கேள்விக்கு தமது தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாக மட்டுமே நிறுவனத்தின் நிர்வாக இயங்குனர்  திரு ஜ‍ன‍ன‍ன் நடேசலிங்கம்  பதிலளித்தார். இவ்வாறான Spitex  நிறுவனங்கள்  தொடர்பாக மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர்  மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் புதிய தலைமுறையினர் கல்வி, பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய விடயங்களிம்  முன்னேறிவருவது தமிழ் மக்களுக்கு பெருமை தரும் விடயமாகும். எனினும்  இவ்வாறான மோசடிகள்  எமது மக்களுக்கு மேலும்  தலை குனிவை ஏற்படுத்தும் என்பதை எமது புதிய தலைமுறை இளையோர் கருத்தில் கொள்ள வேண்டும். 1960 களில் இங்கிலாந்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் தலை குனிவை ஏற்படுத்திய எமில் சவுந்தரநாயகத்தைப் போன்ற செயல்களை எமது ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.  

இது தொடர்பான SF தொலைக்காட்சி  காட்சியின் காணொளி இணைப்பை இணைத்துள்ளேன்.

https://www.google.com/amp/s/www.srf.ch/article/18283781/amp

Link to comment
Share on other sites

4 minutes ago, tulpen said:

புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் புதிய தலைமுறையினர் கல்வி, பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய விடயங்களிம்  முன்னேறிவருவது தமிழ் மக்களுக்கு பெருமை தரும் விடயமாகும். எனினும்  இவ்வாறான மோசடிகள்  எமது மக்களுக்கு மேலும்  தலை குனிவை ஏற்படுத்தும் என்பதை எமது புதிய தலைமுறை இளையோர் கருத்தில் கொள்ள வேண்டும். 1960 களில் இங்கிலாந்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் தலை குனிவை ஏற்படுத்திய எமில் சவுந்தரநாயகத்தைப் போன்ற செயல்களை எமது ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.  

அடுத்தடுத்த தலைமுறைகள் சட்டத்தில் பிடிபடாமல் மோசடிகளை செய்யலாம்.

அதற்கு, அரசியலையும் பொருளாதார பலத்தையும் கைப்பற்றவேண்டும்   😂

Link to comment
Share on other sites

7 minutes ago, ampanai said:

அடுத்தடுத்த தலைமுறைகள் சட்டத்தில் பிடிபடாமல் மோசடிகளை செய்யலாம்.

அதற்கு, அரசியலையும் பொருளாதார பலத்தையும் கைப்பற்றவேண்டும்   😂

பொலிஸில் பிடிபடாமல் திருடிக்கொண்டு வாடா என் அருமை மகனே என்று உங்கள் மகனுக்கு சிறந்த அறிவுரையை வழங்கி உள்ளீர்கள். 

Link to comment
Share on other sites

2 minutes ago, tulpen said:

பொலிஸில் பிடிபடாமல் திருடிக்கொண்டு வாடா என் அருமை மகனே என்று உங்கள் மகனுக்கு சிறந்த அறிவுரையை வழங்கி உள்ளீர்கள். 

மகளை விட்டு விட்டீர்களே 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் கொரோனா போதகர் 
முன்பு சுவிஸ்குமார் என்று ஒருவர் இருந்தார்
அதற்கு முன்பு மனைவியை கொலை செய்த ஒருவர் நியூசிலந்தில் கைது செய்யப்பட்டார்
இப்ப இவர்.

என்னப்பா இது
 
Link to comment
Share on other sites

தமிழர்கள் 'கடினமாக படித்து', 'நேர்மையாக உழைத்து' அதையே அடுத்த தலைமுறைக்கும் போதித்து 'எளியவனாக' இறக்கவேண்டும் என்பது ஒன்றும் தலைவிதி அல்ல. அதற்காக எமக்கு சிலையும் வைக்கப்படுவது இல்லை. 

அடுத்த தலைமுறை, 'இலகுவாக படித்து' 'மற்றையவர்களை "" நேர்மையாக """ ஆளும்' திறமை படைத்தவர்களாக வேண்டும். 

உதாரணத்திற்கு 'அடிடாஸ்' 2-5 டாலருக்கு செய்து 50-100 டாலருக்கு விற்கும் பாதணிக்கு உழைத்துக்கொடுக்கும்  தலைமுறையாக இருக்காமல் அடிடாசை ஆளும் தலைமுறையாக மாற வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ampanai said:

எமது பிள்ளைகள் தீர்மானம் செய்யும் சக்தி படத்தவர்களாகும் தகுதியுடையவர்களே.💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, tulpen said:

பொலிஸில் பிடிபடாமல் திருடிக்கொண்டு

கவனிக்கவும்,

1 hour ago, ampanai said:

அடுத்தடுத்த தலைமுறைகள் சட்டத்தில் பிடிபடாமல்

சட்டமே, மோசடியா இல்லை சட்ட வரம்பிற்குள் நடைபெற்ற வியாபாரமா என்பதை தீர்மானிக்கும்.

எல்லா நிறுவனங்களும் செய்யும் முறை தானே.

ஊருடன் ஒத்து வாழ வேண்டும் என்பது... ஆஆ மறந்து விட்டேன் தமிழன் மூதாதையர்கள் உங்கள் நோக்கில் பொதுவாக முட்டாள்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

தமிழர்கள் 'கடினமாக படித்து', 'நேர்மையாக உழைத்து' அதையே அடுத்த தலைமுறைக்கும் போதித்து 'எளியவனாக' இறக்கவேண்டும் என்பது ஒன்றும் தலைவிதி அல்ல. அதற்காக எமக்கு சிலையும் வைக்கப்படுவது இல்லை. 

அடுத்த தலைமுறை, 'இலகுவாக படித்து' 'மற்றையவர்களை "" நேர்மையாக """ ஆளும்' திறமை படைத்தவர்களாக வேண்டும். 

உதாரணத்திற்கு 'அடிடாஸ்' 2-5 டாலருக்கு செய்து 50-100 டாலருக்கு விற்கும் பாதணிக்கு உழைத்துக்கொடுக்கும்  தலைமுறையாக இருக்காமல் அடிடாசை ஆளும் தலைமுறையாக மாற வேண்டும். 

சுவிஸ் போன்ற சிறிய நாடுகளில் இது எதிர்மறையான பலன்களையே  தரும் 
இனி யாரும் தமிழர்கள் நேர்மையாக இப்படியான தொழில் செய்ய தொடங்கினாலும் 
கடுமையான கண்காணிப்பும்  ஒரு வித துவேஷ போக்கும்தான் இருக்கும்.

இவர்கள் நேர்மையாக செயல்பட்டு இருப்பின் 
அங்கு வசிக்கும் தமிழ் முதியவர்களே இவர்களுக்கு போதுமான 
வருமானம் ஈட்டகூடியதா சூழ்நிலை அமைந்திருக்கும்.

அற்ப பணத்துக்கு ஆசைப்பட்டு 
தொடங்கிய வியாபாரத்தையும் திவால் ஆக்குவது வெறும் மொக்குத்தனம் 

எவ்வளவு பணம் வேண்டும்?
ஏன் வேண்டும்?
இதுக்கு தெளிவில்லாத விடையில்லாத மனிதர்கள் 
வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் தோற்றுகொண்டே இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

ஒரு விடயத்தில் தவறு ஏற்படுவது சாதாரணம் ஆனால் நிறுவனத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் பல தவறான ஆணவங்களில் முறைகேடுகள் நடைபெற்றுளதே அது ஏன்? அது எப்படி நடைபெற்றது  என்று தொலைக்காட்சி நிருபர் திரும்ப திரும்ப  கேட்ட கேள்விக்கு தமது தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாக மட்டுமே நிறுவனத்தின் நிர்வாக இயங்குனர்  திரு ஜ‍ன‍ன‍ன் நடேசலிங்கம்  பதிலளித்தார்.

public speaking and  sensitivities அறியாத ஒருவர் பொறுப்பில் இருந்ததால் வந்த விளைவு.

"Every department has its own lead and we saw no signs of financial or other irregularrities.

Thank you for bringing it to our awareness.

We are reviewing all of internal processes from North-to-South  and East-to-West to find out any irregularities.

If we do, we will start our own investigations and any irregulaties and any personel involvement will be dealt and resolved through company and industry best practices, and law of the land.

Our commitment, service to caring for the needy or sick will continue as normal.

No further comment at this point in time."

Stupid COO.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சுவிஸ் இல் சிறு வயதில் இருந்து வளந்தவர்கள் என்றே நினைக்கிறன்.

ஆனால், சுவிஸ் இல் பிறந்து, வளர்ந்த பலரிடம் இதை அவதானித்தும் உள்ளேன்.

அதாவது, சுவிஸ் society உடன் public ஆக deal பண்ணும் finnese இன்னமும் மெருகூட்டப்பட வேண்டிய அல்லது இல்லாத  நிலையில் உள்ளார்கள்.

இது எனது தனிப்பட்ட அவதானம் மட்டுமே.

சுவிஸ் society உடன்  தனிப்பட்ட உறவுகள், நட்புகள் வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

சுவிஸ் போன்ற சிறிய நாடுகளில் இது எதிர்மறையான பலன்களையே  தரும் 
இனி யாரும் தமிழர்கள் நேர்மையாக இப்படியான தொழில் செய்ய தொடங்கினாலும் 
கடுமையான கண்காணிப்பும்  ஒரு வித துவேஷ போக்கும்தான் இருக்கும்.

இவர்கள் நேர்மையாக செயல்பட்டு இருப்பின் 
அங்கு வசிக்கும் தமிழ் முதியவர்களே இவர்களுக்கு போதுமான 
வருமானம் ஈட்டகூடியதா சூழ்நிலை அமைந்திருக்கும்.

அற்ப பணத்துக்கு ஆசைப்பட்டு 
தொடங்கிய வியாபாரத்தையும் திவால் ஆக்குவது வெறும் மொக்குத்தனம் 

எவ்வளவு பணம் வேண்டும்?
ஏன் வேண்டும்?
இதுக்கு தெளிவில்லாத விடையில்லாத மனிதர்கள் 
வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் தோற்றுகொண்டே இருப்பார்கள்.

என‌க்கும் பிராட்டுத‌ன‌ம் திருட்டு கொள்ளை இவை சுத்த‌மாய் பிடிக்காது , அன்மையில் என‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌ன் சொன்னான் ல‌ண்ட‌னில் க‌ள்ள‌க் காட் அடிச்சு உல‌க‌ம் பூரா இருக்கும் வ‌ங்கியில் காசு குறுகிய‌ கால‌த்தில் எவ‌ள‌வும் எடுக்க‌லாம் என்று / எம்மின‌த்தில் நிறைய‌ பிராடுக‌ள் இருக்கின‌ம் , ஓசி என்றால் ஏசியும் போட‌ சொல்லுவின‌ம் /

உப்ப‌டியான‌ ஆட்க‌ளை விட்டு த‌ள்ளி இருப்ப‌து ந‌ல்ல‌ம் அண்ணா 

Link to comment
Share on other sites

On 3/25/2020 at 3:17 PM, ampanai said:

தமிழர்கள் 'கடினமாக படித்து', 'நேர்மையாக உழைத்து' அதையே அடுத்த தலைமுறைக்கும் போதித்து 'எளியவனாக' இறக்கவேண்டும் என்பது ஒன்றும் தலைவிதி அல்ல. அதற்காக எமக்கு சிலையும் வைக்கப்படுவது இல்லை. 

அடுத்த தலைமுறை, 'இலகுவாக படித்து' 'மற்றையவர்களை "" நேர்மையாக """ ஆளும்' திறமை படைத்தவர்களாக வேண்டும். 

உதாரணத்திற்கு 'அடிடாஸ்' 2-5 டாலருக்கு செய்து 50-100 டாலருக்கு விற்கும் பாதணிக்கு உழைத்துக்கொடுக்கும்  தலைமுறையாக இருக்காமல் அடிடாசை ஆளும் தலைமுறையாக மாற வேண்டும். 

தமக்குள் நேர்மையாக இருக்கும் சமுதாயத்தினால் தான் நீங்கள் கூறிய ஆளும் தலைமுறை என்பதை சாதிக்க முடியும். தமக்குள் நேர்மை இல்லாத சமுதாயத்திற்குள் தனி வியாபாரத்தை தவிர மேலே செய்ய முடியாது. 

On 3/25/2020 at 8:23 PM, Kadancha said:

public speaking and  sensitivities அறியாத ஒருவர் பொறுப்பில் இருந்ததால் வந்த விளைவு.

"Every department has its own lead and we saw no signs of financial or other irregularrities.

Thank you for bringing it to our awareness.

We are reviewing all of internal processes from North-to-South  and East-to-West to find out any irregularities.

If we do, we will start our own investigations and any irregulaties and any personel involvement will be dealt and resolved through company and industry best practices, and law of the land.

Our commitment, service to caring for the needy or sick will continue as normal.

No further comment at this point in time."

Stupid COO.

மேற்படி தமிழ் வர்த்தகர்களின் மோசடியால் பல நோயாளர்களும் வயதானவர்களும் அவர்களிடம் வேலை செய்த பணியாளர்களும் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள். காப்புறுதி முழுப்பணத்தையும் செலுத்துவதில்லை. காப்புறுதி ஒப்பந்த‍த்தின் பிரகாரம்  Selbsbehalt தொகையை சம்பந்தப்பட்ட நோயாளரும் வயோதிபரும் தான் செலுத்த வேண்டும். நீங்கள் எதிர்காலத்தில்  மோசடி செய்தபர்கள் பிடிபடும் போது எப்படி தந்திரமாக பேசலாம் என்று ஆலோசனை கூறி உள்ளீர்கள். பாதிகபட்டவர்கள் பிற நாட்டவர்கள் என்பதால் மிக சாதாரணமாக குற்றவாளிகளுக்கு சட்ட ஆலோசனையுடன் கடந்து செல்கின்றீர்கள். இதுவே பாதிக்கபட்டவர்கள் தமிழர்கள் என்றால் தூக்கில் போடவேண்டும் என்ற கணக்கில் கருத்துக்கள் குவிந்திருக்கும். 

On 3/25/2020 at 8:37 PM, Kadancha said:

இவர்கள் சுவிஸ் இல் சிறு வயதில் இருந்து வளந்தவர்கள் என்றே நினைக்கிறன்.

ஆனால், சுவிஸ் இல் பிறந்து, வளர்ந்த பலரிடம் இதை அவதானித்தும் உள்ளேன்.

அதாவது, சுவிஸ் society உடன் public ஆக deal பண்ணும் finnese இன்னமும் மெருகூட்டப்பட வேண்டிய அல்லது இல்லாத  நிலையில் உள்ளார்கள்.

இது எனது தனிப்பட்ட அவதானம் மட்டுமே.

சுவிஸ் society உடன்  தனிப்பட்ட உறவுகள், நட்புகள் வேறு.

Link to comment
Share on other sites

On 3/25/2020 at 2:54 PM, colomban said:

சுவிஸ் கொரோனா போதகர் 
முன்பு சுவிஸ்குமார் என்று ஒருவர் இருந்தார்
அதற்கு முன்பு மனைவியை கொலை செய்த ஒருவர் நியூசிலந்தில் கைது செய்யப்பட்டார்
இப்ப இவர்.

என்னப்பா இது
 
சுவிஸ் கொரோனா போதகர், சுவிஸ் குமார் போன்ற குற்ற செயல்களை புரிந்தவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.  ஏமாற்ற பேர்வழிகள். ஆனால் இங்கு பாதிக்கபட்டவர்கள் வேற்று இனத்தவர். தேசிய தொலைக்காட்சியின் விபரணம் ஒட்டு மொத்த தமிழருக்கும் தலை குனிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

மேற்படி தமிழ் வர்த்தகர்களின் மோசடியால் பல நோயாளர்களும் வயதானவர்களும் அவர்களிடம் வேலை செய்த பணியாளர்களும் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள். காப்புறுதி முழுப்பணத்தையும் செலுத்துவதில்லை. காப்புறுதி ஒப்பந்த‍த்தின் பிரகாரம்  Selbsbehalt தொகையை சம்பந்தப்பட்ட நோயாளரும் வயோதிபரும் தான் செலுத்த வேண்டும். நீங்கள் எதிர்காலத்தில்  மோசடி செய்தபர்கள் பிடிபடும் போது எப்படி தந்திரமாக பேசலாம் என்று ஆலோசனை கூறி உள்ளீர்கள். பாதிகபட்டவர்கள் பிற நாட்டவர்கள் என்பதால் மிக சாதாரணமாக குற்றவாளிகளுக்கு சட்ட ஆலோசனையுடன் கடந்து செல்கின்றீர்கள். இதுவே பாதிக்கபட்டவர்கள் தமிழர்கள் என்றால் தூக்கில் போடவேண்டும் என்ற கணக்கில் கருத்துக்கள் குவிந்திருக்கும். 

நீங்கள் எழுதியதில் இருந்து, இப்போதைக்கு இருப்பது  ஒழுங்கீனங்கள் நடைபெற்றிப்பதாக இருக்கும் முறைப்பாடு  மட்டுமே என்பதே நான் விளங்கியது.

இது எப்படி, எவர் முடிவெடுத்து, நடைபெற்றது என்பதுடன் சொல்லப்பட்ட முறைப்பாடுகள் எல்லாமே நடைபெற்றதா என்பதிலும் கேள்வி இருக்கிறது.

எவ்வளவு காலம் நடை பெற்றது?

உண்மையிலேயே நிறுவனத்தின் intention உடன் தான் நடைபெற்றதா என்ற பல கேள்விகள் உண்டு.

உண்மையில், பொறுப்பில் உள்ள ஒரு சிலர் ஈடுபட்டு இருந்தால், முழு நிறுவனத்தையும் அதன் சேவையையும் குறை கூற முடியுமா?   

நிச்சயமாக கடந்து செல்லவில்லை என்பது நான் சொல்லிய வசனத்தில் இருப்பது தெரியவில்லையா?

If we do, we will start our own investigations and any irregulaties and any personel involvement will be dealt and resolved through company and industry best practices, and law of the land.

இதுவே சுவிஸ் சொந்த இனத்தவர்களால் நாடத்தப்படும் நிறுவனமாயின், இப்படி வெளிவந்தாலும், இந்த பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டும்  இருக்கும்.

நீங்கள் சொல்வது franchise போன்றது.

இப்படி பாரிய அளவில் ஒழுங்கீனங்கள் நடைபெறும் பொது, தாய் நிறுவனத்திற்கு ஒன்றும் தெரியாமல் இருந்ததை கூட தொலைக்காட்சி கேள்வியாக முன்வைக்கவில்லை.

சுவிஸ் இல் இருக்கும் வேறு நிறுவங்கள் ஒழுங்கீன முறைப்ப்டுகளை எவ்வாறு கையாளுகின்றன?

Link to comment
Share on other sites

4 hours ago, Kadancha said:

அந்த தொலைக்காட்சி விபரணத்தை பார்த்தவன் என்ற முறையில் என்னால் அந்த தமிழர் நிறுவனம் பல குழறுபடிகளுடன் மோசடித்தனமாக பணம் உழைக்க முற்பட்டுள்ளது என்பதை உணர முடிந்த‍த‍து. நிறுவனத்தின் பிரதான நிர்வாக மேலாளராலேயே பதில் சொல்ல முடியாமல் விழிக்கும் நிலையில் தான் உள்ளது. நிச்சயமாக அந்த விபரணத்தை பார்த்த பல லட்சக்கணக்கான  சுவிஸ் மக்களும் அதையே உணர்ந்திருப்பார்கள். எதிர் காலத்தில் வணிகம் மேற்கொள்ள விரும்பும்  தமிழ் இளையோர் இதனை ஒரு பாடமாக எடுத்து தமது வணிகத்தில்  தொழிர்சார் நேர்மையை கடைப்பிடித்து தமது நிறுவனங்களை நடத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, tulpen said:

நிறுவனத்தின் பிரதான நிர்வாக மேலாளராலேயே பதில் சொல்ல முடியாமல் விழிக்கும் நிலையில் தான் உள்ளது.

ஏற்கனவே சொல்லிவிட்டேன், அவர் coo இருக்க தகுதி அற்றவர் என்பது.

மற்றது, coo இன் முக்கியமான பணிகளில் ஒன்று, முறைப்பாடுகள் வரும் பொது, சட்ட வரம்பிற்குள் நிறுவனத்தை defend பண்ணுவது, ஒழுகீனங்கள் நடந்து இருப்தற்கான சாத்தியக்  கூறுகளை மறுக்காமலும் அதேவேளை அவர் செய்தது போல நேரடியாக ஏற்றுக்கொள்ளாமலும்.

ஓர் நிறுவனத்தை coo நடத்துவதற்கான தகுதியை பற்றியே எனது கருத்து.

அதில் ஒன்று  நிறுவனத்தில் ஒழுங்கீனங்கள் நடைபெற்றதற்கான தோற்றப்பாடு நிறுவனத்திற்கு எதிராக வலுவாக இருப்பினும், public உடன் sensitive  ஆக deal பண்ணுவது.

இதை பற்றி இத்துடன் முடிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.. லதன் சுந்தரலிங்கம் சுவிஸ்.. இவர் யாழில இருக்கிற கொஞ்சப்பேரபோல ஓவர் அக்றிங்க் தமிழ்தேசியவாதி ஆச்சே. இந்த ஓவர் அக்றிங் பாட்டி எல்லாம் இப்பிடித்தான். இவர்தான் சீமானுக்கு எதிரா புலிகளின் பெயரில் அறிக்கவிட்டவர் ஆச்சே. எங்களமாதிரி உண்மையான தமிழ்த்தேசியவாதிகள் எப்பவும் இந்த ஓவர் சீன்காரர் பற்றி அலேட்டாகவே இருக்கோணும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.