Sign in to follow this  
ampanai

பதவியில் இல்லாத போதிலும் மக்களிற்கு வழிகாட்டும் ஒபாமா

Recommended Posts

பதவியில் இல்லாத போதிலும் மக்களிற்கு வழிகாட்டும் ஒபாமா : வைரசினை எதிர்கொள்வது குறித்து சமூக ஊடங்களில் தொடர்ந்து அறிவுரைகள் - ஆலோசனைகள்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக்ஒபாமா தனக்குள்ள பாரிய சமூக ஊடக தளத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸ் குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றார்.

டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல விடயங்கள் குறித்து மௌனமாகயிருந்த ஒபாமா தற்போது டுவிட்டரில் பல பதிவுகளை வெளியிட்டு வருவதுடன் அவற்றினை முகநூலில் மீள்பதிவு செய்துவருகின்றார்.

பராக் ஒபாமா பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன் வைரசினை எதிர்த்து போரிடுவதற்கான புதிய நடவடிக்கைகளி;ற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தி வருகின்றார்

obama_virus.jpg

 

வைரஸ் நெருக்கடியின் போது அமைப்புகளும் தனிநபர்களும் முன்னெடுத்துள்ள மனதிற்கு வலிமையையும் நம்பிக்கையையும் நடவடிக்கைகள் குறித்த பதிவுகளை அவர் வெளியிட்டு வருகின்றார்.

ஒபாமாவின் பதிவுகளிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதுடன் பலர் அதற்கு பதில்களையும் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

வைரஸ் எண்ணிக்கை அதிகரித்து செல்வதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என வோசிங்டன் போஸ்ட் வெளியிட்ட தகவலிற்கான ஒபமாவின் டுவிட்டர் கருத்தினை கடந்த வாரம் 120,000 பேர் மீள்பதிவிட்டிருந்தனர்.

வோசிங்டன் போஸ்டின் மிகவும் வாசிக்கப்பட்ட தகவலாக அது மாறியுள்ளது என போஸ்டின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சரியான விடயங்களை செய்து ஏன் வீடுகளிற்குள் இருக்கவேண்டும் என்பதை இந்த கட்டுரை தெரிவிக்கின்றது, எங்கள் அனைவராலும்  வைரஸ் பரவுவதை தடுக்க உதவ முடியும்,முதியவர்களை பலவீனமானவர்களை பாதுகாக்க முடியும்,என ஒபாமா தெரிவித்திருந்தார்.

கடந்த வாரங்களில் ஒபாமா டுவிட்டரில் பல பதிவுகளை வெளியிட்டுள்ளார்

barack_obama.jpg


முன்னாள் ஜனாதிபதி பொதுமக்கள் பார்க்ககூடிய பரிமாறிக்கொள்ளக்கூடிய பொது சுகாதாரம் தொடர்பான கருத்துக்களை வெளியிடவிரும்புகின்றார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

இது குழப்பமான விடயம் என்பதால் விஞ்ஞான அடிப்படையில் விடயங்களை முன்வைப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும் மக்கள் அறிந்துகொள்ளக்கூடிய விளங்கிக்கொள்ளக்கூடிய பொதுசுகாதார கருத்துக்களை வெளியிடவேண்டும் என ஒபாமா கருதுகின்றார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக மக்கள் பயனுள்ள விடயங்களை அறிந்துகொள்ளவேண்டும் என அவர் விரும்புகின்றார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

>நெருக்கடியான தருணத்தில் மிக முக்கியமான பணியை மேற்கொண்டுள்ளவர்களை தூக்கிவிடுவதற்கு ஒபாமா விரும்புகின்றார்,உந்துசக்தியை ஏற்படுத்தக்கூடிய அந்த பதிவுகள் அதனை வாசிப்பவர்களிற்கு மனோதைரியத்தை வழங்கும் என ஒபாமா கருகின்றார் எனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரையில் டிரம்பினை விமர்சிக்காத ஒபாமா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் முன்னரங்கில் நிற்பவர்களிற்கு பெரும் நன்றிக்கடனை வெளியிட்டு வருகின்றார்.
 

உங்கள் அயலில் உள்ள முதியவர்கள் பலவீனமானவர்களை தொலைபேசி தொடர்புகொண்டு அவர்களது நிலையை அறிந்துகொள்ளுங்கள் என அவர் ஆலோசனை வழங்கி வருகின்றார்.

எதிர்வரும் காலங்களில் நாங்கள் எதனை எதிர்பார்க்கவேண்டும் என்பதையும் அவர் நினைவுபடுத்தி வருகின்றார்.

https://www.virakesari.lk/article/78641

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாஞ்சா நூல் (கோப்புப்படம்)   சென்னை: தமிழகத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவதற்கு ஏற்கனவே தடை இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி சிலர் பட்டம் விடுவதால் சில நேரங்களில் பட்டத்தின் கயிறு சாலைகளில் செல்வோரின் கழுத்தை நெரித்து உயிரிழப்பும் ஏற்படுகிறது.   சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் பட்டம் விட மேலும் 2 மாதங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 16-ம் தேதி வரை மாஞ்சா நூலுக்கு தடை விதித்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.இதற்கிடையே இந்த ஊரடங்கு காலத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும், சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விட்ட 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.   https://www.maalaimalar.com/news/topnews/2020/05/29065011/1554653/If-you-have-pattam-from-manja-arrested-under-the-thug.vpf    
    • சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி "நல்ல மனநிலையில்" இல்லை - டொனால்டு டிரம்ப்   வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு "பெரிய மோதல்" நடந்து வருகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார். பிரதமர் நரேந்திர மோடியுடன் சீனாவுடனான "பெரிய மோதல்" குறித்து பேசினேன். இந்தியப் பிரதமர் "நல்ல மனநிலையில்" இல்லை.  நான் இந்திய பிரதமரை மிகவும் விரும்புகிறேன், அவர் ஒரு சிறந்த மனிதர். இந்தியாவும் சீனாவும் ஒவ்வொன்றும் 140 கோடி மக்களைக் கொண்ட இரண்டு நாடுகள். மிகவும் சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகள்.இந்தியா மகிழ்ச்சியாக இல்லை, அநேகமாக சீனாவும் மகிழ்ச்சியாக இல்லை என கூறினார். ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று டிரம்ப் பலமுறை கூறிய போதிலும், இந்தியா திட்டவட்டமாக அதை ஏற்க மறுத்து வருகிறது.இருந்தும் தொடர்ந்து வலியுறுத்திய படியே இருக்கிறார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதன்கிழமை அறிவித்து இருந்தார் இதுகுறித்து அவர் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில் “இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் பிரச்சினை எழுந்து இருப்பதால் சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்த நாடுகளுக்கு தெரிவித்து இருக்கிறோம்“ என்று கூறி இருந்தார்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/29062207/PM-Modi-Not-In-Good-Mood-Over-Border-Row-With-China.vpf
    • இலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல் Rajeevan Arasaratnam May 29, 2020இலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல்2020-05-29T08:13:32+00:00 இலங்கை வெளிநாடுகளை சேர்ந்த நோயாளிகளை நடத்தியது போன்று இலங்கையர்கள் பணிபுரியும் நாடுகளும் இலங்கையர்களை நடத்தியிருந்தால் நூற்றுக்கணக்கான நோயாளிகளை நாட்டிற்கு கொண்டுவரவேண்டிய பிரச்சினையை இலங்கை எதிர்கொண்டிராது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்தவர்கள் பணிபுரியும் நாடுகள் மனிதாபிமானத்துடன் சிந்தித்திருந்தால் நாங்கள் வெளிநாட்டு நோயாளிகளை நடத்தியது போன்று அவர்களும் செயற்பட்டிருந்தால் நூற்றுக்கணக்கான நோயாளிகளை நாட்டிற்கு கொண்டுவரவேண்டிய பிரச்சினையை இலங்கை எதிர்கொண்டிராது என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச பிரகடனங்களின் படி நோயாளி ஒருவரை தனது நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான உரிமை உலகின் எந்த நாட்டிற்கும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அவர்கள் நோயாளிகளாகயிருந்தாலும் கூட இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அரசாங்கம் சிறிதும் தயங்காது என தெரிவித்துள்ள அனில்ஜசிங்க ஆனால் இதற்கு சிறிது காலம் எடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் வருவதன் காரணமாக இலங்கையர்களை அழைத்து வரும் விமானங்களிற்குள் இடையில் நாங்கள் இடைவெளியை பேணவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசிற்கு எதிரான எங்கள் போராட்டம் கடும் அழுத்தங்களிற்கு மத்தியிலேயே இடம்பெறுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மத்தியில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே நாங்கள் எதிர்கொண்டுள்ள ஆபத்து என அவர் குறிப்பிட்டுள்ளார். http://thinakkural.lk/article/43985
    • வெலிசர கடற்படை முகாமை சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். Rajeevan Arasaratnam May 29, 2020வெலிசர கடற்படை முகாமை சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.2020-05-29T08:40:02+00:00 வெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுதல் நிலையங்களிற்கு அனுப்பபபட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார். வெலிசர முகாமிலிருந்த அனைத்து கடற்படையினரும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கும் அனுப்பப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்  . அதேபோன்று அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். வெலிசர முகாமில் சுமார் 4000 கடற்படையினர் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கொழும்பின் கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த 200 கடற்படை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் அங்கு நெருக்கமான விதத்தில் தங்கியிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொவிட் 19 ற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினரே அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/43989
    • கொரோனா தொற்று ; மொத்த எண்ணிக்கை 1530 ஆக அதிகரிப்பு Bharati May 29, 2020கொரோனா தொற்று ; மொத்த எண்ணிக்கை 1530 ஆக அதிகரிப்பு2020-05-29T07:13:47+00:00 இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை மொத்தமாக 1,530 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1530 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் குணமடைந்த 13 பேர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் 745 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 775 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. http://thinakkural.lk/article/43961