Sign in to follow this  
ampanai

டென்னிஸ் உலகின் மன்னன் பொறிஸ் பெக்கர் ஆண்டியான கண்ணீர் கதை..!

Recommended Posts

இவ்வாறான சோகக்கதை பல உலக விளையாட்டு வீரர்கள் மத்தியிலும் உள்ளது. 

'எல்லாம் கொஞ்சக்காலம்தான்' என்பது மறக்கப்பட்டு, பொருளாதார / முதலீடு பற்றிய அறிவுரைகளுக்கும் மரியாதை கொடுக்காததால் இந்த நிலை ஏற்படுகின்றது.

ஓம், மது மற்றும் மாதுக்கள் என்பனவும் ஆண்டாடு காலமான காரணிகள்.   

Share this post


Link to post
Share on other sites

நீண்டகாலத்துக்கு முன்னர், ‘அப்பப்பா, நான் அப்பன்தானடா’ என ஒரு பதிவு இவர் பற்றி போட்டிருக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

இந்த நிகழ்ச்சி நெறியாளரின் குரல் பேச்சு வடிவமைப்பு 
இதுக்கு ஒத்துவரவில்லை ... 

Edited by Maruthankerny

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, Maruthankerny said:

இந்த நிகழ்ச்சி வெறியாளரின் குரல் பேச்சு வடிவமைப்பு 
இதுக்கு ஒத்துவரவில்லை ... 
 

நெறியாளரின் 🙂 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, Maruthankerny said:

இந்த நிகழ்ச்சி நெறியாளரின் குரல் பேச்சு வடிவமைப்பு 
இதுக்கு ஒத்துவரவில்லை ... 

கே சி துரையர் பத்தி, பையனிடம் கேளுங்கள். விலா வாரியா சொல்லுவார்..

இடையே மியூசிக் போட்டு பயமுறுத்துவதை விட்டால் சரியாய் இருக்கும்

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள் கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இன்று 74ஆவது பிறந்தநாள். இவர் குறித்த சில முக்கியத் தகவல்கள் இதோ. எஸ்.பி.பியின் தந்தை ஒரு ஹரிஹத கலைஞர். இளம் வயதிலேயே இவருக்கு இசையின் மீது அளாதி பிரியம். இளம் வயதில் தெலுங்கு இசை நிறுவனம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அந்தப் பரிசுதான் பாடகராக வேண்டும் என்கிற ஆர்வத்தை அவருக்குள் விதைத்தது. இவருடைய தாய்மொழி தெலுங்கு. தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் 'ஶ்ரீ ஶ்ரீ மரியாத ராமண்ணா' என்கிற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 1969ஆம் ஆண்டு சாந்தி நிலையம் படத்திற்கு 'இளையகன்னி' என்கிற பாடலைப் பாடி தமிழில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். 'இளையகன்னி' படம் வெளிவருவதற்கு முன்னரே 'அடிமைப்பெண்' படத்தில் 'ஆயிரம் நிலவே வா' என்கிற பாடல் மூலம் இவரது குரல் தமிழ் உலகிற்கு கேட்க ஆரம்பித்துவிட்டது. மின்சாரக்கனவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தங்கத் தாரகை மகளே' என்கிற பாடலுக்காக அவர் தேசிய விருதைப் பெற்றார். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இவர் நான்கு மொழிகளில் பாடிய வெவ்வேறு பாடல்களுக்கு ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கிறார். இவர் பாடகர் மட்டுமல்ல சில படங்களுக்கு டப்பிங்கும் கொடுத்திருக்கிறார். மேலும், நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். உலகிலேயே அதிகமான திரைப்படப் பாடல்கள் பாடிய பாடகர் என்கிற கின்னஸ் சாதனையையும் செய்துள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அதுமட்டுமில்லாமல் ஒரே நாளில் 19 பாடல்களைப் பதிவு செய்து அனைவரையும் பிரம்மிக்க வைத்தவர். கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவர். இவருடைய ஆர்வத்தைப் பார்த்து சச்சின் டெண்டுல்கர் அவருடைய கையெழுத்திட்ட பேட்டை பரிசாக எஸ்.பி.பிக்கு அளித்திருக்கிறார். ரஜினிகாந்த், இளையராஜா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பெற்றுள்ள 'இந்தியன் பிலிம் பர்சனாலிட்டி ஆஃப் தி இயர்' விருதை 2016ஆம் ஆண்டு நடந்த 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இவர் பெற்றார். இந்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பதமபூஷன் விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு ஓவியங்கள் வரைவதில் மிகுந்த பிரியம் உண்டு. அதே போன்று நன்றாக புல்லாங்குழல் வாசிப்பார். பாடகராக மட்டுமல்லாது இசையமைப்பாளர், பின்னணிக் குரல் கலைஞர், குணச்சித்திர நடிகர் ஆகிய பிரிவுகளிலும் ஆந்திர அரசு வழங்கும் நந்தி திரைப்பட விருதுகளை எஸ்.பி.பி பெற்றுள்ளார். வெவ்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.   https://www.bbc.com/tamil/arts-and-culture-52918181
  • இந்தியா - சீனா எல்லை பிரச்சனை: செல்பேசி செயலிகளை அழிக்கும் இந்தியர்கள்   கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தவறியதற்காக சீனாவின் மீது ஏற்கனவே கோபத்தில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள், தற்போது எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி அந்த நாடு மீதான தங்களது எதிர்ப்பை திறன்பேசிகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி வருகிறது. சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இந்திய மக்களிடையே முன்னெப்போதுமில்லாத வகையில், வாட்சாப் உள்ளிட்ட குறுஞ்செய்தி செயலிகள் வாயிலாக சீன எதிர்ப்பு பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. சீன பொருட்களை புறக்கணிக்க அழைப்பு குறிப்பாக, 'சீனாவை சேர்ந்த அல்லது சீன நிறுவனங்களோடு கூட்டு வைத்துள்ள நிறுவனங்களுக்கு சொந்தமான செயலிகளை திறன்பேசியிலிருந்து நீக்குங்கள்' என்று அந்த பகிர்வுகள் வலியுறுத்துகின்றன. மேலும், ட்விட்டரில் தினந்தினம் ட்ரெண்டாகி வரும் "BoycottChina", "BoycottChineseApp" மற்றும் "BoycottChineseProducts" உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் இந்திய மக்களிடையே நிலவி வரும் சீன எதிர்ப்பு மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் அவ்வப்போது சீன தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், தற்போது லட்சக்கணக்கான மக்கள் சீன திறன்பேசி செயலிகளை தங்களது அலைபேசிகளிருந்து நீக்குவது முற்றிலும் புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பயன்பாட்டாளர்களின் திறன்பேசியில் உள்ள சீன செயலிகளை மட்டும் நீக்குவதாக கூறப்பட்ட "Remove China Apps" என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டது. ஆனால், கூகுளின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு மாறாக இந்த செயலி செயல்பட்டதால் ஜூன் 3ஆம் தேதி இது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.   டிக்டாக், பப்ஜி மொபைல், ஷேர்ஐடி, செண்டர், காம் ஸ்கேனர், பியூட்டி பிளஸ், க்ளாஷ் ஆஃப் கிளான்ஸ், லைக் மற்றும் யுசி பிரௌசர் உள்ளிட்டவை மக்களின் சீன எதிர்ப்பு மனநிலையால் இலக்கு வைக்கப்பட்ட சில செயலிகளாகும். டிக்டாக் செயலியை இந்தியர்கள் தங்களது திறன்பேசியில் இருந்து நீக்கினால் அதன் உரிமையாளரான சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று வாட்சாப் பயனாளர்களிடையே பரவிய செய்தி இதன் வீரியத்தை அதிகரித்துவிட்டது. சீனாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? இந்தியாவை சேர்ந்த பெரும் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்புகளுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக மற்றும் முதலீடு சார்ந்த விடயங்களில் பிணைப்பு அதிகமாக உள்ளது.   எனவே, சீனாவுக்கு எதிரான இந்திய மக்களின் இதுபோன்ற எதிர்ப்பலைகள் நடைமுறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது கடினமே. இந்தியாவில் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் 2.34 பில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக இந்திய அரசின் தரவுத்தளம் கூறும் நிலையில், மும்பையை சேர்ந்த தனியார் சந்தை மதிப்பீட்டு நிறுவனமோ இதன் மதிப்பு நான்கு பில்லியன் டாலர்களை கடந்துவிட்டதாக கூறுகிறது. எனவே, சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட திறன்பேசி செயலிகளை நீக்கும் இந்திய மக்களின் செயல்பாடு உண்மையில் எத்தனை காலத்திற்கு நீடிக்கும், அதனால் ஏற்படும் தாக்கம் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். https://www.bbc.com/tamil/global-52918186
  • வந்தால், கடத்தி வெடிவைக்க, உங்க அண்ணரும், அதற்காக வெளியே வரப்போகும் பிள்ளையானும் ரெடி. கிழக்கு பல்கலைகழக பேராசிரியருக்கு நடந்தது என்ன? மன்னிக்கோணும் அக்கா, நீஙகள் என்னதான் ஆலோசணை சொன்னாலும், மகிந்தாவை தூக்கிப்பிடிக்கும் அம்மானை ஆதரிக்கும் நிலையில் உங்கள் கருத்துக்கள் வேஸ்ட்.
  • இனி பொம்மைகளுடன் சாப்பிடலாம்!   கனி கரோனா பெருந்தொற்றின் காரணமாக பல துறைகள் தலைகீழ் மாற்றங்களை எதிர்கொண்டுவருகின்றன. அந்த வகையில் உணவகத் துறை, இந்தப் பெருந்தொற்று காலத்தில் தன்னை தகவமைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. உலகம் முழுவதும் உள்ள உணவகங்கள் இந்த நேரத்தில் இயங்குவதற்குப் பல புதுமையான வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றன லித்துவேனியத் தலைநகர் வில்னியஸின் மேயர், அந்த நகரின் சில இடங்களில் உணவகங்கள் வெளிப்புற 'கஃபே'க்கள் அமைப்பதற்கு ஏப்ரலில் முதற்கட்ட அனுமதி வழங்கினார். தற்போது அந்நகரில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், உணவகங்கள் உட்புறமாக இயங்குவதற்குப் புதுமையான தீர்வைக் கண்டுபிடித்துள்ளன. உணவகங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காகச் சில மேசைகளைக் காலியாக வைக்க வேண்டிய அவசியம் உள்ளதால் இந்தக் காலி மேசைகள் ஃபேஷன் காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கின்றன. அந்நகரின் சுற்றுலா நிறுவனமான ‘கோ வில்னியஸ்’, உணவகங்கள், அந்நகரின் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த உணவக ஃபேஷன் காட்சியகத்தை உருவாக்கியிருக்கின்றன. உணவகங்களில் காலியாக விடப்பட்டிருக்கும் மேசைகளில் ஜவுளிக் கடை பொம்மைகளான ‘மேனிக்கின்’ஸை (Mannequins) ‘பருவநிலை பேஷன்’ என்ற பெயரில் புது ஆடைகளுடன் அமரவைத்துள்ளனர். இந்நகரில் உள்ள பல உணவகங்கள் இந்த ஃபேஷன் காட்சியகத்துடன் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. தனிமனித இடைவெளிக்காகக் காலியாக விடப்பட்டிருக்கும் உணவக மேசைகளை அகற்றுவது நன்றாக இருக்காது என்பதால், இந்த ஃபேஷன் காட்சியகத்தை உருவாக்கியதாகச் சொல்கிறார்கள் அந்த நகரின் உணவக உரிமையாளர்கள். வாடிக்கையாளர்கள் தனிமையில் அமர்ந்து உண்ணும் எண்ணத்தைப் போக்க இந்த ஜவுளிக் கடை பொம்மைகள் உதவிகரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் உணவக உரிமையாளர்கள். உணவகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆடைகள், பொருட்கள் ஆகியவை பிடித்திருந்தால், அவற்றை எங்கே வாங்கலாம் என்ற தகவலையும் உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. லித்துவேனியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவின் வாஷிங்டனின் பிரபல உணவகமான ‘தி இன்’ னும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக உணவகத்தில் ஜவுளிக் கடை பொம்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிவரும் காலத்தில், இதுபோன்ற பல புதுமையான போக்குகளை உணவகங்கள் மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் பார்க்க நேரிடலாம்!   https://www.hindutamil.in/news/supplements/ilamai-puthumai/557451-eating-with-toys-1.html
  • அம்மானுக்கும் இல்லை!! 😂 துரோகத்தால் வீழ்த்திய ஒருவரை, இப்போ அரசியலுக்காக, அவர் ஒருவரே தேசிய தலைவர் என்பது பச்சோந்தித்தனம். நம்ம தல, மகிந்தா தானே என்று சொல்லும் நேர்மை, ஆண்மை வேண்டும். அது கிராம் என்ன விலை?