Jump to content

கல்வி அமைச்சின் இ-தக்சலாவ வலைத்தள இலவச வசதி


Recommended Posts

In இலங்கை     March 26, 2020 1:57 am GMT     0 Comments     1197     by : Benitlas

பாடசாலை விடுமுறைகாலத்தில் பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயமைப்பின் ஊடாகவும் கட்டணமின்றி இ-தக்சலாவ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வசதியை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

கல்வி அமைச்சு தொலைதொடர்பு ஒழுங்குறுத்தில ஆணைக்குழுவுக்கு விடுத்த வேண்டுதலுக்கிணங்க சகல தொலைபேசி நிறுவனங்களின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

www.e-thaksalawa.moe.gov.lk/ (IP 43.224.124.108) ஊடாக இ-தக்சலாவ கற்றல் முகாமைத்துவ முறைமைக்குள் பிரவேசிப்பதற்கு மார்ச் 23 முதல் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

http://www.e-thaksalawa.moe.gov.lk

இ-தக்சலாவில் பிரவேசிக்கும் அனைத்து பாடசாலை சிறார்களுக்கு பாட செயற்பாடுகள், வினாத்தாள்கள் மற்றும் பாடநூல் தொடர்பான பயிற்சிகள் உட்பட கற்றல் செயற்பாடுகளுக்கு வழிகாட்டியாக அதிகமான பாடதிட்டங்களுடன் ஒன்றிணைவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலமாக முதலாம் வகுப்பு தொடக்கம் 5 ஆம் வகுப்பு வரைக்கும் 6 வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரைக்குமான பாடப்பரப்புகளும் செயற்பாட்டு பயிற்சிகளும் வினாத்தாள்களும் உட்சேர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில மொழிக்குமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

http://athavannews.com/கல்வி-அமைச்சின்-இ-தக்சலா/

Link to comment
Share on other sites

இந்த தளத்தை சும்மா கிளிக் செய்து பார்த்தன்.
தமிழ்ப் பகுதி மிக மெதுவா தான் லோட் ஆகுது.
தமிழ்ப் பகுதில பல பகுதிகளில ஒன்டுமே இல்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.