Jump to content

முகநூல் பதிவு - நடனம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் கிடைத்ததை இணைத்துள்ளேன். இதனைப் பார்த்துவிட்டுக் கடந்துவிடுவோம். என்றுதான் எண்ணினேன். கள உறவுகளும் பார்க்கட்டும் என்பதற்காகக இணைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தப் பாட்டுக்காக, 
பாதிரியாரை;  பத்து வருஷம் மறியலில், வைக்கலாம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/27/2020 at 8:36 AM, தமிழ் சிறி said:

இத்தப் பாட்டுக்காக, 
பாதிரியாரை;  பத்து வருஷம் மறியலில், வைக்கலாம்.
 
ஆனால் செய்யமாட்டார்கள். பிறகு மதக்கலவரத்தை யாராம் சமாளிப்பது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/26/2020 at 9:08 AM, nochchi said:

முகநூலில் கிடைத்ததை இணைத்துள்ளேன். இதனைப் பார்த்துவிட்டுக் கடந்துவிடுவோம். என்றுதான் எண்ணினேன். கள உறவுகளும் பார்க்கட்டும் என்பதற்காகக இணைத்துள்ளேன்.

இது கொஞ்சம் பழைய காணொளி. 
இது போல் அல்லது இதை விட கேவலமான காணொளிகள் பல ஊடகங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றன. ஒரு மதத்தில் உள்ள ஓரிருவர் செய்யும்  இப்படியான செயல்களுக்காக அந்த மதத்தை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. இது போன்ற செயல்கள் பல மதங்களில் நடக்கின்றன.
 ஒவ்வொரு மதமும் நற்செயல்களையே அறிவுறுத்துகின்றன.நல்லவற்றை எடுத்துக்கொண்டு தீயவற்றை விலக்கி வாழ்வதே புத்திசாலித்தனம். காலில் புண் வந்தால் அதற்கு நிவாரணம் தேடவேண்டுமே தவிர காலை  அகற்ற நினைப்பது முழு முட்டாள்த்தனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இந்தக் காணொளியைத் ஒரு தகவலாகப் பார்த்துவிட்டு  கடந்துவிடும் வகையிலேயே இணைத்தேன். மற்றும்படி எந்த மதத்தையும் நிந்திக்கும் நோக்கிலல்ல. தேவாலயங்களின் ஆராதனையை கேட்கும்போது ஒரு தெய்வீக உணர்வுவரும் வகையிலே இருக்கும். இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

இது கொஞ்சம் பழைய காணொளி. 
இது போல் அல்லது இதை விட கேவலமான காணொளிகள் பல ஊடகங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றன. ஒரு மதத்தில் உள்ள ஓரிருவர் செய்யும்  இப்படியான செயல்களுக்காக அந்த மதத்தை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. இது போன்ற செயல்கள் பல மதங்களில் நடக்கின்றன.
 ஒவ்வொரு மதமும் நற்செயல்களையே அறிவுறுத்துகின்றன.நல்லவற்றை எடுத்துக்கொண்டு தீயவற்றை விலக்கி வாழ்வதே புத்திசாலித்தனம். காலில் புண் வந்தால் அதற்கு நிவாரணம் தேடவேண்டுமே தவிர காலை  அகற்ற நினைப்பது முழு முட்டாள்த்தனம்.

எனக்கு இதில் ஏதும் கேவலமாக தெரியவில்லை 
பாடுவதும் ஆடுவதும் மனிதர்களின் ஒரு ஆனந்தநிலையின் 
அல்லது ஒரு பரவச நிலையின் வெளிப்பாடு.
அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அதில் என்ன கேவலம் இருக்க போகிறது.

சைவர்கள் நடராஜரையே கடவுளாக கொண்டிருக்கிறார்கள் 
அவருடைய நடனம் இப்போதும் அணுக்களின் அசைவாக தொடர்கிறது 
இந்த மொத்த பிரபஞ்சமே ஆடிக்கொண்டுதான் இருக்கிறது ஆடுவதை (சுற்றுவதை)
நிறுத்தினால் எல்லாமே அழிந்துவிடும். 

ஜக்கி சாமியார் சிவராத்திரி நாட்களில் ஆடுவதை பற்றியும் பலர் 
விசனம் கொள்வார்கள் ........ உண்மையிலேயே எனக்கு ஏன் என்று புரிவதில்லை 
அது ஆனந்தத்தின் வெளிப்பாடு ...... சிவராத்திரி நாளில் முக்கிய சில பிரபஞ்ச மாற்றங்கள் 
நடைபெறுவதாகவும் ஆதலால் அதை அமைதியாக இருந்து தரிசித்தாலே அதன் சக்திகளை 
பெறமுடியும் இப்படி ஜக்கி போல ஆடுவது கேவலம் என்று இன்னொரு சாமியார் விளக்கமாக விளக்கி இருந்தார் அவருடைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் .. அந்த சக்திகளை அடையும் 
உன்னத வெளிப்பாடாக அவரது ஆட்டம் ஏன் இருக்க கூடாது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

ஒரு சிறிய விடத்தையும் ஊதி பெரிதாக்குவது உங்களில் வழமையான கடமைகளில் ஒன்று.
இருந்தாலும் இந்த காணொளியை நான் கேவலமாக நினைக்கவில்லை. மாறாக கேவலமான காணொளிகள் உலாவுகின்றன என்பதை மனதில் வைத்து எழுதினேன். இலங்கையில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் இப்படி சினிமா பாட்டுக்கெல்லாம் ஆடிப்பாடுவார்களா?
ஒரு வேளை வத்திக்கானில்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இதுவரையில்?
என்ற கேள்வி கொஞ்சம் மடமையானது என்பது எனது தனிப்பட்ட எண்ணம் 
இதுவரையில்? என்று மனிதன் இருந்துவிட்டால் நாம் இப்போதும் 1000 வருடம் பழமையானவர்களாகவே 
இருந்து இருப்போம். சினிமா பாடல்கள் என்பதே இப்போ 100 வருடத்துக்குள் மனிதர்களுக்கு அறிமுகமான ஒன்றுதான் ஆகவே முன்பு ஆடவில்லை என்பது ......ஆட வசதி இருக்கவில்லை என்றுதான் நான் கூறுவேன். 
முன்பு எமது கோவில் சிலைகளிலெல்லாம் காமம் தூண்டும் சிலைகளும் ஏன் சிவலிங்கம் நந்தி இந்த இரண்டுமே ஆண்குறி பெண்குறியை குறித்ததே. சிவலிங்கத்தை பெண்களும்  நந்தியை ஆண்களும் 
மரியாதையுடன் வணங்கி பூஜை செய்து வந்திருக்கிறார்கள்....... அவையெல்லாம் நாகரீக வளர்ச்சியில் அசிங்கம் என்று கடந்து விட்டொம் .....ஆனால் அதைவிட அசிங்கமான பெண்ணடிமைத்தனம் ஆணாதிக்கம் போன்றவற்றை காவ தொடங்கி விட்டொம். ஒருவேளை நாம் அதை கைவிடாது இருந்து இருந்தால் சக பெண்கள் மீது ஒரு பக்தி நிறைந்த மரியாதையுடன் கூடிய உறவு நீடித்து இருக்கலாம். 

தொழில்நுட்ப உதவியுடன் இசை கருவிகள் மாறும்போது  இசையும் மாறிக்கொள்ளும் 
ஆகவே இதை நாம் ஒழிக்க போனால்தான் பல மறைமுக எதிர்மறை விடயங்கள் தலை தூக்கும் 
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான எதிர்பால் இச்சை உண்டு என்பதும் .... அதுக்காக எல்லா ஆணுடனும்  ஒரு பெண் படுக்க தேவை இல்லை என்றும். அவளுக்கு விரும்பிய ஆணுடன் அவள் உறவை கொள்வது  அவளது சொந்த தனிப்பட்ட வாழ்வும் விடயமும் என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டு 
மேலும் மேலும் வன்முறைகளை தூண்டாது இயற்கைக்கு இசைவாக நாமும் வாழ பழகிக்கொண்டால் 
அன்பும் வாழ்வும் மிகவும் அழகாககும் என்பதே எனது எண்ணமாகும். 

நாம் சைவர்களாகவும் தமிழர்களாகவும் பிறந்தது பிக பெரிய பாக்கியம் என்றுதான் நான் கருதுகிறேன் 
நாம் பைபிள் குரான் என்று எந்த மதத்தையும் படிக்கலாம் எமக்கு எந்த தடையும் இல்லை  நாம்தான் சிவம் 
இன்னொரு பெண்ணை எம்முடன் சேர்த்தால் அவள்தான் சக்தி. சக்தியும் சிவமும் சேர்வதே முழுமை. கிறிஸ்தவம்  இந்து இஸ்லாமில் அந்த சுதந்திரம் இல்லை ... அதில் கத்தோலிக்கர்கள் கொஞ்சம் பரவாயில்லை  
மற்ற மதங்கள் பேய்கள் பிசாசுகள் என்று அவர்களும் சொல்லிக்கொடுப்பதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியீடு 29/03/2020

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

absolute zero (−273.15°C or 0 kelvin) என்ற ஒரு இடம் இந்த பிரபஞ்சத்தில் எங்கும் இல்லை.அணு இருந்தால் அதிர்வு இருக்கும். கடைசி ஒரு அணு இருந்தாலும் அதிர்வு இருக்கும்.இந்த அதிர்வின் மூலம் வெப்பத்தை வெளிவிடுகிறது. முதன் முதலில் இதை தண்ணிருக்குள் மண்ணை தூவி நுணுக்குக்காட்டியினால் அவதானித்தபோது அந்த மண்துணிக்கைகள் நீரின் போக்கில் மிதந்து அசைவதோடு இன்னொரு அதிர்வு அசைவாட்டத்தை ஆடிக்கொண்டிருந்தன.அந்த அதிர்வை நீரின் ஏதோ ஒன்றுதான் மண்துணிக்கைகளில் மோதி கடத்தி இருக்கவேண்டும். அன்றுதான் அணு இருப்பதற்கான முதல் எதிர்வுகூறல் மனிதனால் கண்டறியப்பட்டது. 

இந்தப்பிரபஞ்சத்தில் ஆகக்குறைந்த வெப்பநிலை(1கெல்வின்,) இந்த பூமராங் நெபுலாவிலதான் இருக்காம்.

dn18541-1_300.jpg?width=300

ஆக குவாண்டம் லெவலில் இருந்து பாத்தால் இங்க ஒண்டுமே அதிர்வதை நிறுத்தப்போவதில்லை. ஆக இந்த பிரபஞ்சமும் அழியப்போவதில்லை. இந்த பிரபஞ்சம் ஓடரில் இருந்து டிஸ் ஓடருக்கு போகும் தவிப்பில்தான் இயங்கிகொண்டிருக்கிறது. எல்லாமே சக்தி(மேற்றர்) யை வாங்கி ஒரு ஓடருக்கு வருவதும் பின் அதை இழந்து டிஸ் ஓடருக்கு போவதுமாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது.ஒன்றுமே இல்லாத வெற்றிடத்தில்கூட மேட்டரும் அன்ரி மேட்டரும் உருவாகுவதும் பின் அவை ஒன்றாகி ஒன்றுமே இல்லாமல் போவதையும் கண்டறிந்திருக்கிறார்கள். ஒன்றுமே இல்லாத இடத்தில் பெருவெடிப்பில் உருவாகிய எல்லா மேட்ட ரும் அன்ரி மேட்டரும் சேர்ந்து ஒன்றுமே இல்லாமல் மறுபடியும் காணாமல் போக இந்த களோபரத்தில் எங்கயோ காணாமல்போன கொஞ்ச அன்ரிமேட்டரால் மிஞ்சிய மேட்டரில் இருந்து உருவாகிய இந்த பிரபஞ்சத்தில் நம் உடலில் உள்ள அணுக்கருவுக்கும் இலத்திரனுக்கும் இடையே உள்ள வெற்றிடத்தை நீக்கிவிட்டு பார்த்தல் ஒரு உப்புக்கல்லு அளவுகூட அளவு வராத(ஆனா அப்பவும் நிறுத்தா எங்கட நிறை அந்தளவுதான் இருக்குமாம். அப்படித்தான் செத்துப்போய் வைட்வார்ப்பான நட்சத்திரத்தின் ஒரு டீ ஸ்பூன் அளவு நிறை நம்ம சூரியனின் நிறையைபோல் பலமடங்கு இருக்குமாம்) மனுசப்பய நாம மதத்தின் பேரால ஜாதியின் பேரால போடுற ஆட்டமிருக்கே.. குடிச்ச சிவாசே வெறிக்கிதில்ல நினைச்சா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/26/2020 at 9:08 AM, nochchi said:

முகநூலில் கிடைத்ததை இணைத்துள்ளேன். இதனைப் பார்த்துவிட்டுக் கடந்துவிடுவோம். என்றுதான் எண்ணினேன். கள உறவுகளும் பார்க்கட்டும் என்பதற்காகக இணைத்துள்ளேன்.

இது யாரோ நல்ல மனுஷன் பாட்டை  மாற்றி பதிவு செய்தமாதிரி இருக்கு.வேறு ஒரு சுவிசேஷ பாடலுக்குத்தான் அவர் ஆடியிருப்பார்.....இங்கும் சில கறுப்பின மக்களின் பூசைகள் நடக்கும்போது நல்ல புகழ்ச்சிப்பாடல்களுக்கு அவர்கள் ஆடுவதை நான் பார்த்திருக்கிறேன்.....ஓரிருவர் திட்டமிட்டு  செய்யும் கேவலமான செயல் நல்ல விடயங்கள் எல்லாவற்றையுமே கேள்விக்குள்ளாக்கிறது.ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்போல......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இது யாரோ நல்ல மனுஷன் பாட்டை  மாற்றி பதிவு செய்தமாதிரி இருக்கு.வேறு ஒரு சுவிசேஷ பாடலுக்குத்தான் அவர் ஆடியிருப்பார்.....இங்கும் சில கறுப்பின மக்களின் பூசைகள் நடக்கும்போது நல்ல புகழ்ச்சிப்பாடல்களுக்கு அவர்கள் ஆடுவதை நான் பார்த்திருக்கிறேன்.....ஓரிருவர் திட்டமிட்டு  செய்யும் கேவலமான செயல் நல்ல விடயங்கள் எல்லாவற்றையுமே கேள்விக்குள்ளாக்கிறது.ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்போல......!  🤔

👌வேணுமேன்ற இப்படி செய்யகின்றார்கள், இதை சீரியசாக எடுக்க தேவையில்லை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.