Jump to content

மிருசுவில் படுகொலை சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் ஜனாதிபதி!


Recommended Posts

மிருசுவில் படுகொலை சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் ஜனாதிபதி!

 

 

   by : Jeyachandran Vithushan

miruzuvil.jpg

மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2000 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி யாழ். மிருசுவில் இராணுவ முகாமுக்கு அருகில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, 8 அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் சுனில் ரத்நாயக்கவுக்கு மரண தண்டனை விதித்தது.

இந்நிலையில் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க இன்று (வியாழக்கிழமை) வீடு திரும்பியுள்ளார் என சிங்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மிருசுவில் படுகொலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என அண்மையில் ஆதவன் செய்தி சேவை செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மிருசுவில்-படுகொலை-சம்பத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிருசுவில் படுகொலையாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு

கொரோணாவால் நாடு அல்லோல கல்லோலப்பட, மிருசுவில் பகுதியில், எட்டு தமிழர்களை கொன்று, ஆச்சரியப்பட வைக்கும் வகையில் நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டு மரணதண்டனை பெற்று சிறையில் இருந்த, இரட்நாயக்கா ஜனாதிபதி மன்னிப்புடன் விடுதலையானார்.

அடுத்து கிரிசாந்தி கொலையாளி வருவாரா?

http://www.dailymirror.lk/breaking_news/Former-staff-sergeant-Sunil-Ratnayake-released-on-presidential-pardon/108-185661

Link to comment
Share on other sites

மிருசுவில் கொலை குற்றவாளிக்கு விடுதலை; சுமந்திரன் கண்டனம்

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மிருசுவில் படுகொலையின் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இராணுவ வீரர் சுனில் ரத்நாயக்க,  ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ், இன்று(26) விடுவிக்கப்பட்டுள்ளமைக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான வழக்குகள் பல முன்னெடுக்கப்படாத நிலையிலும் வேறு பலர் மேன்முறையீட்டில் விடுவிக்கப்பட்ட போதும் இந்த ஒருவர் தான் அவற்றுக்கு விதிவிலக்காக இருந்தவரென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இவ்வாறான குற்றங்கள் தண்டிக்கப்பட மாட்டா என்பதை இது உறுதி செய்கிறது என்றும் அவர் சாடியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மிருசுவில்-கொலை-குற்றவாளிக்கு-விடுதலை-சுமந்திரன்-கண்டனம்/175-247477

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தெளிவாக தான் இருக்கிறது.....

தமிழன் தான் தனக்குள் அடிபட்டுக் கொண்டிருக்கிறான் சிங்களத்திற்கு முண்டு கொடுத்தபடி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

மிருசுவில் படுகொலையாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு

கொரோணாவால் நாடு அல்லோல கல்லோலப்பட, மிருசுவில் பகுதியில், எட்டு தமிழர்களை கொன்று, ஆச்சரியப்பட வைக்கும் வகையில் நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டு மரணதண்டனை பெற்று சிறையில் இருந்த, இரட்நாயக்கா ஜனாதிபதி மன்னிப்புடன் விடுதலையானார்.

அடுத்து கிரிசாந்தி கொலையாளி வருவாரா?

http://www.dailymirror.lk/breaking_news/Former-staff-sergeant-Sunil-Ratnayake-released-on-presidential-pardon/108-185661

உந்த கொரோனா எடுபுடிகள் நடந்து கொண்டிருக்கேக்கை எல்லாரும் வருவினம் போவினம்.

Link to comment
Share on other sites

32 minutes ago, ampanai said:

இலங்கையில் இவ்வாறான குற்றங்கள் தண்டிக்கப்பட மாட்டா என்பதை இது உறுதி செய்கிறது என்றும் அவர் சாடியுள்ளார்.

இதை உறுதி செய்து பல காலாண்டுகள் ஆகி விட்டன பேச்சாளரே.

உங்களிடம் இதற்கு பதில் வேறு ஒன்றும் இல்லை என்றால், வேறு யாருக்காவது இந்த பதவியை விட்டு செல்லவும்.   

Link to comment
Share on other sites

3 hours ago, nunavilan said:

மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சும்மா விடுதலை செய்தா மட்டும் போதுமே? ஜனாதிபதி எப்ப தன்ர பதவியை அந்த கொலைகார சிங்கள-பௌத்த சிப்பாய்க்கு குடுத்து கௌரவிக்க போறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியே ஒரு மரணதண்டனை குற்றவாளி. இவர்களை சட்டம் தண்டிக்காது. ஆனால் தர்மம் தூங்காது. இவர்கள் தங்கள் வழியில் போனால், அது தன் வழியில் தொடரும். கொரோனா முடிவடையும்போது பலரின் கேள்விக்கு விடை கிடைக்கலாம். 

Link to comment
Share on other sites

நோய் அபாயத்தை பயன்படுத்தி கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வதா ? மன்னிப்பு சபை சாடல்

இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கு பதிலளிக்கும் கடப்பாடு மிகவும் குறைவானதாக காணப்படும் நிலையில் மிருசுவில் படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜன்ட் ரத்நாயக்காவை விடுதலை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தன்னிச்சையான தீர்மானம் மிகவும் கவலை அளிக்கும் செய்தியை தெரிவித்துள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

பயங்கரமான குற்றங்களை இழைத்த படைவீரர்கள், நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டாலும் மன்னி;ப்பளித்து விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கவலை தரும் செய்தியை இந்த விடுதலை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வேளையில் வழங்கிய இந்த விடயத்துடன் தொடர்புடைய ஏனைய வாக்குறுதிகள் குறித்தும் சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.

பாரிய நோய் தொற்று அபாயத்தை பயன்படுத்;தி பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது கண்டிக்கதக்க விடயம் எனவும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதிக்கான உரிமைகள் உள்ளன,நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யவேண்டிய கடப்பாடு இலங்கைக்குள்ளது எனவும் தெரிவித்துள்ள அவர் பல வருடங்களிற்கு பின்னர், மிருசுவில் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் 2015 இல் நீதியை அனுபவித்துள்ளனர், ஜனாதிபதியின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் நீதி தலைகீழாக மாற்றப்படுவது வெறுக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/78716

Link to comment
Share on other sites

2 hours ago, satan said:

ஜனாதிபதியே ஒரு மரணதண்டனை குற்றவாளி. இவர்களை சட்டம் தண்டிக்காது. ஆனால் தர்மம் தூங்காது. இவர்கள் தங்கள் வழியில் போனால், அது தன் வழியில் தொடரும். கொரோனா முடிவடையும்போது பலரின் கேள்விக்கு விடை கிடைக்கலாம். 

ம்ம்ம்.
கொலைகாரர்கள் தங்களை தாங்களே நியாயப்படுத்தி கொண்டிருக்கீனம்!
இந்த கொலைகார வைரஸ் பிரச்சனைகளுக்கு மருந்து கண்டுபிக்கோணும்!

Link to comment
Share on other sites

8 தமிழர்களை கொன்றவருக்கு பொதுமன்னிப்பு – ஜனாதிபதியின் முடிவுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்!

In இலங்கை     March 27, 2020 3:58 am GMT     0 Comments     1035     by : Jeyachandran Vithushan

யாழ்ப்பாணம் மிருசுவிலில் 08 தமிர்களை கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றையதினம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.

2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 வயது குழந்தை இரு இளைஞர்கள் உட்பட 8 பேர் படுகொலை செய்த மரண தண்டனை கைதியான இராணுவ அதிகாரியை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

“இதுபோன்ற நேரத்தில் கைதிகளின் பிரச்சினையை கையாள்வது என்ற போர்வையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சந்தர்ப்பவாத நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம். உண்மையில் குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டனை பெற்ற ஒரு வழக்கு இது. மற்றவர்கள் மீது கூட வழக்குத் தொடரப்படவில்லை அல்லது விடுவிக்கப்பட்டனர்.” என கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன், “மரண தண்டனை விதித்திக்கப்பட்ட இவ்வாறான அரிதான வழக்குகளில் இருந்து ஒருவரை விடுதலை செய்வதானது இந்த அரசாங்கம் போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு ஒருபோதும் பொறுப்புக்கூறாது என்பதை உறுதிப்படுத்துகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

2015 யூன் 25 அன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், சார்ஜண்ட் சுனில் ரத்னாயக்கவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய நான்கு சிப்பாய்களும் போதிய ஆதாரமில்லையென்பதால் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/8-தமிர்களை-கொன்றவருக்கு-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

92-BEC177-08-AF-4-DA5-8-B2-A-10985306253

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை": வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்..!

நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர்கள் இலங்கையிலிருந்து பொறுப்புணர்வையும் நீதியையும் நம்பக்கூடாது. நாட்டின் உள்நாட்டுப் போரின்போது எட்டு பொதுமக்களைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு சிப்பாயை இலங்கை ஜனாதிபதி வியாழக்கிழமை விடுவித்துள்ளார். 

91401492_865182093909352_851438910656059
இந்நிலையில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக பிரிந்து போவது தான் ஒரே தீர்வு.  தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றியதன் விளைவு தான் இது. 
கொன்றவனையே நீதிபதி ஆக்கும் உள்ளக விசாரணை வேண்டாம். கோழிகளுக்கு ஓநாய் பாதுகாவலன் என்று நம்பத் தமிழ் மக்கள் இனியும் தயாரில்லை. தமிழ் இனப் படுகொலையாளிகளிடம் இருந்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கேட்க ஐ.நாவிடம் சர்வசன வாக்கெடுப்பை கோரவேண்டும். 
சிறிலங்காவின் நீதித்துறை சுயாதீனமாக இயங்கவில்லை. அதற்குள் ஆட்சியாளர்களினதும், இராணுவத்தினரதும் தலையீடுகள் உண்டு. நாடு இராணுவத் தனத்தை நோக்கிப் போகிறது. தமிழ் மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஒற்றையாட்சிக்குள் சேர்ந்து வாழ முடியாது என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்   
 

https://www.virakesari.lk/article/78739

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கொரோனா பயத்திலருக்க சிங்களவன் விக்கிபீடியா இணையத்ததில் புகுந்து விளையாடுகிறான்

( எப்படி படங்களை ( scree shots) இணைப்பது)

26/03/2020 Wikipedia வில் யாரோ மிரிசுவிலிலில் கொலைசெய்யப்பட்டது terrorist என்று மாற்றிவிட்டார்கள் ( I have the screen shots but I can’t attach here for some reason) 

Link to comment
Share on other sites

இலங்கைக்குள் இனிமேல் நீதியை எதிர்பார்ப்பதில் பயனில்லை : அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சிந்திக்க வேண்டும் - சிவாஜிலிங்கம்

இலங்கைக்குள் இனிமேல் நீதியை எதிர்பார்ப்பதில் பயனில்லை என்பதையே ஜனாதிபதியின் செயற்பாடு காட்டிநிற்கிறது. அவ்வாறு இல்லை என்பதை ஜனாதிபதி நிரூபிக்கவேண்டும் என்றால் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கட்டம்கட்டமாக பொதுமன்னிப்பில் விடிவிக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டுபேரை படுகொலை செய்த பிரதான குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது இந்த குற்றவாளிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்துள்ளார்.

இதேபோல் திருகோணமலையில் குமாரபுரத்தில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதிமறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி திருகோணமலையில் இடம்பெற்ற வழக்கை அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றி நீதி மறுக்கப்பட்டது. அத்தகைய கொலைகளை செய்தவர்களை ஜனாதிபதியும் இலங்கை அரசும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்துவருகின்றது.

இத்தகைய சம்பவங்களை செய்துவரும் ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் தமிழ் மக்களை படுகொலை செய்தது சரி என்பதை நிலைநாட்டி வருகிறமையால் இலங்கைக்குள் இனிமேல் நீதியை எதிர் பார்ப்பது பயனில்லை என்பது எங்களுக்கு நூறு வீதம் புரியவைத்துள்ளார்கள், தமிழ் மக்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த சூழ்நிலையின் பின்ணணியில் தான் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை செய்யவேண்டும். இவ்வாறு செய்வது குறிப்பாக ஜனாதிபதி சிங்கள பௌத்த பேரினவாத ஜனாதிபதியில்லை என்பதை நிரூபிப்பாராக இருந்தால் ஆகக் குறைந்தது 15 வருடங்களுக்கு மேலே தண்டனை வளங்கப்பட்டவர்கள் அல்லது தடுத்து வைக்கப்பட்டவர்களை முதல்கட்டமாகவும், பத்து வருடங்களுக்கு மேலே சிறைச்சாலையில் இருப்பவர்களை இரண்டாவது கட்டமாகவும், ஏனையவர்களை முன்றாவது கட்டமாகவும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும். அவ்வாறு செய்யாது விடின் நாங்கள் இலங்கை என்ற ஒர் ஆட்சி அதிகாரத்திற்கு கிழே நாட்டிற்கு கீழே ஒரு அரசியல் தீர்வையோ அல்லது வேறு ஏதையும் எதிர்பார்ப்பது முட்டாள் தனம் இவ்வாறான நிலை தொடருமானால் இந்த நாடு பிளவுபடுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதைத்தான் இத்தகைய செயற்பாடு எடுத்துகாட்டுகின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/78733

Link to comment
Share on other sites

எண்மரைப் படுகொலை செய்த மரணதண்டனைக் கைதிக்கு பொதுமன்னிப்பு : இதுதான் இலங்கையின் இன்றைய நிலை என்கிறார் மங்கள

உலகின் ஏனைய நாடுகள் குற்றமிழைத்த இராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கி இராணுவத்தினரின் நன்மதிப்பைப் பாதுகாக்கும். ஆனால் இலங்கையில் எண்மரைப் படுகொலை செய்த மரணதண்டனைக் கைதிக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது. இதுவே இலங்கையின் நிலை என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியிருக்கிறார்.

யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

இதுகுறித்து மங்கள சமரவீர அவரது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்:

'உலகின் ஏனைய நாடுகள் இராணுவத்திற்கு அவமதிப்பையும், இழிவையும் ஏற்படுத்திய குற்றவாளிகளைத் தண்டிப்பதன் ஊடாக தமது இராணுவத்தினரின் நன்மதிப்பைப் பாதுகாக்கின்றன. ஆனால் இப்போது ஒரு சிறுவனையும் இன்னும் எழுவரையும் படுகொலை செய்தமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது'.

https://www.virakesari.lk/article/78738

Link to comment
Share on other sites

சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பில் அம்பிகா சற்குணநாதன் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு கடிதம்

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு இன்றியைமையாததாகச் சிறைக் கைதிகளை விடுதலை செய்வதைப் பற்றியும் சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பது பற்றியும் கலந்துரையாடுவதற்குக் குழு ஒன்றினை நியமிப்பது பற்றிய அறிவித்தலை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் செல்வி அம்பிகா சற்குணநாதன், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய , நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா , சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தென்னகோன் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் காலிங்க இந்ததிஸ்ஸ ஆகியோருக்கும் இக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

போதிய தனிநபர் துப்பரவு வசதிகளும் சுகாதார வசதிகளும் இன்றி அளவுக்கதிகமான கைதிகளுடன் சிறைச்சாலைகள் நெரிசல்மிக்கவையாகக் காணப்படுகின்ற காரணத்தினால் கொவிட் 19 இனால் தொற்றுக்குள்ளாகும் அதிக சாத்தியப்பாட்டினை கைதிகள் கொண்டுள்ளனர். இவ்வாறான நெரிசல்மிக்க சிறைச்சாலைகளில் நபர்களுக்கிடையில் போதிய அளவு தூரத்தினைப் பேணுவதும் சவர்க்காரமும் தண்ணீரும் கைதிகளுக்குத் தாராளமாகக் கிடைக்காத காரணத்தினால் கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கழுவுவது உள்ளிட்ட பொதுவான தடுப்பு நடவடிக்கைகளைக் கைதிகளினால் நிறைவேற்ற முடியாமல் உள்ளது.

மேலும் சிறைச்சாலைக்குப் பணியாளர்கள் வருவதும் போவதுமாக இருக்கின்ற காரணத்தினால் சிறைச்சாலையினை மூடிவிடுவதும் சாத்தியமற்றதாகும். கொவிட் 19 தொற்று ஏற்படுவது பற்றிச் சிறைக்கைதிகள் மத்தியிலும் பணியாளர்கள் மத்தியிலும் காணப்படும் அச்சத்தினை விலக்குவதற்கு சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதும் ஏனைய நடவடிக்கைகளும் முக்கியமானவையாகும். இவ்வாறான அச்சங்கள் பல சிறைச்சாலைகளில் அமைதியின்மை ஏற்படுவதற்குக் காரணமாகியுள்ளதுடன் அநுராதபுரச் சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டினால் மரணங்கள் ஏற்படுவதற்கும் கைதிகளுக்குக் காயங்கள் ஏற்படுவதற்கும் காரணமாகியுள்ளது.

மேலும் இந்தியா, கொலம்பியா மற்றும் இத்தாலி போன்ற ஏனைய நாடுகளிலும் கொவிட் 19 காரணமாக அமைதியின்மையும் மரணங்களும் சம்பவித்துள்ளன. சிறைச்சாலைகள் தொற்றுப் பெருகும் இடங்களாக மட்டுமன்றி அமைதியின்மையும் வன்முறையும் பரவக்கூடிய இடங்களாகவும் மாறும் சாத்தியத்தினையே இது குறிக்கின்றது.

இலங்கையின் கைதிகளில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் விளக்கமறியற் கைதிகள் என்பது எமக்குத் தெரியும். மேலும் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளில் மிகப் பெரும்பான்மையானோர் தமது அபராத தொகையினைச் செலுத்தத் தவறியவர்;களாகவே உள்ளனர். சிறிய குற்றங்கள் மற்றும் பிணை வழங்கப்படக்கூடிய குற்றங்களுக்குப் பிணை வழங்க மறுப்பதும் பிணை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யத் தவறுகின்றமையும் வழக்கு விசாரணை தொடங்குவதற்கும் முடிவதற்கும் நீண்ட காலம் காத்திருப்பதுமே சிறைச்சாலைகள் நெரிசல் மிக்கவையாக மாறுவதற்கான காரணங்களாகும்.

'வீட்டு விடுப்பு' மற்றும் 'உரிமத் திட்டம்' போன்ற தற்போதுள்ள திட்டங்கள் நன்கு பயனளித்துள்ளதெனச் சிறைச்சாலைத் திணைக்களப் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே இவற்றினை அமுல்படுத்துவதில் காணப்படும் அரசநிர்வாகத் தாமதங்கள் தீர்க்கப்படவேண்டும்.

கொவிட் 19 தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதற்காகச் சிறைக்கைதிகளை விடுவிக்குமாறும் இது தொடர்பிலான குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் அரசியலமைப்பின் அடிப்படையிலும் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் அடிப்படையிலும் எடுக்கப்படலாம் என்றும் ஜனாதிபதியிடமும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடமும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடமும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு மார்ச் 16 ஆம் திகதி வேண்டுகோள் விடுத்தது.

இது உங்களின் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என நாம் எதிர்பார்ப்பதுடன் மார்ச் 26 ஆம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள கூட்டத்திற்கு முன்னர், சிறைக்கைதிகளின் விடுவிப்பிற்கான பூரணமான தெரிவடிப்படையினை உருவாக்குவதற்காக நாம் சில மேலதிக ஆலோசனைகளையும் பகிர விரும்புகின்றோம்.

குறிப்பாகக் கடுமையான நோய்களினால் அல்லது மரணத்தினை ஏற்படுத்தும் முற்றிய நோயினால் வருந்துபவர்களின் பாதிப்புறுநிலையினையும் முதியவர்களின் பாதிப்புறுநிலையினையும் தமது தாய்மார்களுடன் சிறைச்சாலையில் வாழும் பிள்ளைகளின் பாதிப்புறுநிலையினையும் உங்களின் கூட்டத்தில் பரிசீலிக்குமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதற்கும் கொவிட் 19 தொற்றினைத் தடுப்பதற்கும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வகையில் பிணை வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகளைப் பரிசீலித்து அமுல்படுத்துமாறு நாம் கௌரவ நீதி அமைச்சரின் தலைமையிலான நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

குற்றச்செயல்களின் தீவிரம் மற்றும் தன்மை ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டு, தற்போதுள்ள நடவடிக்கைகளுடன் விசேட நீதிமன்ற விசாரணைகள், நிர்வாக மீளாய்வுகள் மற்றும் பொருத்தமானபோது ஜனாதிபதியின் மன்னிப்பு போன்ற விசேட அவசர நடவடிக்கைகள் இணைந்த பரிபூரணமான அணுகுமுறைக்கான வேண்டுகோளை நாம் விடுக்கின்றோம்.

இச்செயல்விதிகளை அமுல்படுத்துகையில்,

வெளிப்படைத்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காக, விடுவிக்கப்படவுள்ள சிறைக்கைதிகளைத் தெரிவுசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் தெரிவடிப்படையினையும் அவ்வாறு விடுவிக்கப்படவுள்ள ஒவ்வொரு வகையிலுமான சிறைக்கைதிகளின் எண்ணிக்கையினையும் பகிரங்கப்படுத்துமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

https://www.virakesari.lk/article/78743

Link to comment
Share on other sites

விடுதலை செய்யப்பட்ட மிருசுவில் படுகொலையாளிக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி முறைப்பாடு

மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனம் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சாஜன்ட் சுனில் ரத்னாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவருக்கு பொதுமன்னிப்பு அளித்தநிலையில் அவர் தற்போது சிறையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட மிருசுவில் படுகொலையாளி இராணுவ அதிகாரிக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி முறைப்பாடு செய்யவுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/139971

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதே இல்லை. எனவே, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் மிருசுவில் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட  முன்னாள் இராணுவவீரரை மரணதண்டனை கைதி என்று அழைப்பதே பொறுத்தம் அற்றது.

கிருஷாந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் மரணதண்டனை ஒருபோதும் வழங்கப்படாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவர் கொலை குற்றவாளி என்பதை விட ஒரு சிங்கள இராணுவவீரர் எனும் பார்வையில் நோக்கப்பட்டு சிங்கள மக்களின் அனுதாபத்தையும் மரணதண்டனையை கொடுக்கும் ஆட்சியாளர் சிங்கள மக்களின் சீற்றத்துக்கும் ஆளாவார்கள். சிங்கள மக்களின் வாக்குகள் மூலம் ஆட்சியை பிடிக்கும் எந்த ஒரு அரசும் இந்த விஷப்பரீட்சையில் ஈடுபடாது. வெளி அழுத்தங்கள் காரணமாக ஒரு சமயம் மரணதண்டனை வழங்கப்பட்டாலும் அதற்கு பிராயச்சித்தம் செய்யும்வகையில் தமிழ்கைதிகளுக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்படும்.

ஜனாதிபதி கோத்தபாய நன்றாகவே தனது வியூகங்களை நெறிப்படுத்துகின்றார். மனித உரிமை ஆணைக்குழுக்கள், ஆர்வலர்கள் அறிக்கைகள் விட்டுக்கொண்டே போவார்கள். இது ஒன்று புதிது இல்லை. ஆனால், ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஏதும் நடக்கப்போவது இல்லை. தமிழ் அரசியல்வாதிகள் தமது இருப்புக்களை வெளிப்படுத்துவதற்காக இடையிடையே குரலை உயர்த்தி காட்டுவார்கள். இவ்வாறே எதிர்க்கட்சியின் குரல்களும். பதிலுக்கு ஜனாதிபதி கோத்தபாயா இராணுவத்தின் நம்பிக்கையையும் சிங்கள மக்களின் வாக்குவங்கியில் மேலதிக வாக்குகளையும் பெறுவார். பின்விளைவுகள் இலாபம், நட்டம் முன்கூட்டியே நன்றாக கணக்கு பார்க்கப்பட்டபின்பே இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

புத்திசாலித்தனமான தமிழ் அரசியல்வாதிகள் செய்யக்கூடியது ஜனாதிபதி கோத்தபாயாவிற்கு அட்டாங்க நமஸ்காரம் செய்து தமது பகுதி மக்களுக்கு தேவையான வசதிகள், தொழில்வாய்ப்புக்கள், சலுகைகளை பெற்றுக்கொடுத்து அவர்களையும், பிரதேசத்தையும் பலப்படுத்துவதும் வளப்படுத்துமே ஆகும். மாறாக வெளிநாடுகளில் வாழும் தேசவிசுவாசிகளை குசிப்படுத்தும் வகையில் செயற்பட்டால் மக்கள் தெருவில் பிச்சை எடுக்கும் நிலைதான் ஏற்படும்.

இந்தியா போய், நோர்வே போய், அமெரிக்கா போய் யூ.என் னும் போய், சர்வதேச நீதிமன்ற கற்பனைகளும் கடந்து இப்போது கடைசியில் கொரோனா வைரஸ் இலங்கையில் தர்மத்தை நிலைநாட்டும் என்று எதிர்பார்ப்பது எமது இயலாமையின் உச்சம்.

Link to comment
Share on other sites

மகிந்த அண்ட் கோவில், கோத்தா சற்று வித்தியாசமானவர் என்பது அவர் தெரிவானபொது தெளிவானது. ஆனால், எவ்வளவு தூரம் போவார் என்பது விவாதப்பொருளாக இருந்தது.   

சவேந்திர சில்வாவின் நியமனத்தை அடுத்து அவர் தொடர்ந்தும் தனது பாதையில் பயணிப்பது சவால்களை எதிர்கொள்ள அவர் தயாராக இருக்கின்றார் இல்லை ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது என நம்புகிறார். 

பார்க்கலாம்.  

#1 Justice reversed for victims of the Mirusuvil massacre, Sri Lanka

Responding to President Gotabaya Rajapaksa’s decision to release Sergeant Sunil Rathnayaka, Amnesty International’s Regional Director for South Asia, Biraj Patnaik, said: 

Where accountability is so rare for serious human rights violations in Sri Lanka, the government’s arbitrary decision to release Sergeant Rathnayaka sends an extremely worrying message. 

“Where accountability is so rare for serious human rights violations in Sri Lanka, the government’s arbitrary decision to release Sergeant Rathnayaka sends an extremely worrying message. It means that military perpetrators of horrific crimes, even if convicted through a court of law, will be pardoned and released.”
The pardon comes at a time when there are public calls to ease prison crowding by releasing prisoners held for, amongst others, petty crimes and those who are unable to meet bail conditions, to avoid the spread of COVID-19.
Amnesty International is also concerned by any further decisions along the same lines as pledged by President Gotabaya Rajapaksa during his election campaign. Sri Lanka is a party to the International Covenant on Civil Political Rights (ICCPR) and has an obligation to ensure that any person whose rights or freedoms have been violated have an effective remedy (Article 2).
“Using the pandemic as an opportunity to release those convicted for heinous crimes is reprehensible. Victims have a right to justice, and Sri Lanka has an obligation to ensure that justice is done. After many long years, the victims of the Mirusuvil massacre from 2000 finally got a semblance of justice in 2015. It is despicable to have that justice reversed through an arbitrary Executive decision,” said Biraj Patnaik.

https://www.amnesty.org/en/latest/news/2020/03/justice-reversed-for-victims-of-the-mirusuvil-massacre-from-sri-lanka/

#2: UN ’troubled’ by release of SL soldier on presidential pardon

Press briefing note on Sri Lanka 
 

Spokesperson for the UN High Commissioner for Human Rights:  Rupert Colville

Location: Geneva 

Date: 27 March 2020

Subject:  Sri Lanka

We are troubled by reports that the convicted perpetrator of the Mirusuvil massacre, in Sri Lanka, has received a Presidential Pardon and was released from jail this week. 

Former Army sergeant Sunil Ratnayake was sentenced in 2015 for the murder in 2000 of eight civilians, including a five-year-old child, after more than a decade long trial. Five defendants were brought to trial but only Sgt Ratnayake was convicted. The conviction was confirmed by the Supreme Court of Sri Lanka in May 2019.

This was one of the rare human rights cases from the decades long conflict that had ever reached conviction.

The Presidential pardon is an affront to victims and yet another example of the failure of Sri Lanka to fulfil its international human rights obligations to provide meaningful accountability for war crimes, crimes against humanity and other gross violations of human rights. Victims of such violations and crimes have the right to a remedy. This includes equal and effective access to justice and reparation, and that perpetrators serve a punishment that is proportionate to the seriousness of their conduct.

Pardoning one of the sole convicted perpetrators of atrocities committed during the Sri Lankan conflict further undermines the limited progress the country has made towards ending impunity for mass human rights abuse.

ENDS

https://www.ohchr.org/EN/NewsEvents/Pages/DisplayNews.aspx?NewsID=25752&LangID=E

 

#3: Sri Lanka: Presidential pardon of former Army officer for killing of Tamil civilians is unacceptable

Sri Lankan President Gotabaya Rajapaksa pardoned Former Staff Sergeant Sunil Ratnayake who was convicted in 2015 for the murder of eight Tamil civilians, including three children, in Mirusuvil in April 2000. The conviction and death sentence was affirmed by the Supreme Court of Sri Lanka in 2019.

The ICJ said that the pardon cast serious doubt upon the Government’s commitment to accountability and the rule of law in Sri Lanka.

While the ICJ welcomes the lifting of the death sentence, the full pardon and extinguishment of serious punishment constitutes a blow to the victims of these violations.

“The prosecution of Staff Sergeant Ratnayake for his involvement in the killing of civilians, including children, at Mirusuvil was a rare exception to the usual lack of accountability for human rights violations committed during the conflict,” said Frederick Rawski, ICJ’s Regional Director for Asia and the Pacific. “Such a pardon is incompatible with international standards relating to impunity and access to justice, and reinforces the well-founded public perception that the military is exempt from any form of accountability, even for the most heinous crimes”.

https://www.icj.org/sri-lanka-presidential-pardon-of-former-army-officer-for-killing-of-tamil-civilians-is-unacceptable/

Link to comment
Share on other sites

பொது மக்களை படுகொலை செய்தவர்களை ஜனாதிபதி விடுதலை செய்ய முடியும் என்றால் நீதிமன்றத்தை மூடுங்கள்!

பொது மக்களை படுகொலை செய்தவர்களை ஜனாதிபதி விடுதலை செய்ய முடியும் என்றால் நீதிமன்றத்தை மூடுங்கள் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.

கடந்த யுத்தகாலத்தில் யாழ் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த சுனில் ரத்னாயக்க என்னும் இரணுவ சிப்பாயை பொது மன்னிப்பு அடிப்படையில் ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே வைத்திய கராநிதி சிவமோகன் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் ஊடகங்களில் வந்த செய்தியில் மிருசுவில் படுகொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொது மக்களை படுகொலை செய்தவர்கள் இராணுவத்தினராக இருந்தாலும் கொலையாளி கொலையாளியே. இராணுவம் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு பொது மன்னிப்பு வழங்குவதாக இருந்தால் தமிழர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு நிற்பது கட்டாயப்படுத்தல்கள் மூலமும், சித்திரவதைகள் மூலமும் ஒப்புதல் வாக்கு மூலங்களைப் பெற்று நீதி மன்றம் ஊடாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக்கப்பட்ட தமிழ் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் இந்த பேரினவாத அரசுகள் என்றும் கரிசனை கொண்டதில்லை.

ஆனால் ஒரு அநீதியை செய்து நேரடியாக குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட இராணுவ சிப்பாயை ஜனாதிபதி விடுவித்துள்ளார். இதை எவ்வாறு ஒரே தேசம் ஒரே மக்கள் என்ற கொள்கையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக இருந்தால் அவர்களை விடுவிப்பதற்கு முன்னர் தீர்ப்பு வழங்கிய நீதித்துறை சட்டத்துறை மற்றும் விசாரணை செய்தவர்களின் சிபாரிசுகள் பெறப்பட வேண்டும் அவை பெறப்பட்டனவா என்னும் விபரங்களும் இதுவரை வெளிவரவில்லை.

எனவே கொரோனா அனர்த்த காலத்தை சாட்டாக வைத்து தமிழர்களுக்கு எதிரான அநீதிகள் இழைக்கப்படுமாக இருந்தால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது இந்த செயற்பாட்டினை வன்மையா கண்டிப்பதாக வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்தார்.

https://www.sudarseithy.com/?p=50356

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ampanai said:

ஆனால் இப்போது ஒரு சிறுவனையும் இன்னும் எழுவரையும் படுகொலை செய்தமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது'.

நாட்டுக்காக போராடிய வீரர்களை காட்டிக்கொடுத்து நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டார் மங்கள. என்று தேர்தல்  பிரச்சாரம் செய்ய உதவும். 

 

On 3/27/2020 at 12:36 PM, ampanai said:

இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தன்னிச்சையான தீர்மானம் மிகவும் கவலை அளிக்கும் செய்தியை தெரிவித்துள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

உங்களால் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அவர்களின் பாசாங்குக்கு பாராட்டு தெரிவிக்கவும், அடாவடிக்கு கவலை தெரிவிக்கவுந்தான் முடியுமே தவிர, கட்டுப்படுத்த முடியாது. போருக்கு உதவியும் ஆலோசனைகளும் வழங்கி ஊக்குவிக்க முதல் கட்டுப்படுத்த தவறியவர்களின் கையாலாகாத்தனம் அப்பப்போ கூடி ஊளையிட்டுவிட்டு மூடிக்கொள்ள வேண்டியதுதான். "அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்."

Link to comment
Share on other sites

On 3/27/2020 at 12:18 PM, Kavi arunasalam said:

92-BEC177-08-AF-4-DA5-8-B2-A-10985306253

அருமையான வெளிப்பாடு!

Link to comment
Share on other sites

தமிழினப் படுகொலைகாரர்களை விடுவிக்கும் கோத்தா கொலைகாரரக் கோஷ்டிகளின் தலமைப் பீடையதிபதிகளை சந்திக்க கண்டி சென்றுள்ளாராம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.