• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

வடக்கில் அத்தியவசியப் பொருட்கள் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிப்பு!

Recommended Posts

வடக்கில் அத்தியவசியப் பொருட்கள் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிப்பு!

 

 

 

     by : Litharsan

வடக்கு மாகாணத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் அங்குள்ள வர்த்தக நிலையங்களுக்கு அத்தியவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் காலை 6 மணி தொடக்கம் மதியம் 2 மணி வரை தளர்த்தப்படவுள்ளது.

இந்நிலையில், மக்களுக்கான அத்தியவசியப் பொருட்கள் இன்றைய தினம் மொத்த வியாபாரிகளுக்கும் அதேநேரத்தில் கிராம மட்டத்தில் இயங்கும் சிறிய வியாபாரிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் ஊடாக வழங்கப்பட்டுள்ள விசேட பாஸ் அனுமதியுள்ள விநியோகத்தர்கள் மூலம் மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலகங்களையும் சேர்ந்த மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு அத்தியவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் நாளைய தினம் சன நெரிசலைக் குறைப்பதற்காகவும் நபர்களுக்கிடையிலான இடைவெளியை நடைமுறைப்படுத்தும் வகையில் முப்படையினரால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மீனவர்கள், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற அரச அறிவிப்புக்கு அமைவாக மீனவர்கள் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளனர். அதேநேரத்தில் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தினால் பொலிஸாரின் உதவியுடன் செயற்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் வைத்தியசாலை மற்றும் மருந்தகங்களில் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

மரக்கறி, மீன், அத்தியவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் பொருட்கள் அதிகூடிய விலைக்கு விற்காத வகையில் நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என நுகர்வோர் உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

http://athavannews.com/வடக்கில்-அத்தியவசியப்-பொ/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this