• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுகிறதா? உண்மை என்ன?

Recommended Posts

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த வைரஸ் பரவல் எவ்வாறு வலுப்பெற்றது, இதற்கான சிகிச்சை என்ன என்பது பற்றி எதுவும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த வைரஸ் தொடர்பான அதிகபட்ச அளவிலான தகவல்களை சேகரிக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் பல தகவல்கள் பரவி வருகின்றன. இவற்றில் சில போலியானவை அல்லது உறுதிப்படுத்தப்படாதவை.

சமூக ஊடகங்கள் மற்றும் செயலிகளின் வாயிலாக கொரோனா குறித்த தகவல்கள் வேகமாக வெளியாகின்றன. இதில் ஒரு செய்தி மிகவும் பரவலாகப் பகிரப்படுகிறது.

"கொரோனா வைரஸ் காற்றில் பரவும் வைரஸ். இது எட்டு மணி நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடியது. எல்லோரும் எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். இது எஃகு மீது 2 மணிநேரமும், காகிதம் மற்றும் பிளாஸ்டிக்கில் 3-4 மணிநேரமும், காற்றில் 8 மணி நேரமும் உயிர்வாழ முடியும்," என்ற செய்தியே அது.

 

 

'காற்றுவழிப் பரவல்'

இந்த செய்தி வாட்ஸ்அப் மூலம் பிபிசிக்கு கிடைத்தது, இது பல குழுக்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தியுடன் சி.என்.பி.சி செய்திக்கான இணைப்பும் பகிரப்பட்டுள்ளது.

காற்று வழியாகப் பரவும் வைரஸ் கொரோனா என அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முயற்சித்தோம்.

முதலாவதாக, சி.என்.பி.சி யின் அந்தக் கட்டுரையைப் படித்தோம். அதில் கோவிட் -19 ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மார்ச் 16 அன்று வெளியிடப்பட்ட இந்த கட்டுரையில், "கொரோனா வைரஸ் மருத்துவப் பணியாளர்களுக்கு 'காற்று வழியாக பரவுமா' என்பதை உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆராய்ந்து வருகிறது. "

"ஒரு குறிப்பிட்ட பரப்பு அதற்கு ஏற்றாற்போல் இருந்தால், கொரோனா வைரஸ் காற்றில் உயிர்வாழ முடியும் என்று ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருப்பதை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், மார்ச் 17ஆம் தேதியன்று, அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.எச்) ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், கொரோனா வைரஸ் மூன்று முதல் நான்கு மணி நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

 

சுகாதார வசதிகள்

இந்த கூற்றை நாங்கள் மேலும் ஆராய்ந்தபோது, பிப்ரவரி 11 அன்று நடந்த உலக சுகாதார நிறுவனத்தின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான விஷயங்கள் கிடைத்தன.

அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதன் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கிப்ரியேசோஸ், "கொரோனாவும் இபோலாவும் ஒரே மாதிரியானவை அல்ல, கொரோனா என்பது காற்றின் மூலமாக பரவும் ஒரு வைரஸ். எனவே இது அதிகம் ஆபத்தானது, மிகக்குறுகிய காலத்திலேயே 24 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். "

மார்ச் 16ஆம் தேதியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் வளர்ந்து வரும் நோய்கள் துறையின் தலைவர் டாக்டர் மரியா கெர்கோவ், "கொரோனா வைரஸ் சிறிது நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது" என்று கூறினார். அதாவது இந்த வைரஸ்கள் இயல்பைவிட அதிக நேரம் காற்றில் உயிருடன் இருக்க முடியும்.

"மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சுகாதார வசதிகள் அதிக ஆபத்தில் உள்ளன. எனவே, அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், காற்று மூலம் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளை கவனமாக எடுக்க வேண்டும். ஆனால் சாதாரண மக்களுக்கு தொற்று இல்லை என்றால் மருத்துவ முகக்கவசங்களை எப்போதும் அணிய வேண்டியதில்லை. அதேபோல் பாதிக்கப்பட்ட நபருடன் வாழ்கிறீர்கள் என்றால் முகக்கவசத்தை பயன்படுத்தலாம்," என்றார் அவர்.

மார்ச் 23 அன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங், "இதுவரை காற்று மூலம் பரவியதால் கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. கோவிட் -19 காற்றில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சீன அதிகாரிகளிடமிருந்து தகவல்கள் வந்துள்ளன. அதிலும் குறிப்பாக மருத்துவமனைகளின் ஐ.சி.யு மற்றும் சி.சி.யுக்களில், இந்த ஆபத்து அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதைப் புரிந்து கொள்ள, கூடுதல் தரவுகள் தேவை," என்று தெரிவித்துள்ளார்.

"பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மலின்போது வெளியே வரும் நீர்த்துளிகளே, அத்துடன் தொடர்பு கொண்டவர்களுக்கு பரவக் காரணமாக இருந்தன. எனவே மற்றவர்களிடம் இருந்து சற்று தூரமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். அதோடு, கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்."

உண்மையில், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை ஊழியர்கள், இதுபோன்ற தூசுப்படலம் (Aersol) தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

தூசுப்படலத்தில் உள்ள நீர் துகள்கள் நீர்த்துளிகளைவிட லேசானவை. மேலும் அவை காற்றில் நீடித்து இருக்கக்கூடியவை.

இத்தகைய சூழ்நிலையில், கொரோனா வைரஸ், காற்று மூலம் நோயை தொற்றச் செய்யும் ஆபத்தான நீர் துகள்களை உருவாக்கும் என்பதும், இது சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது.

 

இதுவரை எதுவும் பதிவாகவில்லை

கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுவதற்கான வாய்ப்பை உலக சுகாதார நிறுவனம் நிராகரிக்கவில்லை என்று பிபிசி தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

ஆனால் இந்த ஆபத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டுமே என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

இந்த வைரஸ் எவ்வளவு காலம் காற்றில் இருக்க முடியும் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், காற்றில் எட்டு மணி நேரம் கொரொனா வைரஸ் வாழும் என்ற கூற்று முற்றிலும் தவறானது.

காற்றில் கொரோனா நோய்த்தொற்று பரவியதால் கோவிட்-19 நோய்க்கு ஒருவர் ஆளானதாக இதுவரை எதுவும் பதிவாகவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

 

 

 

https://www.bbc.com/tamil/india-52048762

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
50 minutes ago, ampanai said:

கொரோனா வைரஸ் காற்றில் பரவும் வைரஸ். இது எட்டு மணி நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடியது. எல்லோரும் எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். இது எஃகு மீது 2 மணிநேரமும், காகிதம் மற்றும் பிளாஸ்டிக்கில் 3-4 மணிநேரமும், காற்றில் 8 மணி நேரமும் உயிர்வாழ முடியும்," என்ற செய்தியே அது.

காற்றுமூலம் பரவுவது உண்மையானால் சுத்தம்  எல்லாரும் அழிய வேண்டியதுதான் 😟

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, குமாரசாமி said:

காற்றுமூலம் பரவுவது உண்மையானால் சுத்தம்  எல்லாரும் அழிய வேண்டியதுதான் 😟

இந்த வைரஸ் எவ்வளவு காலம் காற்றில் இருக்க முடியும் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், காற்றில் எட்டு மணி நேரம் கொரொனா வைரஸ் வாழும் என்ற கூற்று முற்றிலும் தவறானது.

காற்றில் கொரோனா நோய்த்தொற்று பரவியதால் கோவிட்-19 நோய்க்கு ஒருவர் ஆளானதாக இதுவரை எதுவும் பதிவாகவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

Share this post


Link to post
Share on other sites
Just now, ampanai said:

இந்த வைரஸ் எவ்வளவு காலம் காற்றில் இருக்க முடியும் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், காற்றில் எட்டு மணி நேரம் கொரொனா வைரஸ் வாழும் என்ற கூற்று முற்றிலும் தவறானது.

காற்றில் கொரோனா நோய்த்தொற்று பரவியதால் கோவிட்-19 நோய்க்கு ஒருவர் ஆளானதாக இதுவரை எதுவும் பதிவாகவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

சனத்தை பயப்பிடுத்தாமல் இருக்கிறதுக்கு முதல்லை மறுப்பு அறிக்கை வாறதெல்லாம் நோர்மல் தானே.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • புலம் பெயர்ந்த நாடுகளுக்கு 20 வயதை கடந்து வந்தவர்கள் அனைவருக்குமே சாதிபாகுபாடு என்பது மனதில் உறங்கி கொண்டே இருக்கிறது, ஆனால் அதை வெளிப்படையாக காட்டமுடியாததுக்கு இரண்டே காரணங்கள்தான். 1)  எந்த ஒரு மனிதனிலும் தங்கி எவரும் இல்லை, எவருக்கும் சலாம் போடவேண்டிய அவசியமில்லை, 2) அப்படி திமிர்காட்டி நேரடி ஒடுக்குமுறைகாட்டினால் சட்டம் எந்த பாகுபாடும் பார்க்காமல் குற்றவாளிகள் மீது மட்டுமே  நடவடிக்கை எடுக்கும். அங்கே தனிமனிதர்கள் தமது அந்தஸ்தை காண்பித்து சட்டத்தை வளைத்து தமக்கு சாதகமாய் ஆக்கமுடியாது. தாயகத்தில் சாதிய செல்வாக்கில் உள்ளவர்கள் தமது செல்வாக்கு அந்தஸ்தை பாவித்து காவல்துறையை தமது வீட்டுக்கே கூட்டி வந்து விருந்து வைப்பார்கள், அல்லது தனிப்பட்ட ரீதியில் கவனிப்பார்கள், அங்கே ஒடுக்கப்பட்ட ஏழைகள் பக்கம் இருக்கும் நீதி சபையேறாது. புலம்பெயர் தேசத்தில் அடுத்த தலைமுறையாக பிறந்தவர்களிடம் 50% சாதி உணர்வு இருக்கும் அது அவர்களாய் உணர்ந்ததல்ல பெற்றோர்களால் அறிவுறுத்தப்பட்ட வளர்ப்பு அது., அதுக்கடுத்த தலைமுறையில் 75% சாதி இல்லாமல் போகும் , அதுக்கடுத்த தலைமுறையில் சாதி மட்டுமல்ல தமிழும் இல்லாமல் போகும். அதுக்கு அடுத்த அடுத்த தலைமுறைகள் எப்படி தமது மூதாதையர்கள் வெளிநாடுகளுக்கு வந்தார்கள் என்ற வரலாற்றையே குத்து மதிப்பாகதான் அறிந்து வைத்திருப்பார்கள். ஒரு கட்டத்தில் புலம்பெயர் தேசங்களில் சாதி முற்றாகவே இல்லாமல் போகும். ஆனால் எத்தனை தலைமுறைகள் அல்ல நூற்றாண்டுகள் ஆனாலும் தாயகத்தில் சாதிவெறி என்பது இருந்தே ஆகும், இப்போது இருப்பதைவிட அது பல மடங்கு அதிகரித்தும் செல்லவும் வாய்ப்பு உண்டு. சாதி தவறு மனிதனை பிரித்து பார்க்ககூடாது, சாதியில் ஒன்றுமில்லை என்று குரல் எழுப்புகிறவர்களில் 90% வீதத்திற்கு அதிகமானோர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்பதே கசப்பான உண்மை. என்றைக்கு உயர் சாதியென்று தம்மை கருதிகொள்பவர்களில் 90% வீதம்பேர் சாதி தவறென்று  குரல் கொடுக்கிறார்களோ அன்றுதான் சாதிய ஒழிப்பு சாத்தியப்படும்.ஆனால் அதற்கான சாத்தியங்கள் ஒருபோதுமேயில்லை. பையன் இங்கே குறிப்பிட்ட  மீனவர் சாதி என்பது வெள்ளாளர்களுக்கு அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்கள்,அதனால் போனால் போவுதென்று சகித்து கொண்டிருப்பார்கள். இதுவே அதற்குகீழ் உள்ள மரமேறுபவர்கள்,மூட்டை சுமப்பவர்கள், முடி வெட்டுபவர்கள், சலவை தொழிலாளர் சமூகத்தை சேர்ந்தவர்களை காதலித்திருந்தால் கண்டிப்பா ஒரு பிரளயமே நடந்திருக்கும், ஆக குறைந்தது பிள்ளைகளுடனான உறவையாவது முறித்து கொண்டிருப்பார்கள்.   தாயகத்தை பொறுத்தவரை தாழ்த்தப்பட்டவர்கள் சாதிகளை ஒழிப்பினை ஒரு போதும் சந்திக்க முடியாவிடினும் தூர நின்றுகொண்டே ஒரு மறைமுக சமத்துவத்தை ஏற்படுத்த மூன்று விஷயங்கள்  மட்டுமே அவர்களுக்கு கை கொடுக்கும்  அவை: கல்வி பொருளாதாரம். கண்ணியமான பழக்க வழக்கங்கள்.  
    • மரவள்ளி கிழங்கு வடை பற்றி முன்பு அறியவில்லை. வீடியோ செய்முறை நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இன்னும் கொஞ்சம் Healthy ஆன வகையில் இதை செய்யலாமா? கோதுமை மாவுக்கு மாற்றீடாக வேறு எந்த மாவை பாவிக்கலாம்? பொரிப்பதற்கு பதிலாய் வெதுப்பி எடுக்கலாமே. 
    • இருக்கலாம் ஆனால் பெற்றோரின் விருப்புவெறுப்புக்களும் அவர்களின் கௌரவங்களும் அதில் முக்கிய இடம் வகிக்கும்.
    • லண்டன் "டவர் கில்ஸ்" மெட்ரோ நிலையத்தில் இறங்கி அருகே இருக்கும் சிறு பூங்காவில் (ஒரு ஆங்கிலேயரின் சிலையும் அங்கே இருந்தது) உட்கார்ந்து 'சாக்லேட் பாப்கார்ன்' கொரித்துக்கொண்டு, அப்படியே பொடிநடையாக சுரங்கப் பாதை மூலம் சாலையை கடந்தால் அங்கே ஒரு சிறிய அரண்மனை கோட்டை..! அருகேயிருந்த 'ஸ்டார் பக்ஸ்'ஸில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு, டவர் ப்ரிட்ஜ் பாலத்தை பார்க்க தேம்ஸ் நதியின் கரையோரம் நடந்தால், எதிர்புறம் 306 மீ உயர 'சார்ட்' கூம்பு வடிவ கட்டிடம்..😎 கடும் குளிரில் நடுங்கியபடி பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே நதிக்கரையோரம் டவர் பிரிட்ஜ் நோக்கி நடந்தேன்..! லண்டன் நகர மக்களின் ரசனை, லைஃப் ஸ்டைல், துபாய் நகரத்தைவிட வேறு விதமாக இருந்தது..🤩 கீழேயுள்ள காணொளியை இன்று பார்த்தபோது 8 மாதங்களுக்கு முன் சென்று வந்த லண்டன் காட்சிகள் மனக்கண்களில்..