• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Kavi arunasalam

ஆறு வாரங்களில் ஒரு கருவி

Recommended Posts

D93033-F9-9-B00-4-E97-BADB-987949-FAFD66
ஆறு வாரங்களாக தொடர் சோதனைகளை மேற்கொண்டு யேர்மன் Bosch நிறுவனம் ஒரு கருவியைக் கண்டு பிடித்திருக்கிறது.

அந்தக் கருவி கொரோனா வைரஸிற்கான சோதனை முடிவை உடனடியாகத் தரவல்லது.  கொரோனா வைரஸின் விரைவான பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இந்தக் கருவி அதி முக்கியமானது என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரையில் மனிதர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டு முடிவுகளுக்காக குறைந்தது ஒன்று முதல் இரண்டு நாட்கள்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் Bosch நிறுவனம் உருவாக்கிய கருவி இரண்டரை மணி நேரத்திற்குள் சோதனையின் முடிவை வழங்கவல்லது.

“இந்தக் கருவி ஆய்வுக்கூடத்தின் நேரத்தை மிச்சப் படுத்துகிறது. பாவனையாளர்களின் காத்திருப்பை இல்லாமல் செய்கிறது என்பது மட்டுமல்லாமல் மருத்துவர்களின் சுமைகளையும் வெகுவாகக் குறைக்கிறது என்பது  ஏற்றுக் கொள்ளப் படவேண்டியது.  ஆனாலும் இந்தக  கருவிகளை முதலில் அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும் அத்துடன்  பெரிய பரப்பளவில் அவை விநியோகிக்கப்படவும் வேண்டும்என்று யேர்மனிய மருத்துவ நிபுணரான Dr. Christoph தனது கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

உலக சுகாதார அமைப்பின் தரங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இந்தக் கருவி 95 வீதம் சரியான முடிவுகளை வழங்க வல்லது என Bosch நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவின் பொறுப்புக்கான நிர்வாக இயக்குனர் திரு Marc Meier அறிவித்திருக்கிறார்.

இந்தக் கருவிக்கான சட்டரீதியான ஒப்புதல் ஏப்ரல் மாதத்தில் கிடைக்கலாம் என எதிர்பார்ககப்படுகிறது.

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

என்னதான் கண்டுபிடிக்கிற கருவி வந்தாலும் இன்னும் மருந்து கண்டுபிடிக்காமல் இருக்கிறது ஒரு பெரிய குறைதானே...😁

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, குமாரசாமி said:

என்னதான் கண்டுபிடிக்கிற கருவி வந்தாலும் இன்னும் மருந்து கண்டுபிடிக்காமல் இருக்கிறது ஒரு பெரிய குறைதானே...

உண்மைதான்.

உடனடியாக மருந்து வந்தால் பயம் என்பது இல்லாமல் போய்விடும். எதிர்பபு சக்தி உங்களிடம் இருக்கும்வரை கொரோனா மட்டுமல்ல எந்தக் கொம்பனுக்கும்  நீங்கள் பயப்படத் தேவையில்லை. ஆனாலும் சுகாதார அமைச்சு சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

யேர்மனியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பலர் சிகிச்சையில் குணமாகி இருக்கிறார்கள் என்ற செய்திகளும் வருவது ஒரு நம்பிக்கையை தருகிறது.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Kavi arunasalam said:

எதிர்பபு சக்தி உங்களிடம் இருக்கும்வரை கொரோனா மட்டுமல்ல எந்தக் கொம்பனுக்கும்  நீங்கள் பயப்படத் தேவையில்லை.

கொரோனா இருக்கிறதா என்று ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே சோதனை செய்துகொள்ளக் கூடிய கருவிகள் விரைவில் யேர்மனியில் உருவாகிக் கிடைக்கும் என நம்பலாம். 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Kavi arunasalam said:

எதிர்பபு சக்தி உங்களிடம் இருக்கும்வரை கொரோனா மட்டுமல்ல எந்தக் கொம்பனுக்கும்  நீங்கள் பயப்படத் தேவையில்லை.

எனக்கு எதிர்ப்புச்சக்தி எக்கச்சக்கமாய் இருக்கோ எண்டு எங்கை போய் பாக்கிறது? வருத்தம் வந்து மண்டையை போடேக்கை தான் தெரியும் எனக்கு எதிர்ப்பு சக்தி துண்டற இல்லை எண்டு 😂

Share this post


Link to post
Share on other sites

அடடா.... என்ன ஒற்றுமை.
கவி அருணாசலம், எட்டு மணித்தியாலத்துக்கு முன்பு பதிந்த பதிவில்.....
ஜேர்மன் நாட்டில் வசிக்கும், ஒரிஜினல் தமிழர்களே.... 
கருத்து... எழுதி உள்ளார்கள். :grin:

இது.... பிரதேச வாதம்  என்று,  ஒரு கோஷ்டி.... வாந்தி எடுக்க வந்தால், நான் பொறுப்பல்ல.   🤣

Share this post


Link to post
Share on other sites

வீட்டுக்காரியிடம் அவங்க பிறந்த வீட்டைப்பற்றி லைட்டா  குறை சொல்லி பார்க்கிறது....உடனே உங்களுக்கு எதிர்ப்பு சக்தி இருக்கா என்பது தெரிந்து விடும்.....!  👍

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

வீட்டுக்காரியிடம் அவங்க பிறந்த வீட்டைப்பற்றி லைட்டா  குறை சொல்லி பார்க்கிறது....உடனே உங்களுக்கு எதிர்ப்பு சக்தி இருக்கா என்பது தெரிந்து விடும்.....!  👍

வாழ்க்கையிலை எத்தினை தரமெண்டு பரிசோதிக்கிறது???? 😁

upload-item

 

https://thumbs.gfycat.com/GoodnaturedMisguidedChimneyswift-mobile.mp4

Edited by குமாரசாமி

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, Kavi arunasalam said:

“இந்தக் கருவி ஆய்வுக்கூடத்தின் நேரத்தை மிச்சப் படுத்துகிறது. பாவனையாளர்களின் காத்திருப்பை இல்லாமல் செய்கிறது என்பது மட்டுமல்லாமல் மருத்துவர்களின் சுமைகளையும் வெகுவாகக் குறைக்கிறது என்பது  ஏற்றுக் கொள்ளப் படவேண்டியது.  ஆனாலும் இந்தக  கருவிகளை முதலில் அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும் அத்துடன்  பெரிய பரப்பளவில் அவை விநியோகிக்கப்படவும் வேண்டும்என்று யேர்மனிய மருத்துவ நிபுணரான Dr. Christoph தனது கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

யார் குத்தி என்றாலும் இந்த கருவி அரிசி போல தாராளமாக விரைவில் கிடைக்கவேண்டும் !

 

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, குமாரசாமி said:

வாழ்க்கையிலை எத்தினை தரமெண்டு பரிசோதிக்கிறது???? 😁

upload-item

 

https://thumbs.gfycat.com/GoodnaturedMisguidedChimneyswift-mobile.mp4

இந்த எதிர்ப்பும் ஆட்டமும் போதுமானது கும்ஸ். நோயும் வராது பேயும் கிட்டே வராது

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, Kavi arunasalam said:

இந்தக் கருவிக்கான சட்டரீதியான ஒப்புதல் ஏப்ரல் மாதத்தில் கிடைக்கலாம் என எதிர்பார்ககப்படுகிறது.

சீனாவில் இருந்து நிறைய சாமான்கள் வருகுது வெகுவிரைவில்.

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ஈழப்பிரியன் said:

சீனாவில் இருந்து நிறைய சாமான்கள் வருகுது வெகுவிரைவில்.

என்ன உங்கடை ஆள் ரம்பர் வந்த நாளிலையிருந்து சீனாவை திட்டிப்போட்டு இப்ப சீனாவின்ரை கால்லை விழுந்துட்டாராம். 😁

Share this post


Link to post
Share on other sites

புதிய கருவி கண்டுபிடிப்பு


லண்டன்: பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரசை கண்டுபிடிக்கும், 'ஸ்மார்ட் போன்' அளவிலான கருவியை உருவாக்கிஉள்ளனர். இதில், தொண்டை பகுதியில் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரியை வைத்தால், 50 நிமிடங்களில், கொரோனா குறித்த முடிவுகளை வழங்கும் என, கூறுகின்றனர். இந்த கருவியில், ஒரே நேரத்தில், 13 மாதிரிகளை பரிசோதனை செய்யலாம்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2509886

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ampanai said:

லண்டன்: பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரசை கண்டுபிடிக்கும், 'ஸ்மார்ட் போன்' அளவிலான கருவியை உருவாக்கிஉள்ளனர்.

நல்ல செய்தி

Share this post


Link to post
Share on other sites

Abbott receives approval for test that can detect coronavirus in 5 minutes

 • Abbott on Friday announced it received approval for a test that is capable of delivering positive results of the coronavirus in as little as five minutes.
 • The company will begin making those tests available to health care providers next week.
 • Abbott plans to ramp up manufacturing so it can deliver 50,000 tests per day.  

https://abbott.mediaroom.com/2020-03-27-Abbott-Launches-Molecular-Point-of-Care-Test-to-Detect-Novel-Coronavirus-in-as-Little-as-Five-Minutes

Abbott

Share this post


Link to post
Share on other sites

Informationen über Beatmung - Fachkrankenhaus für neurologische ...

Beatmungsgeräte: Kliniken kämpfen mit Lieferproblemen | tagesschau.de

ஜேர்மனியில்... செயற்கை சுவாசம் அளிக்கும்  கருவிகள், 25´000 மட்டுமே பாவனையில் உள்ளதால்,
அதனை வைத்து... பலருக்கும் சிகிச்சை,  கொடுப்பது வைத்தியசாலைகளுக்கு  சிரமமாக  உள்ளது.

இவ்வளவிற்கும்... இங்கு சில நிறுவனங்கள், இங்கு இதனை தயாரித்து ஏற்றுமதி செய்தாலும்,
தற்போதைய உடனடி தேவைக்கு... அதனை பெருமளவில், அரசுக்கும்,
உலக நாடுகளில் உள்ள தனது வாடிக்கையாளருக்கும்,  விநியோகிக்க முடியாமல் உள்ளது.
சில விண்ணப்பங்களுக்கு.... வருகின்ற ஜூன் மாதம் வரை, 
காத்திருக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள்.  

அவ்வளவு காலம் பொறுத்திருக்க முடியாது என்றமையால்...
இப்போ, ஐரோப்பாவின் சில நாடுகள்...  சீனாவிலிருந்து கொள்வனவு செய்கிறார்கள். 

சீனா... இந்தச் சந்தர்ப்பத்துக்காகவே.. ஏற்கெனவே, தயாரித்து வைத்திருப்பார்கள் போலுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இந்தியாவில் இடம்பெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட 2000 பேரில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது. அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது. உலகளவில் தற்போது பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேவேனை இந்தியா இலங்கை போன்ற நாடுகளும் இதன் தாக்கத்திற்கு தப்பவில்லை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 250-ஐ கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் தலைநகர் டெல்லியின் நிசாமுதின் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அத்துடன் வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் அதிகமான வெளிநாட்டினரும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பலர் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்களிடமிருந்து இந்த வைரஸ் பரவியுள்ளது. பின்னர் அவரிடம் இருந்து பலருக்கும் வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே, இஸ்லாமிய மத நிகழ்ச்சியில் பங்கேற்று காஷ்மீர் திரும்பிய நபர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். அதேபோல், மத நிகழ்ச்சியில் பங்கேற்று தெலுங்கானா திரும்பியவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்மந்திரியின் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்தும் பலர் டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அவர்களது தகவல்களை திரட்டும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரும் மசூதிக்குள் தங்கியிருந்த 200-க்கும் அதிகமானோர் இருமல், காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, மசூதிக்குள் இருந்த அனைவரையும் அங்கிருந்து பொலிஸார் அப்புறப்படுத்தி கொரோனா பரிசோதனைக்க்கு உள்படுத்தியுள்ளனர். பரிசோதனை முடிவுகள் இன்று அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மசூதி இருந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கிடையே, இஸ்லாமிய மத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக நிஜாமுதின் பகுதியை சேர்ந்த 6 பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்படத்தக்கது. மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பலருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் நிலைமையை சமாளிக்க ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கை கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/india/80/140231
  • வடக்கு மாகாண சுகாதாரத் துறையினரின் மக்களுக்கான விசேட அறிவித்தல்! வடக்கு மாகாண சுகாதாரத் துறையினரால் மக்களுக்கான விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனால் இந்த அறிவிப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது. குறித்த அறிவிப்பில், “வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை ஒரு நோயாளி மட்டுமே இனம் காணப்பட்டுள்ளார். ஆயினும் இந்நோய் எமது மாகாணத்தில் பரவாது இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நோய் வராமல் தடுப்பதற்கும் நோய் வந்தால் சிகிச்சை அளிப்பதற்கும் வடக்கு மாகாணத்தில் சுமார் பத்தாயிரம் மருத்துவப் பணியாளர்கள் இரவு பகலாக தமது உயிரையும் பணயம் வைத்து சேவையில் ஈடுபட்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவர் சார்பாகவும் உங்களிடம் ஓர் வேண்டுகோளை விடுத்து நிற்கின்றோம். தயவு செய்து உங்கள் வீடுகளில் இருந்து இந்த நோய் பரவாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இது பற்றிய ஆலோசனைகளை அல்லது தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் இவ்விடயம் சம்பந்தமான தகவல்களை வழங்கவும் மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் 24 மணி நேரமும் இயங்கும் பின்வரும் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி 021 222 6666 மற்றும் 021 221 7982 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தாங்கள் வீடுகளில் இருக்கும்போது தங்கள் குடும்பத்தில் யாருக்காவது அவசர மருத்துவ நிலை ஏற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்க வேண்டுமாயின் 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். தாங்கள் ஏதாவது வைத்தியசாலையில் கிளினிக்குக்கு செல்பவராயின் உங்களுக்குத் தேவையான மருந்துகளை உங்கள் வீட்டிற்கே அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு செய்துள்ளது. நீங்கள் கிளினிக் செல்லும் வைத்தியசாலையை தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்கள் விபரத்தைத் தெரிவிப்பதன் மூலம் இச்சேவையினை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் வைத்திய சாலையின் தொலைபேசி இலக்கத்தை அறிய வேண்டுமாயின் மேலே குறிப்பிடப்பட்ட அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியமுடியும். தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகளைப் பெற்றுக் கொள்வதாயின் அம்மருந்தகங்களின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் உங்களது வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளையும் சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது. உங்கள் பிரதேசத்தில் உள்ள மருந்தகங்களின் தொலைபேசி இலக்கத்தை அறியவேண்டுமாயின் மேலே குறிப்பிட்ட அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம். இச்சேவையை வழங்குவதற்குத் தனியார் மருந்தகங்கள் தங்கள் மருந்துக்கான விலையுடன் கிலோமீற்றர் ஒன்றிற்கு ஐம்பது (50) ரூயாய் அறவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும் சில தனியார் மருந்தகங்கள் இச்சேவையை இலவசமாக வழங்க முன்வந்துள்ளன. இச்சேவையினை வழங்குவதற்கு இதுவரை பதிவுசெய்யப்படாத மருந்தகங்களும் முன்வந்தால் தங்களுக்கான அனுமதி சுகாதார அமைச்சில் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்களும் தங்களது விபரங்களை மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தரவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. http://athavannews.com/வடக்கு-மாகாண-சுகாதாரத்-த-2/
  • இலங்கையில் கொரோனா (COVID-19) தொற்றுக் காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணான வகையில் எரிக்கப்பட்டமை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளர். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “நீர்கொழும்பு, கொச்சிக்கடை பலகத்துறை பிரதேசத்தில் வசித்து வந்த முஹம்மத் ஜமால் COVID-19 தொற்று காரணமாக உயிரிழந்த பின்னர், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைவாக அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்படாமை துரதிர்ஷ்டவசமானதும் வருத்தத்தக்கதுமாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குறுகிய நேரத்துக்குள் அரசாங்க மற்றும் மருத்துவத் துறையினருடன் தொடர்புகொண்டு ஜனாஸா எரியூட்டப்படுவதைத் தடுப்பதற்கு அவசர அவசரமாக மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. பாரியளவில் வியாபித்து பரவிவரும் தொற்றுநோய் என்றாலும், சமய உணர்வுகளுக்கு மதிப்பளித்து மேற்படி ஜனாஸா நல்லடக்கடம் செய்யப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் பதவிவகிக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் டொக்டர் சுஹைல் மற்றும் எமது கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா போன்றோர் நடுநிசிவரை முயற்சித்துள்ளனர். நல்லடக்கம் செய்வதுபற்றி எடுத்துக்கூறப்பட்ட போதிலும், நீர்கொழும்பு பிரதேசத்தில் பத்து அடி ஆழத்தில் குழி தோண்ட வேண்டியுள்ளதால் அங்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வாக இருப்பதனால் நீர் கசிவு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து கொழும்பு, மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்துக்கு வெளியில் ஜனாஸாவைக் கொண்டு செல்வதற்கு சட்ட மருத்து அதிகாரியினால் அனுமதி வழங்கப்படவில்லை. மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட்டிருந்த நிலையில் நீதவானின் விசாரணைகூட ஒரு பொருட்டாக இருந்திருக்க மாட்டாது. குடும்பத்தவர்களின் உணர்வுகளையும், வேண்டுகோளையும் கருத்திற்கொள்ளாது ஜனாஸாவை எரிப்பதில் அவசரம் காட்டப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எமது நிலைப்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அறிகிறோம். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கும், சட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையில் இது சம்பந்தமான கூட்டத்தில் உரிய சுற்றறிக்கையை மீளாய்வு செய்வதுபற்றி ஆராயப்பட்டு வருவதாகவும் அறிகிறோம். எங்களது சமய ரீதியான உரிமையை நாங்கள் வலியுறுத்தும் அதேவேளையில், தற்போதுள்ள அசாதாரண சுழ்நிலையில் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு நிலைமையை மேலும் சிக்கலாக்காமல், யதார்த்தபூர்வமான நடைமுறைச் சாத்தியமுள்ள தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/கொரோனா-நோயாளியின்-உடல்-எ/
  • கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது. அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது. உலகளவில் தற்போது பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேவேளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் இந்த தொற்றிலிருந்து தப்பவில்லை. ஏற்கனவே வெளிநாடுகளில் இரு இலங்கையர்கள் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா – நிவ்யோர்க்கில் வசித்துவந்த 50 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துவருவதோடு அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. https://www.ibctamil.com/usa/80/140246?ref=home-imp-parsely
  • உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் அழையுங்கள்…! கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் பிரதம அலுவலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 0113456200 0113456201 0113456202 0113456203 0113456204 http://athavannews.com/உணவு-மற்றும்-மருத்துவம்/