Sign in to follow this  
ampanai

பல்லாயிரம் கோடி கி.மீ. அப்பால் காணப்பட்ட ஒளிரும் மேகக்கூட்டம் -நாசா படம் பிடித்து சாதனை

Recommended Posts

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல்லாயிரம் கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள மேகக்கூட்டத்தைப் படம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

உலகின் மிகப் பெரிய விண்ணியல் தொலைநோக்கியான ஹப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இளஞ்சிவப்பு நிற ஒளிரும் மேகக் கூட்டம் ஒன்றைக் கண்டனர்.

இதில் குறிப்பிடப்படும் ஒளி ஆண்டு என்பது, நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் ஒளி பயணிப்பதாகும். இந்த மேகக் கூட்டத்தைச் சுற்றி ஏராளமான நட்சத்திரங்களும், விண்கற்களும் இருந்தன.

இந்த இளஞ்சிவப்பு மேகக் கூட்டத்திற்கு எல் ஹெச் ஏ 120 என் 150 (LHA 120-N 150) என்று பெயரிட்டுள்ளனர். சமீபகாலத்தில் மிக அதிக தொலைவில் நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட மேகக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.polimernews.com/dnews/104928/பல்லாயிரம்-கோடி-கி.மீ.அப்பால்-காணப்பட்ட-ஒளிரும்மேகக்கூட்டம்--நாசா-படம்பிடித்து-சாதனை

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • காசோலையை அயன் செய்து கிருமி நீக்கம் செய்தார் வங்கி கேசியர் ஒருவர் பதிவு: ஏப்ரல் 06,  2020 16:52 PM அகமதாபாத்   கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில்  21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.  வங்கிகள் போன்ற பல அத்தியாவசிய சேவைகள்  இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், குஜராத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடாவின் கிளையிலிருந்து ஒரு வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. வீடியோவில், ஒரு காசோலையை  அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தி காசோலையை கிருமி நீக்கம் செய்வதைக் காணலாம்.   இந்த  வீடியோவை ஆனந்த் மஹிந்திரா என்பவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு நபர் ஒரு காசோலையை ஒரு ஜன்னல் வழியாக காசாளரிடம் கொடுக்கிறார். வங்கி கேசியர் ஒரு இடுக்கியை பயன்படுத்தி காசோலையை வாங்குகிறார்.    பின்னர் அவர் காசோலையை தனது மேஜையில் வைத்து,  அதன் மீது ஒரு நீராவி அயன் பாக்ஸ்-யை வைத்து தேய்கிக்கிறார்.ட் அதில் இருக்கும் வைரஸை கிருமி நீக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.   இதை, ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவை  "எனது # வாட்ஸ்அவொண்டர்பாக்ஸில் கேசியரின் தொழில்நுட்பம் பயனுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை என கூறி உள்ளார்.டுவிட்டரில் இது குறித்து பல்வேறுவகையான கருத்துக்கள்தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/06165240/I-have-no-idea-if-the-cashiers-technique-is-effective.vpf    
    • சும்மா நிக்கிற கிபீரை நாலு ரவுண்டு சுத்த விட்டால் தமிழ்ச்சனம் வீட்டுக்கை இருக்கும். சிங்களச்சனத்துக்கு என்ன செய்யலாம்???  
    • உலக வல்லமைமிகு நாடுகளே செய்வதறியாது திகைத்து நிற்க இந்தியாவின் பிற்போக்குத்தனமான கருத்தியலூடாக நடைமுறைகளைப் (விளக்கேற்றுதல் போன்ற பித்தலாட்டத் திசைதிருப்பல்கள்) பலப்படுத்துவதாகவேயுள்ளது.  இறுதியாகப் பாவம் செய்தோரை இறைவன் தண்டித்துவிட்டார் என்று முடித்துவிடுவார்கள்.  இந்தியா முதலில் மூடநம்பிகைகளைக் களையாதிருக்கும்வரை இதுபோன்ற ஆய்வுகளும் பதிவாகும். 
    • மக்கள் சொல்வழி கேட்கின்றார்கள். ஊடகங்கள் மக்களை பயமுறுத்துவதற்கு பதிலாக பாதுகாப்பாக இருப்பது பற்றி அறிவுறுத்துகின்றார்கள். எல்லோரும் வைத்தியராக மாறி ஆலோசனைகள் சொல்லவில்லை. ஒரேயொரு மருத்தவ ஆய்வகம் மட்டும் தினசரி கோரோனா பற்றிய நாட்டு நிலவரங்களை அறிக்கையாக சொல்கின்றது. எனது குடும்ப வைத்தியரிடம் கொரோனா பற்றி விசாரித்தேன்.சிரித்து விட்டு  இது பற்றி ஒன்றுக்கும் பயப்பிட வேண்டாம் எனவும் இருமினாலும் பயப்பிட வேண்டாம் எனவும் சொல்லி தனது கைத்தொலைபேசி இலக்கத்தை தந்துள்ளார். நானறிந்த வரையில் யாரும் கொரோனாவிற்கு பயப்பிட்டதாக தெரியவில்லை. நானும் தினசரி 4மணித்தியாலங்கள் வேலைக்கு சென்றுதான் வருகின்றேன். இன்னுமொன்றை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் 300 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையை சென்ற கிழமை மூடிவிட்டார்கள்.நோயாளர் மற்றும் பணியாளர் பற்றாக்குறையாம்.இது உண்மை.
    • ஆனந்தபுர நாயகரே வீர வணக்கம்.....!