ampanai

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி நிதியுதவி

Recommended Posts

சுவிட்சர்லாந்தில் கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்பொருட்டு இந்திய மதிப்பில் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் நன்கொடையாக தானும் தனது மனைவியும் வழங்குவதாக பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தங்களின் பங்களிப்பு ஆரம்பித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பெடரர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே போல், பிரபல கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகீசிய மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 8 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/104946/கொரோனாபாதிக்கப்பட்டவர்களுக்குரோஜர்-பெடரர்,-கிறிஸ்டியானோரொனால்டோ,-லியோனல்-மெஸ்ஸி-நிதியுதவி

Share this post


Link to post
Share on other sites

மெஸ்சிய‌ விட‌ , ரொனால்டோ ம‌னித‌ நேய‌த்தை மிக‌வும் நேசிக்கும் சிற‌ந்த‌ ம‌னித‌ர் / 
 

Share this post


Link to post
Share on other sites

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராட நிதியுதவி வழங்கிய சச்சின்

இந்திய கிரிக்கெட் விரர் சச்சின் டெண்டுல்கர், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய மதிப்பில் ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் இறங்கியுள்ளன. உலக அளவில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். 750 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை இந்திய மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீர சச்சின் டெண்டுல்கர், தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக வீடியோ வெளியிட்டார். அதில், மக்களிடம் இருகரம் கூப்பிக் கேட்கிறேன், தயவுசெய்து வீட்டை விட்டு வெளிேய செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இந்திய மதிப்பில் சச்சின் டெண்டுல்கர் ரூ.50 இலட்சம் நிதியுதவி அளித்துள்ளார். விளையாட்டு வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் அளித்த நன்கொடைதான் இதுவரை மிக அதிகமாகும்.

இந்திய கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான், யூசுப் பதான் சகோதரர்கள் பொலிஸார் , சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு இந்திய மதிப்பில் 4 ஆயிரம் முகக் கவசங்களை வழங்கியுள்ளனர்.

தோனி மூலம் புனேவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.ஒரு இலட்சம் வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் சவுரவ் கங்குலி மேற்கு வங்கத்தில் கொரோனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்குவதற்காக இந்திய மதிப்பில் ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78757

Share this post


Link to post
Share on other sites

கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.8.35 கோடி நன்கொடை: செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் அறிவிப்பு

செர்பியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிக்கு அந்நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் இந்திய மதிப்பில் சுமார் 8 கோடியே 35 லட்சத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், 91 கோடி ரூபாயை (11 million euros ) திரட்ட சக விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், தங்கள் நாட்டில் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்காக சுமார் 7 கோடி ரூபாயை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நோவக் ஜோகோவிச் மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டர் கருவிகள் வாங்க 8 கோடியே 35 லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/105168/கொரோனா-தடுப்பு-பணிக்குரூ.8.35-கோடி-நன்கொடை:-செர்பியவீரர்-நோவக்-ஜோகோவிச்அறிவிப்பு

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • கொரோனா சிகிச்சைக்காக 40 ஆயிரம் படுக்கைகளை இந்திய ரெயில்வே முதற்கட்டத்தில் தயார்படுத்தி உள்ளது. பதிவு: ஏப்ரல் 06,  2020 15:01 PM புதுடெல்லி,   கொரோனா வைரஸ் நாட்டில் தீவிரமுடன் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமுடன் மேற்கொண்டு வருகிறது.   நாட்டில் கொரோனா பாதித்தோரில் அதிக எண்ணிக்கையுடன் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன.  தொடர்ந்து டெல்லி மற்றும் கேரளா இந்த வரிசையில் உள்ளன.   இந்த பாதிப்பு எண்ணிக்கை மராட்டியத்தில் 690 ஆகவும், தமிழகத்தில் 571 ஆகவும் நேற்று உயர்ந்து உள்ளது.   இந்நிலையில், மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது.  45 பேர் பலியாகி உள்ளனர்.  நாட்டில் 4,200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.   அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் ஆனது, ரெயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளது.   இதுபற்றி ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ‘ரெயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றுவதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன், ரெயில்வே மண்டலங்களில் அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கின.  சராசரியாக, நாள் ஒன்றுக்கு 375 பெட்டிகள் தனி வார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.   இதற்காக நாட்டின் 133 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.  இதன்படி, 2 ஆயிரத்து 500 பெட்டிகள் முதற்கட்டத்தில் தனி வார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளன.  இதனால் 40 ஆயிரம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளன’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.   இதேபோன்று மற்றொரு 2 ஆயிரத்து 500 பெட்டிகளை தனி வார்டுகளாக உருவாக்கும் அடுத்த கட்ட பணிகள் நடைபெற உள்ளன.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/06150102/Rly-converts-2500-coaches-into-isolation-wards-for.vpf
    • கொரோனா பரிசோதனை மையத்தை அடித்து நொறுக்கிய மக்கள் மேற்கு ஆஃப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில், தங்கள் பகுதிக்கு அருகே அமைக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தின் வாயிலாக தங்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் மக்கள் அதை அடித்து நொறுக்கினர். இன்னும் கட்டுமானத்தில் உள்ள அந்த பரிசோதனை மைய கட்டடத்தை அடித்து நொறுக்கும் காணொளியில், “எங்களுக்கு இது வேண்டாம்” என்று மக்கள் கூறுவதைப் போன்று காட்சிகள் உள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்த நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், அந்த இடத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு திட்டம் எதுவும் இல்லை என்றும் அது பரிசோதனை மேற்கொள்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஐவரி கோஸ்ட்டில் இதுவரை 260 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. https://www.bbc.com/tamil/live/global-52179116
    • நாத்தீகவாதிகளுக்கு மதங்களை சேர்ந்தவர்கள் என்று தமிழில் ஒரு பொழிப்புரை தந்துள்ளீர்கள்.அமெரிக்காவில் மதங்களை சேர்ந்தவர்களையும் நாத்திகர்கள் என்று அழைக்கிறார்களா?
    • மேற்கு நாட்டவன் தனது கண்டு பிடிப்புக்களை மனித இனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பாவிக்கும்போது  நீங்கள் இதனை கட்டு படுத்த முடியாதா?
    • ஜப்பானில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டோக்கியோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நாளை முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார். சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவை விடவும், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. கரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ளபோதிலும் வேகமாக பரவி வரும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இதனால் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்பை அடைந்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட 73 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பான் வருவதற்கு அந்நாட்டு அரசு ஏற்கெனவே தடை விதித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு வருடத்துக்கு ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் 12.6 பில்லியன் டாலர்கள் செலவு செய்திருந்தது. ஜப்பானில் கரோனா வைரஸுக்கு இதுவரை 3500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 85 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக தலைநகர் டோக்கியோவில் 1000 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் அங்கு 83 பேருக்கு காரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஜப்பானில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டதாவது: ‘‘கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் டோக்கியோ மற்றும் பிற நகரங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது. ஒரு மாத காலத்திற்கு இது அமலில் இருக்கும். இதன் மூலம் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுவார்கள். அத்தியாவசி தேவையை தவிர வேறு எதுவுக்கும் வெளியே வரக் கூடாது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்படும். எனினும் ஒட்டுமொத்தமாக எதுவும் நிறுத்தப்படாது’’ எனக் கூறினார். https://www.hindutamil.in/news/world/548170-japan-to-declare-state-of-emergency-for-about-a-month-shinzo-abe-1.html