Sign in to follow this  
ampanai

மன உளைச்சலை போக்கும்பொருட்டு கொரோனா வைரஸ் வடிவில் பர்கர் -

Recommended Posts

கொரோனா பீதியில் உறைந்து கிடக்கும் மக்களுக்கு உளவியல் ரீதியான அணுகுமுறை

கொரோனா அச்சுறுத்தலால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள மக்களை உற்சாகப்படுத்தும் வகையில், வியட்நாமில் விற்பனை செய்யப்படும் கொரோனா வைரஸ் வடிவிலான பர்கர் வரவேற்பை பெற்றுள்ளது.

ஹனோய் (Hanoi) நகரில் செயல்படும் பீட்சா கடையில், கொரோனா போன்று வடிவமைக்கப்பட்ட பன்களுக்கு இடையே சீஸ், தக்காளி, இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

கொரோனா வடிவிலான பர்கரை சாப்பிடும்போது வைரஸை வென்றது போன்ற நேர்மறை உணர்வை பெற முடியும் என்று பீட்சா கடையின் உரிமையாளர் ஹோங் துங் (Hoang Tung) தெரிவித்துள்ளார்.

1585217559104969.jpg

 

https://www.polimernews.com/dnews/104969/மன-உளைச்சலைபோக்கும்பொருட்டு-கொரோனாவைரஸ்-வடிவில்-பர்கர்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • வைத்தியசாலைக்கு Face mask நன்கொடை செய்தவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் - Dr Thangamuthu Sathiyamoorthy
    • வாசித்தோருக்கும் வாசித்துப் பச்சைப் புள்ளிகளை  வழங்கிய ஊக்குவித்த நிலமாதி மற்றும் தமிழ்சிறி ஆகியோருக்கு நன்றி
    • கொரோனா கிருமிப்பரவலின் தாக்கத்தைச் சமாளிக்க குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் 21 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் 600 வெள்ளி வழங்கப்படும் என துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் தெரிவித்திருக்கிறார். வழங்குதொகையை அரசாங்கம் உயர்த்தியது இதுவே இரண்டாவது முறை. இதற்குமுன் ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் 100 வெள்ளிக்கும் 300 வெள்ளிக்கும் இடையிலான வழங்குதொகைகளை தருவதாக அரசாங்கம் கடந்த பிப்ரவரி அறிவித்தது. மார்ச் மாதத்தில் இந்தத் தொகை மூன்று மடங்காக 300 வெள்ளிக்கும் 900 வெள்ளிக்கும் இடையே உயர்த்தப்பட்டது. அரசாங்கம் இந்த வழங்குதொகைகளை வரும் ஆக்ஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரைக்குள் தருவதாக இருந்தது. தற்போது இந்த வழங்குதொகையின் 300 வெள்ளியுடன் மேலும் 300 வெள்ளி சேர்க்கப்பட்டு 'ஒற்றுமைக்கான ரொக்க வழங்குதொகை' என்ற பெயரில் வழங்கப்படும் என்றும் திரு ஹெங் கூறினார். இன்று அறிவிக்கப்பட்ட இந்த வழங்குதொகைகளால் அரசாங்கத்திற்குக் கூடுதலாக 1.1 பில்லியன் செலவு ஏற்பட்டுள்ளதாக திரு ஹெங் கூறினார். அரசாங்கத்திற்குத் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கிய பெரும்பாலான சிங்கப்பூரர்கள் ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் ஒற்றுமைக்கான ரொக்க வழங்குதொகையைத்  தங்களது வங்கிக் கணக்குகளில் பெற்றிடுவர்.   https://www.tamilmurasu.com.sg/top-news/story20200406-42335.html?fastjobs=3&utm_expid=.ZtvmkqViRECVMA39qjddOQ.2&utm_referrer=https%3A%2F%2Fwww.tamilmurasu.com.sg%2Frecent-articles%3Ffastjobs%3D3  
    • சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் செயல்பாடுகள் மே 1ஆம் தேதி முதல் 18 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும்.  போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் இதனை அறிவித்தார்.   விமான நிலைய இயக்குநர், சில்லறை விற்பனை குத்தகைதாரர்கள், விமான சேவை நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கான செலவுகளை விமான முனையம் மூடப்படுவதால் குறைக்கலாம் என்று  கூறிய திரு கோ, தற்போதை விமானப் போக்குவரத்தைச் சமாளிக்க  ஒரு முனையம் போதும் என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த முனையம் மூடப்படுவதால், இரண்டாவம் முனையத்தில் தற்போது புதுப்பிப்புப் பணிகள் துரிதமடையும் என்றும் அவர் கூறினார். உலகளவில் அதிவேகமாகப் பரவி வரும் கொவிட்-19 கிருமித்தொற்றால் விமான பயணங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் சாங்கி விமான நிலையத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   https://www.tamilmurasu.com.sg/top-news/story20200406-42338.html?fastjobs=3&utm_expid=.ZtvmkqViRECVMA39qjddOQ.2&utm_referrer=https%3A%2F%2Fwww.tamilmurasu.com.sg%2F%3Ffastjobs%3D3
    • ஆம், அதை செய்வோம். எம் மண்ணையும் மக்களையும் காப்பற்றுவோம் !