Jump to content

"வீடியோ கான்பரன்ஸ்" மூலம் நடந்த திருமணம்


Recommended Posts

 கொரோனா அச்சுறுத்தலால் உத்தர பிரதேசத்தில் வீடியோ கான்பெரன்சிங் மூலமாக திருமணம் நடந்தது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று (மார்ச் 25) முதல் அமலானது. இதனால் அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. மேலும், மக்கள் வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக உ.பி., மாநிலம் ஹார்டாய் பகுதியில் ஒரு ஜோடி வினோதமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் நடைபெற இருந்த மணப்பெண் மெஹபீன் வீட்டிற்கும், மணமகன் ஹமீத் வீட்டிற்கும் இடையே 15 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருந்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததால், வெளியே வரமுடியாத சூழ்நிலையில், இரு வீட்டாரும் தங்களது வீட்டில் இருந்தவாறு தொலைபேசி மற்றும் பேஸ்டைம் என்னும் வீடியோ கால் செயலி மூலமாகவே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, ஹமீத்-மெஹபீன் ஆகிய இருவரும் அவரவர் வீட்டில் தங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தனர்.

வீடியோ கான்பெரன்சிங் மூலம் திருமணம் நடைபெற்று, அந்தந்த குடும்பத்தினர் தங்கள் வீடுகளிலேயே சிறு கொண்டாட்டங்களை நிகழ்த்தினர். இது குறித்து ஹமீத் கூறுகையில், நாடு முழுவதும் ஊரடங்கு நிகழ்வு குறித்து இரு குடும்பத்தாரும் விவாதித்தோம். திருமணத்தை ஒத்திவைக்க வேண்டாம் எனவும், கொரோனா வைரஸ் பரவுதல் தடுக்கப்பட்டு, இயல்பு நிலை வந்தபிறகு, ஆடம்பரமாக நிகழ்ச்சி நடத்தலாம் எனவும் முடிவு செய்து, தற்போது பேஸ்டைம் செயலியின் வீடியோ கான்பெரன்சிங் மூலம் திருமணம் செய்துக்கொண்டேன். இயல்பு நிலைக்கு பின்னர், மெஹபீனை, வீட்டிற்கு அழைத்து வருவேன், என்றார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2509843

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.