• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
colomban

கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழப்பு.

Recommended Posts

Untitled.jpg
 

கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து குறித்த நாடுகளில் வசித்து வந்தவர்களாவர்.

சுவிட்ஸர்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் சூரிச் சென்று வந்திருந்த நிலையில், கொரோனாவிற்கான ஆரம்ப அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் மகள்  தெரிவித்தார்.

இதேவேளை, பிரான்ஸில் வசித்து வந்த யாழ்ப்பாணம் – தாவடியை பிறப்பிடமாகக் கொண்ட 32 வயதான ஒருவரும் நோய் அறிகுறியுடன் உயிரிழந்துள்ளார்.

இவர்கள் இருவரின் மரணங்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சிடம்  வினவிய பொது,

பிரான்ஸில் இலங்கை பிரஜை ஒருவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்திருந்ததாக வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சுவிட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டாலும், மரணத்திற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

14 நாட்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, நோய் அதிகரித்த நிலையில் 8 தினங்கள் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்துள்ளார்.

இறுதியாக மனைவியை மட்டும் பார்க்க அனுமதித்ததுடன், இவருடைய உடலை குடும்பத்தினரிடம் கையளிக்க மறுத்துவிட்டனர்.

படத்தில் : பிரான்ஸில் உயிரிழந்தவர் . அங்கு  கிறித்தை பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணம் - தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) இளைஞன் .

https://www.madawalaenews.com/2020/03/blog-post_827.html

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் 😞

யாவரும் கவனமாக, நம்பிக்கையுடன் இருப்போம். 

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்......!

எனக்கு மிகவும் தெரிந்த ஒரு அம்மையார் (72) 20 நாட்களுக்கு முன் காச்சலால் ஆஸ்பத்திரிக்கு போனவர்.அங்கு இந்த வருத்தம் என்று கண்டறிந்து சிகிச்சை  அளித்து வந்தனர்.(பாரிஸில்). இன்று பூரண குணமாகி அவர்களே இன்று அவரது வீட்டில் கொண்டுவந்து விட்டு சென்றுள்ளார்கள்......! 

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

இந்தச் செய்திகளை கேள்விப்பட.... நாளைக்கு, எமக்கும் இந்த நிலைமை ஏற்படலாம். 
தயவு செய்து... தேவையில்லாமல் வெளியில் செல்லாதீர்கள்.  

இறந்த தமிழ் உறவுகளுக்கு... ஆழ்ந்த... அனுதாபங்கள். 😢

Share this post


Link to post
Share on other sites

சிவா சின்னப்பொடியும் தனது சகோதரியின் கணவர் பொன்னன் குலசிங்கம் அவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலால் 24.03.2020இல் பிரான்ஸில் காலமானதாக அறிவித்திருக்கிறார்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • எதிர்வரும் வாரங்களில் கொரோனா தொற்றாளர்கள் நூற்றுக்கணக்கில் அதிகரிக்கும் அபாயம் - வைத்தியர் ஜெயருவான் தற்போதுள்ள நிலையில் இலங்கையில் "கொவிட் -19"கொரோனா நோய் பரவல் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரிக்கலாம் என வைத்திய பரிசோதனை சபையின் பணிப்பாளர் வைத்தியர் ஜெயருவான் பண்டார கூறுகின்றார். கொரோனா நோயாளர்களின் அவதானிப்பு நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ஆரம்பத்தில் ஒருவர் இருவர் என்ற வகையில் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். முதலில் இது ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவும் விதமாகவே கண்டறியப்பட்டது. தனி நபர்களை கண்டறிந்து நிலைமைகளை கட்டுப்படுத்த எமக்கு இலகுவாக இருந்தது. கொழும்பு, புத்தளம் ஆகிய பகுதிகளில் அவர்கள் வசித்ததாக கூறப்பட்ட நிலையில் ஒரு சில நாட்களின் பின்னர் அப்பகுதிகளில் கொரோனா தொற்றளார்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. https://www.virakesari.lk/article/79017
    • கோவிட்-19: சீறீலங்காவும் எதிர்காலமும் எப்போதும் ஒரு நாட்டிலான கோவிட்-19 வைரஸ் தொற்றின் போது முதலில் நாட்டிற்கு வெளியில் இருந்து வந்தவர்களே நோய்த் தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்படுவார்கள். பின்னர் அவர்களுடன் ஏதோவிதத்தில் தொடர்புபட்டவர்கள் நோய்த் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்படுவர். இவர்களை கடந்து நோய்த் தொற்று இடம்பெறுகிறதா? என்பது தொடர்ந்தும் அதீத கவனத்தில் கொள்ளப்படும். பொதுவாக மூன்றாம் நாலாம் வாரங்களில், அவ்வாறான தொற்றுடையவர்கள் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்படுவது சாத்தியமாகும். அதன் பின்னர் அது எவ்வளவு தூரம் அந்நாட்டின் மக்களிடையே பரவ ஆரம்பித்துள்ளது என்பதை, அறிந்து கொள்ள எங்கெல்லாம் நோய்த்தொற்று அதிகம் அடையாளம் காணப்படுகிறதோ, அங்கெல்லாம் அதிக சோதனைகளை செய்வதினூடாக சாத்தியமாகும். அவ்வாறு செய்யப்படுமானால், அவ்வாறான இடங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு, ஏனைய பகுதிகளில் இருந்து அவற்றை தனிமைப்படுத்துவதினூடாக பரவலான நோய்த்தொற்று பரம்பலைத் தடுத்துவிடமுடியும். இல்லையேல், நோய்த் தொற்று அந்நாட்டின் பல பகுதிகளுக்கும் ஓரிரிவர் மூலம் சென்றுவிட்டாலே, அது பெரும் பரம்பலுக்கு பின்னர் வழிகோலிவிடும். இது தான் இன்று பல நாடுகள் எதிர்கொள்ளும் சவால் நிலையாகும். இதையே முதலில் ஒருவர் மூலம், இருவர் அல்லது மூவருக்கு வைரஸ் தொற்று ஏற்ப்பட்டால், அவ்வாறு பரப்ப்படும் நோய்த்தொற்று முதல் மாத முடிவில் 244 பேரையும், அதுவே இரண்டாம் மாத முடிவில் 59604 பேரையும் தொற்றும் வாய்பிருக்கு. இவ்வாறான பரம்பல் அதிகரிப்பை அதீத கவனத்தில் கொண்டியங்கும் அரசுகள், அந்த பரம்பல் வேகத்தை கட்டுக்குள் வைத்து நகர முடியும். ஆனால் தனது மூன்றாவது வாரத்தில் உள்ள சிறீலங்கா, தற்போதே சமூகப் பரம்பலை அதிகரித்த எண்ணிக்கையில் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ள நிலையில், அது பரந்த சோதனைகளை செய்ய வேண்டும் என இத்துறைசார் வல்லுனர்கள் சிறீலங்கா அரசை வலியுறுத்துகின்றனர். ஆனால் சிறீலங்கா அம்முன்னெடுப்பை இதுவரை செய்யவில்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர். கீழே உள்ள வரைபின் (நன்றி: டெய்லி மிரர்) மூலம், ஏனைய நாடுகள் சீறீலங்காவிற்கு தரும் பாடம் என்ன என்பதை அவர்கள் கோடிட்டுக் காட்டுகின்றனர். இதில் குறிப்பிட்டுள்ள ஏனைய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி, இங்கிலாந்து என்பன தமது எட்டாவது வாரத்தின் பல்வேறு நாட்களிலும், தென்கொரியா தனது 9ஆவது வாரத்திலும், தற்போது உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது மூன்றாவது வாரத்திற்குள் பயணிக்கும் சிறீலங்காவின் பயணம், கொவிட்-19 விடயத்தில் எவ்வாறு அமையப்போகிறது என்பதே, வருகின்ற நாட்கள் வாரங்கள் சொல்லப்போகும் செய்தியாகும். வெறும் ஊரடங்கு மாத்திரம் சாதித்துவிடுமா? இல்லையேல், அதையும் கடந்து வல்லுனர்கள் வலியுறுத்துவது போல் பல நடவடிக்கைகள் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டேயாக வேண்டுமா? சமூகப்பரம்பல் ஏற்கனவே வெளிப்பட்டுள்ள நிலையில், அவ்அவ்ப்போது ஊரடங்கை தளர்த்தி, மக்களை வெளியில் கொண்டு வந்து, நெருக்கமாக கூடலுக்கு அனுமதித்து, நோய்த் தொற்று பரம்பலுக்கு வழியமைத்துவிட்டு, பின்னர் அடைத்துவிடுவது சரியான முறைமையா? என்பதெல்லாம் வரும் வாரங்கள் வெளிப்படும் விடயங்கள் என்றாலும், அவ்விடயங்கள் கூட வெளிப்படைத்தன்மையுடன் அணுகப்படுமா? என்பதும் பெரும் கேள்வியே? இரு வல்லுனர்களின் கருத்து வருமாறு: “If we do not expand testing and identify those with the virus the curfews would be useless” - Prof. H. W. Dissanayake “If we do not actively detect Covid-19 infected, the iceberg would become a volcano” - Prof. Harendra de Silva     (முகநூல்) 
    • மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரக் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பானது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவை தொடர்பில் பாரிய சந்தேகங்களைக் கிளப்புகின்றது. யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று ஒண்டாரியோ ரூஜ் பார்க் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது ஸ்ரீலங்கா இராணுத்தில் கடமையாற்றிய சுனில் ரத்நாயக்க என்னும் இராணுவ உறுப்பினர் யாழ்ப்பாணம் மிருசுவிலில் 2000ம் ஆண்டு காலப்பகுதியில் 3 சிறுவர்கள் உட்பட 8 தமிழ் பொது மக்களை கொடூரமான முறையில் படுகொலை செய்தார் என்னும் குற்றத்திற்காக மேற்படி குற்றவாளிக்கு 2015 ம் ஆண்டு கொழும்பு உச்ச நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.சாதாரண பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட சட்டவிரோத படுகொலைகள் போன்ற பாரதூரமான குற்றங்களைப் புரிந்தவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது மற்றும் விடுதலை செய்வது ஆகிவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டையே நாம் கொண்டிருக்கிறோம். அத்தகைய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பை ஈடுசெய்வதற்கு எதிரானதாகும். ஏற்கனவே 2009 ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தால் திட்டமிட்டு அரங்கெற்றப்பட்ட இனப்படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணைகள் இன்னமும் முற்றுப்பெறாத நிலையிலும், ஜ.நா சபையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் இராணுவ உயர் அதிகாரிகள் மீதும் தொடுக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இன்னமும் உரிய முறையில் பொறுப்புக்கூறாமல் காலத்தை இழுத்தடிக்கும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1 இருந்து அரசாங்கம் விலகியது மற்றும்  தமிழர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட ஒரூ இராணுவ வீரர் மன்னிக்கப்பட்டுள்ளார்.குற்றவாளியான சுனில் ரத்னாயக்க என்ற இராணுவ உறுப்பினரை விடுதலை செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக உலக நாடுகள் போராடிவருகின்ற நிலையில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது குறிப்பாக வெறுக்கத்தக்கது. சர்வதேச குற்றவியல் நீதிக்கான ஒரு செயல்முறையை அமைப்பதற்கான நடவடிக்கைகளையாவது குறைந்தபட்சம் எடுக்குமாறு சர்வதேச சமூகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் . இலங்கை அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். நானும், கனடாவிலுள்ள சக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள நீதிக்காக தமிழ் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றவர்களுடன் இணைந்து குரல் கொடுப்பேன் என்று தெரிவித்தார். https://eyetamil.ca/news-story/365/gary#news#srilanka#march.html