Sign in to follow this  
ampanai

மாஸ்க் அணிவதால் ரிஸ்க் இல்லாமல் போய்விடுமா..? கண்கள் வழியாகக் கூட உடலுக்குள் நுழையும் கொரோனா

Recommended Posts

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் முகக் கவசங்களை போட்டிபோட்டு வாங்கும் நிலையில், கண்கள் வழியாகக் கூட உடலுக்குள் நுழையக் கூடிய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இருமல், தும்மல் இருந்தால் மட்டுமே மாஸ்க் அணியுங்கள், மாஸ்க் அணிவது, அடிக்கடி கை கழுவும் பழக்கம் இரண்டையும் சேர்த்து பின்பற்றும்போதுதான் பயன் கிடைக்கும், ஆரோக்கியமான நபர்கள், கொரோனா தொற்று உள்ள நபரை கவனித்துக் கொள்வதாக இருந்தால் மட்டுமே மாஸ்க் அணிந்தால் போதும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மாஸ்க்குகள் பாதுகாப்பு கவசமாக செயல்படும் என்றே ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன, ஆனால் மாஸ்க் அணிந்து ஊருக்குள் சுற்றிவருபோது அதனால் பெரிய பயன்கள் ஏதுமில்லை, அதாவது அறைகளில் பயனளிக்கும் அளவிற்கு மாஸ்க்குகள் திறந்த வெளிகளில் பயனளிப்பதில்லை என்றும் மருத்துவத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இருமல், தும்மலில் தெறிக்கும் நீர்த்திவலைகளை மாஸ்க் தடுத்துவிடும், வெளியில் சுற்றித் திரியும்போது வைரஸ் உள்ள காற்று நீர்த்திவலைகள் மாஸ்க் வழியாக நுழையக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று கூறும் நிபுணர்கள், ஈரமாகிவிட்டதாக உணரும்போது, மாஸ்க்குகளை அகற்றிவிட வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

மாஸ்க் அணியும்போது மூக்கு, வாய் ஆகியவற்றை சேர்த்தே மூடியிருக்க வேண்டும், இடைவெளி இருக்கக் கூடாது, மாஸ்க்கை அடிக்கடி தொடக் கூடாது, மாஸ்க்கை கழற்றும்போது பின்புறமாகவே அகற்ற வேண்டும், கழற்றிப்போடும் மாஸ்க்குகளை மூடப்பட்ட குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

துணியால் ஆன சூடான நீரில் மாஸ்க்குகளை துவைக்கலாம், மெடிக்கல் மாஸ்க்குகளை அப்படி செய்யக்கூடாது, மாஸ்க்குகளை துவைத்து பயன்படுத்தும்போது அதன் வடிகட்டும் திறன் மிகவும் குறைந்துவிடும் எனக் குறிப்பிடும் நிபுணர்கள், துணியால் ஆன மாஸ்க்குகளை பயன்படுத்தும்போது, அதிக நோய்த்தொற்று அதிகரிப்பதற்கு வித்திட்டதாக, 2015ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றை சுட்டிக்காட்டுகின்றனர்.

மாஸ்க் அணியும்போது அதை நன்கு வசதியாக அணிந்து கொள்ள வேண்டும், கோணலாக அணிந்துவிட்டு, அதை அடிக்கடி சரிசெய்யும்போது முகத்தில் கைபடுவதற்கான வாய்ப்பு அதிகமாகி விடும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

https://www.polimernews.com/dnews/104995/மாஸ்க்-அணிவதால்-ரிஸ்க்இல்லாமல்-போய்விடுமா..?கண்கள்-வழியாகக்-கூடஉடலுக்குள்-நுழையும்-கொரோனா

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • யாழில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளியின் நிலை என்ன? பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்ட தகவல் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் உடல்நிலை தேறி வருகின்றார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலைதொடர்பில் இன்று இரவு தொலைபேசியின் ஊடாக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலை பணிப்பாளருடன் உரையாடியிருந்தேன். தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர், இன்று உடல்நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாள்கள் அல்லது வாரத்தின் பின்னர் வீடு திரும்புவார்” என்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மார்ச் 22ஆம் திகதி தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (ஐடிஎச்) அனுப்பப்பட்டார். இந்த நிலையில் 15 நாள்கள் தீவிர சிகிச்சையின் பின்னர் அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/140764?ref=imp-news
    • முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நாயாறு குருகந்த ரஜமகா விகாரை தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்த நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதி இறந்தார். அவருடைய உடல் தகனம் செய்ய முற்பட்ட வேளையிலும் பல்வேறு முரண்பாட்டு சம்பவங்கள் இடம் பெற்றது அனைவரும் அறிந்ததே. அந்த வகையிலே உயிரிழந்த பௌத்த மத துறவியோடு சேர்ந்து பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்றைய தினம் ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், உயிரிழந்த நபர் நேற்று முன்தினம் இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் நேற்று காலை அவர் எழுந்து வராதததையடுத்து அங்கு இருந்தவர்கள் சென்று பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிசார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்டவர்கள் சென்று நபரின் உடலை பார்வையிட்டதோடு உயிரிழந்தவருடைய உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் உடலம் மருத்துவ பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகள் நாளைய தினம் இடம்பெற உள்ளன சம்பவத்தில் உயிரிழந்தவர் 2016 ஆம் ஆண்டு முதல், இறந்த விகாராதிபதியுடன் விகாரையில் கடமையாற்றி வந்த ஜனகபுர பகுதியை சேர்ந்த கமகே நிமால் கருணாரத்ன என்கின்ற 47 வயதுடைய நபர் ஆவார். இவருடைய தங்கையார் அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார். மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.ibctamil.com/srilanka/80/140751?ref=home-imp-parsely  
    • யாழ்ப்பாணம் - அராலி பிரதேசத்தில் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்ட இளைஞனை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர் ஒத்துழைக்காமையினால் குறித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் கொட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 30 வயதான நாகேந்திரன் புஸ்பராசா என்பவரே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இளைஞன் 1 1/2 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த நிலையில், தேக ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளினிக் சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவசர அம்பியுலன்ஸ் வண்டிக்கு அழைப்பை எடுத்த போது பொதுச் சுகாதார பரிசோதகர் வந்து உறுதிப்படுத்தினால் தான் வண்டியில் ஏற்ற முடியும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொதுச் சுதாதார பரிசோதகர் மற்றும் சுகாதார சேவைகள் ஊழியர்கள் இவருக்கு சாதாரண நோய்தான் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று மருந்து வழங்குமாறு தெரிவித்துச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து இளைஞர்கள் இருவர் அவரை அராலி கொட்டைக்காடு பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது அவருடை நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து பிரதேச வைத்தியசாலையில் நின்ற அம்பியுலன்ஸ் வண்டியின் உதவியை கேட்டபோதும் நீண்ட நேரத்தின் பின்பே அவ்விளைஞன் அம்பியுலன்ஸில் ஏற்றப்பட்டுள்ளார். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் மதியம் 2.45 மணிக்கு இளைஞனின் மரணத்தில் முடிந்துள்ளது. உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா உள்ளதா என்ற பரிசோதனை முடிவு வரும் வரையில் குறித்த இளைஞனுடன் வந்த இருவரும் யாழ். போதனா வைத்திசாலையில் தனிமைப்படுத்தலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிக்கையில், குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புக்கான காரணம் பிரேத பரிசோதனையில் தான் அறிய முடியும். பிரதேச ரீதியிலான நடவடிக்கைகள் அனைத்தும் பிரதேச சுகாதார சேவைகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தான் ஒழுங்கமைக்கப்படுகின்றது என்றார். வடக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பானர் வைத்திய கலாநிதி ஆர். கேதீஸ்வரன் தெரிவிக்கையில், குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் தகவல் கிடைத்தது. நான் நடவடிக்கை எடுப்பதற்குள் நோயாளி இறந்து விட்டார். தற்போதைய இடர் நேரத்தில் நோயாளர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு இந்த நடைமுறை செயற்படுத்தப்படுகின்றது. ஏற்கனவே சாதாரண நோய் என தம்மை அடையாளப்படுத்தி வைத்தியசாலையில் சேர்த்த சம்பவங்கள் பதிவாகியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இவ்வாறான அம்பியூலன்ஸ் பிரச்சினையின் போது அவசர அழைப்பான 0212226666, 0212217982 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். குறித்த இளைஞன் நோய் வாய்ப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்த போது, உரிய நேரத்தில் நோயாளர் காவு வண்டி வந்திருக்குமாயின் அவனின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று கலங்கி நிற்கிறார்கள் பெற்றோர்கள். உயிரிழந்த இளைஞன் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர் என்றும் கூறுப்படுகிறது. அதிகாரிகள் பொறுப்பற்ற செயல்பாடுகளினாலும் அசட்டையீனங்களினாலும் இந்த மரணங்கள் சம்பவிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நேரங்களின் போது பொது மக்களின் தொலைபேசி அழைப்புக்களுக்கு உரிய முறையில் பதில் வழங்கி அவர்களுக்கான சேவையினை அதிகாரிகளும் ஊழியர்களும் வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, தாமதமாக சென்ற நோயாளர் காவு வண்டியில் எந்தவிதமான அடிப்படை வசதிகள் கூட இல்லை என உயிரிழந்த இளைஞனை அழைத்துச் சென்ற மற்றொரு இளைஞன் கருத்து வெளியிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/140748?ref=home-imp-flag