Sign in to follow this  
புரட்சிகர தமிழ்தேசியன்

யாரும் வெளியே வராதீர்கள்.! - கண் கலங்கும் வடிவேலு.!

Recommended Posts

Posted (edited)

யாரும் வெளிய வராதீங்க.. கண் கலங்கிய வடிவேலு.. கொரோனாவிற்கு உருக்கமான விழிப்புணர்வு.!

vadivel-1585241981.jpg

சென்னை: கொரோனா பாதிப்பில் பல மக்கள் பாதிக்கபட்டு வருவதையும் அவதிபட்டு வருவதையும் கண்டு மிகவும் நகைச்சுவை நடிகர் வடிவேலு வருந்தி ஒரு வீடியோ பதிவை பகிர்ந்து உள்ளார் .

இந்த வீடியோவில் வடிவேலு மக்களை கெஞ்சி கேட்டுக்கொண்டார். தயவு செய்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள் என்று கண் கலங்கி கேட்டு கொண்டுள்ளார்.

இதில் உலகம் சந்திக்காத பேரழிவை சந்தித்து வருகிறது மருத்துவர்கள் தங்களின் உயிரை பணையம் வைத்து போராடி வருகிறார்கள் .இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் வெளியே வராதீர்கள். இதனால் யாருக்காக இல்லையோ நமது சங்கதிக்காக இதை செய்யுங்கள். வெளியே வராதீர்கள் என்று கண்கலங்கிய படி இருகரம் கூப்பி வேண்டுகொள் விடுத்துள்ளார் .

இறுதியாக யாரும் வெளிய போகாதீங்க.. அசால்ட்டா இருக்காதீங்க .. என்று மெல்லிய குரலில் வடிவேலு கேட்டிருப்பது பார்ப்பவர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைத்து இருக்கிறது.

அனைவரையும் எளிதாக சிரிக்க வைத்த வடிவேலு தற்போது கண்கலங்கி நிற்பது பலரை ஆடி போக வைத்து உள்ளது .வடிவேலு தற்போது சினிமாவில் அதிகபடியாக நடிப்பதில்லை இருந்தும் ரசிகர்களின் மீம்ஸ்களின் மூலம் இணையத்தின் ராஜாவாக வாழ்ந்து வருகிறார் .

தற்போது வடிவேலு கண் கலங்கி வீட்டை விட்டு வெளியேறாமல் இருங்கள் என்று கேட்கும் இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இளைஞர்களின் இதய துடிப்பு வடிவேலு என்றால் அது மிகையாகாது .

இப்போது வடிவேலு பேசியிருக்கும் விஷயங்கள் அனைத்தும் இளைஞர்களை சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://tamil.filmibeat.com/news/coronavirus-actor-vadivel-emotional-speech-for-public-069386.html

டிஸ்கி

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

வடிவேலுவின்,  மிக உருக்கமான வேண்டுகோள்.... எம்மையும் கண் கலங்க வைத்தது.
நிச்சயம் இந்த  வேண்டுகோள், தமிழருக்கு.... பலனளிக்க  வேண்டும்.

இல்லையேல்... எம் சொந்த பந்தங்களை, அன்புக்கு  உரியவர்களை  பிரிய நேரிடும்.

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

மீம்ஸ்களின் அரசனை அழவைத்து கண்ணீருக்குள்ளாள் பார்க்க வைத்து விட்டனர் .

Share this post


Link to post
Share on other sites
31 minutes ago, பெருமாள் said:

மீம்ஸ்களின் அரசனை அழவைத்து கண்ணீருக்குள்ளாள் பார்க்க வைத்து விட்டனர் .

பெருமாள்..... அந்த   மீம்ஸ் அரசனின்.... வேண்டுகோளை,  
தமிழக மக்கள்,  புறக்கணிக்க.. மாட்டார்கள் என, நம்புவோம். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஆடல்கலை பற்றி தென்னன் மெய்மன்.  
  • ஆபிரிக்க மக்கள் மீது, கொரோனா தடுப்பூசியை சோதிக்க அனுமதிக்க முடியாது- உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை ஆபிரிக்க மண்ணில் அந்நாட்டு மக்களுக்குப் பரிசோதித்துப் பார்ப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, இனவெறி பிடித்துள்ள சில ஆய்வாளர்களுக்கு இதுபோன்ற எதேச்சதிகார புத்தி மாறவேண்டும் என ஜெனிவாவில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “சில இனவெறி (பிரான்ஸ் ஆய்வாளர்கள் இருவர்) பிடித்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை ஆப்பிரிக்க மக்களின் உடலில் செலுத்திப் பரிசோதிக்க ஆலோசனை தெரிவிக்கிறார்கள். ஆபிரிக்க மண்ணும் மக்களும் ஒருபோதும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி மருந்துகளை பரிசோதனை செய்யும் கூடமாக இருப்பதை அனுமதிக்க முடியாது. ஒரு தடுப்பூசியைப் பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு என்ன வழிமுறைகளை, விதிமுறைகளைக் கடைப்பிடிக்கக் கூறியுள்ளதோ அதை உலகச் சமூகம் கடைபிடிக்க வேண்டும். அது ஆபிரிக்காவாக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் சரி விதிமுறைகள் அனைவருக்கும் ஒன்றுதான். முதலில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற தங்கள் ஏதேச்சதிகார மனப்பாங்கை நிறுத்த வேண்டும். ஆப்பிரிக்க மக்கள் மீது தடுப்பூசிகளை பரிசோதிக்கும் ஆலோசனைகள் என்பது இனவெறி பிடித்த வார்த்தைகள். இதைக் கடுமையாக எதிர்ப்பதோடு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அதுபோன்ற, தடுப்பூசிகளை ஆபிரிக்க மண்ணில் மட்டுமல்லாது எந்த நாட்டிலும் பரிசோதிக்கவும் அனுமதிக்கமாட்டோம். மனிதர்களை மனிதர்களாக நடத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/ஆபிரிக்க-மக்கள்-மீது-கொர/
  • (நா.தனுஜா) தற்போதைய நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை மழுங்கடித்து, ஏகாதிபத்தியவாதத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது. இத்தருணத்தில் அரசியல்சார் நலன்களை அடைய முயற்சிப்பது வரவேற்கத்தக்கதல்ல மாறாக மக்களின் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியிருக்கிறார். கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டுமக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் இன்று செவ்வாய்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தற்போது நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சி கண்டிருப்பதுடன், மக்களின் அன்றாட வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்திருக்கிறது. விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைத் தொடரமுடியாத நிலைக்குத்தந தள்ளப்பட்டுள்ளனர். இனிவரும் காலத்தில் பாரியதொரு உணவுப்பொருள் தட்டுப்பாடொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதற்கான ஜீவனோபாய மார்க்கங்கள் அனைத்தும் முடங்கிப்போயிருக்கின்றன. எனவே இத்தகையதொரு நெருக்கடியில் அரசாங்கம் நாட்டுமக்கள் தொடர்பில் சிந்தித்து, அவர்கள் வாழ்வதற்கான வழிவகையொன்றை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். ஒரு மனிதன் வாழ்வதற்கான அன்றாட வாழ்க்கைச்செலவு பெருமளவில் அதிகரித்திருக்கையில், சிறியதொரு தொகைப்பணத்தை வழங்கி அவர்களது தேவைகளை ஈடுசெய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனினும் தற்போதைய நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை மழுங்கடித்துஇ ஏகாதிபத்தியவாதத்தை நிலைநாட்டுவதற்கா முயற்சிகள் இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது. இத்தருணத்தில் அரசியல்சார் நலன்களை அடைய முயற்சிப்பது வரவேற்கத்தக்கதல்ல மாறாக மக்களின் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். https://www.virakesari.lk/article/79488
  • தலைவா என்ன தலைவா இப்படி பிய்த்து உதறிவிட்டியள்.. பாலியாத்தில் கல்லுமணல் சளசளவென்று ஒலி எழுப்ப உதிர்ந்த விழுந்த சருகுகள் ஆற்றின் மேல் மிதந்தும் நெளிந்தும் வளைந்தும் அலைமகளோடு விளயாட ஆத்துநீர் ஆர்ப்பரித்து ஓடியதுபோல் தமிழ்மகளை உங்கள் கவிதையில் தவழவிட்டுள்ளீர்கள்..  யாழ்மேல் உங்கள் அன்பும் பிரியமும் உங்கள் கவிதைகளில் நிறைந்து வழியக்கண்டோம்.. ஊர் ஊராய் போய் அரச சபைகளில் யான் பாடிப்பெற்ற பொன்னையும் மணியையும் அத்தனையையும் உங்கள் தமிழ்கண்டு மகிழ்ந்து தந்துவிட்டேன் புலவரே..  நீர் வாழ்க.. நின் தமிழ் வாழ்க..