Sign in to follow this  
புரட்சிகர தமிழ்தேசியன்

கோரோனோ : சீனாவை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள்.!

Recommended Posts

கொரோனாவால் வெளியான உண்மை.. சீனாவை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள்

china5464-1585200313.jpg

பெய்ஜிங்: இத்தனை காலமாக உலகிற்கு எவ்வளவு பெரிய தீங்கை சீனா இழைத்து வந்துள்ளது என்பதை செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்கள் தற்போது, அம்பலமாக்கி உள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அல்லாடிக் கொண்டிருக்கிறது. இது முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்துதான் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. இதையடுத்து அந்த பிராந்தியம் முழுக்க சீல் வைக்கப்பட்டு உள்ளே, யாரும் அனுமதிக்கவில்லை. வெளியேயும் யாரையும் விடவில்லை.இந்த நிலையில்தான், தலைநகர் பீஜிங், தொழில்துறை நகரமான ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

இதையடுத்து, தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகக் கூடிய நச்சுப்புகை மிகமிகக் குறைந்து விட்டது. நிறைய மாசு அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடை சீனா வெளியிட்டு வருவதாக அமெரிக்க இதற்கு முன்பாக குற்றஞ்சாட்டி இருந்த போதெல்லாம் அதை மறுத்து வந்தது சீன அரசு.

சில ஆய்வுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் மொத்த அளவை விடவும் சீனா அதிகமாக வெளியிடுவதாக குற்றம்சாட்டி வந்தனர். புகை குறைவு இத்தனை நாட்களாக இதை சீனா மறுத்து வந்த நிலையில், இதை உண்மை என்று கூறும் அளவுக்கான ஒரு செயற்கைக்கோள் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த படம் 2019 டிசம்பர் 20ஆம்  தேதி மற்றும் இந்த நோய் பாதிப்பு உச்சத்தில் இருந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் எடுக்கப்பட்டது. இரு படங்கள் இந்த இரு நாட்களிலும், சீனாவில் நைட்ரஜன் டை ஆக்ஸைடு எந்த அளவுக்கு மாறுபட்டு இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.

தற்போது அங்கு புகைமூட்டம் இல்லாமல் தெளிவான நிலை காணப்படுகிறது. ஆனால் டிசம்பர் மாதத்தில் புகை மிக அதிகமாக, செயற்கைக்கோள் படத்தில், சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கிறது. இயல்பு நிலை இந்த இரு படங்களையும் பார்க்கும்போது சீனாவில் எந்த அளவு தொழிற்சாலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் புரிகிறது.

அதேநேரம் புகை வெளியிடவில்லை என்று பொய் சொல்லி தப்பிக்க முடியாது என்பதும் உறுதியாகி உள்ளது. சீனாவில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா நிலை கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் சீனாவிலும், இத்தாலியிலும் காற்று மாசு அளவு வெகுவாகக் குறைந்தது போலவே, அமெரிக்காவிலும் நடந்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் சென்டினல் -5 பி செயற்கைக்கோளின் டேட்டாவை ஆதாரமாக கொண்டு, வெளியாகியுள்ள படங்கள், நியூயார்க், சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் வளி மண்டலத்தில் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு குறைந்துள்ளது.

https://tamil.oneindia.com/news/international/china-satellite-images-shows-how-coronavirus-changes-it-s-pollution-380909.html

Share this post


Link to post
Share on other sites

கிந்தி மற்றும் ஆரிய பிராமணர்    மற்றவரை முட்டாள்களாக நினைக்கிறார்கள்.

100 வீதம் இயங்கும் வேளையிலும், 100 வீதம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வேளையிலும் எந்த நாட்டில் எடுத்தாலும் இப்படடிதான் இருக்கும் என்பதை மற்றவர் சிந்திக்கமாட்டார்கள் என்று சென்சேஷனலாக செய்தி.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this