Jump to content

கோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்


Recommended Posts

கோவிட் சம்பந்தப்பட்ட பல உதவிகளை மேற்குலக நாடுகள் தவிர்க்க ஆரம்பித்துள்ளன. 

இதிலும் அரசியலும், பொருளாதார நலன்களும் இணைந்துள்ளன. 

In a blog post last week, EU chief diplomat Josep Borrell warned that there is “a geo-political component including a struggle for influence through spinning and the ‘politics of generosity’.”

“China is aggressively pushing the message that, unlike the US, it is a responsible and reliable partner,” he wrote. "Armed with facts, we need to defend Europe against its detractors."

https://www.bbc.com/news/world-europe-52092395

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

ஆசியா மிக நீண்ட கால பொருளாதார மந்த நிலைக்குள் தள்ளப்படும்,இரண்டு தசாப்காலத்தில் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கா சந்திக்கலாம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தின் பொருளாதார வீழ்ச்சி 2.1 வீதமாக வீழ்ச்சியடையும்,ஆசியாவின் பொருளாதாரம் 0.5 வீதமாக வீழ்ச்சியடையலாம் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2.3 வீதமாக வீழ்ச்சியடையலாம் எனவும் தெரிவித்துள்ள உலக வங்கி சீனாவின் பொருளாதார வளர்ச்சி 0.1 ஆக குறைவடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

உலகின் அனைத்து நாடுகளும பொருளாதார துயரத்தினை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாதது என குறிப்பிட்டுள்ள உலக வங்கி முழு ஆசிய பசுவிக் பிராந்தியமும் மிக மோசமான தாக்கத்தை எதிர்கொள் தயாராகவேண்டும் என தெரிவித்துள்ளது.

 

Link to comment
Share on other sites

மிருசுவிலில் ஏழு தமிழர்களை கொலை செய்த இராணுவ வீரருக்கு, கொரோனா பாதுகாப்பு கருதி விடுதலை அளித்தார், சிங்கள தேசத்தின் சனாதிபதி. இது பல மனிதாபிமான அமைப்பின் கண்களில் தெரிந்துள்ளது. 

கோத்தா போன்று, பலரும் உலகளாவிய ரீதியில் தமது பலத்தை பலப்படுத்த முனைகிறார்கள். 

ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரி நாட்டை ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்துள்ளது. வேறு நாடுகளும் இவ்வாறு இந்த அசாதாரண நிலைமையை பாவித்து தமது இருப்பை இறுக்கமாக்க முனைவார்கள். 

அமெரிக்காவில் கூட பல மாநிலங்களில் கருத்தடை சத்திரசிகிச்சையை அவசரதேவை இல்லை என்று அவற்றை நிறுத்தினார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் அதை மறுத்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இவற்றை விட பாரிய மாற்றங்களும் நிகழலாம், எல்லாம் அந்த தொற்று எவ்வாறு தாக்கும், நீடிக்கும், அழிக்கும் என்ற காரணிகளில் தங்கியுள்ளது.  

Link to comment
Share on other sites

உலகில் தற்பொழுது வங்கிகளின் பங்குகள் சரிந்த நிலையில் அந்த வங்கிகளை சீனாவையோ வேறு யாருமோ வாங்கிவதை நாடுகள் விரும்பமாட்டா. நாடுகளின் விமான சேவையும் அவ்வாறே. 

===================  ====================================================

தினத்தந்தி: "வங்கிகள் இணைப்பு"

10 பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், வங்கிகள் ஒருங்கிணைப்பை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 2வது ஒருங்கிணைப்பாக 10 பொதுத்துறை வங்கிகள் 4 பெரிய வங்கிகளுடன் இன்று இணைக்கப்படுகின்றன என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றும் திட்டம் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் என ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஏற்கெனவே அறிவித்திருந்தன. தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வங்கி இணைப்பு திட்டம் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி வங்கிகள் இன்று இணைக்கப்படுகின்றன.

முன்னதாக ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில், வங்கி கிளைகள் இணைக்கப்பட்டாலும், ஊழியர்கள் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என்று தெளிவுபடுத்தி இருந்தது.

எந்தெந்த வங்கிகள் எதனுடன் இணைக்கப்படுகின்றன?

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் , யூனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைகின்றன. இதன்மூலம் பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்து 2வது பெரிய வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி மாறுகிறது. சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்படுகிறது என்கிறது தினகரன் நாளிதழ்.

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கி, கார்ப்பொரேஷன் வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இந்த இணைப்பின்மூலம், பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய 6 இணைப்பு வங்கிகளும், தனித்து இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவையும் என 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த இணைப்பு நிகழ்ச்சியை நடத்த வங்கிகள் முடிவு செய்துள்ளன என, வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Link to comment
Share on other sites

சீனாவின் வல்லரசு கனவை நனவாக்குமா இந்த தொற்று ?

முதலாம் மற்றும் இரண்டாம் உலக மகா யுத்தங்களின் பின்னராக, அமெரிக்க நாடு ஒரு தனிப்பெரும் வல்லரசாக மாறியது. வல்லரசு என கூறும்பொழுது மூன்று துறைகளிலும் - இராணுவம், அரசியல், பொருளாதாரம். 

இதே அணுகுமுறையை தற்பொழுது சீன 22ஆம் நூற்றாண்டிற்கு அமைய எடுத்துவருகின்றது. 

- அமெரிக்க டாலர்களை அதிகளவில் கை இருப்பில் கொண்டுள்ளது 
- அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் பங்கு சந்தைகளில் முதலீடு செய்தல் 

அத்துடன்,  அன்றும் இன்றும் அமெரிக்க நாடு செய்யும் அதே வித்தையையும் செய்து வருகின்றது :

- உங்களுக்கு மருந்து வேண்டுமா ? நான் தருகின்றேன். 
- உங்களுக்கு உணவு  வேண்டுமா ? நான் தருகின்றேன். 
- உங்களுக்கு ஆயுதம் வேண்டுமா ? நான் தருகின்றேன்.
- உங்களுக்கு பணம்   வேண்டுமா ? நான் தருகின்றேன். 
 
இறுதியில், நாட்டின் சுய பொருளாதாரத்தை இல்லாமல் இல்லை சுருக்கி நவீன பொருளாதார அடிமையாக்கி விடலாம். 
 

Link to comment
Share on other sites

அரசுகள் : மக்களுக்கு பணம் தருவதா? இல்லை நிறுவனங்களுக்கு பணம் தருவதா?? 

மேற்குலக நாடுகளில் பொருளாதாரம் முடக்கப்பட்ட நிலையில், அரசுகள் தமது பொருளாதாரத்தை தக்க வைக்க இரு முக்கிய அணுகுமுறைகளை எடுத்துவருகின்றன. 

1. நிறுவனங்கள் வேலை நீக்கம் செய்து, ஊழியர்கள் அரசிடம் வெளியில்லாதவர் காப்புறுதியை பெறுதல் 
2. நிறுவனங்களுக்கு 75% வீதம் வரை ஊழியர்களுக்கு அரசு பணம் தந்து வேலைகளை தக்க வைத்தல் 

அமெரிக்க நாடு முதலாவது முறையையும் ஐரோப்பிய நாடுகள் இரண்டாவது முறையையும் அணுகியுள்ளன. 

முதலாவது முறையில், மக்களை அரசு பலப்டுத்துவதாயும், இரண்டாவது முறையில் நிறுவனங்களை மக்களின் வரிப்பணத்தில் பாதுகாக்கப்படுவதாக பார்க்கப்படுகின்றது.  

Link to comment
Share on other sites

சிக்கலில் பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம்

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையை கொரோனா வைரஸின் காரணமாக பிரான்ஸ் எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டின் நிதி அமைச்சர் புருனோ லு மைர் தெரிவித்துள்ளார்.

2020இல் பிரான்சின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதம் குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது அது கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தலால், 2009ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலையின் போது ஏற்பட்ட -2.2 வீழ்ச்சியை விடவும் மோசமான நிலையை அடையும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/live/global-52179116

Link to comment
Share on other sites

மாகாணங்களும் மாநிலங்களும் மத்திய அரசுகளும் 

நாடுகளுக்குள் பணக்கார மாநிலங்கள் உள்ளன. மத்திய அரசுகள், பணத்தை பின்தங்கிய மாநிலங்களுக்கு வழங்கி வந்துள்ளது. இந்தியாவில் தமிழகத்தையும் அமெரிக்காவில் கலிபோர்னியாவையும் குறிப்பிடலாம். வேறு நாடுகளுக்குள்ளும் இந்த சிக்கல் உள்ளது. 

தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காமல் தவிர்ப்பதை, பல செய்திகளில் ஒன்றாக கடந்து செல்ல முடியாது. இந்தியாவின் முன்னேற்றத்திற்காக தமிழகம் தன்னுடைய அடிப்படை உரிமையான நிவாரணத் தொகைக்காக போராடிக்கொண்டிருக்கிறது.  ஆக, 1947இல் இணைந்து என்ன பிரயோசனம் என மக்கள் கேட்பதில் நியாயம் இல்லை என்றாலும், கேட்பவர்கள் பக்கமும் நியாயம் உள்ளது.  

ஐ,நா.வின் கோட்ப்பாடுகளின் படி , போர்க்காலங்களில் மருத்துவ உதவிகளை தடுப்பது என்பது போர்க்குற்றமாகவே பார்க்கப்படும். அப்படியான முக்கியத்துவம் வாய்ந்தது மருத்துவ சேவை. மக்கள் தங்களுக்கான மருத்துவ உதவியை பெற்றுக் கொள்வது என்பது உணவைப் போல, அடிப்படை மனித உரிமையாகும். இதுவே ஒரு தேசிய இனம் எனில் அது தேசிய இன உரிமையாகும். இதை ஈழத்தமிழர்கள் சிங்கள இனவாதிகளின் கைகளில் கண்டவர்கள். இனப்படுகொலையை சந்தித்தவர்கள்.  

ஆக, இந்த தொற்றின் பாதிப்பு எவ்வளவாக மாநிலங்களை நாடுகளில் பாதிக்கின்றதோ, நாடுகளுக்குள் அரசியல் ரீதியாக பிளவுகள் ஏற்படலாம். 

இல்லை, பிளவுகள் வலுப்பெறலாம்.

Link to comment
Share on other sites

உலகம் தற்போது இரண்டு Pandemic (பண்டமிக்)ளை சமாளித்து வருகின்றது. ஒன்று மருத்தவ ரீதியான CoVID19 Pandemic மற்றையது அதன் விளைவாக வருகிற Economic impact of Pandemic உலகபொருளாதார மந்த நிலை மற்றும் தொடர் மந்த நிலை ( Economic depression). காரணம், இன்றைய உலகப்பொருளாதாரம் ஒரு சங்கிலி பின்னல். ஒன்று சரிந்தால் சில நாடுகள் ஆடுகள். பல நாடுகள் ஆட்டம் கண்டால், உலக பொருளாதாரம் படுக்கும் 😔


பெரும்பாலும் இந்த பொருளாதார தாக்கமும் கொரோனா, அதன் பரவல், கட்டுப்படுத்தல் மற்றும் தடுத்தல், போலவே கணித்துச் சொல்ல முடியாத அளவுக்கு பெரும் நெருக்கடி நிலை ஒன்றுக்கு நம்மை இட்டுச் செல்லும்.‌

"இப்போதைய வணிக நிலையை கணிக்க, பொருளாதார விளைவுகளை எதிர்வு கூற, நிதி நிலையின் உண்மையான மற்றும் எதிர்கால விளைவுகளை புரிந்து கொள்ள நமக்கு இன்னும் காலம் வேண்டும்" என்று கூறுகிறார் பொருளாதார நிபுணர் ஷில்லர். அவர் சொல்லுவது போல "வைரஸும் பொருளாதாரமும் வேறுபட்டவைகள், ஆனால் அவைகள் இன்று பிரிக்க முடியாத இரட்டையர்கள் போல மாறி இருக்கின்றன". இது தான் உண்மை. இவை நாமெல்லாம் அனுபவிக்கப் போகும் நெருக்கடியை கட்டியம் கூறுகின்ற வசனங்கள்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை குறித்த கருத்துக்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல "இது போல் வேறு எந்த நெருக்கடியும் இல்லை”என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா வே கவலைப் படுகிறார். "சர்வதேச நாணய நிதியத்தின் வரலாற்றில் இது போல உலகப் பொருளாதாரம் ஸ்தம்பிக்கப்படுவதை ஒரு போதும் நாங்கள் கண்டதில்லை,". "இது இதற்கு முன் ஏற்பட்ட "பெரும் மந்த நிலை நெருக்கடியை" (Great Depression)ஐ விட மோசமானது." என்று அழுது புலம்புகிறார், சூடமேற்றி சத்தியமும் செய்கிறார். "இது போல வெறொன்று இல்லை" என்பதே இங்கே ஹேலைட்.

The Great Depression "பெரும் மந்தநிலை" என்பது இதற்கு முன் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட மிகப்பெரும் பொருளாதார மந்த நிலையாகும், இது 1930 களில் அமெரிக்காவில் தொடங்கினாலும் பெரும்பாலான உலக நாடுகளில் 1929 இல் தொடங்கிய‌ இதன் தாக்கம் 1930 களின் பிற்பகுதி வரை நீடித்ததாக வரலாறு சொல்கிறது. இதுவே இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு வழி சமைத்தது என கூறுபவர்களும் உள்ளார்கள். 

தனிநபர் வருமானம், வரி வருவாய், இலாபங்கள் மற்றும் பொருட்கள் சேவைகளின் விலைகள் போன்ற சர்வ பொருளியல் அம்சங்களும் பாரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்தன. சர்வதேச வர்த்தகம் 50% க்கும் மேலாக சரிந்தது. அமெரிக்காவில் மட்டும் வேலையின்மை 23% ஆக அதிகரித்தது. சில நாடுகளில் இது 33%தை தொட்டு நின்றது. அதாவது உலக மக்கள்  கையில் மூன்றில் ஒருவர் வேலையில்லாதவராக இருந்தார்! பயிர் விளைச்சல் விலைகள் சுமார் 60% வீழ்ச்சியடைந்ததால் விவசாய சமூகங்களும், கிராமப்புறங்களும் கூட இதனால் பாதிக்கப்பட்டன. இப்படி உலக பொருளாதாரம் இதற்கு முன்னரும் பின்னரும் பெரும் பின்னடைவைச் சந்தித்தது இல்லை எனும் அளவிற்கு அதன் தாக்கம் இருந்தது. ஆனால் வரலாறு எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. மீண்டும் மீண்டும் சம்பவங்களை மீட்டிப் பார்த்துக் கொள்கிறது.

Link to comment
Share on other sites

சிறுபான்மை மக்களும் நாடுகளும்

மேலைத்தேய நாடுகளில் பெரிய நகரங்களிலேயே சிறுபான்மை மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். இந்த வாழ்வியல் ஊடாக, அவர்களின் மருத்துவ வசதிகளிற்கான சேவைகள் அதிகமாக கிடைப்பது இல்லை. அப்படி சேவைகள் இருந்தும், பொருளாதார வசதியின்மை மற்றும் அது தரும் நெருக்கடிகளால் மருத்துவ சேவைகளை பெறாமலும் போகின்றார்கள். பலருக்கு காப்புறுதி வசதிகள் இல்லை. மருந்துகள் வாங்க முடியாத நிலை. 

இதனால், பல நாடுகளிலும் இன்றைய கோவிட் 19னால் இறப்பவர்கள் சிறுபான்மை மக்களாகவே இருக்கின்றார்கள். 

அடுத்து, அரசியல் ரீதியாகவும் சிறுபான்மை மக்கள் தமது நாடுகளில் ஈடுபடுவதும் இல்லை. வரும் தேர்தல்களில் மேலும் குறைந்த அளவில் சிறுபான்மை மக்கள் வாக்களிக்கும் சாத்தியங்கள் உண்டு. இதனால், மேலும் சிறுபான்மை மக்கள் சார்ந்த தேவைகள் புறக்கணிக்கப்படலாம். 

ஆகவே, சிறுபான்மை மக்களின் தலைவர்கள் இவை பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுதல் வேண்டும். குடும்பங்கள் மத்தியிலும் மருத்துவ, பொருளாதார, அரசியல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த தலைமுறை மேலும் சிக்கலான புறக்கணிக்கப்பட்ட சமூகமாக மாறிவிடும். 

Link to comment
Share on other sites

கொரோனா காலத்தில் தங்கம் விலை ஏற வேண்டும். 
தங்கம் ஏறினால் அமெரிக்க டாலர் பொதுவாக குறைவதுண்டு 

ஆனால், இப்பொழுது அந்த நிலை இல்லை. அமெரிக்க டாலர் இலங்கை ரூபாவிற்கு எதிராகவும் ஏறி வருகின்றது  

 

Link to comment
Share on other sites

அடுத்த சில வாரங்களில் உலக தலைவர்கள் எடுக்கும் முடிவுகள் உலகை மாற்றும் :

1. திறக்கப்படும் நகரங்கள், நாடுகள் : முழுமையாக தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையில், பொருளாதார சரிவை தடுக்க பல நகரங்கள், நாடுகள் திக்கப்பட வேண்டிய நிலை. இது, அந்தந்த நாடுகளின் அரசியல் பொருளாதார எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடும் 

2. பொருளாதாரம் றோற்றுப்போனால், நாடுகளில் இரானுவ ஆட்சி தலை தூக்கும் சாத்தியங்களும் உள்ளன. 

3. மாநில - மத்திய ஆட்சி முறைகள் சவால்கள் நிறைந்தவையாகவும் விமர்சனங்களுக்கும் உள்ளாகும். கலிபோர்னியா முதல் தமிழகம் வரை பிரிவினை வாத கோட்பாடுகள் வலுக்கலாம். இல்லை, மாநில அதிகாரத்தை மத்திய அரசுகள் பறிக்க எண்ணலாம். 

4.   தொழில்நுட்பம் மூலம் கோவிட் 19இனை கண்காணிப்பது எனக்கூறி அரசுகள் இலகுவாக சகலரையும் கண்காணிக்க ஆரம்பிக்கும். முன்பு , எட் ஸ்னோடன் கூறுயது போன்று இரகசியமாக பேணப்பட்ட இவை, தற்பொழுது பகிரங்கமாக செய்யப்படுகின்றன. 

5. ஆக, உலகம் சோசலிச பாதையில் பயணிக்க ஆரம்பிக்கலாம். சந்தை பொருளாதாரம் மக்களை பாதுகாக்க முடியாத ஒன்றாக போய்விட்டால். ஆனால், சோஷலிச நாடுகளின் பொருளாதாரம் கூட சரிந்தே இருக்கும். 

6.  வேலை இல்லாத சமூகங்களும் இலாபத்தை மட்டுமே கொண்ட நிறுவனங்களுக்கும் இடையில் பொருளாதார கொள்கை மாற்றங்கள் ஏற்படலாம். 

7. தமது நாட்டின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருளாதாரம் நாடுகள் இடையே அதிகரிக்கும். சீன போன்ற நாடுகளில் தங்கி இருப்பதை குறைக்க நாடுகள் விரும்பும். 

8. அடுத்த தலைமுறையோ, சுற்றுசூழலை நோக்கிய திட்டங்களை அரசுகள் முன்னெடுக்க போராடக்கூடும். 

Link to comment
Share on other sites

மீள உயிர் பெறும் பங்கு சந்தைகள் சொல்ல வருவது என்ன ?

பங்குனி மாத நடுப்பகுதியில் பாரிய சரிவை சந்தித்த உலக பங்குசந்தைகள், கடந்த வாரம் அதில் குறிப்பிடத்தக்க மீட்சியை கண்டுள்ளன. 

- கொவிட் 19 க்கான தடுப்பூசியை நிறுவனங்கள் கண்டுபிடிக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன 
- பல நகரங்களும் நாடுகளும் மீண்டும் படிப்படியாக பொருளாதரத்தை திறக்கவுள்ளன 

இந்த இரண்டு  செய்திகளும் அவற்றுக்கான காரணிகளாக உள்ளன. 

இருந்தாலும், சந்தைகள் யதார்த்தத்தை விட அதிகளவில் மீண்டுள்ளன என்பது பொதுவான கருத்தாக உள்ளது. 

- மக்களிடம் பொருட்களை வாங்க போதிய பணம் இல்லை. நாடுகளுக்கு இடையான வர்த்தகங்கள் பழைய நிலைக்கு மீள மாதங்கள் எடுக்கும். 
- பல ஆண்டுகளாக வளர்ந்த உலக பொருளாதர வளர்ச்சி துடைத்து எறியப்பட்டுள்ளது. 
- நாடுகள் மக்களுக்கும் வர்த்த நிறுவனங்களுக்கும் பல நிதி உதவிகளை செய்து வருகின்றன 

ஆனாலும், சந்தைகள் எப்போழுதும் எழுத உள்ள கதையை தீர்க்க தரிசனமாக கூறும் வல்லமை கொண்டவை. 

Link to comment
Share on other sites

On 12/4/2020 at 17:44, ampanai said:

சிறுபான்மை மக்களும் நாடுகளும்

மேலைத்தேய நாடுகளில் பெரிய நகரங்களிலேயே சிறுபான்மை மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். இந்த வாழ்வியல் ஊடாக, அவர்களின் மருத்துவ வசதிகளிற்கான சேவைகள் அதிகமாக கிடைப்பது இல்லை. அப்படி சேவைகள் இருந்தும், பொருளாதார வசதியின்மை மற்றும் அது தரும் நெருக்கடிகளால் மருத்துவ சேவைகளை பெறாமலும் போகின்றார்கள். பலருக்கு காப்புறுதி வசதிகள் இல்லை. மருந்துகள் வாங்க முடியாத நிலை. 

இதனால், பல நாடுகளிலும் இன்றைய கோவிட் 19னால் இறப்பவர்கள் சிறுபான்மை மக்களாகவே இருக்கின்றார்கள். 

அடுத்து, அரசியல் ரீதியாகவும் சிறுபான்மை மக்கள் தமது நாடுகளில் ஈடுபடுவதும் இல்லை. வரும் தேர்தல்களில் மேலும் குறைந்த அளவில் சிறுபான்மை மக்கள் வாக்களிக்கும் சாத்தியங்கள் உண்டு. இதனால், மேலும் சிறுபான்மை மக்கள் சார்ந்த தேவைகள் புறக்கணிக்கப்படலாம். 

ஆகவே, சிறுபான்மை மக்களின் தலைவர்கள் இவை பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுதல் வேண்டும். குடும்பங்கள் மத்தியிலும் மருத்துவ, பொருளாதார, அரசியல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த தலைமுறை மேலும் சிக்கலான புறக்கணிக்கப்பட்ட சமூகமாக மாறிவிடும். 

இனரீதியான சிறுபான்மை மக்களையே  நீங்கள் “சிறுபான்மை மக்கள்” என்று இங்கு குறிப்பிடுவதாக தெரிகிறது. நீங்கள் குறிப்பிடும் எல்லா தன்மைகளையும் போக்குகளையும் வறியவர்களான பெரும்பான்மை இனத்தவரும் கொண்டிருப்பதை நீங்கள் காணமுடிகிறதல்லவா? அதே வேளை, கல்வியறிவும், நல்ல வருமானமும், மத்தியதர அல்லது மேல்தர வாழ்க்கைத்தரமும் கொண்ட சிறுபான்மை இனத்தவரிடம் இந்த தன்மைகளும் போக்குகளும் காணப்படுவதில்லையே?

ஆகவே, இனரீதியாக “சிறுபான்மை”, “பெரும்பான்மை” என்ற குழுமங்களாக பார்க்காமல், வறியவர்கள் (பெரும்பான்மையானவர்கள்), வசதிவாய்ப்புள்ளவர்கள் (சிறுபான்மை) என்ற குழுமங்களாக பார்ப்பதே இங்கு பொருத்தமாக தெரிகிறதல்லவா?

Link to comment
Share on other sites

1 hour ago, கற்பகதரு said:

இனரீதியான சிறுபான்மை மக்களையே  நீங்கள் “சிறுபான்மை மக்கள்” என்று இங்கு குறிப்பிடுவதாக தெரிகிறது. நீங்கள் குறிப்பிடும் எல்லா தன்மைகளையும் போக்குகளையும் வறியவர்களான பெரும்பான்மை இனத்தவரும் கொண்டிருப்பதை நீங்கள் காணமுடிகிறதல்லவா? அதே வேளை, கல்வியறிவும், நல்ல வருமானமும், மத்தியதர அல்லது மேல்தர வாழ்க்கைத்தரமும் கொண்ட சிறுபான்மை இனத்தவரிடம் இந்த தன்மைகளும் போக்குகளும் காணப்படுவதில்லையே?

ஆகவே, இனரீதியாக “சிறுபான்மை”, “பெரும்பான்மை” என்ற குழுமங்களாக பார்க்காமல், வறியவர்கள் (பெரும்பான்மையானவர்கள்), வசதிவாய்ப்புள்ளவர்கள் (சிறுபான்மை) என்ற குழுமங்களாக பார்ப்பதே இங்கு பொருத்தமாக தெரிகிறதல்லவா?

நீங்கள் கூறுவது சரி, அதை ஒரு நாட்டின் தலைவராக பார்க்கும்பொழுது. அப்பொழுது நாட்டில் பெரும்பான்மை மக்கள் வறியவர்கள். 

ஆனால், எனது பார்வையானது, பெரும்பான்மையான வறிய மக்கள் சிறுபான்மை மக்கள் என்பது. பெரும்பான்மை வெள்ளை மக்கள் மத்தியியில் வறிய மக்கள் வீதம் குறைவு, சிறுபான்மை மக்களுடன் ஒப்பிடும்பொழுது. 
 

Link to comment
Share on other sites

இலங்கையின் பொருளாதாரமும் கோவிட் 19 ம்

உலக பொருளாதாரம் 2023 ஆரம்பித்திலேயே மீள் எழும் என்பது பரவலான எதிர்பார்ப்பு. உலக பொருளாதார வளர்ச்சி 3.5% ஆக இருந்த 2020 ஆரம்பம், 1.5%ஆக  குறைய உள்ளது. ஆசியாவின் பொருளாதாரம் 6.4% த்தில் இருந்து 2.1%மாக குறையும் என கணிக்கப்படுகின்றது. 

இலங்கையின் பொருளாதாரம் பல காரணிகளில் தங்கி உள்ளது, குறிப்பாக : 
 - உள்நாட்டின் உற்பத்தி திறன் 
-  வெளிநாட்டு முதலீடு 
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு 

ஏற்கனவே சரிந்து வந்த இலங்கையின் பொருளாதாரம், வரும் மூன்று ஆண்டுகளில் பெரும் சிக்கலை சந்திக்கலாம். 

சர்வதேச நாணய நிதியம் 2020 ஆரம்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் 2.8% மாக 2020இல் வளரும் என கூறி இருந்தது. தற்பொழுது அது 1% இல்லை அதற்கும் குறைவாக இருக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது. 

அதேவேளை, இந்தியா 5.3%மாகவும் சீன 5.2%மாகவும் இருக்கலாம்.  

வேலைவாய்ப்புகள் 

வேலை செய்பவர்கள்  - 8 மில்லியன்கள் 
தனியார் துறை             - 3.4  மில்லியன்கள் 
சுய தொழில்                  - 3.2 மில்லியன்கள் 
அரச துறை                     - 1.5 மில்லியன்கள் 

சுய தனிமைப்படுத்தலால் சுய வேலைவாய்ப்புகள் அதிகமாகவும், தனியார் துறையும் பாதிக்கப்படும். அரச வேலை துறைகளுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவுகளும் சவாலாக இருக்கும். 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணம் 

அண்ணளவாக 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை பெரு வந்தது. கிட்தத்தட்ட 85 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்ட நாட்டின் மொத்த உற்பத்தி திறனில் இது குறிப்பிட்ட வீதம். இதன் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் இருக்கும். 

பொருளாதார உதவிகள் 

இந்த நெருக்கடிகளில் இருந்தும் கடன் சுமைகளில் இருந்து மீளவும், இலங்கை பெருமளவில் பொருளாதார உதவிகளை எதிர்பார்த்து இருக்கும். ஆனால், உதவிகளை வழங்கும் நாடுகளும் அமைப்புக்களும் கூட சவால்கள் நிறைந்த நாடுகளுக்குள் இலங்கையை ஒரு நடுத்தர நாடாக நினைத்து கைவிடாமல் இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

57 minutes ago, ampanai said:

சர்வதேச நாணய நிதியம் 2020 ஆரம்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் 2.8% மாக 2020இல் வளரும் என கூறி இருந்தது. தற்பொழுது அது 1% இல்லை அதற்கும் குறைவாக இருக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது. 

https://www.lankabusinessonline.com/moodys-places-sri-lankas-b2-ratings-on-review-for-downgrade/

Apr 17, 2020 (LBO) – Moody’s Investors Service (“Moody’s”) has today placed the Government of Sri Lanka’s long-term foreign-currency issuer and senior unsecured B2 ratings under review for downgrade.

Rating Action: Moody’s places Sri Lanka’s B2 ratings on review for downgrade

Singapore, April 17, 2020 — Moody’s Investors Service (“Moody’s”) has today placed the Government of Sri Lanka’s long-term foreign currency issuer and senior unsecured B2 ratings under review for downgrade.

Concurrently, Sri Lanka’s local currency bond and deposit ceilings remain unchanged at Ba2. The Ba3 country ceiling for foreign currency bond and B3 ceiling for foreign currency bank deposits also remain unchanged.

These ceilings act as a cap on the ratings that can be assigned to the obligations of other entities domiciled in the country.

RATINGS RATIONALE / FACTORS THAT COULD LEAD TO AN UPGRADE OR DOWNGRADE OF THE RATINGS 

RATIONALE FOR INITIATING A REVIEW FOR DOWNGRADE ON SRI LANKA’S B2 RATINGS 

ACUTE TIGHTENING IN GLOBAL FINANCING CONDITIONS, ECONOMIC SHOCK, HEIGHTEN SRI LANKA’S LIQUIDITY AND EXTERNAL VULNERABILITY

Link to comment
Share on other sites

 2015 இலிருந்து சீனாவின் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில், அம்பாந்தோட்டையில் 15,000 ஹெக்ரயர் நிலத்தையும் 99 வருடங்களுக்கு  சீனாவிடம் தாரை வார்த்திருக்கிறது சிறிலங்கா.

2015 இல் இலங்கை அரசின் அனைத்துவழி வருமதிகளின் தேறியதொகை 14.8 பில்லியன் ரூபாய்களாக இருக்கும் என்றும், ஆனால் சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளிடம் பெற்ற கடனான 12.3 பில்லியன் ரூபாய்களை அவசரமாகச் செலுத்த வேண்டிய நிலையில் அரசு இருப்பதாகவும் NEWYORK  Times தெரிவிக்கிறது. (அப்போதைய நிலவரம்)

சீனாவின் கடன்தொகை அடைக்க முடியா நிலையை எட்டும்போது,  இலங்கையின் அனுமதியின்றியே சீன இராணுவத்தின் செயற்பாட்டுத் தளமாக  இலங்கைத் தீவுமாறும். அப்போது, இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தாமாகவே ´´ கேரளக் கதகளி´´ ஆடுவார்கள்.

தற்போதைய இலங்கையின் தனிநபர் கடன் 468,613 ரூபாய்கள்.  இப்போது வந்திருக்கும் அரசாங்கம் இந்தத்தொகையை 10 இலட்சமாக வெகுவிரைவில் மாற்றும் என நம்புவோமாக.

https://www.tamilarul.net/2020/04/China-Srilanka-India.html

Link to comment
Share on other sites

உலகமயமாக்கல் - கோவிட் 19ன் பின்னர் 

கோவிட் 19இன் முன்னராக, உலகமயமாக்கப்பட்டதாக இருந்தது உலகம். அந்த உலக மயமாக்கலில், உலக மக்களை வறுமையில் இருந்து மீள் எடுக்கும் முயற்சி இருந்தது. இருந்தாலும், முதல் ஒரு சதவீத பணக்காரர்கள் உலகின் பெரும் செல்வத்தை தம் வசமாக்கி கொண்டார்கள்.   அதில் குறிப்பிடத்தக்க சீனர்களும் இணைந்துகொண்டனர். 

 

Net worth deciles in the United States

 

ஆனால், கோவிட் 19, பல உலக நாடுகள் தங்களின் பொருளாதாரம் இலகுவாக ஆட்டம் கண்டு விட்டதையும், உலக மயமாக்கலில் உள்ள பலவீனங்களையும் அறிந்து கொண்டனர். குறிப்பாக, இந்த தொற்று வேகமாக பரவியமைக்கு ஒரு காரணம் உலக பயணம் / போக்குவரத்துக்கள். 

அத்துடன், உலகம்  பல விலை குறைந்த ஆனால், அத்தியாவசிய பொருட்களுக்கும் சீனாவை நம்பி இருந்தது. அதனால், நாடுகளின் பாதுகாப்பும் பொருளாதாரமும் சடுதியாக கேள்விக்கு உள்ளாகின.  

வரும் காலங்களில், உலகம் சீனாவில் தங்கி இருப்பதை குறைக்கும் என திடமாக நம்பலாம். 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம் மற்றும் வெளிப்புறம்

Link to comment
Share on other sites

நேரடி அன்னிய முதலீடு குறித்து இந்தியா அறிவித்துள்ள புதிய விதிகளை மாற்றி அமைக்குமாறு இந்திய அரசுக்கு சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலையை பயன்படுத்தி அண்டை நாடுகள் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வதை கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சனி அன்று மத்திய அரசு புதிய விதிமாற்றங்களை அறிவித்தது.

அதன்படி இந்தியாவுடன் எல்லயை பங்கிடும் நாடுகள் முதலீடு செய்ய விரும்பினால் மத்திய அரசு வழியாகவே மட்டுமே அதை நடத்த முடியும். நேரடியாக முதலீடு செய்ய முடியாது.

ஏற்கனவே பங்கு விலை சரிந்ததை பயன்படுத்தி சீன மத்திய மக்கள் வங்கி எச்டிஎஃப்சி-யின் பங்குகளை வாங்கியது கவனத்தை ஈர்த்த நிலையில், சந்தர்ப்பவாத அடிப்படையில் மேலும் பல சீன நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை நேரடியாக வாங்கவோ, மேலாதிக்கம் செலுத்தவோ இயலாத வகையில் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

https://www.polimernews.com/dnews/107493/புதிய-விதிகளை-மாற்றிஅமைக்குமாறு-இந்தியஅரசுக்கு-சீனா-கோரிக்கை

இந்தியா போன்று பல நாடுகளும் தங்களின் நிறுவனங்களை சீனா போன்ற நாடுகள் வாங்குவதை தவிர்க்கும் முயற்சிகளில் ஈடுபடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ampanai said:

நேரடி அன்னிய முதலீடு குறித்து இந்தியா அறிவித்துள்ள புதிய விதிகளை மாற்றி அமைக்குமாறு இந்திய அரசுக்கு சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலையை பயன்படுத்தி அண்டை நாடுகள் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வதை கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சனி அன்று மத்திய அரசு புதிய விதிமாற்றங்களை அறிவித்தது.

அதன்படி இந்தியாவுடன் எல்லயை பங்கிடும் நாடுகள் முதலீடு செய்ய விரும்பினால் மத்திய அரசு வழியாகவே மட்டுமே அதை நடத்த முடியும். நேரடியாக முதலீடு செய்ய முடியாது.

ஏற்கனவே பங்கு விலை சரிந்ததை பயன்படுத்தி சீன மத்திய மக்கள் வங்கி எச்டிஎஃப்சி-யின் பங்குகளை வாங்கியது கவனத்தை ஈர்த்த நிலையில், சந்தர்ப்பவாத அடிப்படையில் மேலும் பல சீன நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை நேரடியாக வாங்கவோ, மேலாதிக்கம் செலுத்தவோ இயலாத வகையில் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

https://www.polimernews.com/dnews/107493/புதிய-விதிகளை-மாற்றிஅமைக்குமாறு-இந்தியஅரசுக்கு-சீனா-கோரிக்கை

இந்தியா போன்று பல நாடுகளும் தங்களின் நிறுவனங்களை சீனா போன்ற நாடுகள் வாங்குவதை தவிர்க்கும் முயற்சிகளில் ஈடுபடும் 

https://tamil.goodreturns.in/news/india-should-treats-investments-from-all-countries-equally/articlecontent-pf93319-018655.html

Link to comment
Share on other sites

UBI Universal Basic Income - பொதுவான அடிப்படை வருமானம் - ஒரு நாட்டின் சகலருக்கும் கௌரவத்துடன் வாழ தேவையான அடிப்படை வருமானம் 

பல மேற்குலக நாடுகளில் இது பற்றி சில காலம் விவாதிக்கபப்ட்டு வந்துள்ளது. சில நாடுகளில் பரீட்ச்சார்த்த முறையில் செய்தும் பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போதைய கோவிட் 19ம் வீட்டில் இருக்கும் மக்களும் இதன் தேவையை மீண்டும் முதன்மை படுத்தி உள்ளது. 

ஸ்பெயின் - முதலாவது அவ்வாறான முதல் மேற்குலக நாடாக இருக்கலாம்.   

அதன் வெற்றி தோல்விகளை, அதாவது அதன் மூலம் தாம் சில பாடங்களை படித்து பல மேற்குலக நாடுகளும் இந்த சகலருக்குமான பொதுவான அடிப்படை வருமானம் என்ற திட்டத்தை அமுல் படுத்தலாம். 

இதன் சில நன்மைகள் :
- 18 வயதிற்கு மேலான சகலருக்கும் ஒரு அடிப்படை பணம் மாதம் கிடைக்கும் 
- சகல மக்களின் உணவு, உடை மற்றும் உறையுளை நிவர்த்தி செய்தல் 
- ஒரு வருமானம் பற்றிய பயம் இல்லாமல் போவது 
- வீடு இல்லாதவர்கள் என்ற நிலையை குறைக்கலாம் 
-  பல அரச திட்டங்களை ஒருங்கிணைத்தல், வரிப்பணம் சேமித்தல் 

 இதன் சில தீமைகள் / காண வேண்டிய தீர்வுகள் 
- எவ்வாறு இந்த பணத்தை பெறுவது 
- சிலர் சோம்பேறிகள் ஆகும் சந்தர்ப்பம் 

இதற்கான பணத்தை வரிப்பணத்தில் இருந்து முழுமையாக பெற்றால் அது மக்கள் ஆதரவை பெறாது. மறு  பக்கம், பணக்கார நிறுவனங்கள் அவை சார்ந்த அதியுயர் தொழில்நுட்ப வேலைகள் நீண்ட கால வேலை உத்தரவாதத்தை தராமல் உள்ளன. ஆகவே அந்த நிறுவனங்களின் இலாபத்திலேயே இதற்கான அதிக பணம் தரப்படல் வேண்டும் என கொள்கை மற்றும் நிதி வகுப்பாளர்கள் கூறுகின்றனர். 


 

 

Link to comment
Share on other sites

உயரப்போகும் வரி வீதங்கள் Income Tax brackets 

இன்றைய தொற்று காரணமாக, உலக மத்திய வங்கிகள் பணத்தை அச்சடித்து வீட்டில் வேலைகள் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு வழங்கி வருகின்றன. 

ஆனால், அந்த பணத்தை அப்படியே தொடர்ந்தும் இலவசமாக விநியோகிக்க முடியாது. இந்த மற்றும் அடுத்த தலைமுறைகள் இந்த பணத்தை மீள் செலுத்த வேண்டியுள்ளது. 
  
ஆனால் பொருளாதாரம் மீண்டு வர சில காலம் ஆகலாம்; மூன்று மாதம் தொடக்கம் மூன்று வருடங்கள் வரை செல்லலாம். 

அதிக பணம் உழைப்பவர்களின் வருமான வரி வீதம் அதிகரித்து செல்லும் என கூறப்படுகின்றது. ஆனால், இது நாட்டிற்கு நாடு மாறுபடும். சகல நாடுகளிலும் முதல் ஒரு வீத பணம் உழைக்கும் மக்களின் வருமான வரி வீதம் நிச்சயம் கூடும்.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.