Jump to content

கோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம் ..

oil-industry-refinery-factory-sunset-260

கொவிட்- 19 நோய்த் தொற்று காரணமாக உலகம் முடங்கியதால், பெட்ரோலியப் பயன்பாடு வெகுவாகக் குறைந்து விட்டது. உலக அளவில் அனைத்து நாடுகளிலுமே எணணெய்ப் பயன்பாடும், தேவையும் ஊரடங்கு காரணமாகக் குறைந்துள்ளன.

புதைபடிவ எண்ணெய் அடிப்படையிலான  பொருளாதார முறைமையில்  பெரும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. முதலீட்டின் மீது கிடைக்கும்  இலாபம் என்பது (Energy Return on Investment - EROI) என்பது ஓர் ஆற்றலை ஒரு மூலத்திலிருந்து எடுப்பதற்கு எவ்வளவு ஆற்றல் (பணம்) தேவைப்படுகிறதோ, அதை எடுக்கப்பட்ட எண்ணெய்  மதிப்பிலிருந்து கழித்துக் கொண்டு, மீதி உள்ளது "உபரி மொத்த ஆற்றல்" (Surplus Net Energy ) என்று கூறுவோம். இது, சக்தி உற்பத்தி முறைமைக்கு (energy production system) வெளியே, சரக்கு உற்பத்தி மற்றும் சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

இப்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக உலகே முடங்கிப்போன நிலையில், பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து போனது. Surplus என்று சொல்லப்படும் உபரி குறைந்து விட்டது.

இருபதாம்  நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலீட்டின் மீதான ஆற்றல் வருவாய் 100:1 என்ற அளவில் இருந்தது. இது இன்று பெரும் வீழ்ச்சி அடைந்து விட்டது. 1960-1980இல் இதன் உலக சராசரி  மதிப்பு பாதியாகக் குறைந்து, இப்போது 15:1 என்ற வீதத்தில் அமைந்து விட்டது. எண்ணெய்ப் பொருளாதாரம் நிலைத்திருக்க முடியாத சூழல் எழுந்துள்ளது.

2020 பிப்ரவரி மாதம், பின்லாந்தின் Geological Survey of Finland என்ற அமைப்புதான் ஐரோப்பிய யூனியனின் கனிமவள மூலங்கள் அமைப்பு முறைமையைத்  தீர்மானிக்கக் கூடிய அமைப்பாக விளங்குகிறது), ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. எண்ணெய்ப் பொருளாதார விரிவு என்பது கடனால் ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட குமிழிதான் என்று அந்த அறிக்கை கூறியது. ஏராளமாக எண்ணெய் வளம் இருந்தாலும் அதை அடைவதற்கு அதிக செலவு ஆகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது. "உற்பத்திச் செலவு அதிகம், உற்பத்தி குறைவு" என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

உலக அளவில் ஷேல் ஆயில் கம்பெனிகள் எதிர்மறையான பண ஓட்டம் ( negative cash flow ) காரணமாக வீழ்ச்சி அடைந்துள்ளன. திருப்பிக் கொடுக்க முடியாத கடன்களை பல பில்லியன் டாலர் அளவிற்குப் பெற்று என்ணெய் நிறுவனங்கள் சமாளிக்கின்றன.

இப்போது, கடனால் பெருக்கப்பட்ட குமிழியை  கொரோனா வைரஸ் தொற்று உடைத்து விட்டது. எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர முடியாத சூழல் நிலவுவதாக ஆய்வுகள் இப்போது தெரிவிக்கின்றன.

பெட்ரோலியத் தேவையில் மிகப் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலை மேலும் 18 மாதங்கள் தொடர்ந்தால் எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுவது என்பது இயலாது. எண்ணெய்த் தொழில் ஒரு முடிவுக்கு வந்துவிடும். பல நாடுகளிலும் எண்ணெய்க் கிடங்குகள் பெருமளவில் சேமிக்கப்பட்டு, நிரம்பி வழிகின்றன. ஆகவே எண்ணெய்ச் சேமிப்பு என்பதும் ஒரு முடிவுக்கு வருகிறது.

ஆகவே, பல்வேறு காரணங்களால் புதிய எரிசக்தி முறை நோக்கி உலகம் தள்ளப்படுகிறது. சுற்றுச்சூழல் வரம்புகளை மீறாத, புதிய எரிசக்திப் பயன்பாடு நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதை (ஹைட்ரோ) கார்பனுக்குப் பின்-யுகம் (Post- Carbon Age)என்று குறிப்பிடுகிறார்கள்.

உலகமே ஒரு திசை நோக்கி நகரும் போது இந்தியா மட்டும் நிலையாக முரண்டு பிடிக்க முடியாது. உலக நலன் கருதி, எண்ணெய் எடுப்பைக் கைவிட வேண்டும்.

ஆகவே இப்போதைய தேவை பன்முகப்படுத்தப்பட்ட, மையப்படுத்தப்படாத, பரவலாக அமைக்கப்படுகின்ற, ஒரு புதிய "புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறை" ஆகும். விவசாயம் மற்றும் பொருள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட, உயிர்ப்புள்ள ஒரு பொருளியல் கட்டுமானம் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.

வழக்கமான பெட்ரோல் உற்பத்தி அடிப்படையிலான பொருளியல் அமைப்பு அடிவாங்கி விட்டதால், மாற்று இணைப்பு எரிபொருள் (alternative bridge fuels) பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டிய தேவை எழுந்துள்ளது.

மலேசியா, clean bio-fuels எனப்படும் தூய்மையான உயிரி எரிபொருள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகித்து முன்னோடியாகத் திகழ்கிறது. அங்கே, 100 விழுக்காடு பாமாயிலிலிருந்து எரிபொருள் எடுக்கும் நுட்பத்தையும், விதிமுறைகளையும் மலேசியா வகுத்துள்ளது.

சவுதிஅரேபியா, ரஷ்யாவை விட அதிகம் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா. மேற்கு டெக்ஸாஸ் முதல் நியூ மெக்ஸிகோ வரை நீண்டிருப்பது மிகப்பெரும் பெர்மியன் ஷேல் எண்ணெய் வயல். அப்பகுதியின் எண்ணெய்க் கிணறுகள் இப்போது மூடப்பட இருக்கின்றன. கடன் அதிகரிப்பால் எண்ணெய் நிறுவனங்கள் திவாலாகும் நிலை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. எண்ணெய் சேமிக்கும் இடம் நிரம்பிக் கிடக்கிறது. ஆனால் உலக அளவில், அதை வாங்கும் சூழல் பல நாடுகளுக்கும் இல்லை.

இச்சூழல் ஷேல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்குப் பேரிடியான காலமாகும். ஒப்பீட்டளவில் குறைந்த விலைக்குப் பல நாடுகளும் எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளலாம். ஆனால், அதற்கான தேவை இல்லை.

சர்ச்சைக்குரிய "நீரியல் விரிசல்" முறையைப் பயன்படுத்தி எண்ணெய் எடுத்த நிறுவனங்களில், இன்று மூன்றில் இரண்டு பங்கு  நிறுவனங்கள் வேலையை நிறுத்தும் நிலைக்கு வந்துள்ளன. வட டகோட்டாவில் அதிக அளவில் எண்ணெய் எடுத்துக் கொண்டிருந்த கான்டினென்டல் ரிசோர்சஸ் என்ணெய் உற்பத்தி நிறுவனம் தன் வேலையை நிறுத்திவிட்டது.

இச்சூழலில் புதுப்பிக்கத்தக்க எண்ணெய்-எரிவாயு உற்பத்தியை நோக்கி உலக நாடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. 2015- பாரிஸ் உடன்பாட்டின்படி,, மாற்று எரிசக்தியைப் பயன்படுத்த, அனைத்து பெரும் நாடுகளும் தீர்மானித்தன. இப்போது அதை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தை கொரோனா தொற்று நோயான COVID-19 உருவாக்கிவிட்டது. 2015 -பாரிஸ் உடன்பாட்டில் இந்தியாவும் கையொப்பமிட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரை அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தும் வகையில் உயிரி எரிபொருள் உற்பத்தி நோக்கிச் செல்வது கட்டாயமானதாகும். மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மூலம் பெறும் எரிசக்தியை விட பல மடங்கு அதிகம் பெற மாற்று எரிசக்தி மூலங்களை இந்தியா பெற்றுள்ளது. சரியான முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டும். தாவர எண்ணெயும், கழிவு எண்ணெயும் உயிரி எரிபொருள் உற்பத்திக்குப்  பயன்படுத்தப்படுவதால், இவை வற்றாத எரிபொருள் மூலங்களாகும். ஒரு இலட்சம் கோடிக்கும் குறையாமல் ஆண்டுதோறும் அந்நியச் செலாவணி மிச்சப்படுத்தலாம்.

1980 முதல் தாய்லாந்தில் ஜெட்ரோபா எனப்படும் காட்டாமணக்கு எண்ணெயை டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தும் ஆய்வு நடந்துவந்தது. 1993இல் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, மெக்சிகோ, இஸ்ரேல், அர்ஜெண்டைனா மற்றும் ஆப்பிரிக்க  நாடுகள் இந்த ஆய்வில் கவனம் செலுத்தின.

உணவு உற்பத்திக்குக் குந்தகம் ஏற்படாத வகையில், விளை நிலம், விளையா நிலங்கள் ஆகியவற்றை உயிரி எரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தலாம். கரும்பு, சர்க்கரைக் கிழங்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி, உயிரி எரிபொருள் பல நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

நுண்ணுயிர் எரிபொருள் என்பது நீலப்பாசி, நுண்பாசி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் எரிபொருள் ஆகும். நுண்ணுயிர் எரிபொருள் தயாரிக்க, ஆமணக்கு எண்ணெய் உற்பத்திக்குத் தேவையான நிலப்பகுதியில் ஆயிரத்தில் ஒரு பங்கு இருந்தாலே போதுமானது என்று ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன.

உலக நாடுகளில் பயோடீசலையும், பெட்ரோலையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர். ஈஸ்ட்டு நொதியைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதை நேரடியாகவோ அல்லது பெட்ரோலுடன் கலந்தோ எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். எத்தனால் அதிகம் பயன்படுத்தும் நாடு பிரேசில். அந்நாடு கரும்பிலிருந்து எத்தனால்  எடுக்கிறது.

அமெரிக்கா சோளத்தில் இருந்து எத்தனால் தயாரிக்கிறது. பிரேசில்  எத்தனாலுடன் பெட்ரோலை 20% கலந்து பயன்படுத்துகிறது. எத்தனால் மூலம் ஊர்திகளை நேரடியாகவே இயக்கலாம். அமெரிக்காவில் 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் கலந்து,  E-85 தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

இப்போது, நிலம் சார்ந்த எரிபொருள் உற்பத்தி முக்கியத்துவம் பெறுகிறது. புதைபடிவ எரிபொருள் உற்பத்தியிலிருந்து, கொரோனா வைரசும், COVID 19 தொற்றுநோயும் நாடுகளை விரட்டி அடித்திருக்கின்றன.

எண்ணெய் சாராத பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டிய தேவையை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. இந்நிலையில் சூழலை உணர்ந்து, தற்சார்புள்ள நாடாக விளங்க, இந்தியாவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உயிரி எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்கத் தொழில்கள் எல்லாம் நிறுத்தப்பட்டன. மக்கள் முடக்கப்பட்டார்கள். இதை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் சில தொழில்களுக்குத் தளர்வு அளிக்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்து அறிவித்ததில், எண்ணெய்-எரிவாயு நிறுவனங்கள், இரும்பு உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி ஆகியவை செயல்பட அனுமதி அளித்துள்ளது.

எண்ணெய்-எரிவாயு உற்பத்திக்கு தமிழக அரசு இப்போது அனுமதி அளிப்பது தவறானதாகும். எண்ணெய்-எரிவாயு உற்பத்தி இத்துடன் தமிழகமெங்கும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் எண்ணெய் எடுப்பு என்ற பேரழிவிலிருந்து காக்கப்பட வேண்டும்.

கரோனாவால்  மூடப்பட்டுள்ள தொழில்கள், தொழிலகங்கள்,  கடைகள் மற்றும்  விற்பனையகங்களுள், டாஸ்மாக்கும், எண்ணெய் - எரிவாயு எடுக்கும் கிணறுகளும், சுத்திகரிப்பு ஆலைகளும் நிரந்தரமாக மூடப்பட வேண்டியவை என்பதைத் தமிழக அரசு உணர வேண்டும்.

கொரோனா கொல்லத் தவறினால், எண்ணெய் எரிவாயுத் திட்டங்கள் பயன்படுத்தும் இரசாயனங்கள் அந்தக் காரியத்தைச் செய்து விடும். தொழிற்சாலைகள் மூடப்பட்டதில், கங்கை ஆறு தூய்மையாகி விட்டது. நாடு முழுவதும் பல ஆறுகள் தன்னியல்புக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.

இவை நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீராதாரங்களின் நிலை. நிலத்தடி நீரை எண்ணெய் நிறுவனங்கள் கெடுத்துக் கொண்டே இருக்கின்றன. இவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, தொடர் மழையால் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்போது, கால ஓட்டத்தில்  நிலத்தடி நீரும் மீண்டும் தன்னியல்பைப் பெறும்.    என்ணெய் நிறுவனச் செயல்பாடுகளைத் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

எழுத்தாளர் த.செயராமன்

உரிமை தமிழ் தேசம்.

http://keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimai-tamil-desam-may20/40260-2020-05-29-06-57-11

Link to comment
Share on other sites

NEW DELHI (Reuters) - India launched a $6.65 billion plan on Tuesday to boost electronics manufacturing, saying it would start by offering five global smartphone makers incentives to establish or expand domestic production.

The government is offering a production-linked incentive (PLI) involving cash worth 4% to 6% of additional sales of goods made locally over five years, with 2019-2020 as the base year, technology minister Ravi Shankar Prasad told a news conference.

Names of the five companies, which would have to meet investment and sales thresholds to be eligible, were expected to be announced in the next two months, ministry officials said.

Five Indian firms would also be selected for the PLI scheme, which, along with two other related initiatives, could help India produce smartphones and components worth 10 trillion rupees ($133 billion) by 2025, Prasad said.

The smartphone industry has become a showpiece for Prime Minister Narendra Modi's 'Make In India' drive. The government now wants to make the country an export hub.

Global players such as Samsung and Taiwanese firms Foxconn and Wistron, which both supply Apple, have already ramped up local production, attracted by India's huge market of 1.3 billion people.

https://finance.yahoo.com/news/india-launches-6-7-billion-135911729.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அடித்தால் சீனனுக்கு வலிக்கும்..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

கொரோனா பேரழிவு - இனி சிக்கப்போவது யார்? இந்த லாக்டவுன் விதிகளை தளர்த்துவதால் பாதுகாப்பாக இருக்கப் போவது யார்? பணக்கார்கள் ஏழைகள் இவர்களில் யாருக்கு வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகம்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா வேண்டாம் என வெளியேறும் கம்பெனிகள் இந்தியாவுக்கு ஏன் வரவில்லை.?

960x0.jpg

1950-களில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது. இரண்டுமே, வளரும் நாடுகள் தான்.அதிக மக்கள் தொகை கொண்ட, தன் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள முடியாத நாடுகள்.

வேலை வாய்ப்புகள் எல்லாம் கிடைத்தால் மாரியாத்தா மகிமை. இல்லை என்றால் கிடைக்கும் வேலைகளைச் செய்து பிழைக்க வேண்டியது தான். ஆனால் சீனா தன்னை ஒரு கம்யூனிஸ கேப்பிட்டலிஸ்டாக மாற்றிக் கொண்டது.

1979-ல் அமெரிக்க பயணம்

அதென்ன கம்யூனிஸ கேப்பிட்டலிஸ்ட்? சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. இன்று வரை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தான் சீனாவில் எல்லாமே. அவர்கள் சொல்வதை மறுப்பதற்கோ, மறிப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் கிடையாது. அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட் தேசத்தின் உச்சபட்ச தலைவர் (அப்போது அதிபர் பதவி கிடையாது என்கிறது விக்கிபீடியா) 1979-ல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கோண்டார். அவர் பெயர் டெங் சவ்பிங் (Deng Xiaoping).

முதல் முறை

அவ்வளவு ஏன், ஒரு சீன தலைவர், அமெரிக்காவுக்கு விஜயம் செய்வது அதுவே முதல் முறையாம். அப்போது தான் சீனா, தன் சீனப் பெருஞ்சுவரைத் தாண்டி உலகத்தையும், முதலாளித்துவத்தையும், முதலாளித்துவத்தினால் கிடைக்கும் பணத்தையும் பார்த்தது. மெல்ல மேற்கத்திய நாடுகளுக்கு சீன பெருஞ்சுவரின் கதவுகளைத் திறந்தது.

சிறப்புப் பொருளாதாரம் மண்டலங்கள் (SEZ)

அந்த காலகட்டத்தில் தான் வெளிநாட்டு முதலீடுகளை சீனா ஈர்க்கத் தொடங்கியது. அதோடு SEZ மண்டலங்களையும் அறிவித்து தொழிற்சாலைகள், வர்த்தகங்கள், வியாபாரங்கள் என தன் பொருளாதாரத்தை கவனிக்கத் தொடங்கியது. அடுத்தடுத்து பங்குச் சந்தைகளை எல்லாம் திறந்து தன்னை ஒரு தினுசான கம்யூனிஸ கேப்பிட்டலிஸ்ட் நாடாக மாற்றிக் கொண்டது.

விளைவு என்ன.?

சீனாவின் கம்யூனிஸ கேப்பிட்டலிஸ்ட் முயற்சி பிரம்மாண்ட பலன்களைக் கொடுத்தது. 1960-ல் வெறும் 59 பில்லியன் டாலராக இருந்தது சீனாவின் ஜிடிபி. அதே காலகட்டத்தில் அமெரிக்காவின் ஜிடிபியோ 543 பில்லியன் டாலர். சீனாவை விட அமெரிக்கா சுமாராக 10 மடங்கு பெரிய பொருளாதாரம். ஆனால் இன்று சீனாவின் ஜிடிபி சுமாராக 13 ட்ரில்லியன் டாலருக்கு வளர்ந்து இருக்கிறது. அமெரிக்காவின் ஜிடிபி சுமார் 21 ட்ரில்லியன் டாலராக வளர்ந்து இருக்கிறது. சீனாவை விட 1 மடங்கு கூட அமெரிக்கா பெரிய பொருளாதாரம் இல்லை.

சீனா முந்திவிடுவான்

2025-ல் சீனா பொருளாதாரம், ஜிடிபி அடிப்படையில் உலகின் நம்பர் 1 பொருளாதாரமாக வலம் வரலாம், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் இப்போதே ஆரூடம் சொல்கிறார்கள். சீனாவும் அதற்கு சளைக்காமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. எப்படியும் ஒரு நாள் அமெரிக்காவை முந்த நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

வெளியேறும் கம்பெனிகள்

அப்படி என்றால் சீனாவின் அசுரத் தனமான தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி கடந்த 60 ஆண்டுகளில் எப்படி இருந்து இருக்கும் எனப் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட, சீனாவை அம்போ என விட்டு விட்டுத் தான், இன்று பல கம்பெனிகள், தங்கள் ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்றிக் கொள்ள துடித்துக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஏன் சீனா வேண்டாம்.?

சீனா உலகத்தின் உற்பத்தி கேந்திரங்களில் ஒன்றாக இருக்கிறது. பல கம்பெனிகளின் அத்தியாவசியப் பொருட்கள், சீனாவில் இருந்து வந்தால் தான் அடுத்த வேலையைப் பார்க்க முடியும் என்கிற ரீதியில், சீனாவின் சப்ளை செயின் முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக சென்னையில் இருக்கும் டிவிஎஸ் கம்பெனி கூட கடந்த பிப்ரவரியிலேயே தன் உற்பத்தி 10% குறையும், காரணம் சீனாவில் இருந்து வர வேண்டிய சரக்குகள் வரவில்லை என்றார்கள்.

அதிகம் நம்ப வேண்டாம்

கம்பெனிகள் ஒரே நாட்டை, தங்கள் வியாபாரத்துக்கு அதிகம் நம்ப வேண்டாம் என்கிற நோக்கில், சீனாவில் இருந்து வெளியேற விரும்புகிறார்களாம். அதோடு கொரோனா பரவல், மற்ற உலக நாடுகளோடு இருக்கும் உறவுகள், அமெரிக்கா சீனாவுக்கு இடையில் இருக்கும் அனையாத வர்த்தகப் போர் போன்றவைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு தங்கள் ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்றுகிறார்களாம். வெளியேறுவது சரி... அதன் பின் எந்த நாட்டுக்குப் போகிறார்கள்..?

எந்த நாட்டுக்கு மாற்றுகிறார்கள்

நோமுரா என்கிற ஜப்பான் கம்பெனியின் கணக்குப் படி, கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், சீனாவில் இருந்து சுமாராக 56 கம்பெனிகள் வெளியேறினார்களாம்.

அதில் 26 கம்பெனிகள் யாரும் எதிர்பார்க்காத வியட்நாமில் கடை விரித்து இருக்கிறார்களாம். தைவானில் 11 கம்பெனிகளும், தாய்லாந்தில் 08 கம்பெனிகளும், இந்தியாவில் வெறும் 03 கம்பெனிகள் மட்டுமே தங்கள் ஆலைகளைத் தொடங்கி இருக்கிறார்களாம்.

ஏன் வியட்நாமில்.?

2018 - 19 நிதி ஆண்டில் தானே போனார்கள். இப்போதும் கம்பெனிகள் வியட்நாமில் ஆர்வம் காட்டுகிறார்களா என்ன..? என கேள்வி கேட்டால் 'ஆம்' என்கிறது க்விமா (Qima) என்கிற சப்ளை செயின் ஆய்வுக் கம்பெனி. தற்போது கம்பெனிகள் பாதுகாப்பான இடங்களைத் தேடுகிறார்களாம். குறிப்பாக கொரோனாவை சிறப்பாக சமாளித்த நாடுகளை கவனிக்கிறார்களாம்.

வியட்நாமில் என்ன வியப்பு.?

ஒட்டு மொத்த வியட்நாமில் சுமாராக 10 கோடி மக்கள் வாழ்கிறார்களாம். அந்த நாட்டில் இதுவரை 350-க்கும் குறைவான மக்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். அதே போல ஒருவர் கூட வியட்நாமில் கொரோனாவால் உயிரிழக்கவில்லையாம். இந்த ஒரு காரணமே கம்பெனிகளை சுண்டி இழுக்கிறதாம்.

வியட்நாமுக்கு வரவேற்பு இருக்கா?

ஐரோப்பிய யூனியனுக்கு, வியட்நாமில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 85 % குறைத்து இருக்கிறார்களாம். அதே போல, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து, வியட்நாமுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விஷயங்களையும் தளர்த்திக் கொண்டு இருக்கிறார்களாம். இதை விட என்ன பெரிய வரவேற்பு வேண்டும்?

நோ.. இந்தியா.!

கொரோனா வைரஸை இந்தியா சரியாக கையாளவில்லை என்பதைத் தான், கம்பெனிகள் இந்தியாவுக்கு வராத முக்கிய காரணங்களில் ஒன்றாக தெரிகிறது.

இந்தியா மிகப் பெரிய சந்தையைக் கொண்ட நாடாக இருந்தும், லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களை தொழிற்சாலைகளுக்கு தர தயார் நிலையில் வைத்திருப்பதாக அரசே சொல்லியும்,  கம்பெனிகளுக்கு சாதகமான பல சலுகைகளுக் கொடுக்கின்ற போதிலும், இந்தியாவால், சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகளை இந்தியாவுக்குள் அழைத்து வர முடியவில்லை.

தம்மா துண்டு நாடு வியட்நாமோ கொரோனாவை சூப்பராக சமாளித்து கம்பெனிகளை அள்ளிக் கொண்டு போகிறார்கள்.

https://tamil.goodreturns.in/world/why-china-leaving-companies-are-not-coming-to-india-019302.html 

டிஸ்கி :

பொருளாதார நிபுணர் ..தோழர் அம்பனை தனி திரி திறந்து போட்டு ஆள் அட்ரஸை காணோம்..☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்கிட்ட மோதாதே ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்பின் அதிரடி முடிவு.. கவலையில் இந்திய ஊழியர்கள்.. என்ன தான் செய்யப் போகிறார்.?

trumpvisa-26-1509001967-1524559396.jpg

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பதவிக்கு வந்ததிலிருந்தே அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை. வேலை வாய்ப்புகளிலும் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை என்று தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக ஹெச் 1பி விசாவில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து  கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான செய்தியில், டொனால்டு டிரம்ப் இன்னும் இரண்டு நாட்களில் ஹெச் 1 பி விசா பற்றிய விதிமுறைகளை கடுமையாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. இதன் காரணமாக பல ஆயிரம் பேர் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் தடை

இதன் காரணமாக அமெரிக்காவில் வேலையின்மை விகிதமானது வரலாறு காணாத அளவு அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக உள்நாட்டில் அமெரிக்காவில் வேலையின்மை அதிகரிக்கும் விதமாக வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் கிடைக்கும் வாய்ப்புகளை தடை செய்ய உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே கூறி வருகின்றார்.

விதிமுறைகளில் கட்டுப்பாடு

அதாவது அமெரிக்காவில் வேலை செய்ய கொடுக்கப்படும் ஹெச்1 பி விசாவில் விதிமுறைகளை கடுமையாக்க உள்ளதாகவும், ஒரு கட்டத்தில் தற்காலிமாக தடை செய்ய உள்ளதாக கூறி வருகின்றனர். இதன் மூலம் அமெரிக்காவில் உள்ள ஊழியர்களுக்கே அந்த வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் வேலையின்மை விகிதம் குறையும் என்றும் கூறி வருகின்றார்.

யாருக்கு ஹெச் 1 பி விசா?

இந்த ஹெச் 1 பி விசாவது நல்ல திறமையுள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒரு விசாவாகும். குறிப்பாக ஐடி துறையில் உள்ள முக்கிய ஊழியர்களுக்கு இந்த விசாவானது அதிகளவில் வழங்கப்படுகிறது. அதிலும் ஹெச் 1 பி விசாவை பெறுவதில் இந்தியர்கள் தான் அதிகம். ஆக திங்கட்கிழமையன்று இது குறித்தான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனை பேர் பயன்.?

இந்த விசா மூலம் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் அமர்த்தி வருகின்றது. இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 85,000 பேர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். அதே போல தற்காலிகமாக குடியேற்றத்தினையும் தடை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய ஊழியர்களுக்கு தான் பாதிப்பு

அமெரிக்கா அதிபர் டிரம்ப் சொல்வது போல் இந்த ஹெச் 1 பி விசா சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், அதில் முதலாவதாக பாதிக்கப்பட போவது இந்தியா தான். ஏனெனில் அமெரிக்க ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பலர் இதன் மூலம் பணிபுரிகின்றனர். மேலும் ஏற்கனவே வேலை செய்பவர்களுக்கும் விசா காலம் முடிவடைந்தால், மீண்டும் புதுபிக்க முடியாமல் நாடு திரும்ப நேரிடும்.

பலத்த அடி தான்

இந்திய ஐடி ஊழியர்கள் மட்டும் அல்ல, ஐடி நிறுவனங்களுக்கும் இது பாதிப்பு தான், ஏன் சொல்லப்போனால் இதன் காரணமாக இந்திய பங்கு சந்தைகளில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் பலத்த வீழ்ச்சி காணலாம். இப்படி சங்கிலித் தொடர்போல இந்தியாவுக்கு டிரம்பு ஒற்றை முடிவு பலத்த அடியை கொடுக்கலாம். .

ஹெச் 1 விசா

அமெரிக்கா வழங்கும் விசாக்களில் குடியுரிமை உள்ள விசா மற்றும் குடியேற்ற உரிமை அல்லாத விசா என இரண்டு வகைகளே பிரதானமானவை. இவர்களுக்கு சில தகுதிகளின் அடிப்படையில் குடியேற்ற உரிமையுள்ள விசாக்கள் வழங்கப்படும். தற்காலிகமாக அமெரிக்காவில் தங்குபவர்களுக்கு குடியேற்ற உரிமை அல்லாத விசாக்கள் வழங்கப்படும். H1B விசா குடியேற்ற உரிமை அல்லாத விசா வகையின் கீழ் வருகிறது.

ஊழியர்களுக்கான விசா

இந்த ஹெச்1 பி விசாக்கள் பெரு நிறுவனங்களும், பிற நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்காக H1B விசாவிற்கு விண்ணப்பிக்கின்றன. சில நிறுவனங்கள் H1B விசாக்களை ஸ்பான்சர் செய்கின்றன. H1B விசா, வழங்கப்பட்டதில் இருந்து 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும். இந்த காலம் நீட்டிக்கப்படலாம் என்றாலும் 6 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படாது.

ஐடி ஊழியர்கள் பாதிக்கப்படலாம்

ஆக இதன் காரணமாக 1 லட்சம் பேர் அமெரிக்காவிலிருந்து புலம் பெயரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா ஐடி ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனவு

ஐடி ஊழியர்களில் பலரின் கனவே அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்பது தான். ஆனால் டிரம்பின் இந்த நடவடிக்கை மட்டும் அமலுக்கு வந்தால், இந்திய ஐடி ஊழியர்களின் கனவு எப்படி சாத்தியமாகும் என்பது தான் தெரியவில்லை.

https://tamil.goodreturns.in/world/us-president-may-order-new-restrictions-on-h-1b-visa-in-two-days-019433.html

Link to comment
Share on other sites

கோவிட்19ன் தாக்கம்  உலக நிறுவனங்களை முடக்கி விட்டுள்ளது. சரியும்  வேலைவாய்ப்புக்கள்,குறையும் நிறுவன இலாபங்கள், தடுமாறும் வங்கிகள் என அடுக்கி செல்லலாம். 

ஆனால், நாம் எந்த துறைகள் இந்த காலத்தில் வளர்ந்து வருகின்றன எனவும் பார்க்கவேண்டும். குறிப்பாக இரண்டு துறைகள் : தொழில்நுட்பம் அடுத்து மருத்துவம். 

தொழில்நுட்ப வளர்ச்சியானது அடுத்த பத்து வருட வளர்ச்சியை வரும் இரண்டு வருடங்களில் காணலாம் என்கிறார்கள். அதேபோன்று, மருத்துவ துறையும் அசாதாரண வளர்ச்சியை காணும் என்கிறார்கள். 

வீட்டில் இருந்து வேலை செய்ய மற்றும் கற்க, இவை சம்பத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் வைத்தியரை வீட்டில் இருந்தே பார்க்க உதவும் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. அத்துடன், "கிளவுட்" என்ற எங்கோ ஒரு இடத்தில் இருந்து சேவைகளை வழங்கும் தொழில்நுட்பங்களும் அதீத வளர்ச்சியை கண்டுள்ளன. 

மருத்துவ துறைக்கு அதிகளவு முதலீடுகள் செய்யப்படுகின்றன. மருந்துகளை கண்டுபிடித்து அவற்றுக்கான அங்கீகாரம் பெறுவது என்பது அதிக செலவீனம் கூடிய முதலீடாக இருந்தாலும், அதன் முக்கியத்தை கோவிட்டார் உணர்த்தியுள்ளார்.   

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பெருந்தொற்று ; உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப சாத்தியக்கூறுகள் இல்லை..

56222600.cms

கொரோனா பெருந்தொற்று முடிவிற்கான அருகில் கூட இன்னும் செல்லவில்லை என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தவர், சீனாவில் 6 மாதங்களுக்கு முன்பு அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரசால், ஒரு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு 5 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்த மோசமான மைல்கல்லை எட்டியுள்ளோம் என குறிப்பிட்டார்.

இந்த சூழல் முடிவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பவே அனைவரும் விரும்புவதகாவும், ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது வரை இல்லை எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, மக்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், கொரோனா வைரஸ் இன்னும் அதிக இடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாகவும் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.

https://www.vanakkamlondon.com/கொரோனா-பெருந்தொற்று-இயல/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் அதிரடி.! வங்கி பரிமாற்றங்களில் கூடுதல் கண்காணிப்பு.! 

vbk-pboc-

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மனிதர்களின் உயிரை வாங்கிக் கொண்டு இருக்கிறது என்றால், மறு பக்கம், பொருளாதாரங்களைப் பந்தாடிக் கொண்டு இருக்கிறது.

அதிலும் குறிப்பாக வங்கிகளுக்கு பெரிய தலைவலிகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது கொரோனா வைரஸ். அந்த தலைவலியின் பெயர் மோசமான கடன்கள் (Bad Debts).

சீனாவில் இந்த மோசமான கடன்கள் (Bad Debts) அதிகரித்துவிடக் கூடாது என்கிற நோக்கில் ஒரு புதிய செக் வைத்து இருக்கிறது பீபில் பேங்க் ஆஃப் சீனா (PBOC - People Bank of China).

என்ன செக்

கொரோனா வைரஸ் பிரச்சனையில் மோசமான கடன்கள் (Bad Debts) அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக, வியாபார கணக்கு மற்றும் ரீடெயில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், பெரிய பணப் பரிவர்த்தனைகளை எல்லாம் செய்வதற்கு முன்பே தெரிவிக்குமாறு (Pre report) சொல்லி இருக்கிறது பீபிள் பேங்க் ஆஃப் சைனா. இந்தியாவுக்கு எப்படி ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு எல்லாம் வழி காட்டும் அமைப்போ, அதே போல சீனாவில் பீபில் பேங்க் ஆஃப் சீனா.

எந்த மாகாணங்களில்

சீனாவின் மத்திய வங்கி ஹெபி (Hebei) மாகாணத்தில் தான், வியாபார கணக்குகள் மற்றும் ரீடெயில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பெரிய பணப் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு முன் கூட்டியே தெரிவிக்கச் சொன்னார்கள். இந்த இரண்டு வருட திட்டத்தை மெல்ல சீனாவின் மற்ற முக்கிய மாகாணங்களான சிஜியாங் (Zhejiang) மற்றும் சென்சென் (Shenzhen) மாகாணங்களுக்கும் அக்டோபர் மாதத்துக்குள் விரிவாக்கப் போகிறார்களாம்.

ஏன் அவசரம்

அட என்னங்க, மோசமான கடன்கள் (Bad Debts) அதிகரிக்கிறது என்பதற்கு இத்தனை கடுமையான நடவடிக்கைகளா? என்று கேட்கிறீர்களா. சமீபத்தில் தான் சீனா பல வங்கிகளுக்கு கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்து, போராடிக் கொண்டிருந்த பல வங்கிகளை மீட்டது. எனவே அப்படி மீண்டும் வங்கிகளுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுத்து மீட்க முடியாது என்பதால் தான் சினா அதிரடியாக இப்படி ஒரு செக்கை வைத்திருக்கிறது.

எவ்வளவு தொகை

வியாபார கணக்குகளை வைத்திருப்பவர்கள் 5 லட்சம் யுவானுக்கு மேல் செய்யும் பணப் பரிமாற்றங்களை முன் கூட்டியே சொல்ல வேண்டுமாம். அதே போல தனிநபர்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளில் 1 - 3 லட்சம் யுவானுக்கு மேல் பணப் பரிமாற்றங்களைச் செய்வதற்கு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டுமாம். தனி நபர்கள் எந்த மாகாணத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்து 1 - 3 லட்சம் யுவான்களுக்குள் அளவு தீர்மானிக்கப்படுமாம்.

எஸ் & பி குளோபல் கருத்து

சீனாவின் மத்திய வங்கியோ, சீனாவின் 41 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட வங்கி சிஸ்டத்தை பாதுகாக்கவும், உதவவும் நினைக்கிறார்கள். ஆனால் எஸ் & பி குளோபல் நிறுவனத்தின் கணக்குப் படி, இந்த ஆண்டில் மட்டும், 8 ட்ரில்லியன் யுவான் மோசமான கடன்கள் ஏற்படலாம் எனக் கணித்து இருக்கிறது. இதை எல்லாம் சீனா எப்படி சமாளிக்கப் போகிறதோ தெரியவில்லை.

https://tamil.goodreturns.in/world/china-announced-a-plan-that-require-clients-to-pre-report-large-transactions-019701.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

36,000 பேருக்கு பணி நீக்கத்திற்கான அறிவிப்பை கொடுத்த யுனைடெட் ஏர்லைன்ஸ்..!

United-Airlines-4.jpg

அமெரிக்காவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதன் ஊழியர்களில் கிட்டதட்ட பாதிபேரை பணி நீக்கம் செய்ய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியான செய்தி, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் 36,000 ஊழியர்களுக்கு பணி நீக்கம் செய்ய கூறி அறிவிப்பினை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் விமானத் துறையில் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை அறிய முடிகிறது. கடந்த சில மாதங்களாகவே கொரோனாவின் தாக்கத்தினால் விமானத் துறையானது பலமாக அடி வாங்கியுள்ள நிலையில், தற்போதைக்கு மீண்டு வருவதாகவும் தெரியவில்லை.

கொரோனா ஹாட் ஸ்பாட்

அதிலும் இன்று கொரோனாவின் ஹட் ஸ்பாட் ஆக திகழும் அமெரிக்காவில் எப்போது மீண்டும் வரும் என்பதே நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது. மேலும் தற்போது அமெரிக்காவின் சில மாகாணங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து, மீண்டும் தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இனி பணி நீக்கம் குறையும்

இதன் காரணமாக அதன் உள்ளூர் விமான பயண சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு வெளி நாட்டு விமான சேவையும் முடங்கியுள்ளது. இதுவே மிகப்பெரிய பணி நீக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது. ஆரம்பகாலத்தில் தற்போது செய்யப்படும் இந்த பணி நீக்கத்தினால், அக்டோபரில் பணி நீக்கங்களின் எண்ணிக்கையினை இது மட்டுப்படுத்துவதாகவும் யுனைடெட் அதிகாரிகள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

யார் யார் பணி நீக்கம்.

25994789_562965927387836_182422646116971

இது குறித்து இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில், 60 நாட்கள் எச்சரிக்கையுடன் இணங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இந்த மாஸ் பணி நீக்கத்தில் 15,000 விமான பணி பெண்களூம், 11,000 வாடிக்கையாளர் சேவை மற்றும் கேட் முகவர்களும், 5,500 பராமரிப்பு தொழிலாளர்களும், 2,250 விமானிகள் உள்பட பலரும் பணி நீக்கம் செய்ய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கர்கள் எவ்வளவு பேர்?

இந்த அதிரடியான அறிவிப்பானது யுனைடெட் விமானத்தின் அமெரிக்கா ஊழியர்களை 45% கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்ல 1,300 நிர்வாக அதிகாரிகள் மற்றும் உதவி ஊழியர்கள் அக்டோபர் 1ல் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும், அதோடு சர்வதேச ஊழியர்களும் இதனுடன் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 95,000 சர்வதேச பணியாளர்களைக் கொண்டுள்ளது.

பயணம் வீழ்ச்சி

கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் பாதி வரையில் விமான சேவையானது 95 சதவீதம் சரிந்துள்ளது. இதன் பின்னர் மெதுவாக அதிகரிக்க தொடங்கினா;லும் ஜூலை 4 வார இறுதியில் சற்று விமான பயணிகளின் எண்ணிக்கையானதுசற்று அதிகரித்துள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 70 சதவீதம் வீழ்ச்சியாகும்.

https://tamil.goodreturns.in/world/us-airlines-sending-mass-layoff-warning-36-000-employees-amid-coronavirus-pandemic-019708.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ச்சிப்பாதையில் சீனாவின் பொருளாதாரம்..

b1b04f31ee1a419a931c2116b1031f72.jpeg

சீன பொருளாதாரம் 2020-இன் இரண்டாம் காலாண்டில் 3.2 வீதம் வளர்ச்சியடைந்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியின் பின்னர் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸிற்கு எதிரான முடக்கல் அமுலிலிருந்த 2020-இன் முதல் மூன்றுமாத காலப்பகுதியில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை சந்தித்தது.

இந்த நிலையில், நேற்று வௌியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சீனாவின் மொத்த தேசிய உற்பத்தியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://www.vanakkamlondon.com/வளர்ச்சிப்பாதையில்-சீனா/

டிஸ்கி :

சப்பயல்.! ஊரெல்லாம் பரப்பிட்டு நீ நினைச்சத சாதிச்சு முடிச்சுட்ட ..?

5gpcZMDMYBJFbFplIz8CGqUar80QTi.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சிக்கலில் சீனா.. 11 நிறுவனங்களுக்கு தடை..

640x-1.jpg

அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போருக்கு என்று தான் முடிவு வருமோ தெரியவில்லை. ஏனெனில் தற்போது மீண்டும் இந்த நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக பிரச்சனையை முடித்து ஒரு சுமூகமான உடன்படிக்கையை எட்ட, சீனாவும் முயன்று வருகின்றது. ஆனால், இதுவரை அம்முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.

சொல்லப்போனால் எப்படியோ பலதரப்பட்ட பேச்சு வார்த்தைக்கு பின்பாவது முதல் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்போது அதனை நினைத்து கூட பார்க்கவில்லை என்கிறது டிரம்ப் நிர்வாகம்.

11 சீன நிறுவனங்களுக்கு தடை

இதற்கிடையில் இந்த உறவுகளுக்கு இடையில் மேலும் விரிசலை உருவாகும் விதமாக, ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள சிறுபான்மையினரை குறி வைத்து, சீனாவின் பிரச்சாரத்தில் மனித உரிமை மீறல்களுக்கு நிறுவனங்கள் உடந்தையாக இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் திங்கட்கிழமையன்று 11 நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது. இது இந்த நிறுவனங்கள் சிறப்பு உரிமம் இல்லாமல் அமெரிக்க தொழில் நுட்பம் மற்றும் தயாரிப்புகள் வாங்குவதை தடை செய்துள்ளது.

யாருக்கெல்லாம் தடை?

மனித உரிமைக் குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சீன அரசாங்கத்தால் ஜின்ஜியாங்கில் மேற்கொள்ளப்பட்ட, தடுப்புக் காவல் பிரச்சாரத்தினை ஆவணபடுத்தியுள்ளன. மேலும் சிறுபான்மை குழுவினை சேர்ந்தவர்கள் இந்த குழுவின் பெரிய முகாம்களில் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்ட சில கைதிகள், அதற்கு அருகிலுள்ள தொழில் சாலைகளில் வேலை நிர்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பேஸ் மாஸ்க் தயாரிக்க நிர்பந்தம்

இன்னும் சிலர் பேஸ் மாஸ்க் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இவ்வாறு ஒன்பது நிறுவனங்களை கடந்த திங்கட்கிழமையன்று டிரம்ப் நிர்வாகம் மேற்கோள் காட்டியது. குறிப்பாக சீனாவின் Changji Esquel Textile Co. Ltd, Nanchang O-Film Tech, Hetian Taida Apparel Co. Ltd உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களை கட்டாயபடுத்தி வேலை செய்வதற்காக ஆயத்தமாகி உள்ளன என்றும் பட்டியலிடப்பட்டுள்ளன.

உரிமம் இல்லாமல் பொருட்கள் இல்லை

இதே சீனாவின் மற்ற இரண்டு நிறுவனங்களான Xinjiang Silk Road BGI and Beijing Liuhe BGI நிறுவனங்கள் சிறுபான்மையினரின் அடக்குமுறையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் மரபணு பகுப்பாய்வுகளை நடத்த சேர்க்கப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக அமெரிக்காவின் இந்த தடையினால் அமெரிக்கா நிறுவனங்கள் சீன நிறுவனங்களுக்கு உரிமம் இல்லாமல் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை விற்பனை செய்வதில் இருந்து தடுக்கிறது. ஆனால் வாங்குவதில் இந்த தடை விதிக்கப்படவில்லை.

வர்த்தகம் செய்ய வாய்ப்பே இல்லை

எனினும் ஜின்ஜியாங்கில் கட்டாய உழைப்பு மற்றும் பிற முறைகேடுகளுக்காக அரசாங்க பட்டியலில் பெயரிடப்பட்ட, எந்தவொரு நிறுவனத்துடனும் தொடர்ந்து வர்த்தகம் செய்ய வாய்ப்பில்லை. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையானது, அமெரிக்கா சீனா இடையே ஏற்கனவே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் வந்துள்ளது.

செல்ஃபி கேமரா உற்பத்தி

இவ்வாறு திங்கட்கிழமையன்று தடை விதித்ததாக கூறப்படும் நிறுவனங்களில் ஒன்றான, Nanchang O-Film Tech ஐபோனின் சில மாடல்களுக்கு செல்ஃபி கேமாராக்களையும், ஹூவாய் மற்றூம் சாம்சங்கிற்கான பிற கேமரா மற்றூம் டச் ஸ்கீரின்களையும் தயாரித்ததாக கூறியுள்ளது.

முக்கியப் பிராண்டுகளுடன் தொடர்பு

இதே பட்டியலில் உள்ள மற்றொரு நிறுவனமான Hefei Bitland Information Technology Co நிறுவனம் தனது இணையதளத்தில் கூகுள், ஹெச்பி, ஹையர், iFlytek மற்றும் லெனோவா ஆகியவை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே மற்றொரு நிறுவனமான Changji Esquel Textile Co. Ltd முக்கிய பிராண்டுகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

யாருக்கு பிரச்சனை?

இப்படி சீனா நிறுவனங்கள் குற்றம் சாட்டப்பட்டாலும், அதனை சில நிறுவனங்கள் மறுத்தும் கூறியுள்ளன. எனினும் பல நிறுவனங்கள் பல முக்கிய பிராண்டுகளுடன் தொடர்பில் உள்ளன. இதனால் சீன நிறுவனங்களுக்கு பிரச்சனையே என்றாலும், அமெரிக்கா நிறுவனங்களுக்கும் இதனால் பிரச்சனை தான் என்பதும் நிசப்தமான உண்மையே.

https://tamil.goodreturns.in/world/donald-trump-administration-barred-11-new-chinese-companies-019857.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கோவிட்டின் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, பலருக்கும் சிக்கலைகளை உருவாக்க பல நிறுவனங்கள் வங்குரோத்து நிலையில்... மத்திய வாங்கிகள் பணத்தை அச்சடிக்க, அதனால் தங்கம், வெள்ளி  மற்றும் பிட்ககொயின் பெறுமதிகள் கூடுகின்றன. 

ஆனால், பல நாடுகளின் பங்கு சந்தைகள், குறிப்பாக அமெரிக்காவின்,  தொடர்ந்தும் அதிகரிப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக வளர்ச்சியையும் இலாபத்தையும் ஈட்டி வருகின்றன. குறிப்பாக ஆப்பிள், அமேசான், மைக்ரோசொப்ட் மற்றும் அல்பபாட் எனப்படும் கூகிள்  ஒரு த்ரிலயனையும் தாண்டி, அதிலும் ஆப்பிள் இரண்டு த்ரிலியன்களை நோக்கி வேக படை போடுகின்றது. 

ஆக, பல்லு உள்ளவன் பகோடா சாப்பிடுவான் என கூறுவது போன்று வழிகளை தேடி முன்னேற முடியும் என்பதை மீண்டும் உலகம் காட்டி நிற்கின்றது. 

Link to comment
Share on other sites

சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் மேற்குலக பின்னடைவும் 

இன்று வரை தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்க தலைமையில் மேற்குலகம் முன்னிலையில் இருந்தாலும், அந்த இடைவெளியை, சீன நாடு வேகமாக குறைந்து வருகின்றது.  

குறிப்பாக அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களான பின்வரும் துறைகளில் சீன வளர்ச்சி அதிகமாக உள்ளது : 5G, AI 

டிக்டொக் - சீனாவில் தலைமையமகத்தை கொண்ட இந்த இளையவர்களை கவர்ந்த சமூக வலை தளம் அமெரிக்காவின் இளையவர்களை சீனாவின் கைகளுக்குள் கொண்டு சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கிட்டத்தட்ட 21 மில்லியன்களை கொண்ட இந்த மென்பொருளை மைக்ரோசோப்ட் (மட்டுமே இந்த மாற்றத்தை செய்யும் வலிமை கொண்ட நிறுவனம்) 10 - 30 பில்லியன்களை கொடுத்து, நான்கு நாடுகளுக்கான உரிமைத்தை வாங்க முயலுகின்றது. புரட்டாதி 15 க்குள் ஒரு இணக்கத்திற்கு வர வேண்டும் என அமெரிக்க அரசு கூறி உள்ளது. இல்லாவிடடால், இந்த மென்பொருளை தடை செய்ய அமெரிக்க அரசு உத்தேசித்துள்ளது. 

ஏற்கனவே  Huawei நிறுவனத்துடன் முறுகிய நிலையில்; டிக்டோக் அடுத்த அத்தியாயத்தை எழுத உள்ளது. 

சீனா - தமது பொருளாதார நண்பன் என்கிறார்கள் சில அமெரிக்க நிறுவன இயக்குனர்கள். சிலர், சீன அரசு ஒரு பிற்போக்கான கொள்ளை இடும் அரசு என்கிறார்கள். ஆக, இங்கும் (பொருளாதார) அரசியல்     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ampanai said:

சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் மேற்குலக பின்னடைவும் 

இன்று வரை தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்க தலைமையில் மேற்குலகம் முன்னிலையில் இருந்தாலும், அந்த இடைவெளியை, சீன நாடு வேகமாக குறைந்து வருகின்றது.  

குறிப்பாக அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களான பின்வரும் துறைகளில் சீன வளர்ச்சி அதிகமாக உள்ளது : 5G, AI 

டிக்டொக் - சீனாவில் தலைமையமகத்தை கொண்ட இந்த இளையவர்களை கவர்ந்த சமூக வலை தளம் அமெரிக்காவின் இளையவர்களை சீனாவின் கைகளுக்குள் கொண்டு சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கிட்டத்தட்ட 21 மில்லியன்களை கொண்ட இந்த மென்பொருளை மைக்ரோசோப்ட் (மட்டுமே இந்த மாற்றத்தை செய்யும் வலிமை கொண்ட நிறுவனம்) 10 - 30 பில்லியன்களை கொடுத்து, நான்கு நாடுகளுக்கான உரிமைத்தை வாங்க முயலுகின்றது. புரட்டாதி 15 க்குள் ஒரு இணக்கத்திற்கு வர வேண்டும் என அமெரிக்க அரசு கூறி உள்ளது. இல்லாவிடடால், இந்த மென்பொருளை தடை செய்ய அமெரிக்க அரசு உத்தேசித்துள்ளது. 

ஏற்கனவே  Huawei நிறுவனத்துடன் முறுகிய நிலையில்; டிக்டோக் அடுத்த அத்தியாயத்தை எழுத உள்ளது. 

சீனா - தமது பொருளாதார நண்பன் என்கிறார்கள் சில அமெரிக்க நிறுவன இயக்குனர்கள். சிலர், சீன அரசு ஒரு பிற்போக்கான கொள்ளை இடும் அரசு என்கிறார்கள். ஆக, இங்கும் (பொருளாதார) அரசியல்     

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை கண்டதில் மிக்க மகிழ்ச்சி தோழர்..👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.