ampanai

கோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்

Recommended Posts

தொடரும் உயிரிழப்புக்கள், மரண பீதி, மற்றும் அசாதாரண வாழ்வியல் சூழல் எல்லாம் உலகத்தை தலைகீழாக பிரட்டிப்போட்டுள்ளது. 

எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் மடடுமல்ல நாட்டின் தலைவர்களும் கேட்க்கும் கேள்விகள்:
 - எப்போது இது முடியும் 
 - எவ்வாறு மீள் எழுதல் இருக்கும் 

மேற்குலக வாழ்வியல் மக்களின் அன்றாட நிகழ்வுகள்பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் அரசை பார்த்து கேட்கும் ஒரு முக்கிய கேள்வி : " என்ன நடந்தது எங்கள் தயார்படுத்தலுக்கு? 

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னராக, சோவியத் ஒன்றியம் உடைந்த போது, பெர்லின் சுவர் தகர்ந்த போது, இரட்டை கோபுரம் நொருங்கிய போது உலக வரலாறு தன்னை புதுப்பித்து கொண்டது.

இப்போது கொரோனா இல்லை கோவிட் 19 என்ற உலகத்தொற்று. 

மீண்டும் ஒரு முறை உலக இராணுவ, அரசியல் மற்றும் பொருண்மிய/ சமூக/ பண்பாட்டு மாற்றத்திற்குள்ளாகி தன்னைப் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம். 

உலகின் பலம்பொருந்திய இராணுவம் கொண்ட நாடு, முக கவசங்கள் இல்லாமல் தடுமாறுகின்றது. 

வழமைபோன்று அரசியல் தலைமைகள் தமது கதிரைகளை தக்க வைக்க முயன்றாலும், அவர்களால் மக்களை ஏமாற்ற முடியாத நிலை. மக்களால் பொருளாதார சுமைகளை, மேலாக மருத்துவ உளவியல் தாக்கங்களை தாங்க முடியாத பாரம், இவை சார்ந்த ஆத்திரம் அரசு மீது. சீன அரசு மீது. 

ஆனால், இவை எல்லாவற்றையும் பார்க்கும்பொழுது நடக்கும் நிகழ்வுகள் உலகளாவிய இன்றைய சங்கிலி பொருளாதாரத்தையும், சீன அரசில் உலகம் பெருமளவில் தங்கி இருப்பதையும் மாற்றி ஆகவேண்டும் என்ற நிலைக்குள் தள்ளப்படும், மாற்றம் வேண்டும். மாறியே ஆகவேண்டும். 

 • அந்த மாற்றம் எப்படி இருக்கும்? 
 • சீனாவும்  அது சார்ந்த நாடுகளும் என்ன செய்யும்? 
 • இறுதியில், அரசியல் ரீதியாக உலகத்தில் மாற்றங்கள் நிகழுமா?  
 • அந்த மாற்றத்தின் பின்னர் எந்த நாடுகள் மேலும் வலிமை  பெறும்? 

=== அம்பனை  ===     

Edited by ampanai
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

விரைவில் கொரோனா தாக்கத்தில் இருந்து  நாங்கள் வெளியே வரவேண்டும் இல்லை என்றால் பொருளாதார வீழ்ச்சி கொரோனாவை விட மேலதிகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என யேர்மனிய பொருளாளத்துறை இன்று எச்சரித்திருக்கிறது

Share this post


Link to post
Share on other sites

பல நாட்டு மத்திய வங்கிகள், பலமான பொருளாதார வளத்தை கொண்டுள்ள நாடுகள் அனைத்துமே, தமது வட்டி வீதத்தை வெகுவாக குறைத்தும், சில நாடுகள் ஏற்கனவே பூச்சியத்திலும் உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்றால், அந்த நிலைமை மாற வேண்டும் என்பதும் பொதுவான கருத்து. 

Chart showing interest rates cuts due to Coronavirus outbreak - 19 March

Share this post


Link to post
Share on other sites

கோவிட்டின் தாக்கத்திற்கு முன்னராக இருந்த பொருளாதார புள்ளிவிபரங்கள் கீழே. மீண்டும் பழைய நிலைமைக்கு வர மீண்டும் எவ்வளவு காலம் எடுக்கும்? சிலர் ஏழு வருடங்கள் வரை எடுக்கும் என்கிறார்கள். வரும்பொழுது அதன் வடிவமும் கட்டமைப்பும் மாறித்தான் இருக்கும்.  

அமெரிக்க பொருளாதாரம்  - 21.44 ட்ரில்லியன் டாலர்கள் 

சீனாவின் மொத்த உள்நாட்டு விற்பனை மதிப்பு 14.4 ட்ரில்லியன் டாலர்களாகவும், இந்தியா 2.8 ட்ரில்லியன் டாலர்களாகவும்  இருந்தன. 

இன்று, அமெரிக்க வேலைவாய்ப்பின்மை விகிதம் சுமார் 3.6 சதவீதமாக குறைந்திருந்தது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இது குறைந்து காணப்பட்டது.

 1. "இது போன்ற ஒரு நிலையை என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை... இது நெருக்கடி காலம்" என்று முதலீட்டாளர் ரே டாலியோ சி.என்.பி.சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
 2. கோல்ட்மேன் சாக்ஸின் பொருளாதார வல்லுநர்கள் கூர்மையான மந்தநிலையை கணித்துள்ளனர். முதல் காலாண்டில் 6% சரிவுக்குப் பிறகு, இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24% வீழ்ச்சி அடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.
 3. ஜே.பி மோர்கன் நிறுவனம் இது குறித்து ஆய்வு செய்ததில், அமெரிக்க பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் 14% சுருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 4. முதல் காலாண்டில் அமெரிக்காவின் வளர்ச்சி -2.1% ஆகக் குறைந்துவிட்டதாக சுவிஸ் வங்கி டைட்டன் நம்புகிறது. மேலும் இரண்டாவது காலாண்டில் சுமார் 10% சரிவு இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Ref : BBC 

Share this post


Link to post
Share on other sites

பட்டினியும் பாதுகாப்பும் 
இந்தியா போன்ற நாடுகளில், ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. மேற்குலக நாடுகள் போன்று இங்கு உணவுகளை சேகரித்து வீட்டில் வைக்கும் வசதியோ இல்லை வீடுகளுக்கு உணவை கொண்டுசெல்லும் வசதியும் இல்லை. வங்கி கணக்கிகளில் பணத்தை நேரடியாக அரசுகளால் வைப்பிடும் வசதியும் பெரிதாக இல்லை.  

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை அடிப்பதும், முடிந்தால் சுடுவோம் என தெலுங்காகானாவிலும் கூறப்படுகின்றது.  

ஆக, பொருளாதார வசதி குறைந்தவர்கள் பட்டினியால் சாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார வசதி படைத்தவர்களை, அவர்களின் உயிர்களை காக்க, வறுமை மக்கள் பலர் இறக்கவேண்டிய நிலை உள்ளது.  

Share this post


Link to post
Share on other sites

மேற்குலகம் இரண்டு வேறான அணுகுமுறைகளை பொருளாதார ரீதியாக எடுத்துள்ளன:

#1: வேலையை இழந்தவர்களுக்கு வழமையான சட்டத்தில் உள்ள காப்புறுதி, அதில் மாற்றங்களை செய்து இலகுவாக பணத்தை பெற வைத்தல் 

#2: நிறுவனங்களுக்கு பணம் வழங்கி அவர்களின் வேலை செய்யும் நிபுணர்களை வேலையில் தக்க வைத்தல், அவர்கள் வீட்டில் இருந்தாலும்  

பொருளியல் நிபுணர்கள், இரண்டாவது அணுகுமுறை சிறந்தது என்கிறார்கள். காரணம், இதன் மூலம் மக்களை உளவியல் ரீதியாக பலமான நிலையில் தக்க வைக்க முடியும் என்பதும், மீண்டும் அவர்களை வேலையில் இணைப்பது மூலம் பொருளாதாரம் மீண்டும் விரைவாக  மேம்படும் என கணிக்கிறார்கள். 

Share this post


Link to post
Share on other sites
On 3/26/2020 at 7:11 PM, ampanai said:

ஆனால், இவை எல்லாவற்றையும் பார்க்கும்பொழுது நடக்கும் நிகழ்வுகள் உலகளாவிய இன்றைய சங்கிலி பொருளாதாரத்தையும், சீன அரசில் உலகம் பெருமளவில் தங்கி இருப்பதையும் மாற்றி ஆகவேண்டும் என்ற நிலைக்குள் தள்ளப்படும், மாற்றம் வேண்டும். மாறியே ஆகவேண்டும். 

👍

4 hours ago, ampanai said:

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை அடிப்பதும், முடிந்தால் சுடுவோம் என தெலுங்காகானாவிலும் கூறப்படுகின்றது.  

இந்திய பொலிஸ்  காட்டுமிராண்டி என்கவுண்டர் செய்வதை தீவிரமாக ஆதரிப்பவர்கள் இந்திய மக்கள்.இன்று அவர்களுக்கு எதிராகவே என்கவுண்டர் திரும்புகிறது.

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

👍

இந்திய பொலிஸ்  காட்டுமிராண்டி என்கவுண்டர் செய்வதை தீவிரமாக ஆதரிப்பவர்கள் இந்திய மக்கள்.இன்று அவர்களுக்கு எதிராகவே என்கவுண்டர் திரும்புகிறது.

என்கவுண்டருக்கு ஆதரவு தெரிவித்து 
கருத்து போடும் ஒன்று இரண்டு பேருக்கு சூடு விழுந்தால் 
சொந்த புத்திவர வழி வகுக்கும். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 3/26/2020 at 2:41 PM, ampanai said:

பல நாட்டு மத்திய வங்கிகள், பலமான பொருளாதார வளத்தை கொண்டுள்ள நாடுகள் அனைத்துமே, தமது வட்டி வீதத்தை வெகுவாக குறைத்தும், சில நாடுகள் ஏற்கனவே பூச்சியத்திலும் உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்றால், அந்த நிலைமை மாற வேண்டும் என்பதும் பொதுவான கருத்து. 

Chart showing interest rates cuts due to Coronavirus outbreak - 19 March

மிகவும் நல்ல முடிவு 
மேற்கு உலகம் கிழக்கு உலகை காலம் காலமாக ஏமாற்றி வருகிறது 
இதை கிழக்கு உலகம் நன்கு அறியும்.

1994-95 ஆசிய பொருளாதார சரிவு வந்தபோது 
ஆசிய நாடுகள் மேலதிக காசுகளை அச்சடிக்க போவதாக அறிவித்தனர் 
மேற்கு உலகம் அது இன்னும் பாரிய விளைவுகளை கொடுக்கும் என்று தந்திரமாக தடுத்தது 

பின்பு 2008இல் மேற்கில் பொருளாதார சரிவு வந்தபோது 
எல்லா நாடுகளும் மேலதிக காசுகளை அச்சடித்து வட்டி வீதத்தை குறைத்து 
மீண்டு எழுந்துகொண்டன 

இப்போது பங்கு சந்தையை  தவிர பெரிதாக எந்த பொருளாதார மாற்றமும் இல்லாத போதும் 
அமேரிக்கா 2.2 ட்ரில்லியன் டாலரை நிவாரணம் எனும் பெயரில் உள்ளே கொண்டுவந்து 
தனியார் மயமாக்கி .......தனியார் கோர்பிரட்டுக்கள் ஊடக  மற்ற நாடுகளில்  கோர்னோவால் 
வீழ்ச்சி அடையும் பொருளாதாரத்தை  கொள்ளையடிக்க போகிறது. 

Share this post


Link to post
Share on other sites

உலக பொருளாதாரமயமாக்கல் என்பது இன்றைய உலகில் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. 

இதுவரை, செல்வந்த நாடுகள் உலக பொருளாதாரத்தை பல வலய அடிப்படையில் பிரித்து, வறியநாடுகளில்  தமக்கு தேவையான பல பொருட்களை வடிமைத்து இறக்குமதியும் செய்து, உலக சந்தையில்  சந்தைப்படுத்தலையும் செய்து வந்தன. 

ஆனாலும், இன்று ஏற்பட்டுள்ள சுகயீனம், இறப்பு, தொற்று என்பன இன்றைய முதலாளித்துவ கோட்பாடுகளை கேள்விக்குறியாக்கியுள்ளன. 

 1. - யாவருக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்கவேண்டும் என நிலை நாடுகளில் ஏற்பட்டுள்ளது. 
 2. - வேலைசெய்ப்பவர்கள் செய்யாதவர்கள் என யாவருக்கும் உலக நாடுகள் ஒரு குறிப்பிட்ட பணத்தொகையை வழங்கியாக வேண்டும் என்ற நிலை.
 3. - அடிப்படை தேவைகளுக்கான பொருட்களை தமது நாட்டிலேயே செய்யவேண்டும் என்ற நிலை.
   

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, விளங்க நினைப்பவன் said:

👍

இந்திய பொலிஸ்  காட்டுமிராண்டி என்கவுண்டர் செய்வதை தீவிரமாக ஆதரிப்பவர்கள் இந்திய மக்கள்.இன்று அவர்களுக்கு எதிராகவே என்கவுண்டர் திரும்புகிறது.

எது மாதிரியான தவறிழைத்தவர்களை என்கௌன்டர் செய்ய வேண்டும் என அதரவு தெரிவித்தனர் இந்திய மக்கள்...

Share this post


Link to post
Share on other sites

 

 

 

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

 

 

 

 

 

Edited by Knowthyself

Share this post


Link to post
Share on other sites
On 3/28/2020 at 10:49 AM, Maruthankerny said:

மிகவும் நல்ல முடிவு 
மேற்கு உலகம் கிழக்கு உலகை காலம் காலமாக ஏமாற்றி வருகிறது 
இதை கிழக்கு உலகம் நன்கு அறியும்.

1994-95 ஆசிய பொருளாதார சரிவு வந்தபோது 
ஆசிய நாடுகள் மேலதிக காசுகளை அச்சடிக்க போவதாக அறிவித்தனர் 
மேற்கு உலகம் அது இன்னும் பாரிய விளைவுகளை கொடுக்கும் என்று தந்திரமாக தடுத்தது 

பின்பு 2008இல் மேற்கில் பொருளாதார சரிவு வந்தபோது 
எல்லா நாடுகளும் மேலதிக காசுகளை அச்சடித்து வட்டி வீதத்தை குறைத்து 
மீண்டு எழுந்துகொண்டன 

இப்போது பங்கு சந்தையை  தவிர பெரிதாக எந்த பொருளாதார மாற்றமும் இல்லாத போதும் 
அமேரிக்கா 2.2 ட்ரில்லியன் டாலரை நிவாரணம் எனும் பெயரில் உள்ளே கொண்டுவந்து 
தனியார் மயமாக்கி .......தனியார் கோர்பிரட்டுக்கள் ஊடக  மற்ற நாடுகளில்  கோர்னோவால் 
வீழ்ச்சி அடையும் பொருளாதாரத்தை  கொள்ளையடிக்க போகிறது. 

அதிகளவில் பணத்தை அச்சடிப்பது ஊடாக மேற்குலகம் மீண்டது, மீண்டும் மற்றைய நாடுகளை தன பண பலத்தால் விழுங்கி விடும் என்றால், அந்த நாட்டின் மத்திய வங்கிகளும் அதையே செய்யலாம். 

ஆனால், பல நாடுகளும் செய்ய முடியாது. காரணம், அங்கு பொருளாதார வளர்ச்சி அந்த பண புழக்கத்தை அதன் பெறுமதியை தக்க வைக்காமல் போய்விடும். இறுதியில், சிம்பாவே போன்ற நாட்டின் பணம் போலாகி விடும். 

அமெரிக்காவை பொறுத்தவரையில் அவர்களிடம் பொருளாதாரத்தை எழுப்பும் பலம் உண்டு. அதனால், அமெரிக்க டாலர் பலமாயும் இருக்கும். உலக மக்களும் அதை விரும்புகிறார்கள். 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ampanai said:

அதிகளவில் பணத்தை அச்சடிப்பது ஊடாக மேற்குலகம் மீண்டது, மீண்டும் மற்றைய நாடுகளை தன பண பலத்தால் விழுங்கி விடும் என்றால், அந்த நாட்டின் மத்திய வங்கிகளும் அதையே செய்யலாம். 

ஆனால், பல நாடுகளும் செய்ய முடியாது. காரணம், அங்கு பொருளாதார வளர்ச்சி அந்த பண புழக்கத்தை அதன் பெறுமதியை தக்க வைக்காமல் போய்விடும். இறுதியில், சிம்பாவே போன்ற நாட்டின் பணம் போலாகி விடும். 

அமெரிக்காவை பொறுத்தவரையில் அவர்களிடம் பொருளாதாரத்தை எழுப்பும் பலம் உண்டு. அதனால், அமெரிக்க டாலர் பலமாயும் இருக்கும். உலக மக்களும் அதை விரும்புகிறார்கள். 

நீங்கள் உலகமயமாதல் பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும் 
மக்களிடம் அதிக பண புழக்கம் வரும்போது 
உள்ளூர் ஏற்றுமதியில் கூடிய கவனம் எடுக்க கூடியமாதிரி 
மக்களை வழிநடத்தவும் வேண்டும். 

வியட்நாம் கம்போடியா நாடுகள் அதி நவீன தையல் இயந்திரங்களை 
இறக்குமதி செய்து ... நவ நாகரீக உடைகளை பாரிய அளவில் ஏற்றுமதி செய்ய தொடங்கினார்கள்.
(93-94 ஆசிய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அப்படிதான் மீண்டார்கள்) 

சிம்பாவே  வெனிசுவேலாவை உதாரணத்துக்கு எடுக்காதீர்கள் 
(இவை இரண்டும் காலம் காலமாக முதளித்துவத்துக்கு எதிராக போராடுபவை)
இவர்களின் நிலைமை நீண்ட நோக்கில் பல வல்லரசுகளால் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறது 
இவர்கள் மீது அழிவை வேண்டுமென்றே திட்டம் இட்டு செய்கிறார்கள். 

இப்போது இந்தியா போன்ற நாடுகளும் மக்களுக்கு 
நிவாரணம் என்ற பெயரில் பணத்தை அள்ளி கொடுக்க வேண்டும் 
அப்போதான் மேற்குநாடுகள் உள்ளூர் பொருளாதாரத்தை அள்ளாமல் பார்க்க முடியும். 
துரதிஷ்ட வசமாக மேற்கு உலகம் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு 
உள்ளூர் இயற்கை வளங்களை அள்ளிக்கொண்டு போய்விடும். 

Share this post


Link to post
Share on other sites

உலக பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படுவதுண்டு. இதன் பொருளியல் விளக்கமானது, இரண்டு காலாண்டுகள் ஒரு நாட்டின் பொருளாதாரம் தேய்வடைந்தால், நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. 

ஆனால், ஒரு நாட்டில் மட்டுமல்லாது பல நாடுகளில் பொருளாதாரம் நீண்டகாலமாக பொருளாதார மந்த நிலையில் இருந்தால் அதை "டிப்ரெஷன்" என ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். தமிழில் பொருளாதார சோகம் என கூறலாம் என எண்ணுகிறேன். 

இவ்வாறான ஒரு காலம் 1929இல் இருந்தது.    

1929 WORLD ECONOMİC DEPRESSİON

 

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிலை கொண்டிருந்த இந்த பொருளாதார சோகம், முழு உலகையையும் பிடிந்திருந்தது.

ஆனால், இன்றை உலகம் 2020 வேறானது, 1929 -30 காலத்தை விட பின்னிப் பிணைந்தது.  

எவ்வாறான "பொருளாதார சோகம்" இன்றைய தொற்றால் வரும்? வந்தால் எவ்வளவு காலம் நீடிக்கும்? எவ்வாறு மேற்குலக மற்றும் கீழைத்தேய மக்களை பாதிக்கும். 

உலகம் பொருளாதாரா மந்தநிலை பற்றும் 'சோகநிலை'யில் உள்ளது என்பதை பல சுட்டிகள் காட்டும்.ஆனால், ஒரு இலகுவான சுட்டி - உலக சந்தையில் மசகு (கச்சாய்) எண்னையின் விலை. இது 20 அமெரிக்க டாலருக்கு கீழே பீப்பாய் ஒன்றிற்கு இருந்தால் உலக பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என நம்பலாம்.      

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

ஒரு பொருளாதார சோகத்தை தவிர்க்க 1929-30 களில் விட்ட தவறுகள் என்ன என்பதை படித்தது அப்படி மீண்டும் வந்தால் என்ன செய்யவேண்டும் என கையேடுகளை உலக வங்கிகள் இன்று கொண்டுள்ளன. 

அவற்றில் ஒன்று - நிறுவனங்கள் வங்குரோத்திற்கு போகாமல் மீட்பது 
அடுத்தது - பங்குகளை அரசே வாங்குவது 

ஒரு சிறு ஆவணப்படத்தை பார்த்து அன்று என்ன நடந்தது என பார்க்கலாம் 

 

Share this post


Link to post
Share on other sites
On 3/29/2020 at 5:21 PM, Maruthankerny said:

வியட்நாம் கம்போடியா நாடுகள் அதி நவீன தையல் இயந்திரங்களை 
இறக்குமதி செய்து ... நவ நாகரீக உடைகளை பாரிய அளவில் ஏற்றுமதி செய்ய தொடங்கினார்கள்.
(93-94 ஆசிய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அப்படிதான் மீண்டார்கள்) 

மீண்டார்கள். மீண்டும் தாளாமல் இருக்க, குறிப்பாக வியட்னாம் அமெரிக்க உதவியுடன் ( ஒபாமாவும் சென்றார்) கட்டி எழுப்ப முனைந்துள்ளது. ஆனால், ஆசியாவில் தன்னை மீறி யாரும் எதையும் செய்துவிட முடியாது என சீன அரசு உள்ளது. இதனால் தான் தென் சீன கடலிலும் சர்ச்சை. 

Share this post


Link to post
Share on other sites
On 3/29/2020 at 5:21 PM, Maruthankerny said:

இப்போது இந்தியா போன்ற நாடுகளும் மக்களுக்கு 
நிவாரணம் என்ற பெயரில் பணத்தை அள்ளி கொடுக்க வேண்டும் 
அப்போதான் மேற்குநாடுகள் உள்ளூர் பொருளாதாரத்தை அள்ளாமல் பார்க்க முடியும். 
துரதிஷ்ட வசமாக மேற்கு உலகம் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு 
உள்ளூர் இயற்கை வளங்களை அள்ளிக்கொண்டு போய்விடும். 

ஆனால், தற்போதுள்ள மோடி தலைமையிலான அரசு, இந்தியாவை ஒரு பொருளாதார வல்லரசாக்க வேண்டும் என்ற முனைப்பிலும் உலகளாவிய வளம் படைத்த இந்தியர்களை இணைத்தும் பல முன்னேற்றகரமான திட்டங்களை அமுல்படுத்தியும் முனைந்தும் வருகிறார்கள். பார்க்கலாம்.   

Share this post


Link to post
Share on other sites

 

 

 

 

[26:25]

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

 

[15:55]

 

Edited by Knowthyself
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 

 

 

 

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

உலகமயமாதலும் இணைபிரித்தலும் (Decoupling) - வேல் தர்மா

மகாநதி திரைப்படத்தின் இறுதிக் கட்டத்தில் கதாநாயகனும் வில்லனும் உயர் மாடி ஒன்றில்மோதிய போது இருவரின் கைகளும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும். வில்லன் சண்டையில் வில்லன் மொட்டை மாடியில் இருந்து சறுக்கி விழுந்து அந்தச் சங்கிலியில் தொங்கிக் கொண்டிருப்பான். அந்த இடத்திற்கு காவற்துறையினர் வந்து கொண்டிருப்பர். அவர்கள் வந்து வில்லைனைக் காப்பாற்ற முன்னர் அவனைக் கொல்ல கதாநாயகன் தன் கையை வெட்டி வில்லனை உயரத்தில் இருந்து விழச் செய்து கொல்வார். உலகமயமாதல் அதிகரித்த போது வல்லரசு நாடுகள்கூட ஒன்றின் மீது ஒன்று அளவிற்கு அதிகமாகத் தங்கியிருப்பது வேண்டத் தகாத ஒன்றாகி விட்டது. இதன் ஆபத்து கொரோனாநச்சுக்கிருமி உலகப் போக்குவரத்தை துண்டித்த போது ஏற்பட்ட பொருளாதார அதிர்வால் உணரப்பட்டுள்ளது.

உலகமயாக்கல்
உலகமயமாக்கல் என்பது நாடுகளின் பொருளாதாரங்களையும் கலாச்சாரங்களையும் அதிகம் ஒன்றிணைத்து உலக வர்த்தகத்தையும் மூலதனப் பரம்பலையும் தொழில்நுட்பப்பகிர்வையும் அதிகரிப்பதாகும். உலகமயமாக்கல் உலகச்சந்தையை திறந்து விட்டது; உலக விநியோக வலையமைப்பை உருவாக்கியது; அடம் சிமித் என்னும் பழம் பெரும் பொருளியலாளரின் உழைப்புப்பகிர்வு, தனித்திறனுருவாக்கல் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது. உலக நாடுகளின் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி 1960-ம் ஆண்டு 12விழுக்காடாக இருந்தது. உலகமயமாக்கலின் பின்னர் அது 30விழுக்காடாக உயர்ந்தது. ஒரு உற்பத்திப் பொருளின் பாகங்கள் பல நாடுகளில் இப்போது உற்பத்தி செய்யப்படுகின்றது. அதனால் ஒரு பொருளின் உற்பத்தி பல நாடுகளில் தங்கியிக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு நாட்டில் ஏற்படும் பிரச்சனை உற்பத்தியைப் பாதிக்கச் செய்கின்றது. கோவிட்-19 தொற்று நோயால் ஒரு நாட்டில் தொழிற்சாலைகள் மூடப்பட்டபோது பல நாடுகளின் உற்பத்திகள் பாதிப்புக்கு உள்ளாகின. பல நாடுகள் மூச்சுக்கவசங்களின் ஏற்றுமதியைத் தடை செய்தமை உலகமயமாக்கல் கொள்கைக்கு எதிரானவையாக குற்றம் சாட்டப்பட்டன. ஜேர்மனி உருவாக்கவிருக்கும் கோவிட்-19 தொற்று நோய்த் தடுப்பு மருந்து முழுவதையும் அமெரிக்கா வாங்க முற்பட்ட போது ஜேர்மன் அரசு தலையிட்டு அதைத் தடுத்ததும் உலமயமாக்கல் கொள்கைக்கு எதிரானதே.

சீனாவும் உலகமயமாதலும்
சீனா தனது பொருளாதாரத்தைச் சூழும் ஆபத்தை 1979இல் உணர்ந்து கொண்டு செயற்படத் தொடங்கினாலும் கணிசமான பொருளாதாரச் சீர்திருத்தத்தை 1989- ம் ஆண்டு ஏற்பட்ட தினமன் சதுக்க நெருக்கடிக்குப் பின்னரே செய்யத் தொடங்கியது. சீனா தனது நாட்டு இளையோருக்கு வேலை வாய்ப்பளிப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டது. உலக வர்த்தக  நிறுவனத்தில் 2001-ம் ஆண்டு இணைந்து கொண்டது. அதனால் இன்று வரை சீனப் பொருளாதாரம் 10 மடங்கிற்கு மேல் வளர்ந்துள்ளது. சீனா உலக வர்த்தகத்தில் இணைந்து கொண்டமை உலகமயமாதலின் முக்கிய நிகழ்வாகும். சீனாவிற்கான உலக வர்த்தகத்தை மேற்கு நாடுகள் இலகுவாக்கின. அதனால் சீனாவை உலக உற்பத்தி நிறுவனங்கள் தமது பொருத்து நிலையமாக (assembly plant of the world) மாற்றின. வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிநுட்பங்களைப் பிரதிபண்ணுவதும் திருடுவதும் சீனாவிற்கு இலகுவானவையாக்கப்பட்டன. அதைப் பாவித்து சீனாவின் பொருளாதாரம், தொழில்நுட்பம், படைத்துறை ஆகியவை மேற்கு நாடுகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் வளர்ந்தன. 19-ம் நூற்றாண்டில் பிரித்தானியா உலகத்தின் தொழிற்சாலை என அழைக்கப்பட்டது போல் தற்போது சீனா அழைக்கப்படுகின்றது. சீனாவின் உவாவே நிறுவனத்தின் 5ஜீ தொழில்நுட்ப வளர்ச்சி மேற்கு நாடுகளுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சியையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் உணரவைத்தது.


தொழில்நுட்ப ஆபத்து நாடுகளைத் துண்டிக்கின்றது.

2019 டிசம்பரில் அமெரிக்காவின் வர்த்தகத்துறைச் செயலர் வில்பர் ரொஸ் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய தொழில்நுட்பங்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என்றார். இது சீனாவின் உவாவே கைப்பேசி நிறுவனத்தை மட்டும் இலக்காக வைத்துச் சொல்லப்பட்டதல்ல. அமெரிக்காவின் எதிரி நாடுகளுடன் தொடர்புகளை வைத்துள்ள ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்புறவு நாடுகளின் மென்பொருள், வன்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கும் தரவு செயற்படுத்தும் நிறுவனங்களுக்கும் அது பொருந்தும். தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்கள் இணையவெளியில் அதிகம் தங்கியிருப்பதும் அவற்றின் மென்பொருட்களிலோ அல்லது வன் பொருட்களிலோ உளவறியும் நச்சுநிரல்கள் (computer virus) இணைக்கப்பட்டிருக்கலாம் எனற அச்சமும் அமெரிக்காவைக் கரிசனை கொள்ள வைத்துள்ளது. உலக நாடுகளுடனான தொழில்நுட்ப உறவுகள் இணையவெளித் தொடர்புகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருக்கின்றது. சுருங்கச் சொல்வதாயின் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை சீனா திருடுவதையும் அமெரிக்கப் படைத்துறையை சீனா உளவு பார்ப்பதையும் தடுப்பதற்கு புதிய தொழில்நுட்பங்களூடான உலகத் தொடர்பை அமெரிக்கா துண்டிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருக்கின்றது. உலகத்தை ஒரு சந்தையாக்கும் உலகமயமாக்குதலின் நோக்கம் இங்கு பெருமளவு பாதிக்கப்படுகின்றது. உலகமயமாதலின் ஒரு அம்சமாக தொழில்நுட்பப் பரம்பல் இருக்கின்றது. நாடுகள் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளல் மூலம் சீனாவும் இரசியாவும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விஞ்சிவிடும் என்ற அச்சம் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கின்றது. 


உயர்ந்த சீனாவை விழுத்தும் முயற்ச்சி
2015-ம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி உச்சமடைந்தது. அதைத் தொடர்ந்து உலகமயமாக்கல் சீனாவிற்கு சாதகமாகவும் மேற்கு நாடுகளுக்கு பாதகமாகவும் இருப்பது உணரப்பட்டது. ஆனாலும் ஏற்றுமதியில் தங்கியிருப்பதை சீனாவால் மாற்றுவது சிரமமாக இருந்தது. மேற்கு நாடுகள் உலகமயமாக்கலை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உலகமயமற்றதாக்கல் (Deglobalisation) 2016-ம் ஆண்டில் இருந்து பேசப்பட்டு வருகின்றது. சீனாவும் தனது பொருளாதாரம் ஏற்றுமதியில் அதிகம் தங்கியிருப்பதை உணர்ந்து கொண்டது. உலகப் பொருளாதாரம் சரியும் போது சீனப் பொருளாதாரம் சரிவது தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளது. சீனாவால் உலகமயமாக்குதலில் இருந்து விலக முடியாமல் இருக்க மேற்கு நாடுகள் அதிலிருந்து விலக முடிவெடுத்தன. 2019 ஜூனில் நடந்த ஜீ20 மாநாட்டில் மேற்கு நாடுகள் காப்பியல் (protectionism) கொள்கையைக் கடைப்பிடித்து உலக வர்த்தக் ஒழுங்கை சிதைக்க முயல்வதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் குற்றம் சாட்டினார்.

தன்னிறைவு, உலகமயமாதல், அந்நிய முதலீடு
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கும் வர்த்தகப் போர் இரு நாடுகளையும் ஒன்றில் ஒன்று தங்கியிருப்பதை எப்படித் தவிர்ப்பது என்பதை நோக்கமாகக் கொண்டதே. உலகமயமாதல் முதலீட்டாளர்களையும் அவர்களுக்காக பணி புரிவோரையும் உலகெங்கும் பயணிப்பதை அதிகரிக்கச் செய்தது. அதனாலேயே கொரோனாநச்சுக்கிருமி மிக வேகமாக உலகெங்கும் பரவியது. 1970களில் அப்போது மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்பட்ட வளர்முக நாடுகளில் பொருளாதாரத் தன்னிறைவு என்ற பதம் அதிகம் விரும்பப்பட்டதாக இருந்தது. உலகமயமாக்குதல் அதை இல்லாமல் செய்து “அந்நிய நேரடி முதலீடு” என்ற சொற்றொடர் பலராலும் விரும்பப்பட்டதாக உருவெடுத்தது.

சீன அமெரிக்க இணைப்புச் சங்கிலி
அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு சீனா அதிக ஏற்றுமதியைச் செய்வதால் சீனாவிடம் அதிக வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு உள்ளது. அதை கையில் வைத்துக் கொண்டிருக்க முடியாது. எங்காவது முதலீடு செய்ய வேண்டும். அமெரிக்கர்கள் சீன உற்பத்தியை மிக மலிவான விலையில் வாங்குகின்றார்கள். உள்ளூர் உற்பத்தி குறைந்ததால் அமெரிக்க அரசின் வரிச் சேகரிப்பு குறைந்தது அமெரிக்க அரசின் வருமானம் குறைகின்றது. அதனால் அமெரிக்க அரசு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அமெரிக்காவிற்கு சீனா தன் வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பை கடனாகக் கொடுக்கத் தொடங்கியது. அப்படி சீனா கொடுக்காவிட்டால் அமெரிக்க டொலரின் பெறுமதி குறையும். குறைந்தால் சீன ஏற்றுமதி குறையும். அமெரிக்காவிற்கு சீனாவின் ஏற்றுமதியும் அமெரிக்காவிற்கு சீனா கொடுக்கும் கடனும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த சங்கிலி. இது போலப் பலவகைகளில் உலகமயமாதல் பிரிப்பதற்கு கடினமான சங்கிலிகளால் நாடுகளைப் பிணைத்துள்ளது. இந்த பிணைப்பைப் பற்றியோ அதை துண்டிப்பதால் ஏற்படும் ஆபத்தைப் பற்றியோ உணரக் கூடிய அறிவுடையவர்களாக எந்த ஒரு முன்னணி நாட்டினதும் ஆட்சியாளர்கள் இல்லை.

உலகமயமாதலை தீவிரமாக முன்னெடுத்த தாராண்மைவாதக் கட்சிகள் பல உலகெங்கும் தோற்கடிக்கப்பட்டு தேசியவாதத் தலைவர்கள் பல முன்னணி நாடுகளில் ஆட்சியில் அமர்ந்துள்ளமையும் உலகமயமாக்குதலைப் பின்தள்ளியுள்ளது. 2018-ம் ஆண்டில் இருந்து “உலகமயமாதலை இணைபிரித்தல்” (Decoupling Globalization) என்ற சொற்றொடர் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்களால் அதிகம் பாவிக்கப்படுகின்றது. உலகமயமாக்குதல் உருவாக்கியுள்ள நாடுகளிடையேயான சங்கிலிப் பிணைப்பை துண்டிக்க மகாநதி திரைப்படத்தின் கதாநாயகன் போல தன் கையையே தான் துண்டிக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போதைய தேசியவாத அரசுத் தலைவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள் எனச் சொல்ல முடியாமல் இருக்கின்றது. உலகப் பொருளாதாரம் பெரும் அதிர்ச்சியைத் தாங்கக் கூடிய நிலையிலும் இல்லை. உலகத் தலைவர்களிடையே சரியான புரிதலும் தேவையான சகிப்புத் தன்மையும் இல்லை.

https://www.veltharma.com/2020/03/decoupling.html?spref=fb

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.