ampanai

கோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்

Recommended Posts

கோவிட் சம்பந்தப்பட்ட பல உதவிகளை மேற்குலக நாடுகள் தவிர்க்க ஆரம்பித்துள்ளன. 

இதிலும் அரசியலும், பொருளாதார நலன்களும் இணைந்துள்ளன. 

In a blog post last week, EU chief diplomat Josep Borrell warned that there is “a geo-political component including a struggle for influence through spinning and the ‘politics of generosity’.”

“China is aggressively pushing the message that, unlike the US, it is a responsible and reliable partner,” he wrote. "Armed with facts, we need to defend Europe against its detractors."

https://www.bbc.com/news/world-europe-52092395

Share this post


Link to post
Share on other sites

ஆசியா மிக நீண்ட கால பொருளாதார மந்த நிலைக்குள் தள்ளப்படும்,இரண்டு தசாப்காலத்தில் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கா சந்திக்கலாம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தின் பொருளாதார வீழ்ச்சி 2.1 வீதமாக வீழ்ச்சியடையும்,ஆசியாவின் பொருளாதாரம் 0.5 வீதமாக வீழ்ச்சியடையலாம் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2.3 வீதமாக வீழ்ச்சியடையலாம் எனவும் தெரிவித்துள்ள உலக வங்கி சீனாவின் பொருளாதார வளர்ச்சி 0.1 ஆக குறைவடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

உலகின் அனைத்து நாடுகளும பொருளாதார துயரத்தினை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாதது என குறிப்பிட்டுள்ள உலக வங்கி முழு ஆசிய பசுவிக் பிராந்தியமும் மிக மோசமான தாக்கத்தை எதிர்கொள் தயாராகவேண்டும் என தெரிவித்துள்ளது.

 

Share this post


Link to post
Share on other sites

மிருசுவிலில் ஏழு தமிழர்களை கொலை செய்த இராணுவ வீரருக்கு, கொரோனா பாதுகாப்பு கருதி விடுதலை அளித்தார், சிங்கள தேசத்தின் சனாதிபதி. இது பல மனிதாபிமான அமைப்பின் கண்களில் தெரிந்துள்ளது. 

கோத்தா போன்று, பலரும் உலகளாவிய ரீதியில் தமது பலத்தை பலப்படுத்த முனைகிறார்கள். 

ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரி நாட்டை ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்துள்ளது. வேறு நாடுகளும் இவ்வாறு இந்த அசாதாரண நிலைமையை பாவித்து தமது இருப்பை இறுக்கமாக்க முனைவார்கள். 

அமெரிக்காவில் கூட பல மாநிலங்களில் கருத்தடை சத்திரசிகிச்சையை அவசரதேவை இல்லை என்று அவற்றை நிறுத்தினார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் அதை மறுத்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இவற்றை விட பாரிய மாற்றங்களும் நிகழலாம், எல்லாம் அந்த தொற்று எவ்வாறு தாக்கும், நீடிக்கும், அழிக்கும் என்ற காரணிகளில் தங்கியுள்ளது.  

Share this post


Link to post
Share on other sites

உலகில் தற்பொழுது வங்கிகளின் பங்குகள் சரிந்த நிலையில் அந்த வங்கிகளை சீனாவையோ வேறு யாருமோ வாங்கிவதை நாடுகள் விரும்பமாட்டா. நாடுகளின் விமான சேவையும் அவ்வாறே. 

===================  ====================================================

தினத்தந்தி: "வங்கிகள் இணைப்பு"

10 பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், வங்கிகள் ஒருங்கிணைப்பை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 2வது ஒருங்கிணைப்பாக 10 பொதுத்துறை வங்கிகள் 4 பெரிய வங்கிகளுடன் இன்று இணைக்கப்படுகின்றன என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றும் திட்டம் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் என ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஏற்கெனவே அறிவித்திருந்தன. தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வங்கி இணைப்பு திட்டம் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி வங்கிகள் இன்று இணைக்கப்படுகின்றன.

முன்னதாக ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில், வங்கி கிளைகள் இணைக்கப்பட்டாலும், ஊழியர்கள் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என்று தெளிவுபடுத்தி இருந்தது.

எந்தெந்த வங்கிகள் எதனுடன் இணைக்கப்படுகின்றன?

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் , யூனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைகின்றன. இதன்மூலம் பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்து 2வது பெரிய வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி மாறுகிறது. சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்படுகிறது என்கிறது தினகரன் நாளிதழ்.

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கி, கார்ப்பொரேஷன் வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இந்த இணைப்பின்மூலம், பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய 6 இணைப்பு வங்கிகளும், தனித்து இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவையும் என 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த இணைப்பு நிகழ்ச்சியை நடத்த வங்கிகள் முடிவு செய்துள்ளன என, வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this post


Link to post
Share on other sites

சீனாவின் வல்லரசு கனவை நனவாக்குமா இந்த தொற்று ?

முதலாம் மற்றும் இரண்டாம் உலக மகா யுத்தங்களின் பின்னராக, அமெரிக்க நாடு ஒரு தனிப்பெரும் வல்லரசாக மாறியது. வல்லரசு என கூறும்பொழுது மூன்று துறைகளிலும் - இராணுவம், அரசியல், பொருளாதாரம். 

இதே அணுகுமுறையை தற்பொழுது சீன 22ஆம் நூற்றாண்டிற்கு அமைய எடுத்துவருகின்றது. 

- அமெரிக்க டாலர்களை அதிகளவில் கை இருப்பில் கொண்டுள்ளது 
- அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் பங்கு சந்தைகளில் முதலீடு செய்தல் 

அத்துடன்,  அன்றும் இன்றும் அமெரிக்க நாடு செய்யும் அதே வித்தையையும் செய்து வருகின்றது :

- உங்களுக்கு மருந்து வேண்டுமா ? நான் தருகின்றேன். 
- உங்களுக்கு உணவு  வேண்டுமா ? நான் தருகின்றேன். 
- உங்களுக்கு ஆயுதம் வேண்டுமா ? நான் தருகின்றேன்.
- உங்களுக்கு பணம்   வேண்டுமா ? நான் தருகின்றேன். 
 
இறுதியில், நாட்டின் சுய பொருளாதாரத்தை இல்லாமல் இல்லை சுருக்கி நவீன பொருளாதார அடிமையாக்கி விடலாம். 
 

Share this post


Link to post
Share on other sites

அரசுகள் : மக்களுக்கு பணம் தருவதா? இல்லை நிறுவனங்களுக்கு பணம் தருவதா?? 

மேற்குலக நாடுகளில் பொருளாதாரம் முடக்கப்பட்ட நிலையில், அரசுகள் தமது பொருளாதாரத்தை தக்க வைக்க இரு முக்கிய அணுகுமுறைகளை எடுத்துவருகின்றன. 

1. நிறுவனங்கள் வேலை நீக்கம் செய்து, ஊழியர்கள் அரசிடம் வெளியில்லாதவர் காப்புறுதியை பெறுதல் 
2. நிறுவனங்களுக்கு 75% வீதம் வரை ஊழியர்களுக்கு அரசு பணம் தந்து வேலைகளை தக்க வைத்தல் 

அமெரிக்க நாடு முதலாவது முறையையும் ஐரோப்பிய நாடுகள் இரண்டாவது முறையையும் அணுகியுள்ளன. 

முதலாவது முறையில், மக்களை அரசு பலப்டுத்துவதாயும், இரண்டாவது முறையில் நிறுவனங்களை மக்களின் வரிப்பணத்தில் பாதுகாக்கப்படுவதாக பார்க்கப்படுகின்றது.  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • தமிழகத்தில் சிக்கிய மலேசியர்களை அங்கு அனுப்பும் முயற்சியில் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு அனுப்பப்படும் பயணிகளுடன் டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து தப்பி மலேசியாவுக்கு செல்ல முயன்ற 10 மலேசியர்கள் சிக்கினர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக நாடு முழுவதும் உள்நாடு மற்றும் சா்வதேச விமானசேவைகள் வரும் 14 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளன.இதனால் மலேசியா நாட்டவா்கள் பலா் இந்தியாவில் சிக்கிக்கொண்டனா்.குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவு மலேசியா்கள் தவிக்கின்றனா். மலேசியா அரசு இந்திய அரசுடன் பேசி தங்கள் நாட்டவரை தனி சிறப்பு விமானங்களில் மலேசியா அழைத்து செல்ல அனுமதி கேட்டது.இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி அளித்தது. அதன்பேரில் கடந்த வெள்ளிக்கிழமை மலேசியாவிலிருந்து மலிண்டா ஏா்லைன்ஸ் 2 விமானங்கள் சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு காலி விமானங்களாக வந்தன.சென்னை,சென்னை புறநகா் மற்றும் வடமாவட்டங்ளிலிருந்த மலேசியா்கள் 344 பேரை ஏற்றிச் சென்றது. இன்றும் சென்னையிலிருந்து காலை 10.40 மணிக்கு மலேசியா தலைநகா் கோலாலம்பூருக்கு பாடிக் ஏா்லைன்ஸ் என்ற சிறப்பு தனி விமானம் புறப்பட்டு சென்றது. அதில் தமிழகத்தில் தங்கியிருந்த 127 மலேசியா்கள் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படவிருந்தனா். இவ்வாறு செல்லவிருந்த 127 பேரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிக்கியிருந்த மலேசியர்கல் ஆவர். அவர்கள் சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு இன்று காலை வந்தனா்.அவா்கள் அனைவருக்கும் விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை உள்ளிட்ட சோதனை நடந்தது. அப்போது சிலர் பாஸ்போர்ட்டை சோதித்தபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது அதில் 10 மலேசியா்கள் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொள்ள சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசியாவிலிருந்து இந்தியா வந்துள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களால் நாடுமுழுதும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் அரசு டெல்லி மாநாட்டில் பங்கேற்ற நபர்களை தனிமைப்படுத்தி சோதனைக்குள்ளாக்கி வருகிறது. இதை தெரிந்துக்கொண்ட அந்த 10 மலேசியர்களும் தாங்கள் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பதை மறைப்பதற்காக டெல்லியிலிருந்து நேராக திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் சென்று அங்கிருந்து சாலை வழியாக தமிழகத்தில் உள்ள தென்காசிக்கு வந்து தங்கியிருந்துள்ளனா். டில்லி மாநாட்டில் கலந்து கொண்டதை மறைத்து, தென் காசியிலிருந்து வருவதாக தவறான தகவலை அளித்து மலேசியா நாட்டு தூதரகம் மூலம் சென்னை வந்து, எந்தவித மருத்துவ பரிசோதணை மற்றும் தனிமைப்படுத்துதல் எதுவும் இல்லாமல் தங்கள் நாட்டிற்கு செல்ல முயன்றுள்ளனர். சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் அவர்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை சோதித்தபோது இதை விசாரணை மூலம் கண்டுப்பிடித்தனா். இதையடுத்து அந்த 10 போ் பயணத்தை உடனடியாக அதிகாரிகள் ரத்து செய்தனா். அவா்கள் தவிர மீதமிருந்த 117 மலேசியர்களுடன் விமானம் மலேசிய செல்ல அனுமதிக்கப்பட்டது. டெல்லிச் சென்றதை மறைத்து மருத்துவ பரிசோதனை எதற்கும் உட்படாமல் மலேசியா செல்ல முயன்ற 10 பேரையும் குடியுரிமை அதிகாரிகள், வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களை பரிசோதிக்கவும் தனிமைப்படுத்தவும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக பொது சுகாதாரத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்தவுடன் அவர்களிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள். கடந்த சில நாட்களாக திருவனனந்தபுரம் வந்த அவர்கள் எங்கு தங்கினர், சாலை மார்கமாக தென்காசிக்கு எந்த வாகனத்தில் வந்தனர், தென் காசியில் எங்கு தங்கியிருந்தனர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து பொது சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்துவார்கள். டெல்லி சென்றுவிட்டு அந்த தகவலை தராமல் மலேசியா தப்ப முயன்ற பயணிகள் சிக்கியதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.   https://yarl.com/forum3/forum/216-தமிழகச்-செய்திகள்/?do=add  
    • அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: கோப்புப்படம்   நியூயார்க் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் அமெரி்க்க மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு மிக அதிகமாகும். இந்த அளவுக்கு பாதிப்பு அமெரிக்காவில் ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு சற்று அதிகம்தான். அதிலும் அமெரி்க்காவில் புற்றீசலில் வருவதுபோல் நாள்தோறும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.       அமெரிக்காவில் மட்டும் இதுவரை 3 லட்சத்குக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். அடுத்துவரும் இருவாரங்களில் உயிர்பலியும், பாதிப்பும் பல மடங்கு அதிகரிக்கும் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. கரோனா வைரஸ் மூலம் அமெரிக்காவில் 2லட்சம் மக்கள் வரை உயிரிழக்கக்கூடும் என பகீர் தகவலையும் வெள்ளைமாளிகை சமீபத்தில் வெளியிட்டது இப்போது எழுந்துள்ள கேள்வி என்னவென்றால் அமெரிக்காவில் மட்டும் இந்தஅளவுக்கு பாதிப்பு ஏற்படக் காரணம் என்ன என்பதுதான். அதுகுறித்து அமெரிக்காவில் வெளியாகும் “நியூயார்க் டைம்ஸ்” நாளேடு ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் திடுக்கிடும் பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன: சீனாவின் ஹூபே மாகணம், வுஹான் நகரில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உலகிற்கு சீனா எச்சரிக்கை செய்த பின், அங்கிருந்து 4.30 லட்சம் மக்கள் அமெரிக்காவுக்கு நேரடி விமானம் மூலம் வந்துள்ளதுதான் அமெரிக்காவுக்கு பாதிப்பு தீவிரமானதற்கு முக்கியக்காரணமாகும். சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பின் பிறப்பிடமாக இருந்த வுஹான் நகரிலிருந்து மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவுக்கு நேரடி விமானம் மூலம்வந்துள்ளனர் சீனாவிலிருந்து 1,300 விமானங்கள் அமெரிக்காவின் முக்கியமான 17 நகரங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன, இந்த விமானங்கள் மூலம்தான் மக்கள் அமெரிக்காவுக்குள் வந்துள்ளார்கள். கரோனாவின் வீரியத்தன்மை அறிந்து அதிபர் ட்ரம்ப் கடுமையான விதிமுறைகளை அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தும் முன்பே சீனாவிலிருந்து ஏறக்குறைய 4 லட்சம் பேர் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். இந்த 4 லட்சம் மக்கள் சீனாவிலிருந்து அமெரி்க்காவின் 17 நகரங்களில் கால்பதிக்கும் போது அமெரிக்க அரசு விமானநிலையங்களில் கரோனா குறித்த பரிசோதனைகளை தீவிரப்படுத்தவில்லை, மருத்துவ சோதனைகளும் போதுமான அளவில்இல்லை. இவையெல்லாம் அமெரிக்காவில் தற்போது கரோனா வைரஸ் உக்கிரமானதற்கு முக்கியமான காரணங்களாகும். அதிலும் ஜனவரி மாதம் 15-ம்தேதிவரை சீனா கரோனா வைரஸின் தீவிரம் குறித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை. இதன் காரணமாக சீனாவிலிருந்து ஏராளமானவர்கள் அமெரிக்காவின் பல்வேறுநகரங்களுக்கு எந்தவிதமான தடையும் இன்றி சென்றுள்ளார்கள். கரோனா வைரஸின் ஆபத்தை அறிந்தபின் ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் இருந்து தான் அமெரிக்க அரசு விமானநிலையங்களில் பரிசோதனயை தீவிரப்படுத்தத் தொடங்கியது. அதுவும் லாஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்ஸ்சிஸ்கோ, நியூயார்க் நகரங்களில் உள்ள விமானநிலையங்களில் மட்டுமே வுஹான் நகரில் இருந்து பயணிகள் தீவிரமான சோதனைக்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால், இந்த சோதனை தொடங்கப்படுவதற்கு முன்பே அமெரிக்காவில் 4 லட்சம் பேர் சீனாவிலிருந்து நுழைந்துவி்ட்டார்கள். இ்ந்த புள்ளிவிவரங்களை சீனாவில் உள்ள விமான புள்ளிவிவர நிறுவனமான வாரிபிளைட் தெரிவி்த்துள்ளது. இதில் எத்தனை பயணிகள் கரோனா வைரஸ் பாதிப்போடு அமெரிக்காவுக்குள் சென்றார்கள், வைரஸ் பாதிப்பு இல்லாமல் வந்தார்கள் என்ற கணக்கு இதுவரை இல்லை அது மர்மமாகவே இருக்கிறது. அமெரிக்காவுக்குள் நுழைந்த 4.30 லட்சம் பேரில் அமெரிக்க மக்கள் மட்டுமல்ல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் இருந்துள்ளார்கள். இவர்கள் லாஸ்ஏஞ்சல்ஸ், சான் பிான்சி்ஸ்கோ, நியூயார்க், சிகாகோ, சீட்டல், நிவார்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களுக்கு நேரடியாக சீனாவிலிருந்து பயணித்துள்ளார்கள். கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்க விதித்தபோதிலும் கூட கடந்தவாரம் வரை சீனாவிலிருந்து விமானங்கள் அமெரிக்காவுக்கு வந்தவாறுதான் இருந்தன. குறிப்பாக பெய்ஜிங்கிலிருந்து லாஸ்ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் ஆகிய நகர்களுக்கு வந்தன. 250-க்கம் மேற்பட்ட விமானங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்துள்ளார்கள். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் கூறியபடி, அமெரிக்க அரசு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை தாமதமாக செயல்படுத்தியதுதான் கரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்திருக்கலாம் என்றார். நியூயார்க்டைம்ஸ் நாளேடு நடத்திய ஆய்வின்படி, விமானப் புள்ளிவிவரங்கள், பயணிகள் வருகை ஆகியவற்றைப் பார்க்கையில் போக்குவரத்து கெடுபிடிகள்தான், விதிமுறைகளை அமெரிக்கா தாமதமாக நடைமுறைப்படுத்தியதுதான் அங்கு கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவ முக்கியக்காரணமாகும். எந்தவிதமான அறிகுறியும் இன்றி 25 சதவீத மக்கள் கரோனா வைரஸால் பாதி்க்கப்பட்டுள்ளார்கள் என்று சுகாதாரத்துறையினர் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் முதன்முதலில் ஜனவரி 20-ம் தேதி வாஷி்ங்டன் நகரில்தான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல்நபர் அடையாளம் காணப்பட்டார். அதன்பின் பலவாரங்கள் அடையாளம் தெரியாத வகையில்,கண்டுபிடிக்க முடியாத வகையில் கரோனா வைரஸ் வாரக்கணக்கில் அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளது. அமெரிக்காவுக்கு முதன்முதலாக இந்த கரோனா வைரஸை யார் கொண்டுவந்தது என்று இதுவரை எந்த மருத்துவ அதிகாரியாலும் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கிறது. அமெரிக்க அரசாங்கம் கெடுபிடிகள், சோதனைகளை விமானநிலையங்களில் கொண்டு வருவதற்குமுன் சீனாவிலிருந்து அமெரி்க்காவுக்கு 3.81 லட்சம் பயணிகள் வந்துவிட்டார்கள். பெரும்பாலான விமானங்கள் சீனாவிலிருந்து இயக்கப்பட்ட சீன விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது https://www.hindutamil.in/news/world/548043-as-coronavirus-spread-430-000-people-arrived-in-us-on-direct-flights-from-china-nyt-6.html