Sign in to follow this  
ampanai

`கொரோனா பெயரில் ஹேக்கிங்!’ - தடுக்கக் கைகோக்கும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள்

Recommended Posts

இந்தக் குழுவின் முக்கிய நோக்கமே சுகாதார நிறுவனங்களுக்கு எதிராக நடைபெறும் ஹேக்கிங்குகளைத் தடுப்பது மற்றும் சுகாதார நடவடிக்கைகளை இணையத்தின் வழி அச்சுறுத்துபவர்களைத் தடுப்பது தான்.

கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே உலக மக்களின் கவனம் முழுவதும் அதன் மேல்தான் இருக்கிறது. இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி இணையத்தின் மூலம் பணம் பறிக்கும் வேலையும் அதிக அளவிலான ஹேக்கிங் சம்பவங்களும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஹேக்கிங் சம்பவங்களைத் தடுப்பதற்காக உலகளவில் 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். இந்தத் தன்னார்வலர்கள் குழுவில் இருப்பவர்கள், சைபர் பாதுகாப்புத் துறையில் நிபுணர்களாக இருப்பவர்கள். மேலும், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருப்பவர்களும் இந்தத் தன்னார்வலர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழவை COVID-19 CTI League என அடையாளப் படுத்துகின்றனர் குழுவினர்.

இந்தக் குழுவை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய நபர்களுள் ஒருவரான ஒக்டா (Okta) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் துணைத் தலைவரான மார்க் ரோஜர்ஸ் (Marc Rogers) கூறுகையில், "இந்த அளவிலான ஏமாற்று வேலைகள் இதுவரை நடைபெற்றது இல்லை. அனைத்து மொழிகளிலும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஏமாற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்."

இந்தக் குழுவின் முக்கிய நோக்கமே சுகாதார நிறுவனங்களுக்கு எதிராக நடைபெறும் இணையத் தாக்குதல்களைத் தடுப்பது மற்றும் சுகாதார நடவடிக்கைகளை இணையத்தின் வழி அச்சுறுத்துபவர்களைத் தடுப்பதுதான். மேலும், தற்போது உலகில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தபடியேதான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இணையவழி தகவல் தொடர்பை ஹேக்கர்கள் தாக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதற்கான பாதுகாப்பையும் வழங்கும் முயற்சியில் உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

https://www.vikatan.com/technology/tech-news/400-volunteers-joins-to-stop-hacking-against-corona-activities

 

 

கனடாவில், அரச தொற்று உதவிப்பணத்தை ஏமாற்றி பறிக்கும் குழு

Trudeau warns of text scams about Canada's new coronavirus emergency benefit

https://dailyhive.com/vancouver/justin-trudeau-canada-coronavirus-covid-19

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இம்ரான் குரேஷி பிபிசி இந்தி படத்தின் காப்புரிமை MOHAN KRISHNAN / FACEBOOK Image caption மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை கேரளாவில் அன்னாசி பழத்துக்குள் வெடிபொருட்களை வைத்து, அதை கர்ப்பமாக இருந்த யானைக்கு சிலர் கொடுத்ததில், அதை உண்ட பெண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அடையாளம் அறியப்படாத நபர்களின் இந்தக் கொடூரச் செயலுக்கு உள்ளான, அந்த யானைக்கு சுமார் 14-15 வயது இருக்கும் என கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை என்றும் பிறகு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த யானையின் வாய் மற்றும் தும்பிக்கை பகுதி மூன்று நாட்களாக நீருக்குள்ளேயே இருந்துள்ளது. "அந்த யானைக்கு எங்கு அடிபட்டது என்பதை எங்களால் கண்டறிய முடியவில்லை. வலி தெரியாமல் இருக்க, அந்த யானை நிறைய தண்ணீர் குடித்திருக்கும் என்று நினைக்கிறேன். வாயின் இரு பக்கங்களிலும் பல காயங்கள் இருந்தன. பற்கள் இருக்கவில்லை," என்கிறார் இதுகுறித்து பிபிசி இந்தி சேவையிடம் பேசிய, சைலன்ட் வேலி தேசிய பூங்காவின் வனக் காப்பாளர் சாமுவேல். இந்த யானை தொடர்பாக வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பிறகுதான் இந்த முழு சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்தது. படத்தின் காப்புரிமை MOHAN KRISHNAN / FACEBOOK வலியோடு அந்த யானை அருகில் உள்ள கிராமத்தின் வீதிகளில் உதவிக்காக சுற்றி திறிந்தபோது கூட, ஒரு மனிதரையும் அது தாக்கவில்லை என்று உணர்ச்சிபூர்வமாக அவர் எழுதியிருந்தார். அந்த கர்ப்பிணி யானையில் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார். "வலியுடன் தண்ணீரில் நின்று கொண்டிருந்த யானையை மீட்க, விரைவுக்குழுவோடு, இரண்டு கும்கி யானைகளையும் பயன்படுத்தினோம். அங்கிருந்து யானையை வெளியே கொண்டுவந்தால், அறுவை சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றிவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், அநத் யானை அதற்கு ஒத்துழைக்கவில்லை. அறுவை சிகிச்சைக்கு தயார் செய்யும் முன் இறந்துவிட்டது," என பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பிரிவு வன அலுவலர் சுனில் குமார் பிபிசியிடம் தெரிவித்தார். மே 27ஆம் தேதியன்று தண்ணீரில் நின்றபடியே அந்த யானை இறந்திருக்கிறது. பின்னர் அதன் உடல் அருகில் உள்ள இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அப்போதுதான் அந்த யானை கர்ப்பமாக இருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. படத்தின் காப்புரிமை MOHAN KRISHNAN / FACEBOOK பின்னர் அந்த யானை புதைக்கப்பட்டு, அதற்கு இறுதி மரியாதையையும் அதிகாரிகள் செலுத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய சாமுவேல், இதற்கு யார் காரணம் என்பதை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் மனித - விலங்கு மோதல் சம்பவங்கள் இதற்கு முன்னரே பல முறை நிகழ்ந்திருந்தாலும், இப்படி ஒரு கொடூரமான நிகழ்வு நடந்திருப்பது இதுவே முதல் முறை என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். https://www.bbc.com/tamil/india-52901532
    • இல்லை... ஹீ... ஹீ... அம்மான்...சொம்புகள்.  உங்களுக்கு சீமானை விமர்சிக்க ஆயிரம் காரணம் இருக்குமக்கோய்... நமக்கேன் பொல்லாப்பு... 
    • தலைவர் புரொடியூசர் ஆகவும் இருந்திருக்கிறார்.... சேராவின் நண்பன் இதற்கு பதில் தருவாரா?
    • நான் எனது கருத்தை தெளிவாகவே சொல்லி விட்டேன் ...திரும்பவும் உங்களுக்காய் ; சீமான் அவரது நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்...அதைப் பற்றிய அக்கறையோ அல்லது கவலையோ எனக்கு இல்லை. ஆனால், அவர் தலைவர் பற்றியோ அல்லது புலிகள் பற்றியோ தேவையில்லாத கட்டுக் கதைகளை தனது அரசியல் சுய லாபத்திற்காய் கதைக்க கூடாது. அந்த கால கட்டத்தில் வன்னியில் போய் அது சாப்பிட்டேன் ,இது சாப்பிட்டேன் என்று அவர் சொல்வதின் பின் உள்ள அரசியலை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? அவர் எங்கே போய் சாப்பிட்டால் எனக்கு என்ன? பட்டினி கிடந்தால் எனக்கு என்ன? புலிகள் பற்றியோ அல்லது தலைவர் பற்றியோ கதைப்பதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை . இனியும் இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டு திரிந்தால் நான் தொடர்ந்தும் விமர்சிப்பேன் . உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் இருங்கள் ...அது என்னுடைய பிரச்சனை இல்லை. நீங்கள் இதே திரியில்  10 வருடத்தின் பின் அவர் சரியில்லா விட்டால் அவரை ஒதுக்குவேன் என்று எழுதி இருந்தீர்கள்...அதையே தான் நாங்கள் இப்போது செய்கிறோம். உங்களை போன்றவர்களுக்கு உண்மை தெரியும் ...ஆனால் எழுத வேண்டும் என்பதற்காய் எழுதி இங்குள்ள சிலரை உசுப்பேத்தி அவர்களது வாழ்க்கையும் நாசமாக்குகிறீர்கள் என்று நம்புகிறேன். எப்படி புலிகளை விமர்சிக்காமல் அவர்கள் என்ன செய்தாலும் சரி என்று இங்கேயிருந்து விசிலடித்தார்களோ  அதே மாதிரி இப்ப சீமானுக்கு விசிலடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எவரும் 2009யில் எங்களுக்கு உதவவில்லை ...ஆனால் அவர்களில் சீமானைத் தவிர மற்றவர்கள் ஒருவரும் தங்கட பிழைப்பிற்காய் புலிகளை இழுக்கவில்லை. சீமான் நாளைக்கே முதலமைச்சராய் வந்தாலும் மத்திய அரசை மீறி அவரால் ஒன்றும் செய்யப் போறதில்லை [பதவிக்கு வந்தால் அவரே செய்ய மாட்டார் 😆அது வேற விசயம் .] இப்படி இவர்களுக்கு பின்னால் நின்று விசிலடிக்காமல் ஈழத்தில் இருக்கும் உணர்வுமிக்க ,படித்தவர்களாய் பார்த்து தேர்ந்து எடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் மூலம் அரசியல் ரீதியான தீர்வினை வென்றெடுப்பதற்கு புலத்தில் உள்ளவர்கள் உறுதுணையாய் நிற்க வேண்டும்