• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

கொரோனா தடுப்பு, நிவாரண நடவடிக்கைகாக 5 ட்ரில்லியன் டாலரை ஒதுக்குகிறது ஜி -20 நாடுகள்!!

Recommended Posts

 

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை குரூப் 20 எனப்படும் ஜி - 20 நாடுகள் ஒதுக்கியுள்ளன. ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடியாகும். இதன்படி 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்பது 5 லட்சம் கோடி அமெரிக்கா டாலராக மதிப்பிடப்படுகிறது.

இந்த 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை ரூபாய் மதிப்பில் ரூ. 3.82 கோடி கோடி என கணக்கிட்டுக் கொள்ளலாம். இவ்வளவு பெரிய தொகை கொரோனா பாதிப்பு மற்றும்  நிவாரண நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. 

இதுதொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜி. 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடினர். இந்த கூட்டமைப்பில் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது. கூட்டத்திற்கு பின்னர் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள வலுவான, பரந்த அளவிலான, அறிவியல் அடிப்படையில் உலக நாடுகளின் கூட்டமைப்பு தேவைப்படுகிறது. உலக நாடுகளுக்கு பொதுவான அச்சுறுத்தலாக இருக்கும் இந்த கொரோனாவை நாம் ஒன்றிணைந்து எதிர்ப்போம். 

கொரோனாவால் சர்வதேச அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் ஒன்றிணைந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை பாதுகாத்து வளர்ச்சிப் பாதையில் மீண்டும் பயணிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏழை நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்நாடுகளின் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்றுள்ள நிலையில் அவற்றுக்கு பொருளாதார சக்தி கொண்ட ஜி 20 நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று உலக வங்கியும், சர்வதேச நிதியமும் கோரிக்கை வைத்துள்ளன. 

கொரோனா குறித்த ஆய்வுத் தகவல்களை சக நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும், தங்களது நாடுகளில் உள்ள சுகாதார சாதனங்களை வலுப்படுத்த உதவ வேண்டும், உலக தேவைகளுக்கு ஏற்ப மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாநாட்டில் பேசிய தலைவர்கள் முன் வைத்தனர்.

https://www.ndtv.com/tamil/g20-to-inject-5-trillion-to-revive-global-economy-after-coronavirus-crisis-pm-modi-calls-for-concret-2201318?pfrom=home-topscroll

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று! இந்தியாவின் பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இன்று (சனிக்கிழமை) உறுதிசெய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அமிதாப் பச்சனுக்கு 77 வயதான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு உடல்நிலை சிறப்பாக உள்ளதாக மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். இதேவேளை, இதுகுறித்து அமிதாப் பச்சன் ருவிற்றரில் தெரிவிக்கையில், “கொவிட்-19 பரிசோதனையில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எனது குடும்பத்தினரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவுசெய்து தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/பிரபல-பொலிவூட்-நடிகர்-அம/
  • இதில் தரவுகள் கள ஆய்வுகள் என்று  என்ன இருக்கிறது கிருபன், நாமேதான் தரவுகள், நாமேதான் சாதிய  களத்தில் நிற்பவர்கள். இந்த சமூக வலிகளுக்கு வக்கீல்களும் நாங்கள்தான், நீதிபதிகளும் நாங்கள்தான், ஆனால் நியாயமான தீர்ப்பு மட்டும் ஒருபோதும் வராது. இங்கே  சாதியம் என்று சொல்லும்போது உயர் சாதியை சேர்ந்தவர்கள்தான் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்களை கொடுமை படுத்துகிறார்கள்  மனதை உடைக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. மீன் பிடிப்பவரா இல்லை அவர்கள் பிடித்த மீனை வாங்கி விறபவர்களா உயர்ந்தவர்கள்  என்ற சாதி போராட்டம்.. குப்பை அள்ளுபவரா  ஆஸ்பத்திரிகளில் மனித கழிவுகளை அகற்றுபவரா  உயர்ந்த சாதி எனும் போராட்டம்.. துணி துவைப்பவரா மயிர் வெட்டுவரா  உயர்ந்தவர்  எனும் சாதி போராட்டம், மரமேறுபவரா மூட்டை சுமப்பவரா சாதியில் பெரியவர் என்ற போராட்டம்... சாதி போராட்டம் என்பது உயர்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடையிலானதல்ல.. தாழ்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடையிலான போரும் கூட.   புலம்பெயர் தேசத்தில் ஏறக்குறைய  பெற்றோர்கள் நினைத்தால்கூட  பிள்ளைகள் யாருடன் பழகவேண்டும் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியாது. ஏறக்குறைய அவர்கள் விரும்பியவருடன் சாதியை கடந்து அல்ல நாடுகளை கடந்தே டேற்றிங் போகிறார்கள். இதன் தலைமுறை கடந்த தொடர்ச்சியாக  ஈழதமிழர் வழி வந்த வாரிசுகள் ஆபாச படங்களில்கூட நடிப்பார்கள். அதை தவறு என்று யாரும் சொன்னால் சட்டம் குற்றம் சொல்பவர்களை மட்டுமே தண்டிக்கும். அதைதான் வீதங்களில் ஒப்பிட்டு சொன்னேன்.. முத்தாய்ப்பா சொல்லவேண்டுமென்றால் சாதிய கொடுமை என்பது உயர்ந்த சாதி தாழந்த சாதி சம்பந்தப்பட்ட ஒரு விசயம் அல்ல, தாழ்ந்த சாதி தாழ்ந்த சாதிக்கும் இடையில் சம்பந்தப்பட்ட விசயம்கூட.
  • தென்னாபிரிக்காவில் தேவாலயமொன்றில் இடம்பெற்ற மோதல்: 5 பேர் உயிரிழப்பு! தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க்கிற்கு அருகிலுள்ள பழங்கால தேவாலயத்தில் இடம்பெற்ற மோதலையடுத்து 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தேவாலயத்தில் இன்று (சனிக்கிழமை) காலை அங்கிருந்தவர்களை ஆயுதம் தாங்கிய குழுவினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தேவாலயத்தின் தலைமை தொடர்பாக தொடர்ந்துவந்த பிரச்சினையின் ஒரு கட்டமாக ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் தாக்குதல் நடத்த முனைந்த ஆண்கள் குழுவொன்றின் 40 பேரை கைதுசெய்துள்ளதாகவும் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த குழுவினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த குழந்தைகள் உட்பட டசின் கணக்கானோரை பொலிஸார் மீட்டுள்ளனர். இதேவேளை, இந்தக் குழுவினரிடம் இருந்து பெருமளவான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற தேவாலயத்திற்கு சொத்துமதிப்பு அதிகம் உள்ளதாகவும் அதன் தலைவர் கடந்த 2016இல் இறந்ததிலிருந்து தேவாலய தலைமை தொடர்பான பிரச்சினை இருந்துவந்துள்ளதாகவும் 2018ஆம் ஆண்டில் உறுப்பினர்களிடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளமை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/தென்னாபிரிக்காவில்-தேவா/
  • 'சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்' என்று பாரதி பாடியபோது அதனையாருமே..... ஒரு தமிழன்கூட எதிர்க்கவில்லை. மாறாக பாரதியாரின் இந்தப் பாடலை திரைப்படத்திலும் இணைத்து உலகெலாம் பரப்பினார்கள். இப்படியான செயற்பாடுகளே, தேரருக்கும் இலங்கை சிங்களநாடு என்று சொல்லும் தைரியத்தைக் கொடுத்துள்ளது.  
  • வாயிலும், மூக்கிலும்  தான், மாஸ்க் அணிய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிடுகிறார் போலுள்ளது.😝