• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

கொரோனா தடுப்பு, நிவாரண நடவடிக்கைகாக 5 ட்ரில்லியன் டாலரை ஒதுக்குகிறது ஜி -20 நாடுகள்!!

Recommended Posts

 

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை குரூப் 20 எனப்படும் ஜி - 20 நாடுகள் ஒதுக்கியுள்ளன. ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடியாகும். இதன்படி 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்பது 5 லட்சம் கோடி அமெரிக்கா டாலராக மதிப்பிடப்படுகிறது.

இந்த 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை ரூபாய் மதிப்பில் ரூ. 3.82 கோடி கோடி என கணக்கிட்டுக் கொள்ளலாம். இவ்வளவு பெரிய தொகை கொரோனா பாதிப்பு மற்றும்  நிவாரண நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. 

இதுதொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜி. 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடினர். இந்த கூட்டமைப்பில் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது. கூட்டத்திற்கு பின்னர் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள வலுவான, பரந்த அளவிலான, அறிவியல் அடிப்படையில் உலக நாடுகளின் கூட்டமைப்பு தேவைப்படுகிறது. உலக நாடுகளுக்கு பொதுவான அச்சுறுத்தலாக இருக்கும் இந்த கொரோனாவை நாம் ஒன்றிணைந்து எதிர்ப்போம். 

கொரோனாவால் சர்வதேச அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் ஒன்றிணைந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை பாதுகாத்து வளர்ச்சிப் பாதையில் மீண்டும் பயணிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏழை நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்நாடுகளின் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்றுள்ள நிலையில் அவற்றுக்கு பொருளாதார சக்தி கொண்ட ஜி 20 நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று உலக வங்கியும், சர்வதேச நிதியமும் கோரிக்கை வைத்துள்ளன. 

கொரோனா குறித்த ஆய்வுத் தகவல்களை சக நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும், தங்களது நாடுகளில் உள்ள சுகாதார சாதனங்களை வலுப்படுத்த உதவ வேண்டும், உலக தேவைகளுக்கு ஏற்ப மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாநாட்டில் பேசிய தலைவர்கள் முன் வைத்தனர்.

https://www.ndtv.com/tamil/g20-to-inject-5-trillion-to-revive-global-economy-after-coronavirus-crisis-pm-modi-calls-for-concret-2201318?pfrom=home-topscroll

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • தேவையில்லாத அரசியல் நோக்கம் மட்டுமே கொண்ட இந்த வெற்று அறிக்கையால் தூக்க நிலையில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனாவை தட்டி எழுப்பிவிடுவார்கள். 
    • கொரோனா தத்துவ பாடல்கள்.  தொடர்ந்து வீட்டுக்குள் இருக்க இருக்க தத்துவ பாடல்களும் மனதிற்கு இதமாக இருக்கின்றது. அன்பர்களே உங்களுக்கு தெரிந்த தத்துவ பாடல்களை இணைத்தால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து கேட்கலாம்.  மு.கு-: அனிருத் பாடல்கள் தயவு செய்து வேண்டாம்.அதை விட கொரோனா பரவாயில்லை    தத்துவ பாடல் ஒவ்வாமை உள்ளவர்கள் இப்படியான அமைதியான இசையையும் இணைக்கலாம்.😁 மேன்மைதங்கிய நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்.கொரோனா வைரஸ் போகம் முடிந்ததும் இந்த திரியை அகற்றி விடுங்கள். இப்படிக்கு யாழ்கள உறுப்பினர் சங்கம்.
    • அசாதாரண சூழ்நிலையில் ஏற்படும் அசௌகரியங்கள்! வழங்கப்படவுள்ள விசேட பாஸ் நடைமுறை! நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலுணவு வியாபாரிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை நீக்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், கடற்றொழில்சார் போக்குவரத்துக்களை மேற்கொள்வோரும் கடல்சார் உற்பத்திகளின் வியாபாரிகளும் தங்கள் பிரதேசங்களில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரயல் வளத் திணைகளத்தின் உதவிப் பணிப்பாளரை அணுகி அவர்களின் சிபாரிசு கடிதத்தினைப் பெற்று அதனை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து போக்குவரத்து அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக கடற்றொழில் சமூகத்தினர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று அமைச்சில் சம்ந்தப்பட்ட அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த தீர்மானம் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு அறிவிக்குமாறு அமைச்சின் செயலாளரை அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கும் செயற்பாடுகள் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/140248  
    • ஏற்கனவே இந்த 'செயற்கை அறிவுடன்' கூடிய தொழில்நுட்பங்கள் எமது அன்றாட வாழ்வில் இணைந்துள்ளன.  ஆனால், கோவிட் 19 மூலம், அதன் சில உபயோகங்கள் பயனுள்ளவையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உதாரணத்திற்கு, வைத்தியசாலைகளில் செவிலியர்களுக்கு பதிலாக இயந்திர செவிலியர்களை பயன்படுத்தல் என்பது.  இருந்தாலும், எல்லோன் மஸ்க் போன்றவர்கள் இதில் உள்ள ஆபத்தையும் கூறி வருகிறார்கள்.  
    • நீர்கொழும்பில் உயிரிழந்த நபரின் உடல் தகனம்! மத ரீதியில் எழுந்துள்ள பெரும் சர்ச்சை! நீர்கொழும்பில் கொரோனா தொற்றால் முஹம்மத் ஜமால் என்ற 64 வயதுடைய நபர் நேற்றைய தினம் உயிரிழந்தார். இவரது உடல் தகனம் செய்யப்பட்டமையால் அனைத்து முஸ்லிம் மக்கள் மத்தியிலும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது எனவும், இதனை முஸ்லிம்களாகிய நாம் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்த முஹம்மத் ஜமாலின் உடல் நல்லடக்கம் செய்யாமல் தகனம் செய்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் மத்தியில் பலவேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் ஊடாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் தமது கண்டனத்தை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் மேலும் அவர் தெரியவருகையில், நேற்றைய தினம் நீர்கொழும்பில் உயிரிழந்த சகோதரனை இறைவன் பொருந்திக் கொள்ள வேண்டுமென தான் பிரார்த்திப்பதோடு, இவருக்காக அனைத்து உறவுகளும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். மேலும் கொரோனா தொற்றினால் உலக அளவில் முஸ்லிம்கள் மரணித்துள்ளனர், அவர்கள் உரிய இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார்கள். ஆனால் எமது நாட்டில் ஏன் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என அவர் கேள்வி எழுப்பியுள்ளர். இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க இது தொடர்பில் முஸ்லிம் மார்க்க தலைமைகள் அரசாங்கத்தோடு பேசி தக்க முடிவை எடுக்க வேண்டுமென பொது மக்கள் சார்பில் வேண்டிக் கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/140244