Jump to content

எனது குடும்பத்திற்கு, கொரோனா ஏற்படுத்திய மரண பயம். - தமிழ் சிறி.-


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 எனது குடும்பத்திற்கு, கொரோனா ஏற்படுத்திய  மரண பயம். - தமிழ் சிறி.- 

2019´ம்  ஆண்டு விடை பெற்று, செல்லும் போது..... 
2020´ம் ஆண்டை வரவேற்க உற்சாகமாக இருந்த நேரம்.

இப்படியான... ஆண்டு மாற்றங்கள், நடக்கும் தருணங்களில்....
எனது பிள்ளைகள்... சிறுவர்களாக இருக்கும் போது.. 
அவர்களுக்கும், எனக்கும்..  உற்சாகமாக இருப்பதற்காக,
நிறைய... வாண வேடிக்கைகள் செய்து, புத்தாண்டை வரவேற்போம்.

இப்பிடி,  "காசை கரியாக்தேங்கோ... " என்று, மனைவி சொன்னாலும்,   
வழக்கம் போல்... ஒரு காதால்.. வாங்கி, மறு  காதால், வெளியே விட்டு விடுவேன்.
அதை நான்... கணக்கில் எடுப்பதில்லை. (அதுதான்... காதல், என்பார்கள்)

ஆனால்.... கடந்த சில ஆண்டுகளாக, பிள்ளைகளுக்கு
படிப்பில்... கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் அந்த, ஆசையே வரவில்லை.

2020 பிறக்கும் போது.....   எனக்கு, இன்ப அதிர்ச்சி  ஊட்டுவதற்காக...
மூன்று  பிள்ளைகளும், "அப்பா.... வாங்கோ... வெடி கொளுத்துவோம்" என்றார்கள் 
அண்டைக்கு..... சரியான குளிராக இருந்த படியால்...

நீங்கள்.... கொளுத்துங்கோ...
நான்... "யன்னலாலை..." எட்டிப் பாக்கிறன், என்று சொல்லி விட்டேன். 
அவர்கள்.....  வெடித்த,  "சீனா"  வெடிகளை மனைவியும் ரசித்தார்.

வெடி கொழுத்தப் போன... ஆட்களுக்கு, சாம்பிராணி குச்சி 

மனைவியின் அனுமதி இல்லாமல், அங்கு இருந்து...
ஒரு பொருளும்.... நகர முடியாது. என்பது.. நமக்கு... நன்கு தெரியும். 
அப்படி இருந்தும்....

(தொடரும்)

 

 

 • Like 13
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள்.... கொளுத்துங்கோ...
நான்... "யன்னலாலை..." எட்டிப் பாக்கிறன், என்று சொல்லி விட்டேன். 
அவர்கள்.....  வெடித்த,  "சீனா"  வெடிகளை மனைவியும் ரசித்தார்.

அன்று வெள்ளிக்கிழமை என்றபடியால் சிறிக்கு எழும்பி போக இயலாமல் இருந்திருக்குமோ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள்  படித்து,  சென்ற ஆண்டில்.... இருந்து வேலை செய்யத் தொடங்கியவர்கள்.
தகப்பனாக, இருந்து.... அதைப் பார்க்க சந்தோசமாக இருந்து 
அந்த நேரம்....
மகனும், இளைய  மகளும்.... சென்ற  மாசி மாதம்   20 ம் திகதி, (20.02.20)
இத்தாலி நாட்டில், நான்கு நாள்..... 
சரித்தர பூர்வமான இடங்களை பார்க்க போய் இருந்த போது,
சீனாவில்..... தொடங்கிய "கொரோனா" 
இத்தாலி மட்டும்... வரும் என்று, யாருமே எதிர் பார்க்கவில்லை. 

வடக்கு இத்தாலியில் ஆரம்பித்த  கொரோனா....
மத்திய, தெற்கு  இத்தாலி வரை, வந்து  கொண்டிருப்பதை....
உலகத்தில், ஒருத்தரத்தாலும்  ..... ஊகிக்க  முடியவில்லை.

ஒரு, அருந்தப்பில், தப்பிய பிள்ளைகள் வீட்டிற்கு  வந்த திகதி.(24.02.20)
சாமம்... 10 மணி.  

அடுத்த... ஆறுமணித்தியாலத்தில், எனது மகள்.....  வேலை நிமித்தமாக 
இந்தியாவில்  உள்ள பெங்களூர் நகரத்திற்கு செல்ல.....
அதே... விமான நிலையத்திற்கு... செல்ல வேண்டும்.

ஏற்கெனவே... என்ன உடுப்புகளை, 
எந்த நாட்டில் பாவிப்பது என்ற விபரம் தெரிந்த படியால்....  
பெட்டியை மாத்திக்.... கொண்டு, 
அம்மாவுக்கு.... ஒரு முத்தம்,  அப்பாவுக்கு.... ஒரு முத்தம்  தந்து ..
விடை பெறும்  போது... கண்ணீர் வந்தது. 

(தொடரும்)

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இளையவர்கள் திடகாத்திரமானவர்களாக இருந்தாலும் பயமே ஆளை போட்டுத் தள்ளிவிடும்.

தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போட்டுது.

சரி இந்தியா போனவவின் நிலைப்பாடு என்ன தான்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில்  இருந்து, இந்தியா செல்பவர்கள்,
குடிக்கின்ற நீரில், கக்கூசு தண்ணீர்  கலந்து இருந்திருப்பார்கள்.
மிக கவனமாக இருக்க வேண்டும்.. என்று... 
ஏற்கெனவே... மகளுக்கு கூறி, இருக்கின்றேன்   

அதனால்..... அவ, பல்லு  விளக்குவதும், போத்தில் தண்ணீரில் தான் என்ற போது,
மனம்... பதை பதைத்தது.   

இது, அவவின், இரண்டாவது பயணம்...
ஏற்கெனவே.... நாங்கள் கூறிய புத்தி மதிகள் இருந்திருக்கும்.

(தொடரும்)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இவர்கள் இளையவர்கள் திடகாத்திரமானவர்களாக இருந்தாலும் பயமே ஆளை போட்டுத் தள்ளிவிடும்.

தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போட்டுது.

சரி இந்தியா போனவவின் நிலைப்பாடு என்ன தான்?

 

2 hours ago, ஏராளன் said:

தொடருங்கோ.

ஈழப்பிரியன், ஏராளன் ....
அங்கு தான்..... கொரோனா என்ற வைரஸ்,  பரவ ஆரம்பித்த நேரம்.

மகள்.... பெங்களூரிந்து , தொலைபேசி ... எடுத்து, 
தனக்கு... மூச்சு  எடுக்க கஸ்ரமாய் இருக்கு,  வயித்ததாலை போகுது...எண்டும், 
அங்குள்ள.... இந்தியா, மருத்துவர்களிடம் , 
"பொடி  செக்கப்"  செய்யப் போகின்றேன். என்றா.....

அதுக்கு.... நான், உனக்கு என்ன.... விசரோ...
பல்லைக்  கடிக்சுக் கொண்டு,   ஜேர்மனிக்கு, வாடி...
இங்கு வைத்தியம் செய்யலாம்... உறுக்கமாக, சொல்லி விட்டேன்.

எனது.... செல்ல மகளும்,  இங்கு வந்து....
தனது  குடும்ப வைத்தியருடன் கலந்து... ஆலோசித்து,
அவவுக்கு.... கொரோனா இல்லையாம். :)

மனப் பயம் என்கிறார்கள். 
நாம் தைரியமாக இருப்போம்.

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பெற்றோராக எங்களுக்கு உள்ள பயம் தான் தமிழ்சிறி. ஆனால் பிள்ளைகள் உங்களோடு அருகில் இருப்பது ஆறுதலே.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்கு தெரிந்த எதிரி என்றால் மோதிப்பார்க்கலாம் அல்லது ஓடித்தப்பலாம்..... கொரோனாவுக்கு என்ன செய்வது..... அவர்கள் நலமாக வந்தது நல்லதே.....!  

தொடருங்கள் தமிழ்சிறி......!

 • Like 1
Link to post
Share on other sites

இது கதையா தொடர சொல்ல ஒரு தகப்பனின் நெருப்பு தவிப்புக்கள் என்ன இருந்தாலும் என்னருகில வா மகளே என்று துடிக்கும்மனதை புரிகிறது நண்பா அதே தவிப்பில இருக்கிறேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்தும்... ஊக்கமும் தந்த,
பெருமாள், நில்மினி, ஏராளன், ஈழப்பிரியன், சாந்தி,  
கவி அருணாசலம், சுவி அண்ணா, காவலூர் கண்மணி அக்கா, குமாரசாமி அண்ணா, 
மார்த்தாண்டன்.... ஆகியோரின் அக்கறைக்கு நன்றி.

உண்மையில்... எனக்கு, இதனை மீட்டிப் பார்க்கவே... ஒருவித பயமாக உள்ளது.
ஆனாலும்... சென்ற வெள்ளிக்கிழமை எழுத ஆரம்பித்ததை...
இடையில்... நிறுத்தி விடக் கூடாது என்பதற்காக... தொடர்கின்றேன்.

இந்த விடயத்தை... நண்பர் பாஞ்ச்  அண்ணைக்கோ...
வீட்டிற்கு அருகில் இருக்கும், நண்பர்களுக்கோ.. தெரிவிக்காமல்...
எம்மை... நாமே தனிமைப் படுத்திக் கொண்டோம்.
நிச்சயம்... அவர்கள் கோவிக்க மாட்டார்கள் என நம்புகின்றேன்.   

Edited by தமிழ் சிறி
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மகள்.... வேலை செய்யும் இடம், 
வீட்டிலிருந்து.... 35 கிலோ மீற்றர் தொலைவில்  இருந்தாலும்....
அவர், பிரயாணம் செய்யும்,  பாதை, சுவிற்சலாந்து, ஒஸ்ரியா.... 
எல்லைகளுக்கு... அண்மையில் இருப்பதால் வேலை நாட்களில்,
பலரும்... இங்கிருந்து அங்கு வேலைக்கு சென்று வருபவர்கள் என்பதாலும்,
மலைப்  பிரதேசம்  என்பதாலும்... வாகன நெரிசல்  அதிகமாக இருக்கும்.

அதற்காக... அவர் வேலை செய்யும் இடத்திற்கு, கிட்ட  (15 கி. மீ . தொலைவில்)
ஓரு,  தனியறை எடுத்து, தங்கி வசிப்பவர்.
அது, 25 சதுர மீற்றர் மட்டுமே வரும்.  ஒரு படுக்கை அறையுடன் கூடிய.. வரவேற்பறை.
ஒரு தனிக்  குசினி, பல்கனி. அதற்கு... 750  €  வாடகை.

அதில்  படுக்கறையுடன் சேர்ந்து... அவரின்...  வேலை அறையும்... 
வரவேற்பு அறையும்... ஒன்றாகவே இருக்கும்.

வேலை நாட்களில்...  எமது  வீட்டிலிருந்து, அந்த  35 கிலோ மீற்றர் தூரத்தை கடப்பதற்கு...
இரண்டு மணித்தியாலத்திற்கு மேலும்... எடுக்கலாம் என்பதற்காக..
அந்த இடத்தை... அவர் தெரிவு செய்திருந்தார்.  

கொரோனாவுக்கும்... இதுக்கும், என்ன சம்பந்தம்?
என்று நீங்கள் கேட்பீர்கள்... என்று, எனக்கு நன்கு  தெரியும்.

அந்தக்  கட்டிடத்தில் வசிப்பவர்கள்.... பலர்,வயோதிகர்கள்.
அவர்கள்... ஏற்கெனவே, மகள்  வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து ஒய்வு பெற்றவர்கள்.
அவர்களுக்கு.. மகள் இத்தாலி, இந்தியா.... சென்று வந்த விடயமும் தெரியும்.

ஜேர்மனியில்....  பென்ஷன், எடுத்த... கிழவன்/ கிழவிகள்  சும்மா.... இருக்க மாட்டாதுகள்.
சும்மா... ஜன்னலாலை எட்டிப் பார்த்து,  கொண்டே... நிண்டு, அலுவல் பார்ப்பார்பார்கள்.
(தொடரும்)

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மகள் இப்பவும் வேலைக்கு போகிறாவா அல்லது working from ஆ ? எதற்கும் மாஸ்க்கை போட்டு  Sunglass யும் போட்டுகொண்டு திரிந்தால் ஜேர்மன் கிழவர்  கிழவிகளிடம் விடுப்பில் இருந்து இருந்து தப்பலாம் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nilmini said:

மகள் இப்பவும் வேலைக்கு போகிறாவா அல்லது working from ஆ ? எதற்கும் மாஸ்க்கை போட்டு  Sunglass யும் போட்டுகொண்டு திரிந்தால் ஜேர்மன் கிழவர்  கிழவிகளிடம் விடுப்பில் இருந்து இருந்து தப்பலாம் 

மகள், கடந்த இரண்டு கிழமையாக...  வீட்டில் இருந்து தான்... வேலை செய்கிறார்.

பகிடி விடாதேங்கோ... நில்மினி.
ஜேர்மன் கிழவன், கிழவிகளுக்கு.... 
ஜன்னலில் நின்று, விடுப்பு பார்ப்பது தான்... முழு உத்தியோகம்.
எந்தக் கார்க்காரன், ஆரிண்டை காருக்கு இடிச்சு.... பெயிண்ட் கழண்டது...
அந்த இருவரின்... இலக்கத்தையும்... 110 க்கு அடித்து விட்டு,
அமுசடக்கமாக... இருந்து விடுவார்கள். :grin:

சிலதுகள்... அந்த இடத்தைப் பார்க்க,  நாய்🦮/ பூனையுடன்🐈... 
"வாக்கிங்"  வந்து,  நோட்டமிடுவார்கள்.     😎

இதனால்... பல, போலீஸ்காரனுக்கு... வேலை  குறைவு. 🤣

பாவம்... "பென்ஷன்"  எடுத்தவர்களுக்கும்... பொழுது போக வேணுமே.....  😂

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites

வேலை இல்லாததுகள் உங்கள் மகள் இத்தாலி இந்தியா போய் வந்ததை போட்டுக் கொடுத்து விட்டார்களா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kavallur Kanmani said:

வேலை இல்லாததுகள் உங்கள் மகள் இத்தாலி இந்தியா போய் வந்ததை போட்டுக் கொடுத்து விட்டார்களா?

கண்மணி அக்கா... பென்சன் எடுத்தவர்களுக்கு, 
அப்படி போட்டுக் கொடுக்க வேண்டிய... அவசியமோ, அதனால் லாபமோ  இல்லை.

ஆனால்... கொரோனா பயம்,  தங்களையும் பீடித்து விடுமோ என்று, யோசித்திருக்கலாம்.
ஆனால்... அதனை, உறுதியாக சொல்ல முடியவில்லை. :)

 • Like 1
Link to post
Share on other sites

தொடருங்கள் தமிழ்சிறி  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி கட்டுரைகள் எழுதுவார், பயணக் கட்டுரைகள் எழுதுவார். பயக் கட்டுரையும் வாசகர்களைக் கவரும்படி எழுவார் என்று இன்றுதான் கண்டறிந்தேன். வாசித்ததும் அவரைத் தொடர்புகொள்ள எண்ணினேன், ஆயினும் அவர் பயமின்றி இருக்கும் அந்த ஒருநாள் இன்றில்லாதபடியால் பொறுமைகாக்கிறேன். 😌

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

கொரோனாக் காலத்தில் பெங்களூர் போய் திரும்பி வந்ததே போதும். கொஞ்சம் பிந்தியிருந்தாலும் அங்கிருந்து வெளியேற முடியாமல் அவதிப்பட்டிருக்கவேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க காத்திருக்கிறேன்...தொடருங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2020 at 10:17, தமிழ் சிறி said:

குடிக்கின்ற நீரில், கக்கூசு தண்ணீர்  கலந்து இருந்திருப்பார்கள்.

என்ன இருந்தாலும் மகளை இப்படியா மிரட்டுறது?
அதுசரி இது உண்மையோ?

வாசிக்க ஒரு திரில்லா இருக்கு 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.