Nathamuni

நேர்மையாக இல்லாததால் பொருளாதார சிக்கலில் தமிழ் வணிகர்கள், தற்தொழில் செய்பவர்கள்

Recommended Posts

அரசாங்கத்துக்கு வரி செலுத்துவதில் தயக்கம். எங்கெங்கு முடியுமோ அங்கங்கு சுத்துமாத்து.

கணக்காளர்கள், முடிந்தளவு நேர்மையாக இருந்தால், வியாபாரத்தினை சிறப்பாக செய்யமுடியும் என்று அறிவுறுத்தினாலும், அது விழலுக்கு இறைத்த நீர்.

ஒருவர் சிறந்த கணக்கினை காட்டி, அதற்குரிய வரியை செலுத்தும் போது, அந்த கணக்கினை அடிப்படையாக வைத்தே, வங்கிகள் கடன் தரும். குறைந்த வட்டியில் கிடைக்கும் அந்த பணத்தினை கொண்டே வியாபாரத்தினை மேலும் வளர்க்க முடியும்.

ஆனால் நம்மவர்களில் பலர், ஆரம்பத்தில் இருந்தே, நெகடிவ் எண்ணத்துடனே வியாபாரத்தினை ஆரம்பிப்பார்கள். விளைவு, வியாபாரம் நன்றாக நடந்தாலும், வேண்டுமென்றே குளறுபடி செய்து, லாபமே இல்லாமல் நட்டத்தில் ஓடியதாக காட்டி, முறையாக கட்டியிருக்க வேண்டிய வரிகளை கட்டுவதில்லை.

விளைவு, வங்கிகள் அவர்களது நஷட கணக்கினை வைத்து, பணம் கொடுக்காது. ஆகவே அதிக வட்டி கூடிய தனியார் கடன், ஏமாறக்கூடிய சீட்டு, கிரெடிட் கார்டு கடன், வீட்டு மேலான செகண்ட் சார்ஜ் எனப்படும் கடன் என்று கிளம்பி விடுவார்கள்.

இறுதியில், அதிக வட்டி கொடுப்பனவுகள் காரணமாக ஒன்றுமே இல்லாமல் வியாபாரம் படுத்து விடும்.  

சரி இப்ப விடயத்துக்கு வருவோம்.

நேற்று, பிரித்தானிய அரசு, தற்தொழில் செய்வோருக்கும் உதவி செய்வதாக அறிவித்தது.

அரசும் சும்மா கொடுக்க முடியாது தானே. எல்லோரும் நாமும்  தற்தொழில் செய்பவர்கள் என்று போய் நின்று விடுவார்கள் என்பதால், அவர்களது சமர்பிக்கப்படட கணக்கின் படியான லாபத்தில் 80% மாதம், மாதம், £2,500 வரையான அதி உச்ச வரம்புக்குள், ஜூன் மாதம் முதல் கொடுப்பதாக அறிவித்துள்ளது. 

இப்போது உள்ள பிரச்னை என்னவெனில் நஷடம் காட்டியோர், சாதாரணமான சமூக கொடுப்பனவுக்குள் அதாவது மிகக்குறைந்த வாராந்திர தொகை வாங்க வேண்டிய நிலைமை என்று பேசப்படுகினறது. இது வேலை இல்லாதவர்களுக்கு கொடுப்பது போன்றது. 

அரசின் மீது தவறு சொல்ல முடியாது. இதுபோன்ற அவலம் மிக்க காலங்களில், நாம் கொடுத்ததை திருப்பி தருகினறது. அதற்கு தான் அரசினை மக்கள் தெரிவு செய்து வைத்துள்ளனர்.

இது ஒரு படிப்பினை. எம்மவர்கள் மட்டுமல்ல, பல ஆசியர்களுக்கும், ஆப்ரிக்கர்களுக்கும் இதுவே நிலை.

What help is there?

If they have suffered a loss in income, a taxable grant will be paid to the self-employed or partnerships, worth 80% of their profits up to a cap of £2,500 per month.

Initially, this will be available for three months in one lump-sum payment, and will start to be paid from the beginning of June.

It will be called the Coronavirus Self-employment Income Support Scheme, and is open to those who were trading in the last financial year, still trading now, and planning to continue doing so this year.

Who is eligible?

More than half of a claimant's income needs to come from self-employment.

The scheme will be open to those with a trading profit of less than £50,000 in 2018-19, or an average trading profit of less than £50,000 from 2016-17, 2017-18 and 2018-19.

Those who are recently self-employed and do not have a full year of accounts will not receive any help under this scheme.

Edited by Nathamuni
  • Like 4

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, Nathamuni said:

அரசும் சும்மா கொடுக்க முடியாது தானே. எல்லோரும் நாமும்  தற்தொழில் செய்பவர்கள் என்று போய் நின்று விடுவார்கள் என்பதால், அவர்களது சமர்பிக்கப்படட கணக்கின் படியான லாபத்தில் 80% மாதம், மாதம், £2,500 வரையான அதி உச்ச வரம்புக்குள், ஜூன் மாதம் முதல் கொடுப்பதாக அறிவித்துள்ளது. 

அவர்கள் வருடாவருடம் பொய் கணக்கு காட்டி பெரும் தொகை அமுக்குகிறார்கள்.
இது எப்போதாவது வரும் பிரச்சனை தானே?
அதுவும் மாதாமாதம் தரவா போகிறார்கள்?
ஒரு மாதம் மிஞ்சினால் இரண்டு மாதம் தானே என்று கணக்கிலெடுக்க மாட்டார்கள்.

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, ஈழப்பிரியன் said:

அவர்கள் வருடாவருடம் பொய் கணக்கு காட்டி பெரும் தொகை அமுக்குகிறார்கள்.
இது எப்போதாவது வரும் பிரச்சனை தானே?
அதுவும் மாதாமாதம் தரவா போகிறார்கள்?
ஒரு மாதம் மிஞ்சினால் இரண்டு மாதம் தானே என்று கணக்கிலெடுக்க மாட்டார்கள்.

பொய் கணக்கு காட்டுவோர் எல்லோரும் நல்லா இருந்தால் பிரச்னை இல்லையே....

தவிர, நல்லா இருந்தால், மொட்டைப் பெட்டிசன்  போடவும் ஆள் இருக்குதே.  🤨

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, Nathamuni said:

பொய் கணக்கு காட்டுவோர் எல்லோரும் நல்லா இருந்தால் பிரச்னை இல்லையே....

தவிர, நல்லா இருந்தால், மொட்டைப் பெட்டிசன்  போடவும் ஆள் இருக்குதே.  🤨

அதுக்குத் தான் பாங்றொப்சி போறது.வேறு பெயரில் அதே ஆள் திறக்கும்.
சட்டமும் இருக்கு
அதில் ஓட்டையும் இருக்கு. 

Share this post

Link to post
Share on other sites
42 minutes ago, Nathamuni said:

நஷடம் காட்டியோர், சாதாரணமான சமூக கொடுப்பனவுக்குள் அதாவது மிகக்குறைந்த வாராந்திர தொகை வாங்க வேண்டிய நிலைமை என்று பேசப்படுகினறது

நட்டம் காட்டிய போது இலாபம் பார்த்திருப்பார்கள்தானே அந்தப் பணம் இப்போது உதவட்டும்

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
23 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுக்குத் தான் பாங்றொப்சி போறது.வேறு பெயரில் அதே ஆள் திறக்கும்.
சட்டமும் இருக்கு
அதில் ஓட்டையும் இருக்கு. 

நீங்கள் சொல்வது வேறு லெவல் ஐடியா.

ஒழுங்காக கணக்கு காட்டி, பாங்கில் பெரிதாக கடனை வாங்கி, துண்டை போட்டு ஒதுங்கிக் கொள்வது.

கடன் இருக்கிற ஆள், திவால் நோட்டீஸ் கொடுத்தால், கடன் காரர் தொல்லையில் இருந்து மட்டுமே பாதுகாப்பு. 

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
24 minutes ago, Kavi arunasalam said:

நட்டம் காட்டிய போது இலாபம் பார்த்திருப்பார்கள்தானே அந்தப் பணம் இப்போது உதவட்டும்

என்னத்த லாபம்?

ஒரு தமிழ் கடையில் ஒரு பத்து, இருபது பேர் நின்றால், ஓடிப்போய் பக்கத்தில் ஒன்றை திறப்பது நிற்கும் வரை லாபம் எப்படி வரும்?

மாத்தி யோசிப்பதில்லை.

லண்டனில் சவுத் ஹாரோ எனுமிடத்தில் ஆரம்பத்தில் இருந்த கடை சங்கர்.... பின்னர் அவரது யவராத்தினை பார்த்து வந்த கடை சவுத் ஹரோ பூட் அண்ட்  வைன்.

அதனை பார்த்து வந்தவர்கள் best way. பார்த்தார் சங்கர்... கடையை கொடுத்துவிட்டு, இப்போ சங்கர் brand பொருள் விநியோகத்துக்கு போய் விட்டார்.

அதன் பின்னர் இப்போது குறைந்தது, 4 கடைகள் வந்து விட்டன. 

இதே நிலை தான், 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரெய்னர்ஸ் லேன் பகுதியிலும்....

என்னத்த போங்க...

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
21 minutes ago, Nathamuni said:

ஒரு தமிழ் கடையில் ஒரு பத்து, இருபது பேர் நின்றால், ஓடிப்போய் பக்கத்தில் ஒன்றை திறப்பது நிற்கும் வரை லாபம் எப்படி வரும்?

ஒரு கடை இருக்கும்போது கொள்ளை இலாபம். நாலுகடை  வந்ததும் இலாபம்.

இங்கு நான் வசிக்கும் நகரில் ஒரு தமிழ்கடை இருந்தபோது ஒருகிலோ பழப்புளி 15 டி.எம் கொடுத்து வாங்கினேன். நாலு கடைகள் வந்தபின்பு ஒரு கிலோ 4 டி.எம் கொடுத்து வாங்கினேன்.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

என்னத்த லாபம்?

ஒரு தமிழ் கடையில் ஒரு பத்து, இருபது பேர் நின்றால், ஓடிப்போய் பக்கத்தில் ஒன்றை திறப்பது நிற்கும் வரை லாபம் எப்படி வரும்?

மாத்தி யோசிப்பதில்லை.

லண்டனில் சவுத் ஹாரோ எனுமிடத்தில் ஆரம்பத்தில் இருந்த கடை சங்கர்.... பின்னர் அவரது யவராத்தினை பார்த்து வந்த கடை சவுத் ஹரோ பூட் அண்ட்  வைன்.

அதனை பார்த்து வந்தவர்கள் best way. பார்த்தார் சங்கர்... கடையை கொடுத்துவிட்டு, இப்போ சங்கர் brand பொருள் விநியோகத்துக்கு போய் விட்டார்.

அதன் பின்னர் இப்போது குறைந்தது, 4 கடைகள் வந்து விட்டன. 

இதே நிலை தான், 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரெய்னர்ஸ் லேன் பகுதியிலும்....

என்னத்த போங்க...

அது best foods, இப்போ அந்த இடத்தில் சங்கர் & கோ உம் இல்லை...

சங்கர் brand, Hayes கிருஷ்ணா கடை முதலாளியின் கையில் போய் கன காலம்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
4 hours ago, MEERA said:

அது best foods, இப்போ அந்த இடத்தில் சங்கர் & கோ உம் இல்லை...

சங்கர் brand, Hayes கிருஷ்ணா கடை முதலாளியின் கையில் போய் கன காலம்.

அந்த 'மு' தானே கிங்ஸ் தூளையும் எஸ்க்க்ளுசிவ் ரைட் எடுத்து வைச்சிருக்கிறார்.

அவருக்கு வேறு விதத்தில் சட்டத்துடன் முரண்பாடு எண்டு கேள்வி... உணமையா?

அது சரி, பின்ன என்ன கோதாரிக்கு, காலாவதி முட்டையை பாலுக்கு பக்கத்தில போட்டு வித்தவையல்? 

கேட்டால், எனக்கு தெரியாது, மனேஜரிண்ட வேலை எண்டுவாங்கள்.

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
23 minutes ago, Nathamuni said:

அந்த 'மு' தானே கிங்ஸ் தூளையும் எஸ்க்க்ளுசிவ் ரைட் எடுத்து வைச்சிருக்கிறார்.

அவருக்கு வேறு விதத்தில் சட்டத்துடன் முரண்டன்பாடு எண்டு கேள்வி... உணமையா?

அது சரி, பின்ன என்ன கோதாரிக்கு, காலாவதி முட்டையை பாலுக்கு பக்கத்தில போட்டு வித்தவையல்? 

கேட்டால், எனக்கு தெரியாது, மனேஜரிண்ட வேலை எண்டுவாங்கள்.

Kings தூள் மட்டுமல்ல ஆசீர்வாத் ஆட்டா வும். இரண்டையும் அவரிடம் கொடுத்தது பழைய சங்கர் brand முதலாளி.

சட்ட பிரச்சனை தொடர்பாக எனக்கு தெரியாது.

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
8 hours ago, Nathamuni said:

அரசின் மீது தவறு சொல்ல முடியாது. இதுபோன்ற அவலம் மிக்க காலங்களில், நாம் கொடுத்ததை திருப்பி தருகினறது. அதற்கு தான் அரசினை மக்கள் தெரிவு செய்து வைத்துள்ளனர்.

இது ஒரு படிப்பினை. எம்மவர்கள் மட்டுமல்ல, பல ஆசியர்களுக்கும், ஆப்ரிக்கர்களுக்கும் இதுவே நிலை.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். 

Edited by குமாரசாமி
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

மேற்கு நாடுகளில் வர்த்தகம் செய்யும் தமிழர்களில் பெரும்பாலனவர்கள் தமது தொழிலை பல குழறுபடிகளுடன் தான் நடத்துகின்றனர்.  அரசாங்கங்களுக்கும் நேர்மையாக நடப்பதில்லை. தமது   சொந்த வாடிக்கையாளர்களுக்கும்  நேர்மையாக நடப்பதில்லை.  தொழில் சார் நடைமுறைகள் சிறிதேனும் பின்பற்றுவதில்லை. வணிகம் தொடர்பான தொழிசார் திறமைகளை வளர்த்து கொள்ளவும் இல்லை.அதனால் தான் தமிழர்களால் வியாபாரத்தில் ஒரு அளவுக்கு மேல் செல்ல முடிவதில்லை. தாம் ஆரம்பித்த இடத்திலேயே பல வர்த்தகள் இன்றும் உள்ளார்கள்.  80 களில் வர்தகத்தை ஆரம்பித்த தமிழர்களில் இன்று விரல் விட்டு எண்ணும்படியான சிறு அளவினரே வர்த்தகத்தில் வெற்றி பெற்றுள்ளனர். மற்றயவர்கள் தமது வாழ் நாள் முழுவதும் சிறிய சில்லறை விற்பனை நிறுவனங்களை நடத்துதும் சிறிய வர்த்தகளாகவே இருக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். அதறகு முக்கிய காரணம் தமக்குள் நேர்மை என்ற விடயத்தில் மிக மிகப் பலவீனர்களாக இருக்கும் நம்மவர்கள் ஒருவரை ஒருவர் நம்ப முடியாத நிலையில் உள்ளார்கள். அதனால் ஒரு தனி வியாபாரத்துக்கு மேல் பங்கு வியாபாரமாகவோ கம்பனியாகவோ நிறுவனத்தை  கொண்டு  செல்ல முடியாது.  

தாம் செய்யும் வர்த்தகத்தை வணிகம் சார் தொழில் நடைமுறைகள், தொழில் திறமைகள் வாடிக்கையாளரை கவர்ந்திழுக்கும்  விற்பனை விருத்தி நடவடிக்கைகள் ,பொருட்களை நேர்த்தியுடன்  அழகாக வாடிக்கையாளரை கவரும் வித‍த்தில் அடுக்கி வைக்கும் முறை, என்பன மிகவும் பலவீனமாகவே  தமிழ் விற்பனை நிறுவனங்களில்  உள்ளது. வியாபார போட்டி என்பதில் விலைக்குறைப்பு என்ற நடைமுறை மட்டும் தான் இவர்களின் வியாபார யுக்தி. உயர் தரமான சேவையை வாடிக்கையாளருக்கு வழங்குவதும் வியாபார யுக்திதான் என்பதை இவர்கள் கணக்கெடுப்பதில்லை. இந்த  விலைக்குறைப்பு யுக்தியின் வேகம் தனக்கு இலாபம் வராமல் விட்டாலும் பரவாயில்லை போட்டி நிறுவனத்தை நட்டப்படுத்தினால் போதும் என்ற நிலை வரை கொண்டுவந்து விடும்.

உதாரணமாக தமிழரின் மீன் விற்பனையை நோக்கினால் இந்து சமுத்திரத்தில் பிடிக்கும் மீன் ஐரோப்பா வரும் போது அதற்கு ஒரு  விசேட மதிப்பு இருக்கும். அந்த மதிப்பை பொறுத்தே அதன் விலையும் இருக்கும். அம்மீனை சிறந்த professenal  Logistic system ஊடாக பாதுகாத்து  சுத்தபடுத்தி விற்பனை செய்யும் போது பல வெளி நாட்டு வாடிக்கையாளரை கவந்து இழுத்து விற்பனையை பெருக்கி விலைக்குறைப்பை அமுல் செய்ய முடியும் ஆனால் அதை செய்யாமல் கடைக்குள் ஒரு நிமிடம் சென்று வந்தாலே போட்டிருக்கும் உடுப்பு முழுவதும் மீன் நாற்றத்துடன் பொது போக்குவரத்தை கூட சங்கோஜத்துடம் பாவிக்க வேண்டிய நிலையிலேயே மீன் விற்பனை நடைபெறும்.  தமிழர்களுக்குள் மட்டும் போட்டிக்காக இறக்குமதி விலையிலே மீன் விற்பனை செய்யபடும். இதனால் வர்த்தகள் பெரிய இலாபமும் அடைவதில்லை என்பதே பல வணிகர்களின் Accounting  ஐ ஆய்வு செய்தால் தெரியும் விடயம். 

 பிரான்சில் உள்ள புத்தகங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு சென்றேன். அந்நிறுவனங்கள்  கடந்த 3 தசாப்தங்களாக தொழிலை செய்துவருபவை. அங்குள்ள புத்தகங்கள் எதுவும் தொழில் சார் ரீதியில் நேர்த்தியாக அடுக்கி வைக்கபட்டிருக்கவில்லை. சஞ்சிகைகள், கதை புத்தகங்கள், வரலாறு, புவியியல்  என்று எல்லா புத்தகங்களும் அவர்களின் மனம்போன போக்கில் அலுமாரியில் அடுக்கி வைக்கபட்டிருந்தன. தேடி எடுப்பதில் பெரும் சிரம‍ம. பொதுவாக புத்தகங்கள் விற்பனை செய்யும்  ஐரோப்பிய நிறுவனம் ஒன்றுக்கு சென்றால் என்றால் அங்கு  Catogory  பிராகாரம் நேர்த்தியாக அடுக்கி வைக்கபடிருப்பட்டிருக்கும். புத்தகத்தின் பெயரை கூறினால் போதும் அப்புத்தகம் அங்கு உள்ளதா இல்லையா என்ற விபரம் கிடைத்து விடும். நிறுவன விற்பனயாளரிடம் தம்மிடம் இருக்கும் புத்தகங்கள் தொடர்பான தரவுகள் நேர்த்தியாக  இருக்கும். ஆனால் அந்த தமிழ் புத்தக விற்பனை நிலையத்தில்   நின்ற விற்பனையாளரிடம் புத்தகங்கள் தொடர்பான எந்த விபரத்தையும் பெற்று கொள்ள முடியவில்லை. ஏதோ இதற்குள் தேடி தேடிப்பாருங்கள் என்ற பதிலே கிடைத்த‍து. ஏதோ பழைய பொருட்களை விற்கும் நிறுவனம் போல் வந்த புத்தகங்களை தெருவில் போட்டு விற்கும்  விற்பனை நிலையமாகவே உள்ளது. இத்தனைக்கும் மூன்று தசாப்த அனுபவம் உள்ள விற்பனை நிலையம் அது. 

இதே நிலையில் தான் மற்றைய மளிகை ,பலசரக்கு , ஆடை, நகை விற்பனை நிலையங்களும்  உள்ளன. எம்மால் எம்மிடையே சிறிய அளவிலேயே நேர்மையுடனும் தொழில் சார் முறையிலும் வணிகத்தை செய்ய முடியாத போது  வணிகத்தில்  பெரிய சர்வ தேச நிறுவனங்களை கைப்பற்றி ஆளும் நினைப்பு என்பது வெறும் பகல் கனவும் வெற்று வீரமும் மட்டும் தான். 

  • Like 4

Share this post

Link to post
Share on other sites

துல்பன் ,நாதமுனி இதெல்லாம் கணக்காளர் என்று நீங்கள் கண்டு பிடித்த விடயங்கள் முதலாவது மொழி பிரச்சனை நம்மவரை பின்தங்க செய்யுது  இன்று கூட கடை போட்டு 20 வருடங்களுக்கு மேலாகிறது a யில் இருந்து z  வரை சொல்ல தெரியாது கணக்கு கூட இடரும் சிறிய கடைதான் நாதமுனியின் முட்டை கடை ஓனரின்  இரவு தூக்கத்தை கெடுப்பவர்கள் .வாடிக்கையாளர் கவனிப்பு முக்கியம் அங்கு. அவர்களுக்கு இந்த 20 வருட காலத்தில் பெரிதாக வியாபாரம் செய்ய  எத்தனையோ opportunity கள்  வாய்ப்புக்கள் வந்த போதும்  மொழி பிரச்னை காரணமாக குதிரைக்கு கண் கட்டியது  போல் அவர்களின் வியாபார பயணம் .

லண்டனில் இலகுவான வழியில் சம்பாதிப்பது தொழில் என்றால்  இரண்டு கோனர்  கடை வைத்திருக்கும் முதலாளியின் லாபத்தை விட கூடிய வருமானம் உள்ள தொழில் சிற்றிக்குள் சாண்டவிச் விற்கும் தொழில் கிழமையில் 30 மணிநேரம் மட்டுமே வேலை நேரம் மட்டும்தான் இங்கும் முக்கியம் மொழி இங்கு  பிறந்த இரண்டாவது சந்ததி இந்த வேலைக்கு வருமா ? வராதுகள்  வேணுமென்றால் அந்த சண்டவிச்  வாங்கி சாப்பிடும் வண்டிக்கு  முன்னாள் உள்ள பாரிய கட்டிடங்களின் ஒன்றில் வருடம் ஒன்றுக்கு 35 ஆயிரம் பவுண்ட் சம்பாத்தியத்துக்கு மேலதிகாரியிடம் திட்டு  வாங்கிக்கொண்டு கிழமைக்கு 60 மணித்தியாலம் வேலை செய்ய மட்டுமே அதுகளுக்கு பிடிக்கும் .

Share this post

Link to post
Share on other sites

நல்லதொரு பதிவு நாதமுனி. 

நான் வேலை UK ல் ACCA firm ல் செய்த வேலை செய்தபோது பல்வேறு தமிழ் வணிகர்கர்களின் ஆண்டிருதி financials தயார் செய்துள்ளேன். 90% வீதமானவர்கள் எதோ ஒரு விதத்தில் ஏமாற்றிப் பிழைப்பவர்களே. இவை பொதுவாக  loss ஆகவே காணப்படும். 

மிகவும் சுய‌ந‌லமா நடந்து கொள்வார்கள். இதில் இங்கிலாந்தின் கிராமப்புறங்களில் கடை வைத்திருப்பவர்கள் அதிக லாபம் உழைப்பதை கண்டுள்ளேன். ஆனாலும் இவர்கள் self assesment ல் லாபத்தை குறைத்தே காட்டுவர்கள். வீட்டுக்கு வாங்கிய பொருட்களையும்  பில்லை குடுத்து VAT claim பண்ண முயற்சிப்பர்கள். 

ஒருவர் கிட்டத்தட்ட 25க்கு மேற்பட்ட கடனட்டைகள் வைத்திருந்தார். இவர் ஒடுவதோ ஒரு Land Rover ஆடம்பர வாகனம். இதைவிட இவர் ஒரு பஸ் driver ஆகவும் வேலை செய்கின்றார். ஆனலும் நஸ்டமே காட்டுவார். 

எந்தவித வியாபார ethics ம் என்ன வென்றே தெரியாதவர்கள்.

Share this post

Link to post
Share on other sites

இங்கு சில தமிழ் கடைகளில் முதலாளி இருக்கும்போது ஒரு விலை, முதலாளி அம்மா இருக்கும்போது இன்னொருவிலை. ஒருசில பொருள்களில் மட்டும் சட்டத்தைக் கடைப்பிடிக்கின்றோம் என்று காட்டுவதற்கு அவைகளில் விலை எழுதப்பட்டு இருக்கும். 

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, Nathamuni said:

அரசாங்கத்துக்கு வரி செலுத்துவதில் தயக்கம். எங்கெங்கு முடியுமோ அங்கங்கு சுத்துமாத்து.

1)கணக்காளர்கள், முடிந்தளவு நேர்மையாக இருந்தால், வியாபாரத்தினை சிறப்பாக செய்யமுடியும் என்று அறிவுறுத்தினாலும், அது விழலுக்கு இறைத்த நீர்.

2) ஒருவர் சிறந்த கணக்கினை காட்டி, அதற்குரிய வரியை செலுத்தும் போது, அந்த கணக்கினை அடிப்படையாக வைத்தே, வங்கிகள் கடன் தரும். குறைந்த வட்டியில் கிடைக்கும் அந்த பணத்தினை கொண்டே வியாபாரத்தினை மேலும் வளர்க்க முடியும்.

ஆனால் நம்மவர்களில் பலர், ஆரம்பத்தில் இருந்தே, 3)நெகடிவ் எண்ணத்துடனே வியாபாரத்தினை ஆரம்பிப்பார்கள். விளைவு, வியாபாரம் நன்றாக நடந்தாலும், வேண்டுமென்றே குளறுபடி செய்து, லாபமே இல்லாமல் நட்டத்தில் ஓடியதாக காட்டி, முறையாக கட்டியிருக்க வேண்டிய வரிகளை கட்டுவதில்லை.

விளைவு, வங்கிகள் அவர்களது நஷட கணக்கினை வைத்து, பணம் கொடுக்காது. ஆகவே அதிக வட்டி கூடிய தனியார் கடன், ஏமாறக்கூடிய சீட்டு, கிரெடிட் கார்டு கடன், வீட்டு மேலான செகண்ட் சார்ஜ் எனப்படும் கடன் என்று கிளம்பி விடுவார்கள்.

இறுதியில், அதிக வட்டி கொடுப்பனவுகள் காரணமாக ஒன்றுமே இல்லாமல் வியாபாரம் படுத்து விடும்.  

சரி இப்ப விடயத்துக்கு வருவோம்.

நேற்று, பிரித்தானிய அரசு, தற்தொழில் செய்வோருக்கும் உதவி செய்வதாக அறிவித்தது.

அரசும் சும்மா கொடுக்க முடியாது தானே. எல்லோரும் நாமும்  தற்தொழில் செய்பவர்கள் என்று போய் நின்று விடுவார்கள் என்பதால், அவர்களது சமர்பிக்கப்படட கணக்கின் படியான லாபத்தில் 80% மாதம், மாதம், £2,500 வரையான அதி உச்ச வரம்புக்குள், ஜூன் மாதம் முதல் கொடுப்பதாக அறிவித்துள்ளது. 

இப்போது உள்ள பிரச்னை என்னவெனில் நஷடம் காட்டியோர், சாதாரணமான சமூக கொடுப்பனவுக்குள் அதாவது மிகக்குறைந்த வாராந்திர தொகை வாங்க வேண்டிய நிலைமை என்று பேசப்படுகினறது. இது வேலை இல்லாதவர்களுக்கு கொடுப்பது போன்றது. 

அரசின் மீது தவறு சொல்ல முடியாது. இதுபோன்ற அவலம் மிக்க காலங்களில், நாம் கொடுத்ததை திருப்பி தருகினறது. அதற்கு தான் அரசினை மக்கள் தெரிவு செய்து வைத்துள்ளனர்.

4)இது ஒரு படிப்பினை. எம்மவர்கள் மட்டுமல்ல, பல ஆசியர்களுக்கும், ஆப்ரிக்கர்களுக்கும் இதுவே நிலை.

What help is there?

If they have suffered a loss in income, a taxable grant will be paid to the self-employed or partnerships, worth 80% of their profits up to a cap of £2,500 per month.

Initially, this will be available for three months in one lump-sum payment, and will start to be paid from the beginning of June.

It will be called the Coronavirus Self-employment Income Support Scheme, and is open to those who were trading in the last financial year, still trading now, and planning to continue doing so this year.

Who is eligible?

More than half of a claimant's income needs to come from self-employment.

The scheme will be open to those with a trading profit of less than £50,000 in 2018-19, or an average trading profit of less than £50,000 from 2016-17, 2017-18 and 2018-19.

Those who are recently self-employed and do not have a full year of accounts will not receive any help under this scheme.

1) சத்தியமான உண்மை

2) அடுத்த சம்மட்டியடி 

3) எதிர்மறையான எண்ணமல்ல மாறாக வியாபாரம் ஆரம்பிப்பதற்கு முதலே எப்படி வெட்டி ஓடலாம் என்கின்ற எண்ணத்துடனேதான் கொம்பனிப் பெயரே தேடுவது.

4) இந்த மன நிலையுடனேயே எம்மக்கள் எல்லா நாடுகளிலும் உள்ளனர்.

இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம் நாம் சொந்தமாகத் தொழில்  தொடங்குவது தப்பிப் பிழைப்பதற்காகவே Survival. 

மிக மிகப் பெரும்பான்மையானோர் தங்கள் தொழிலை வளர்த்தெடுத்து அடுத்த தலைமுறையினரிடம் கொடுப்பதைப்பற்றி சிந்திப்பதேயில்லை. பிள்ளைகள் எப்போதும்போலவே டாக்குத்தர், இஞ்சினீயர், லோயர், எக்கவுண்டனாக்குவதுதான் (சீர்தனத்திற்காக 😂) ஒரே நோக்கம்.

ஊரில சீர்தனத்தையும் அரசாங்க பென்சனையும் நோக்கித்தானே படிச்சநாங்கள். இஞ்ச மட்டும் என்ன வாழுதாம் . 😂😂

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, Nathamuni said:

பொய் கணக்கு காட்டுவோர் எல்லோரும் நல்லா இருந்தால் பிரச்னை இல்லையே....

தவிர, நல்லா இருந்தால், மொட்டைப் பெட்டிசன்  போடவும் ஆள் இருக்குதே.  🤨

ஊரில அரச உத்தியோகம் பாத்து பென்சனெடுத்துப்போட்டு வ்ளிநாடுகளில சும்மாயிருக்கும் எம்மவர்களில் பலருக்கு மற்றவன் கஸ்ரப்பட்டு கொஞ்சம் நல்லா வாறத கண்ணிலேயும் காட்ட ஏலாது. அதுவும் வேற சாதிக்காறனாயிருந்தா அடியோட அழிக்கிறதுக்கு தலையால நிற்பினம்😡

(எல்லா பென்சனியரையும் குறிப்பிடவில்லை)

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, ஈழப்பிரியன் said:

அதுக்குத் தான் பாங்றொப்சி போறது.வேறு பெயரில் அதே ஆள் திறக்கும்.
சட்டமும் இருக்கு
அதில் ஓட்டையும் இருக்கு. 

பாங்றொப்சி என்பது சட்டரீதியானது. ஆனால் எம்மவர்களின் நோக்கம்தான் பிழையானது. 

பெயர் ஆரம்பத்தில் - Vithusan convenient store 

முதலாம்முறை பாங்றொப்ப்சியுடன் பெயர் Bithusaan என மாறும்

2ம் முறைவ் - Vithusaaan 

3ம் முறை - Vitusaaan என நீண்டுகொண்டே போகும். 

பெயர்ப் பலகையைப் "பார்த்தாலே பரவசம்" கண்டு பிடித்துவிடலாம். 😂😂

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, Kapithan said:

இரண்டு விடயங்கள் 

#1: சட்டரீதியான எதுக்குள்ளும் நோக்கம் பிழை என வாதாடமுடியாது. சட்டத்தில் உள்ள ஓட்டையை கண்டுபிடிப்பவனை 'மண்டைக்காய்' என்பார்கள்  

#2: எம்மவர்கள் மட்டும் அல்ல, சகல இனத்தவரும் செய்யும் விளையாட்டு இது, அரசுகளுக்கும் தெரியும். அதில், அவர்களுக்கும் வரி என்ற வருமானம் வருகின்றது 

Case closed 🙂 

Share this post

Link to post
Share on other sites
Just now, ampanai said:

ஐயா நீங்கள் அப்புக்காத்து சீசீ பொன்னம்பலத்தின் எத்தனையாம் தலைமுறை ?😜

(Always stand to the point 🤪)

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Kapithan said:

பாங்றொப்சி என்பது சட்டரீதியானது. ஆனால் எம்மவர்களின் நோக்கம்தான் பிழையானது. 

பெயர் ஆரம்பத்தில் - Vithusan convenient store 

முதலாம்முறை பாங்றொப்ப்சியுடன் பெயர் Bithusaan என மாறும்

2ம் முறைவ் - Vithusaaan 

3ம் முறை - Vitusaaan என நீண்டுகொண்டே போகும். 

பெயர்ப் பலகையைப் "பார்த்தாலே பரவசம்" கண்டு பிடித்துவிடலாம். 😂😂

திவால் அவ்வளவு இலகுவானதல்ல...

இருந்திருக்கலாம், ஒரு காலத்தில்.....

இன்றைய தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த நிலையில், நீஙகள் சொல்வது போல் மேற்கத்தைய நாடுகளில் இலகுவானதல்ல.

திவால் தனியாக செய்ய முடியாது.அதற்குரிய லைசன்ஸ் (சட்டபூர்வமான - highly regularised ) முகவர்கள் தேவை. ஒருவர் வேண்டுமென்றே மீண்டும், மீண்டும் செய்து, அதற்கு முகவர் துணை போனார் என தெரிந்தால், அவரது லைசன்ஸ் கான்சலாகி, சிறையும் செல்ல வேண்டும். 

ஒரு காலத்தில் மேற்கத்தைய நாடுகளில் இலகுவாக இருந்த நிலை இன்று இந்தியாவில் உள்ளது. இதற்கு அரசியல்வாதிகள் உதவியும் உண்டு. உதாரணம் விஜய் மல்லையா.

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, tulpen said:

மேற்கு நாடுகளில் வர்த்தகம் செய்யும் தமிழர்களில் பெரும்பாலனவர்கள் தமது தொழிலை பல குழறுபடிகளுடன் தான் நடத்துகின்றனர்.  அரசாங்கங்களுக்கும் நேர்மையாக நடப்பதில்லை. தமது   சொந்த வாடிக்கையாளர்களுக்கும்  நேர்மையாக நடப்பதில்லை.  தொழில் சார் நடைமுறைகள் சிறிதேனும் பின்பற்றுவதில்லை. வணிகம் தொடர்பான தொழிசார் திறமைகளை வளர்த்து கொள்ளவும் இல்லை.அதனால் தான் தமிழர்களால் வியாபாரத்தில் ஒரு அளவுக்கு மேல் செல்ல முடிவதில்லை. தாம் ஆரம்பித்த இடத்திலேயே பல வர்த்தகள் இன்றும் உள்ளார்கள்.  80 களில் வர்தகத்தை ஆரம்பித்த தமிழர்களில் இன்று விரல் விட்டு எண்ணும்படியான சிறு அளவினரே வர்த்தகத்தில் வெற்றி பெற்றுள்ளனர். மற்றயவர்கள் தமது வாழ் நாள் முழுவதும் சிறிய சில்லறை விற்பனை நிறுவனங்களை நடத்துதும் சிறிய வர்த்தகளாகவே இருக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். அதறகு முக்கிய காரணம் தமக்குள் நேர்மை என்ற விடயத்தில் மிக மிகப் பலவீனர்களாக இருக்கும் நம்மவர்கள் ஒருவரை ஒருவர் நம்ப முடியாத நிலையில் உள்ளார்கள். அதனால் ஒரு தனி வியாபாரத்துக்கு மேல் பங்கு வியாபாரமாகவோ கம்பனியாகவோ நிறுவனத்தை  கொண்டு  செல்ல முடியாது.  

தாம் செய்யும் வர்த்தகத்தை வணிகம் சார் தொழில் நடைமுறைகள், தொழில் திறமைகள் வாடிக்கையாளரை கவர்ந்திழுக்கும்  விற்பனை விருத்தி நடவடிக்கைகள் ,பொருட்களை நேர்த்தியுடன்  அழகாக வாடிக்கையாளரை கவரும் வித‍த்தில் அடுக்கி வைக்கும் முறை, என்பன மிகவும் பலவீனமாகவே  தமிழ் விற்பனை நிறுவனங்களில்  உள்ளது. வியாபார போட்டி என்பதில் விலைக்குறைப்பு என்ற நடைமுறை மட்டும் தான் இவர்களின் வியாபார யுக்தி. உயர் தரமான சேவையை வாடிக்கையாளருக்கு வழங்குவதும் வியாபார யுக்திதான் என்பதை இவர்கள் கணக்கெடுப்பதில்லை. இந்த  விலைக்குறைப்பு யுக்தியின் வேகம் தனக்கு இலாபம் வராமல் விட்டாலும் பரவாயில்லை போட்டி நிறுவனத்தை நட்டப்படுத்தினால் போதும் என்ற நிலை வரை கொண்டுவந்து விடும்.

உதாரணமாக தமிழரின் மீன் விற்பனையை நோக்கினால் இந்து சமுத்திரத்தில் பிடிக்கும் மீன் ஐரோப்பா வரும் போது அதற்கு ஒரு  விசேட மதிப்பு இருக்கும். அந்த மதிப்பை பொறுத்தே அதன் விலையும் இருக்கும். அம்மீனை சிறந்த professenal  Logistic system ஊடாக பாதுகாத்து  சுத்தபடுத்தி விற்பனை செய்யும் போது பல வெளி நாட்டு வாடிக்கையாளரை கவந்து இழுத்து விற்பனையை பெருக்கி விலைக்குறைப்பை அமுல் செய்ய முடியும் ஆனால் அதை செய்யாமல் கடைக்குள் ஒரு நிமிடம் சென்று வந்தாலே போட்டிருக்கும் உடுப்பு முழுவதும் மீன் நாற்றத்துடன் பொது போக்குவரத்தை கூட சங்கோஜத்துடம் பாவிக்க வேண்டிய நிலையிலேயே மீன் விற்பனை நடைபெறும்.  தமிழர்களுக்குள் மட்டும் போட்டிக்காக இறக்குமதி விலையிலே மீன் விற்பனை செய்யபடும். இதனால் வர்த்தகள் பெரிய இலாபமும் அடைவதில்லை என்பதே பல வணிகர்களின் Accounting  ஐ ஆய்வு செய்தால் தெரியும் விடயம். 

 பிரான்சில் உள்ள புத்தகங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு சென்றேன். அந்நிறுவனங்கள்  கடந்த 3 தசாப்தங்களாக தொழிலை செய்துவருபவை. அங்குள்ள புத்தகங்கள் எதுவும் தொழில் சார் ரீதியில் நேர்த்தியாக அடுக்கி வைக்கபட்டிருக்கவில்லை. சஞ்சிகைகள், கதை புத்தகங்கள், வரலாறு, புவியியல்  என்று எல்லா புத்தகங்களும் அவர்களின் மனம்போன போக்கில் அலுமாரியில் அடுக்கி வைக்கபட்டிருந்தன. தேடி எடுப்பதில் பெரும் சிரம‍ம. பொதுவாக புத்தகங்கள் விற்பனை செய்யும்  ஐரோப்பிய நிறுவனம் ஒன்றுக்கு சென்றால் என்றால் அங்கு  Catogory  பிராகாரம் நேர்த்தியாக அடுக்கி வைக்கபடிருப்பட்டிருக்கும். புத்தகத்தின் பெயரை கூறினால் போதும் அப்புத்தகம் அங்கு உள்ளதா இல்லையா என்ற விபரம் கிடைத்து விடும். நிறுவன விற்பனயாளரிடம் தம்மிடம் இருக்கும் புத்தகங்கள் தொடர்பான தரவுகள் நேர்த்தியாக  இருக்கும். ஆனால் அந்த தமிழ் புத்தக விற்பனை நிலையத்தில்   நின்ற விற்பனையாளரிடம் புத்தகங்கள் தொடர்பான எந்த விபரத்தையும் பெற்று கொள்ள முடியவில்லை. ஏதோ இதற்குள் தேடி தேடிப்பாருங்கள் என்ற பதிலே கிடைத்த‍து. ஏதோ பழைய பொருட்களை விற்கும் நிறுவனம் போல் வந்த புத்தகங்களை தெருவில் போட்டு விற்கும்  விற்பனை நிலையமாகவே உள்ளது. இத்தனைக்கும் மூன்று தசாப்த அனுபவம் உள்ள விற்பனை நிலையம் அது. 

இதே நிலையில் தான் மற்றைய மளிகை ,பலசரக்கு , ஆடை, நகை விற்பனை நிலையங்களும்  உள்ளன. எம்மால் எம்மிடையே சிறிய அளவிலேயே நேர்மையுடனும் தொழில் சார் முறையிலும் வணிகத்தை செய்ய முடியாத போது  வணிகத்தில்  பெரிய சர்வ தேச நிறுவனங்களை கைப்பற்றி ஆளும் நினைப்பு என்பது வெறும் பகல் கனவும் வெற்று வீரமும் மட்டும் தான். 

அறிவாலயமா?...அங்க மட்டும் இல்ல ...இலங்கையிலும் கூட அப்படித் தான் ....புத்தகங்களை சும்மா குவித்து வைத்துள்ளனர் ...தவிர ,நுல்களைப் பற்றிய அடிப்படை அறிவு கூட பெரும்பான்மையானோருக்கு இல்லை 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

திவால் அவ்வளவு இலகுவானதல்ல...

இருந்திருக்கலாம், ஒரு காலத்தில்.....

இன்றைய தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த நிலையில், நீஙகள் சொல்வது போல் மேற்கத்தைய நாடுகளில் இலகுவானதல்ல.

திவால் தனியாக செய்ய முடியாது.அதற்குரிய லைசன்ஸ் (சட்டபூர்வமான - highly regularised ) முகவர்கள் தேவை. ஒருவர் வேண்டுமென்றே மீண்டும், மீண்டும் செய்து, அதற்கு முகவர் துணை போனார் என தெரிந்தால், அவரது லைசன்ஸ் கான்சலாகி, சிறையும் செல்ல வேண்டும். 

ஒரு காலத்தில் மேற்கத்தைய நாடுகளில் இலகுவாக இருந்த நிலை இன்று இந்தியாவில் உள்ளது. இதற்கு அரசியல்வாதிகள் உதவியும் உண்டு. உதாரணம் விஜய் மல்லையா.

நீங்கள் கூறுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டு.

Bankruptcy and Insolvency செய்வதற்குரிய  Licences உடையோர் தமது வாடிக்கையாளர்களால் வழங்கப்படும் தரவுகளை வைத்துத்தான் Filing செய்வர். இவர்களை Fraud க்கு அனுசரணையாக இருந்தார்கள் என நடைமுறையில் நிரூபிப்பது கடினம். ஆனால் மிகவும் காத்திரமான நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர் Fraud ஏமாற்று செய்கின்றனர் என அடையாளம் காணுமிடத்து அவர்களுக்கு தமது சேவையை வழங்காது விடலாம். 

ஆனால் மிகவும் அதிக சிறு நிறுவனங்கள் பெரிதளவு இவற்றைக் கவனத்தில் கொள்வதில்லை என்பது கசப்பான உண்மை.

8 minutes ago, ரதி said:

அறிவாலயமா?...அங்க மட்டும் இல்ல ...இலங்கையிலும் கூட அப்படித் தான் ....புத்தகங்களை சும்மா குவித்து வைத்துள்ளனர் ...தவிர ,நுல்களைப் பற்றிய அடிப்படை அறிவு கூட பெரும்பான்மையானோருக்கு இல்லை 

புத்தகவியல் துறை அல்லது நூலகவியல் (?) ஒன்றும் சீர்தனம் அள்ளித்தரும் துறையல்லவே 😀 நாங்கள் படிப்பதற்கு. ☹️

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, ரதி said:

அறிவாலயமா?...அங்க மட்டும் இல்ல ...இலங்கையிலும் கூட அப்படித் தான் ....புத்தகங்களை சும்மா குவித்து வைத்துள்ளனர் ...தவிர ,நுல்களைப் பற்றிய அடிப்படை அறிவு கூட பெரும்பான்மையானோருக்கு இல்லை 

அதே தான். அதை விட இன்னுமொன்றும் உண்டு. அது அதை விட அனுபவஸ்தர்கள். ஆனால் அதுவும் தமிழ் முறைபடி தான் புத்தகங்களை அலங்கோலமாக வைத்திருந்தார்கள். 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.