Jump to content

கொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள்


Recommended Posts

கொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள்

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ  

 

இன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத, பொது எதிரியோடு போரிடும் யுத்தம் போன்றது.   

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் சவால்களும் பல்பரிமாணம் உடையவை. எந்த உலக ஒழுங்கு, உலகைக் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக ஆட்சிசெய்தோ அது, இன்று அவலப்பட்டு நிற்கின்றது. அது அமைத்த விதிகள், நெறிமுறைகள் குறித்தெல்லாம் அக்கறை கொள்ள யாருக்கும் நேரமில்லை.  

இன்று ஏதாவதொரு வழியில், தீர்வுகளை நோக்கியே எல்லா அரசாங்கங்களும் ஓடுகின்றன. உயிரிழப்புகளைத் தவிர்ப்பதும் நோய்த்தொற்றைக் குறைப்பதுமே பிரதான நோக்காக உள்ளன.   

பொருளாதாரத்தைக் காப்பாற்றுங்கள், நடைமுறையில் உள்ள விதிகளை, உலக ஒழுங்கைக் காப்பாற்றுங்கள் போன்ற கோரிக்கைகள் எல்லாம், செவிடன் காதில் ஊதிய சங்காகப் போயுள்ளன.  

கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வுகளுக்கான வழி, பல வகைகளில் சோசலிசம் நோக்கிய திருப்பமாகவே இருக்கிறது. இதை ஏற்றுக்கொள்வதற்கு, முதலாளித்துவத்தின் செல்வச்செருக்கில் ஊறித் திளைத்தவர்கள், தயாராக இல்லை. அவர்கள், சோசலிச வன்மத்தை, ஊடகங்களிலும் சமூக ஊடகப் பொதுவெளிகளிலும் கக்குகிறார்கள். எனவே, இது குறித்துக் கொஞ்சம் சொல்லியாக வேண்டியுள்ளது.   

பாஞ்சாலியின் அழைப்புக்குக் கிருஷ்ணன் வந்தது போல, 2009இல் அமெரிக்கா வரும் என்று, எழுதியும் சொல்லியும் அவலத்துக்குள் தள்ளியோர் நிறைந்த சமூகத்திலேயே, நாம் வாழ்கிறோம் என்பதைத் துயரத்துடனும் எரிச்சலுடனும் நினைவூட்ட வேண்டியுள்ளது. அவலமும் நிச்சயமின்மையும் அச்சமும் நிலைகொண்டுள்ள இந்தக் காலத்தில், எமக்குத் தேவையானது நம்பிக்கையூட்டும் கதைகள் மட்டுமேயாகும்.   

இத்தாலிக்கு உதவ வந்த கியூபா  

இந்த நோய்த்தொற்றால், அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள நாடு இத்தாலி ஆகும். இந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கியவுடனேயே, ஐரோப்பிய ஒன்றியத்திடமும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிடமும் உதவிகளை, இத்தாலி கேட்டது. ஆனால், யாருமே உதவ முன்வரவில்லை. 

image_1b327433c9.jpg

ஏனைய நாடுகள், ஓரளவு உதவிகளை இத்தாலிக்குச் செய்திருந்தால், இத்தாலியில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்க முடியும் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

ஏராளமான மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும், இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், மருத்துவப் பணியாளர்களும் மருத்துவர்களும் இல்லாமல், இத்தாலி மிக மோசமான நிலையில் இருக்கிறது.   

இந்நிலையிலேயே, மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியின் லொம்பாடி நகருக்கு, 50க்கும் மேற்பட்ட கியூப மருத்துவர்களும் ஏனைய மருத்துவப் பணியாளர்களும்,  இந்தவாரம் வருகை தந்துள்ளனர். அவர்களை, விமானநிலையத்தில் எழுந்து நின்று, இத்தாலியர்கள் வரவேற்றனர். 

சீனாவுக்கு அடுத்தபடியாக, இத்தாலிக்குக் கைகொடுத்துள்ள நாடு கியூபா ஆகும். இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ள மருத்துவக் குழுவானது, கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடுவதற்காக, கியூபாவிலிருந்து அனுப்பப்பட்ட, ஆறாவது மருத்துவக் குழுவாகும். 

ஏற்கெனவே வெனிசுவேலா, நிக்கரகுவா, ஜெமேக்கா, சுரினாம், கிரனடா ஆகிய நாடுகளுக்கு, கியூப மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.   

கியூப மருத்துவர்களை, இத்தாலி வரவேற்று ஏற்றுக் கொண்டுள்ளமை, பலவழிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் முதன்மையான முதலாளித்துவ நாடுகளில் ஒன்று, கரீபியக் குட்டி நாடொன்றிடம் உதவியை நாடி நின்றமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியமையாகும். 

அதுவும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு, கடந்த 60 ஆண்டுகளாக உட்பட்ட ஒரு நாடு, இன்று உதவிக்கரம் நீட்டுகிறது. அமெரிக்காவால் முடியாததை, ஐரோப்பாவால் முடியாததை, கியூபா செய்து காட்டுகிறது.  

கியூபாவின் மனிதாபிமானமும் மருத்துவமும்  

மார்ச் மாதம் 12ஆம் திகதி, பிரித்தானியாவுக்குச் சொந்தமான சொகுசுக் கப்பல் ஒன்றில் இருந்த 50 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து, குறித்த கப்பலை ஒரு நாட்டின் துறைமுகத்தில் நிறுத்தி, பயணிகளை மீள அனுப்ப முடிவு செய்யப்பட்டது. 

கப்பல் இருந்த இடத்துக்கு அண்மையில் இருந்த நாடு பஹாமாஸ். எனவே, அங்கு நங்கூரமிட அனுமதி கோரப்பட்டது. பிரித்தானியர்களைப் பிரதானமாகக் கொண்ட பிரித்தானியக் கப்பலை, பிரித்தானிய முடியின் கீழ் உள்ள நாடான பஹாமாஸ் அனுமதிக்க மறுத்துவிட்டது. 

பிரித்தானிய வெளியுறவுத் துறையின் கடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. பிரித்தானிய அரசியின் ஆட்சியின் கீழ் உள்ள பஹாமாஸின் நிலைப்பாடு, பிரித்தானியாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 1,063 பேருடன் (682 பயணிகளும் 381 பணியாளர்களும்) செல்வதற்கு இடமின்றி, கடலில் இக்கப்பல் தத்தளித்துக் கொண்டிருந்தது.   

இந்நிலையிலேயே, மார்ச் 18ஆம் திகதி, கியூபா, இக்கப்பலைத் தனது துறைமுகத்தில் நங்கூரமிடவும், பயணிகளை நாட்டுக்குள் ஏற்கவும் உடன்பட்டது. இதையடுத்து, கப்பல் நங்கூரமிடப்பட்ட போது பயணிகள், ‘நன்றி கியூபா! உங்களை, நாங்கள் விரும்புகிறோம்’ என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர். பயணிகள் இறக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர், பிரித்தானியாவுக்கு விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். 

image_7371613de5.jpg

இந்த அனுபவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பயணி ஒருவர்; “எங்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. கையறு நிலையின் உச்சத்தை, நாம் உணர்ந்தோம். இங்கேயே நோய்த்தொற்றுக்கு உள்ளாகிப் பலியாகிவிடுவோமோ என்று அஞ்சினோம். கியூபா நீட்டிய உதவிக்கரமே, எங்களை இன்று உயிருடன் வைத்துள்ளது. கியூப மக்கள், வெறுப்புடன் எங்களை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். மாறாக, அன்புடன் எங்களை வரவேற்றார்கள். ஓர் ஏழ்மை நாடு, தங்கள் இதயத்தை எங்களுக்காகத் திறந்ததை, மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

பிரேஸில் நாட்டில், வறுமைக்கு உட்பட்ட பகுதிகளில், மனிதாபிமான மருத்துவத்தின் ஒரு பகுதியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்த 8,000 கியூப மருத்துவர்களை, கடந்தாண்டு பிரேஸிலில் பதவிக்கு வந்த புதிய வலதுசாரி ஜனாதிபதி பொல்சனாரோ, திருப்பி அனுப்பினார். 

அதேபோல, பொலிவியாவில் சதியின் மூலம் கடந்தாண்டு, ஜனாதிபதி ஈவோ மொராலஸ் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அங்கு பணியாற்றிய 700 கியூப மருத்துவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.   

இன்று, பிரேஸில் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. எந்த மருத்துவர்களை, பிரேஸில் ஜனாதிபதி திருப்பி அனுப்பினாரோ, அவர்களை மீளவும் பிரேஸிலுக்கு வந்து, அப்பாவி மக்களுக்காகப் பணியாற்றும்படி, கடந்த வாரம் வேண்டிக் கொண்டார்.   

இப்போதைய கியூபாவின் இன்னொரு பேசுபொருள் Interferon Alpha 2B என்ற கியூப மருந்தாகும். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு, மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், குறித்த மருந்தானது சீனாவில் தொற்றுக்குள்ளான நோயாளிகளைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட மருந்துகளில் ஒன்றாகும். சீனாவின் தேசிய உடல்நல ஆணைக்குழுவால் (Chinese National Heath Commission) பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்துகளாக இருக்கக்கூடும் என, உலக சுகாதார நிறுவனம் பரிசீலிக்கும் நான்கு மருந்துகளில் இதுவும் ஒன்றாகும்.   

இது, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான, முற்றும் முழுமையான மருந்து அல்ல! இன்றுவரை, அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த மருந்து வினைத்திறனுடன் செயலாற்றுகிறது என்பதை, உலக சுகாதார நிறுவனம் ஒத்துக் கொள்கிறது. அதனாலேயே இம்மருந்தை அது பரிசீலித்துள்ளது.   

கொரோனா வைரஸுக்கான மருந்து உற்பத்தி என்பது, பலகோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியுள்ள ஒரு வியாபாரம் ஆகும். மருந்து உற்பத்திக் கம்பெனிகள், தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று, இதற்காகவே முண்டியடிக்கின்றன. 

கடந்தவாரம், இதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக, ஜேர்மன் நிறுவனம் அறிவித்ததையடுத்து, அந்த மருந்தைப் பெருந்தொகை பணத்துக்கு ‘அமெரிக்காவுக்கு மட்டும்’ என, பிரத்தியேகமாக விற்பனை செய்வதற்கு, அமெரிக்க ஜனாதிபதி கோரிய செய்தி வெளியானது. இது, ஜேர்மனியில் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்தது.   

கியூபாவின் மருத்துவ உதவிகள் புதிதல்ல. குறிப்பாக, 2014ஆம் ஆண்டு ஆபிரிக்க நாடுகள், ‘எபோலா’ வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியபோது, கியூபா தனது மருத்துவப் பணியாளர்களை அனுப்பி, ஆபிரிக்காவில் இந்த வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தியது. கியூபாவின் இந்தச் செயல், ‘எபோலா’ வைரஸ் உலகளாவிய ரீதியில் பரவி, பெரும் தாக்கமாக உருமாறாமல் காப்பாற்றியது. இதற்காக, கியூபாவுக்கு ஐ.நா நன்றி சொன்னது.   

அமெரிக்காவின் தீவிர வலதுசாரி சோசலிச எதிர்ப்பு இதழான, ‘ரைம்’ - 2014 நவம்பர் மாத இதழில், ‘Why Cuba Is So Good at Fighting Ebola’ என்ற தலைப்பில், கட்டுரை ஒன்றைப் பிரசுரித்திருந்தது. அக்கட்டுரை இவ்வாறு நிறைவு பெறுகிறது:   

‘கியூபாவின் முன்மாதிரி, சர்வதேச சமூகத்துக்கு வலுவான செய்தி ஒன்றைச் சொல்கிறது. மிக எளிமையான மக்களே, உலகளாவிய மக்கள் நலனுக்கு, வினைத்திறனுடன் கூடியதும் நின்றுநிலைக்கக் கூடியதுமான பங்களிப்பைச் செய்கிறார்கள். ஏனையோர் நோய்கள், தொற்றுகள் வரும்போது, தயாரில்லாமல் திணறிப் போகிறார்கள்.

image_7e63ad06eb.jpg

உலகளாவிய மருத்துவமும் திட்டமிடலும் முன்நோக்கிய பார்வை கொண்டதாகவும், மருத்துவம் சுகாதார அமைப்புகளை வலுவாக்கியதாக இருத்தல் வேண்டும் என்பதாக, கியூபா சொல்லும் பாடம் அமைந்துள்ளது. பேரிடர்கள் வரும்போது, விழித்து எழுவதாக அமையக்கூடாது’ என்பதாகும்.   

கியூபா, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்குப் அப்பாற்பட்ட நாடல்ல. ஆனால், ஏனைய உலகநாடுகள் ஆபத்தில் இருக்கும் போது, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யத் தயங்கவில்லை. இன்று உலகளாவிய ரீதியில், 90,000 கியூப மருத்துவர்கள் உலகின் 107 நாடுகளில் பணியாற்றுகிறார்கள். அவர்கள், உலகின் மிக எளிய மக்களின் மருத்துவ உடல்நலன் சார் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள். 

கியூப மருத்துவர்களினதும் மருத்துவப் பணியாளர்களினதும் உதவிகளை வேண்டி நிற்பது, உலகின் எளிய உழைக்கும் மக்களேயாவர். விரைவுணவுகளைத் தின்று, செரித்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் அயோக்கியர்களுக்கு, இதன் பெறுமதி விளங்காது. நாளை, அவர்களது உயிரைக் காக்கவும் கூட, ஒரு கியூப மருத்துவரோ, கியூப மருந்தோ தேவைப்பட்டால், அதை முதலில் பெற்று, உயிரைக் காக்க முண்டியடிப்பதும் இந்த அயோக்கியர்களே ஆவர்.

1967ஆம் ஆண்டு, பொலிவியாவில், சேகுவேராவைச் சுட்டுக் கொன்ற மரியோ தெரோன், கண்பார்வை இழந்து துன்பப்படுகையில், 2007ஆம் ஆண்டு, பொலிவியாவில் தங்களது கண் சிகிக்சை முகாமில், தெரோனுக்கு சத்திரசிகிக்சை செய்து, அவருக்குக் கண்பார்வையை மீள அளித்தவர்கள் கியூப மருத்துவர்கள் என்பதும் நினைவு கொள்ளத்தக்கது.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொவிட்-19-கியூபா-கைகொடுக்கும்-பொழுதுகள்/91-247487

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வுகளுக்கான வழி, பல வகைகளில் சோசலிசம் நோக்கிய திருப்பமாகவே இருக்கிறது. இதை ஏற்றுக்கொள்வதற்கு, முதலாளித்துவத்தின் செல்வச்செருக்கில் ஊறித் திளைத்தவர்கள், தயாராக இல்லை. அவர்கள், சோசலிச வன்மத்தை, ஊடகங்களிலும் சமூக ஊடகப் பொதுவெளிகளிலும் கக்குகிறார்கள். எனவே, இது குறித்துக் கொஞ்சம் சொல்லியாக வேண்டியுள்ளது.   

ஆனாலும், கியூபா நாட்டில் உள்ள சட்டங்களை தளர்த்தினால், பெரும்பாலான மக்கள் அமேரிக்கா ஓடி விடுவார்கள்.  

கியூபாவின் மருத்துவ துறை பலமான இடத்தில் உள்ளது என்பது மறுக்க முடியாது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ampanai said:

ஆனாலும், கியூபா நாட்டில் உள்ள சட்டங்களை தளர்த்தினால், பெரும்பாலான மக்கள் அமேரிக்கா ஓடி விடுவார்கள்.  

கியூபாவின் மருத்துவ துறை பலமான இடத்தில் உள்ளது என்பது மறுக்க முடியாது.  

எங்களைப்போன்ற கோழைகள் எல்லா இனத்திலும் உள்ளனர். ஆனால் அது கியூபாவில் ஒப்பீட்டளவில் குறைவு.😀

Link to comment
Share on other sites

2 minutes ago, Kapithan said:

எங்களைப்போன்ற கோழைகள் எல்லா இனத்திலும் உள்ளனர். ஆனால் அது கியூபாவில் ஒப்பீட்டளவில் குறைவு.😀

இல்லை என எண்ணுகிறேன். 

கியூபா சனத்தொகை 11.3 மில்லியன்கள்.
அமெரிக்காவில் வாழும் க்யூபர்கள் 1.5 மில்லியன்கள்.

ஒவ்வொரு 12 ஆவது கியூபரும் வாழும் நாடு அமேரிக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ampanai said:

இல்லை என எண்ணுகிறேன். 

கியூபா சனத்தொகை 11.3 மில்லியன்கள்.
அமெரிக்காவில் வாழும் க்யூபர்கள் 1.5 மில்லியன்கள்.

ஒவ்வொரு 12 ஆவது கியூபரும் வாழும் நாடு அமேரிக்கா 

கோழைகள் கியூபாவில் அதிகமாக உள்ளனர் என்கிறீர்கள் 😀😂

(இவர்களில்  க்கியூபப் புரட்சியின் பின்னர் நாடு கடந்தவர்கள் எத்தனை பேர் ?)

Link to comment
Share on other sites

6 minutes ago, Kapithan said:

கோழைகள் கியூபாவில் அதிகமாக உள்ளனர் என்கிறீர்கள் 😀😂

(இவர்களில்  க்கியூபப் புரட்சியின் பின்னர் நாடு கடந்தவர்கள் எத்தனை பேர் ?)

சிந்தாந்த அடிசப்படைக்கு மட்டுமே சோசலிசம் சரிவரும். 

நடைமுறையில், மக்கள் அந்த கொள்கையை எங்குமே விரும்பவில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

சிந்தாந்த அடிசப்படைக்கு மட்டுமே சோசலிசம் சரிவரும். 

நடைமுறையில், மக்கள் அந்த கொள்கையை எங்குமே விரும்பவில்லை  

மேலெழுந்தவாரியாக கதைக்கப்படாது. 😀சரியான ஆதாரங்கள் தர முடியுமா  உங்கள் வாதத்திற்கு ?

(தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கு சோசலிசம் பிடிக்கும் / பிடிக்கவில்லை என்பது இங்கே விடயமல்ல)

Link to comment
Share on other sites

4 minutes ago, Kapithan said:

மேலெழுந்தவாரியாக கதைக்கப்படாது. 😀சரியான ஆதாரங்கள் தர முடியுமா  உங்கள் வாதத்திற்கு ?

(தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கு சோசலிசம் பிடிக்கும் / பிடிக்கவில்லை என்பது இங்கே விடயமல்ல)

உலகத்தில் 192 நாடுகள் உள்ளன. இவற்றில்  எத்தனை நாடுகள் தங்களை சோஷலிச/கம்னியூசிய இல்லை இலங்கை போன்ற சோஷலிச குடியரசுகள் என்பதே ஆதாரம். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்யூனிசம் என்பது பயபக்தியுடன் வாழும் ஆன்மீக வாழ்கையை போன்றது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

உலகத்தில் 192 நாடுகள் உள்ளன. இவற்றில்  எத்தனை நாடுகள் தங்களை சோஷலிச/கம்னியூசிய இல்லை இலங்கை போன்ற சோஷலிச குடியரசுகள் என்பதே ஆதாரம். 
 

ஐயா அம்பனை,

நானும் பிள்ளைகளும்  புலால் உணவுவகைகளை விரும்பியுண்கின்றோம்  என்பதற்காக என் மனைவி விரும்பியுண்ணும் சைவ உணவுகள் தரமற்றவை என்றாகிவிடுமா ? 🤔

(உண்மையாக , உங்கள் ஆதாரத்திற்கு என்ன     பதில்  சொல்வதென்றே தெரியவில்லை. அவ்வளவு பலமான ஆதாரம்)😜

 

Link to comment
Share on other sites

3 minutes ago, Kapithan said:

ஐயா அம்பனை,

நானும் பிள்ளைகளும்  புலால் உணவுவகைகளை விரும்பியுண்கின்றோம்  என்பதற்காக என் மனைவி விரும்பியுண்ணும் சைவ உணவுகள் தரமற்றவை என்றாகிவிடுமா ? 🤔

(உண்மையாக , உங்கள் ஆதாரத்திற்கு என்ன     பதில்  சொல்வதென்றே தெரியவில்லை. அவ்வளவு பலமான ஆதாரம்)😜

 

சைவ உணவுகளை கிழமைக்கு ஒருதடவையும் சில விசேட தினங்களிலும் உண்ணும் சைவர்கள் தான் அதிகம். அதுபோலத்தான் சோஷலிசமும்  😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

சைவ உணவுகளை கிழமைக்கு ஒருதடவையும் சில விசேட தினங்களிலும் உண்ணும் சைவர்கள் தான் அதிகம். அதுபோலத்தான் சோஷலிசமும்  😜

 

அதாகப்பட்டது கியூபாவோரு சோசலிச நாடு. அங்குள்ள மக்கள் தப்பியோடும் மன நிலையில் உள்ளனர். எனவே கியூபாவின் உதவி இத்தாலிக்குத் தேவையில்லை என்கிறீர்களா 😂😂😂😂

இத்தாலிக்கு தற்போதுவரை உதவிவருவது இரஸ்யாவும் கியூபாவும் சீனாவும்  மட்டுமே. ஐரோப்பிய யூனியனோ முதலாளித்துவ நாடுகளோ இல்லை என்பது உங்களுக்கு சீரணிக்க முடியாத உண்மையாக இருக்கக்கூடாது  என்பதுதான் எனது இன்றைய பிரார்த்தனை 😜😜😜

Link to comment
Share on other sites

4 minutes ago, Kapithan said:

இத்தாலிக்கு தற்போதுவரை உதவிவருவது இரஸ்யாவும் கியூபாவும் சீனாவும்  மட்டுமே.

தவறானது, வெறும் பல நாடுகளும், மேற்குலக நாடுகளும் உதவி வருகின்றன.

4 minutes ago, Kapithan said:

ஐரோப்பிய யூனியனோ முதலாளித்துவ நாடுகளோ இல்லை என்பது உங்களுக்கு சீரணிக்க முடியாத உண்மையாக இருக்கக்கூடாது  என்பதுதான் எனது இன்றைய பிரார்த்தனை

அமெரிக்க நாடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பாரிய நிதி உதவி அளித்துள்ளது. 

Canadians helping in the centre of Italy's COVID-19 storm

https://calgaryherald.com/opinion/corbella-canadians-helping-in-the-centre-of-italys-covid-19-storm/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ampanai said:

தவறானது, வெறும் பல நாடுகளும், மேற்குலக நாடுகளும் உதவி வருகின்றன.

அமெரிக்க நாடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பாரிய நிதி உதவி அளித்துள்ளது. 

Canadians helping in the centre of Italy's COVID-19 storm

https://calgaryherald.com/opinion/corbella-canadians-helping-in-the-centre-of-italys-covid-19-storm/

கனேடிய அரசு உதவியதாக அதில் குறிப்பிடப்படவில்லை. மற்றது, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு  உங்களுக்குத் தெரியாதா அம்பனை.

அதுசரி,  சோசலிச கியூபவின் உதவி வெண்டுமா இல்லையா ? முதலில்  அதனை தெளிவாக கூறுங்கள் அம்பனை 😂

Link to comment
Share on other sites

3 minutes ago, Kapithan said:

கனேடிய அரசு உதவியதாக அதில் குறிப்பிடப்படவில்லை. மற்றது, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு  உங்களுக்குத் தெரியாதா அம்பனை.

அதுசரி,  சோசலிச கியூபவின் உதவி வெண்டுமா இல்லையா ? முதலில்  அதனை தெளிவாக கூறுங்கள் அம்பனை 😂

மனித உயிர்களை காப்பதற்கு வைத்தியர்கள் யாரும் உதவலாம். அது  யாராக இருந்தால் என்ன.

ஆம், ஏழை நாடாக இருக்கும் கியூப நாடு இந்த உதவி வழங்குவதில் முன்னிலையில் உள்ள ஒரு நல்ல நாடு என்பதில் 100 வீதம் உடன்படுகின்றேன். 

Link to comment
Share on other sites

21 minutes ago, Kapithan said:

கனேடிய அரசு உதவியதாக அதில் குறிப்பிடப்படவில்லை. மற்றது, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு  உங்களுக்குத் தெரியாதா அம்பனை.

அதுசரி,  சோசலிச கியூபவின் உதவி வெண்டுமா இல்லையா ? முதலில்  அதனை தெளிவாக கூறுங்கள் அம்பனை 😂

கனேடியர்கள் உதவுவதற்ககு தமது அரசை கேட்கவேண்டியது இல்லை - மக்களுக்கு உரிமை உள்ளது 

கியூபாவில் உள்ளவர்கள் அரசை கேட்டுத்தான் உதவ முடியும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ampanai said:

கனேடியர்கள் உதவுவதற்ககு தமது அரசை கேட்கவேண்டியது இல்லை - மக்களுக்கு உரிமை உள்ளது 

கியூபாவில் உள்ளவர்கள் அரசை கேட்டுத்தான் உதவ முடியும் !

அதாவது சோசலிசம் மனிதத்தன்மைய்ற்றது என்கிறீர்கள் ?😂

Link to comment
Share on other sites

2 minutes ago, Kapithan said:

அதாவது சோசலிசம் மனிதத்தன்மைய்ற்றது என்கிறீர்கள் ?😂

இல்லை, அவ்வாறு சொல்லவில்லை.  வேறு வேறான சட்டங்கள். 

அதில் மக்கள் விரும்புவது - தனி மனித சுதந்திரத்தை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

மனித உயிர்களை காப்பதற்கு வைத்தியர்கள் யாரும் உதவலாம். அது  யாராக இருந்தால் என்ன.

ஆம், ஏழை நாடாக இருக்கும் கியூப நாடு இந்த உதவி வழங்குவதில் முன்னிலையில் உள்ள ஒரு நல்ல நாடு என்பதில் 100 வீதம் உடன்படுகின்றேன்

தாய் பகை கன்று உறவோ ?😂

Link to comment
Share on other sites

5 minutes ago, Kapithan said:

தாய் பகை கன்று உறவோ ?😂

வைத்தியர்கள், தாய்-மகன்-மகள்; கணவன்-மனைவி ; இனம்-பால் .... இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டவர்கள் 

அரைக்கடவுள்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ampanai said:

இல்லை, அவ்வாறு சொல்லவில்லை.  வேறு வேறான சட்டங்கள். 

அதில் மக்கள் விரும்புவது - தனி மனித சுதந்திரத்தை. 

எவ்வித கட்டுப்பாடுமில்லாத சுதந்திரம் வேண்டுமென்கிறீர்கள் 😜

(அதுசரி சோசலிச கியூபாவில் தனிமனித சுதந்திரமில்லையென்று யார் சொன்னது ?)🤔

எனக்கு தனிமனித சுதந்திரத்தைவிட நாட்டின் சுதந்திரமும், வளங்கள் சமமாக பகிரப்படவேண்டும் என்பதும்,  தனி மனித ஒழுக்கமும் முக்கியம். 

நீங்கள் எப்படி ?😉

1 minute ago, ampanai said:

வைத்தியர்கள், தாய்-மகன்-மகள்; கணவன்-மனைவி ; இனம்-பால் .... இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டவர்கள் 

அரைக்கடவுள்கள் !

தாய் பகை குட்டி உறவோ 😀

Link to comment
Share on other sites

2 minutes ago, Kapithan said:

எவ்வித கட்டுப்பாடுமில்லாத சுதந்திரம் வேண்டுமென்கிறீர்கள் 😜

(அதுசரி சோசலிச கியூபாவில் தனிமனித சுதந்திரமில்லையென்று யார் சொன்னது ?

எல்லை கட்டுப்பாடுகளை நீக்கினால் தெரியும் 

3 minutes ago, Kapithan said:

எனக்கு தனிமனித சுதந்திரத்தைவிட நாட்டின் சுதந்திரமும், வளங்கள் சமமாக பகிரப்படவேண்டும் என்பதும்,  தனி மனித ஒழுக்கமும் முக்கியம். 

நீங்கள் எப்படி ?😉

நாடு எவ்வாறோ மக்கள் அவ்வாறு 🙂 

4 minutes ago, Kapithan said:

தாய் பகை குட்டி உறவோ

அதுக்கும் மேல் 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பனைக்குக் கொரோணா வந்து அவரை ஒரு கியூப மருத்துவர் பரிசோதிச்சால் வேண்டாம் எனச்சொல்லிவிடுவார் ஏன் எனில் சோசலிசவாதிகளை ஏற்றுக்கொள்வதில்லை ஆகவே சோசலிச நாடான கியூபாவின் அரச செலவில் படித்த கியூப மருத்துவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார் அவரது பொண்டாட்டியின் தாலி அறுந்துபோனாலும். 

இவருக்கு விளங்கவில்லை சோசலிசம் என்பது என்னவெனில் சுயநலமற்ற சர்வாதிகாரம் என. இப்போது சீனா நிலையெடுத்திருப்பது இந்த அத்திவாரத்தில்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் தோழர் அம்பனை அவர்களே. 

ஜனநாயகம் அது இது எனப்பேசினால் வேலைக்கு ஆகாது தியன்னமன் சதுக்கத்தின் படுகொலைகளை இப்போதும் எண்பது விகிதமான சீனர்கள் அறியவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

1) எல்லை கட்டுப்பாடுகளை நீக்கினால் தெரியும் 

2) நாடு எவ்வாறோ மக்கள் அவ்வாறு 🙂 

3) அதுக்கும் மேல் 🙂 

1) உங்கள் விருப்பத்தை நான் ஏன் கெடுப்பான் (கொசுறு செய்தி: அமெரிக்கா தனது படைகளை கனேடிய எல்லையில் நிறுத்தும் திட்டத்தினுடன் உள்ளது😀)

2) அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்கிறீர்கள் (நீங்கள் டொனால்ட் றம்மின் அரச ஆளுகயின் கீழ் இல்லைத்தானே. அப்படியென்றால் யாழ் களம் தப்பித்தது😂)

3) உண்மையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

Link to comment
Share on other sites

8 minutes ago, Elugnajiru said:

அம்பனைக்குக் கொரோணா வந்து அவரை ஒரு கியூப மருத்துவர் பரிசோதிச்சால் வேண்டாம் எனச்சொல்லிவிடுவார் ஏன் எனில் சோசலிசவாதிகளை ஏற்றுக்கொள்வதில்லை ஆகவே சோசலிச நாடான கியூபாவின் அரச செலவில் படித்த கியூப மருத்துவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார் அவரது பொண்டாட்டியின் தாலி அறுந்துபோனாலும். 

இவருக்கு விளங்கவில்லை சோசலிசம் என்பது என்னவெனில் சுயநலமற்ற சர்வாதிகாரம் என. இப்போது சீனா நிலையெடுத்திருப்பது இந்த அத்திவாரத்தில்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் தோழர் அம்பனை அவர்களே. 

ஜனநாயகம் அது இது எனப்பேசினால் வேலைக்கு ஆகாது தியன்னமன் சதுக்கத்தின் படுகொலைகளை இப்போதும் எண்பது விகிதமான சீனர்கள் அறியவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். 

 

என்னப்பா இது கரைச்சலாய் போய் விட்டது 🙂  "எஸ்கேப்" 🙂 🙂  

 

1 minute ago, Kapithan said:

1) உங்கள் விருப்பத்தை நான் ஏன் கெடுப்பான் (கொசுறு செய்தி: அமெரிக்கா தனது படைகளை கனேடிய எல்லையில் நிறுத்தும் திட்டத்தினுடன் உள்ளது😀)

2) அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்கிறீர்கள் (நீங்கள் டொனால்ட் றம்மின் அரச ஆளுகயின் கீழ் இல்லைத்தானே. அப்படியென்றால் யாழ் களம் தப்பித்தது😂)

3) உண்மையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

ஸ்பசிபா தவாரிஸ் 🙂 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.