Jump to content

கொரோனாவைக்கொண்டு மானிடத்தை மெல்ல எச்சரிக்கின்றது காலம்


Recommended Posts

👹கொரோனா கொடுத்திருக்கும் சரிவுகள் பாதிப்புகள் அலறல்கள் கதறல்கள் எச்சரிக்கைகள் என ஒரு பக்கம் இருந்தாலும்,

*இன்னொரு பக்கம் ஆச்சரியமானது. ஆம் பெரும் எச்சரிக்கையினை உலகுக்கு சொல்கின்றது*

🍁1950க்கு பின் வேகமாக மாறிய உலகிது. அதுவும் 1990க்கு பின் பணமே பிரதானம் என்றாயிற்று, எப்படியும் சம்பாதி, சம்பாதித்து கொண்டாடு என்ற அளவுக்கு நிலைமை மாறியது.

🍁குறிப்பாக இத்தலைமுறைக்கு பந்தபாசம், பக்தி , ஞானசிந்தனை என எதுவுமில்லை. அவர்களின் சிந்தனையும் மனமும் குணமும் பார்வையும் தேடலும் பணம், பணம், கொண்டாட்டம் என்ற நோக்கிலே இருந்தது

🍁உலகின் உணவு முதல் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறியோடு இயங்கியது உலகம், அது பாசத்தை மறந்தது, கடமையினை மறந்தது, கடவுளை மறந்தது, பணம் எல்லாவற்றையும் காக்கும் என நம்பியது

*இதோ மாநகரங்களின் இன்னொரு பக்கம்*

☘️ ஆம் பப்கள் என இரவெல்லாம் குடியும், ஆட்டமும் பாட்டமுமான மையங்கள் காலியாய் கிடக்கின்றன, மசாஜ் சென்டர் என்ற பெயரில் என்னவெல்லாமோ செய்த மையம் மூடி கிடக்கின்றது

☘️ மது குடி மையங்கள் மூடிகிடக்கின்றன, விபச்சாரிகள் சும்மாவே வந்தாலும் வாடிக்கையாளன் தலைதெறிக்க ஓடுகின்றான், கடன் சொல்ல கூட தோன்றவில்லை

☘️ மது ஆலைகள் சானிட்டைசர் தயாரிக்கின்றன‌

☘️ இளம் தலைமுறையிடம் பெரும் கலாச்சார சீர்கேட்டை விளைவித்த  திரையுலகம் மூடி கிடக்கின்றது, தாங்கள் கடவுளுக்கு நிகர் என கருதிய நட்சத்திரங்கள் மல்லாக்க கிடக்கின்றன‌

☘️ அவர்களை ஆட்டிவைத்த சக்திகள் அஞ்சி ஒடுங்கி இருக்கின்றன‌

*ஐரோப்பிய நிலை இன்னும் மோசம்*

🍄 ஆயுத கம்பெனிகள் அடைபட்டு கிடக்கின்றன, போதை மருந்து பித்தர்கள் தனித்திருந்து தங்களை தாங்களே குணமாக்குகின்றனர்

🍄 அட குடிக்கவில்லை என்றால் சாகமாட்டோமா என சிந்திக்கின்றது குடிகார தலைமுறை

🍄 பியூட்டி பார்லர் செல்லாமல் மேக் அப் செய்யாமல் வாழமுடியுமா? அது சாத்தியமா அட ஆமாம் ஆமாம் என ஒப்புகொள்கின்றது மங்கையர் இனம்

🍄 அரை டவுசர் போடும் வெள்ளைகாரர் முதல் புடவை சுற்றும் தமிழச்சி வரை எல்லா நாட்டு மக்களுக்கும்  அவரவருக்கான உண்மை தேவை
என்னவென்று
இப்பொழுது புரிகின்றது.

🍄 ஆடம்பரம், ஆட்டம்பாட்டம் , வெட்டி பந்தா, நிலையா அழகு , வற்றிவிடும் செல்வம் பின்னால் ஓடிய கூட்டம் ஞானத்தை மெல்ல உணர்கின்றது

🦚 பணம், பணம் என ஓடிய தாயும் தந்தையும் அருகிருக்க கண்டு மகிழ்கின்றது மழலை கூட்டம்,

🦚 நெடுநாளைக்கு பின் தன் மக்கள் நலம் விசாரித்து ஊட்டிவிடுவதில் கண்ணீர் விடுகின்றது முதியோர் கூட்டம்

🍁 பாவகாரியங்கள் விலக்கப்படுகின்றன., பாவத்தின் கொண்டாட்ட மையங்கள் மூடப்படுகின்றன‌

🍁 தொழிற்சாலை இயக்கமில்லை, விமானமும் ரயிலும் இயக்கமில்லை என்பதால் காற்றின் தரம் உயர்ந்தாயிற்று

🍁 அண்டார்டிக்கா பனிபாறைகளுக்கு புது இறுக்கம் கிடைத்தாயிற்று

🍁 ஆட்டமும் பாட்டமுமாய் நான் காண்பதே உலகம், தெய்வம் எனக்கு கைகட்டி வழிவிடும் என சவால் விட்டவனை எல்லாம் அஞ்சி ஒடுங்கி துப்பாக்கி முனையில் அமர வைத்துவிட்டது காலம்

🍁 தனித்திருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஞானம் பிறக்கின்றது

🍁 உணவு முதல் தொழில்வரை தன் பாரம்பரியத்தை நினைத்து பார்க்கின்றான், எவ்வளவு தூரம் விலகிவிட்டோம் என்பதை உணர்கின்றான், உண்மையில் எது தேவை என்பது அவனுக்கு தெரிகின்றது

*👹கொரோனாவினை அனுப்பிய சக்தி அதில் சிரிக்கின்றது*

🍁 தன் திட்டம் கனவு வேகம் ஆசை எதிர்பார்ப்பு எல்லாம் கண்முன் உடைந்து அதெல்லாம் வெறும் மாயை என உணர்ந்து அடங்கி இருக்கின்றான் மனிதன்

🍁 பிரமாண்டமான இயற்கை முன்னால் தான் தூசு என்பதும், நீர்க்குமிழி வாழ்வு எப்பொழுதும் உடையும் என்பதும் மானிடனுக்கு புரிகின்றது

🍁 அடங்கா யானையினை தனி செல்லில் பட்டினி போட்டு அடித்து வழிக்கு கொண்டுவரும் பாகனை போல மனிதனை கட்டிவைத்து பாடம் சொல்லிகொடுக் கின்றது காலம்

🍁 ஜல்லிகட்டு காளையாக வலம் வந்த அவனுக்கு சரியான மூக்கணாங்கயிறு போட்டு கட்டுகின்றது காலம்

🍁 தமிழகம் முருக பெருமானையும் அம்மனையும் ஒவ்வொரு வீட்டிலும் வணங்குகின்றது

🍁ஐரோப்பாவோ ஆலயம் திறக்கும் நாளை எதிர்பார்கின்றது

🍁சிரிய துருக்கி போர், சவுதி ஏமன் போர் கூட நின்றிருக்கின்றது, எல்லோருக்கும் பொதுவான காலம் அடிக்கும் அடியில் அடங்கி நிற்கின்றது போர்வெறி கூட்டம்

🍁 காலமோ இயற்கையோ கடவுளோ அனுப்பிய கொரோனா மானிட சமூகத்துக்கு ஞானத்தின் எச்சரிக்கை. காலம் நினைத்திருந்தால் இதை விட கொடிய நோய் அனுப்பி மானிட சமூகத்தை சரித்து போட சில நாழிகை ஆகியிருக்காது

🍁 ஆனால் எச்சரிக்கின்றது, ஆம் இது எச்சரிக்கை, மானிட இனத்தை மெல்ல எச்சரிக்கின்றது காலம்

*🦚அதில் மெல்ல ஞானம் பெற்றுகொண்டிருகின்றான் மனிதன், இந்த ஞானம்  என்றும்
உலகில்  நிலைக்க வேண்டும் ...
உண்மையான  மானுடம்
மலர வேண்டும் ! :100_pray:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.