Sign in to follow this  
ampanai

வடக்கு மக்கள்மீது அன்புகொண்டு குமார் சங்கக்கார உதவிக்கரம் நீட்டினார்!

Recommended Posts

வட மாகாண மக்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்ட குழுவினர் 1.6 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளனர்.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இந்த நிதியுதவித் தொகையை வழங்கி வைத்தார். பத்தரமுல்லையிலுள்ள வட மாகாண ஆளுநர் உப காரியாலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது,

எமது நாடு போன்று உலகமே பாதிக்கப்பட்டுள்ள இந்த COVID-19 வைரஸினால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். எனவே நான், மஹேல ஜயவர்தன,சாலிய ஒஸ்ட்டின், நாதன் சிவகாமநாதன் மற்றும் எமது நண்பர்கள் சிலர் இணைந்து ஏதேனுமொரு உதவியை செய்ய முடியுமாக இருந்தால், அதனை பெரும் பாக்கியமாகக் கருதினோம். நாட்டு மக்களுக்கு அநேகமானவர்கள் உதவி செய்கின்றனர். இந்த போராட்டத்திற்கு கரம் கொடுக்கின்றனர். அயலவர்களின் நலன் தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றனர். இதனை தொடர்ந்தும் முன்னெடுங்கள். அதேபோன்று, ஆலோசனைகளை பின்பற்றுங்கள்

 என குமார் சங்கக்கார குறிப்பிட்டார்.

http://www.vanakkamlondon.com/kumar-sangakkara-27-03-2020/

 

Share this post


Link to post
Share on other sites

பெல்ஜியம் வாழ்தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் 26 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது. தோணிக்கல்-10 முத்துமாரி நகர் புளியங்குளம்-10 பரிசங்குளம் புளியங்குளம் வடக்கு-06
https://www.thaarakam.com/news/119767

WhatsApp-Image-2020-03-27-at-8.20.29-PM3.jpeg

 

Share this post


Link to post
Share on other sites

கொரோனா வைரசால் இன்று உலகமே மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில் தாயகத்திலும் அதனுடைய வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இல்லாத நிலையில் நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

WhatsApp-Image-2020-03-25-at-16.06.45-2.jpeg

இவ் வேளையில் அன்றாடம் உழைத்து வருமானம் ஈட்டுவோரும், அரவணைப்பின்றி தனிமையில் வாழும் வயோதிபர்களும், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களில் உள்ள சிறு குழந்தைகளுக்கு பால்மா வாங்குவதற்கு கூட வசதி இல்லாதவர்களும், மற்றும் நோய்வாய்ப்பட்டு உள்ளவர்களும் என பலரும் இன்று ஒழுங்காக சாப்பிட வில்லை என்பதே நிதர்சனமான கசப்பான உண்மையாகும். 
https://www.thaarakam.com/news/119742

Share this post


Link to post
Share on other sites

குமார் சங்கர இன மதங்களுக்கு அப்பால் சிந்திக்கக்கூடிய மனிதாபிமானம் மிக்க ஒரு மனிதர் என்பது பல அவரது பல செயல்களில் உணரக்கூடியதாக உள்ளது.  

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

சங்கருக்கு நன்றியும் பாராட்டும்

Share this post


Link to post
Share on other sites
On 3/27/2020 at 12:15 PM, ampanai said:

எனவே நான், மஹேல ஜயவர்தன,சாலிய ஒஸ்ட்டின், நாதன் சிவகாமநாதன் மற்றும் எமது நண்பர்கள் சிலர் இணைந்து ஏதேனுமொரு உதவியை செய்ய முடியுமாக இருந்தால், அதனை பெரும் பாக்கியமாகக் கருதினோம்.

சங்ககாராவாவின் தந்தை 1983 இனவாத கலவரத்தின் பொழுது தமிழ் உயிர்களை காப்பாற்றினார். 

இன்று, இவரையும் இணைந்து உறவும்உறவுகளுக்கு நன்றிகள்.   

Share this post


Link to post
Share on other sites

குமார் சங்கர பற்றி இதே யாழில் தவறாக முன்பு எழுதியதுக்கு  பகிரங்க மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் .

நன்றியும் பாராட்டுதல்களும் அவருக்கு உரித்தாகுக .

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 3/27/2020 at 12:15 PM, ampanai said:

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இந்த நிதியுதவித் தொகையை வழங்கி வைத்தார். பத்தரமுல்லையிலுள்ள வட மாகாண ஆளுநர் உப காரியாலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இவர் மூலமாக மக்களுக்கு யாரும் உதவிட முடியுமா? 

இல்லை, இதற்கு ஏதாவது அமைப்புக்கள் உள்ளனவா?  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this