Jump to content

கொரோனாவின் தீவிரம் புரியாமல் மருத்துவர்கள் ஹோலி கொண்டாடியதால் அவர்களிடமிருந்து பரவியதா கொரோனா? இத்தாலியாக மாறலாம் என்ற அச்சத்தில் இருக்கிறது இந்தியாவின் இந்த ஜவுளி நகரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: இந்த ஜவுளி நகரம் `இந்தியாவின் இத்தாலியாக' ஆகப் போகிறதா?

மொஹர் சிங் மீனா பிபிசி இந்தி
கொரோனா வைரஸ்: இந்த ஜவுளி நகரம் `இந்தியாவின் இத்தாலியாக' ஆகப் போகிறதா? படத்தின் காப்புரிமை Getty Images

மார்ச் 8 ஆம்தேதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு (கிரீன்விச்நேரப்படி 23.30 மணி) ராஜஸ்தானில் ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு 52 வயதானஆண்ஒருவர் நிமோனியா பாதிப்புடன் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறலும் இருந்தது.

பில்வாராவில் உள்ள பிரிஜேஷ் பங்கார் நினைவு மருத்துவமனையில், இந்தப் புதிய நோயாளியை 58 வயதான டாக்டர் அலோக் மிட்டல் பரிசோதனை செய்திருக்கிறார். நோயாளி வெளிநாடு சென்று வந்தாரா என்பது பற்றி யாரும் கேட்கவும் இல்லை, அவராகவும் சொல்லவும் இல்லை. தீவிர சிகிச்சைப்பிரிவில் வேறு 6 நோயாளிகளும் இருந்தனர்.

நோயாளியின் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. இரண்டு நாட்கள் கழித்து, சிறப்புச் சிகிச்சைக்காக, 250 கிலோமீட்டர் (155 மைல்கள்) தொலைவில் உள்ள ஜெய்ப்பூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு நோயாளியை அனுப்பிவைத்தனர்.

ஜெய்ப்பூரில் இரண்டு மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

"என்ன காத்திருக்கிறது என்று எங்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை'' என்று பில்வாரா மருத்துவமனையில் நோயாளியைக் கவனித்த தீவிர சிகிச்சைப்பிரிவு நர்ஸ்ஷாந்திலால்ஆச்சார்யா என்னிடம் தெரிவித்தார்.

இதுவரைதெளிவாகத்தெரியாதகாரணங்களுக்காக, ஜெய்ப்பூரிலும், விரநிமோனியாபாதித்த அந்தநோயாளிக்கு கொரோனாவைரஸ் பரிசோதனை நடத்தப்படவில்லை. அவருடைய உடல்நிலை வேகமாக மோசமடைந்து, சில நாட்கள் கழித்து மார்ச் 13 ஆம் தேதி இறந்து போனார். அவருடையமரணம்பற்றிடாக்டர்மிட்டல்மற்றும்அவருடையகுழுவினருக்குத்தெரிவிக்கப்பட்டது.

அநேகமாக பில்வாராவில் தனியார் மருத்துவமனையில் இருந்து நோய்த்தொற்று பரவியிருக்கலாம்.

Banner image reading 'more about coronavirus' Banner

இந்தியாவில் கோவிட் - 19 தீவிரமாகப்பரவும் என்ற அச்சம் உருவாகிவிட்ட நிலையிலும், அந்த சூழ்நிலையின் தீவிரத்தை அந்த டாக்டர்கள் புரிந்துகொள்ளாமல் இருந்தது ஆச்சர்யமாகஉள்ளது.

இதுவரையில் நாட்டில் 775 பேருக்கும் மேல் கோவிட் - 19 உறுதி செய்யப்பட்டுள்ளது, 19 பேர் இறந்துள்ளனர்.

பரிசோதனை எண்ணிக்கைகள் குறைவாகவே உள்ளன.

கொரோனா வைரஸ்: இந்த ஜவுளி நகரம் `இந்தியாவின் இத்தாலியாக' ஆகப் போகிறதா? படத்தின் காப்புரிமை MOHAR SINGH MEENA / BBC

மார்ச் 9 ஆம் தேதி வெளியான தகவல்களின்படி, டாக்டர் மிட்டலும், வேறு சிலரும் உதய்பூருக்குச் சென்று ஒரு சொகுசு விடுதியில் ஹோலி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். (டாக்டர்மிட்டலுடன் தொடர்பு கொள்ள செல்போன் மூலமாகவும், மெசேஜ் அனுப்பியும் பதில்வரவில்லை.)

நிமோனியா நோயாளி மரணம் அடைந்த பல நாட்களுக்குப் பிறகு, டாக்டர் மிட்டலும் அவருடைய சகாக்களும் தாங்களாகவே ஓர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்த ல்வார்டில் பரிசோதனை செய்துகொண்டனர். அடுத்த சிலநாட்களில், அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மேலும் சில சகாக்கள் அவர்களுடன் தனிமைப்படுத்தல் சிகிச்சையில் சேர்ந்துகொண்டனர். டாக்டர் மிட்டல் உள்பட அவர்களில் 12 பேருக்கு கோவிட் - 19 இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ்: இந்த ஜவுளி நகரம் `இந்தியாவின் இத்தாலியாக' ஆகப் போகிறதா? படத்தின் காப்புரிமை Getty Images

நோய்த்தொற்று குறித்த தகவல் கசிந்தவுடன் எல்லாமே குழப்பமயமாகிவிட்டது.

அந்தத் தனியார் மருத்துவமனை அந்தப் பகுதியில் பிரபலமான மருத்துவமனை. அங்கு செல்வதை பலரும் வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளனர். ஏராளமான புறநோயாளிகள் அங்கு சிகிச்சை பெறுகின்றனர். மக்கள் பதற்றமாகி, நோய்த் தொற்றை டாக்டர்கள் பரப்பிவிட்டதாகக் குற்றஞ்சாட்டத்தொடங்கியதும் நிர்வாகத்தினர் அதிவேகமாகச் செயல்படத்தொடங்கினர்.

பில்வாராவுக்குள் யாரும் வருவதற்கும், உள்ளிருந்து வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அங்கே ``ஊரடங்கு'' அமல் செய்யப்பட்டது. மக்கள் வீடுகளிலிருந்து வெளிவரவும், பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டன.

மாவட்டத்துக்குள் யாரும் வரவோ அல்லது மாவட்டத்திலிருந்து வெளியேறவோ தடை விதிக்கப்பட்டது. அந்தத் தனியார் மருத்துவமனைக்கு சீல்வைக்கப்பட்டது.

அங்கிருந்த 88 நோயாளிகள் அதே பகுதியில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். ``நிலைமை தீவிரமாக இருப்பதாகவும், இது தீவிர நோய்த்தொற்று பாதிப்பாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்'' என்று உள்ளூர் செய்தியாளர் பிரமோத்திவாரி என்னிடம் கூறினார்.

எனவே, தீவிர நோய்த்தொற்று அச்சத்தில் இருக்கும் பில்வாராவில், பின்னாளில் இந்தியா முழுக்க செய்யப்பட்ட நடவடிக்கைகள் முன்னதாகவே எடுக்கப்பட்டது. எனவே 400,000 மக்கள்தொகை கொண்ட இந்த நகரம், முக்கியமான ஜவுளி மையமான இந்த நகரம், இந்தியாவின் கொரோனா வைரஸ் முதலாவது ``ஹாட்ஸ்பாட்'' ஆகமாறிவிடுமா?

இதை யோசித்துப் பாருங்கள்.

கொரோனா வைரஸ்: இந்த ஜவுளி நகரம் `இந்தியாவின் இத்தாலியாக' ஆகப் போகிறதா? படத்தின் காப்புரிமை Getty Images

ஞாயிற்றுக்கிழமை மாலை வரையில் பரிசோதிக்கப்பட்ட 69 பேரில், டாக்டர்கள், துணை மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட - 24 முதல் 58 வயதுக்குஉள்பட்ட 13 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர்டாக்டர்கள், 9 பேர்சுகாதாரப்பணியாளர்கள். 31 பேர் - பெரும்பாலும் மருத்துவமனை பணியாளர்கள் - தனிமைப்படுத்தல் நிலையில் உள்ளனர். ``அவர்களில் பலரும் நலமாக உள்ளனர்'' என்று மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அருண்கௌர் என்னிடம் தெரிவித்தார்.

ஆனால் நிலைமை இன்னும் மோசமானதாக இருக்கலாம்.

பிப்ரவரி 20க்கும், கடந்த வாரம் தனிமைப் படுத்தல் வார்டுக்குச் செல்லும் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், டாக்டர் மிட்டலும் அவருடைய மருத்துவர்கள் குழுவினரும் மருத்துவமனையில் 6,192 நோயாளிகளைப்பார்த்துள்ளனர். அவர்கள் ராஜஸ்தானின் 13 மாவட்டங்களிலிருந்து சிகிச்சைக்கு வந்தவர்கள். அதில் 39 நோயாளிகள் நான்கு பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சீனா மற்றும் இத்தாலியில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்துப்பார்க்கும்போது, மருத்துவமனைகள்தான்கோவிட்-19 பரவுவதற்கான ``முதன்மையான இடங்களாக'' இருக்கலாமோ என்று டாக்டர்கள் கருதுகின்றனர். மேலும், மெர்ஸ் மற்றும் சார்ஸ் நோய்கள் மருத்துவமனைகளுக்கு அதிக அளவில் பரவியவன் அனுபவம் இருக்கிறது. பில்வாரா மருத்துவமனையிலிருந்து பரந்த எல்லைகள் அளவில் சமுதாய அளவில் நோய்த்தொற்று பரவியிருப்பதற்கு வாய்ப்பு இருப்பது உண்மைதான் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

மாவட்டத்தின் எல்லைகளுக்கு சீலிடப்பட்டுவிட்டது.

கொரோனா வைரஸ்: இந்த ஜவுளி நகரம் `இந்தியாவின் இத்தாலியாக' ஆகப் போகிறதா? படத்தின் காப்புரிமை MOHAR SINGH MEENA / BBC

எனவே, மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு பரிசோதனை செய்யாமல் பின்னர் இறந்துபோன நோயாளி மூலமாக அந்த வைரஸ் இந்த நகருக்கு வந்ததா? அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 80 நோயாளிகளில் யார் மூலமாவது வந்திருக்குமா? அல்லது தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்த வேறொரு நோயாளி மூலமாக வந்திருக்குமா? அல்லது ஒருடாக்டர் வேறு எங்காவது நோய்த் தொற்றுக்கு ஆளாகி, அதை அறியாமலே மற்றவர்களுக்குப் பரவுவதற்குக் காரணமாக இருந்திருப்பாரா?

தொடர்புகளை பின் தொடர்ந்து கவனித்து, பரிசோதனைகள் முடியும் வரையில் யாருக்கும் எதுவும் தெரியப் போவதில்லை. அதுதான் திகிலூட்டும் விஷயமாக இருக்கிறது.

நோய் பரவல் குறித்து ஆரம்பத்தில் நம்பகமான தகவல்கள் இல்லாததால், வதந்திகள் அதிகம் பரவின. அவர்களில் ஒரு டாக்டர் வீட்டுக்கு சௌதி அரேபியாவிலிருந்து ஒரு விருந்தாளி வந்தபோது, டாக்டருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. அந்த டாக்டர் பிறகு மருத்துவமனைக்குச் சென்றபோது, மற்றவர்களுக்குப் பரவிவிட்டது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 படத்தின் காப்புரிமை Getty Images

வதந்திகளை அடக்குவதற்காகத் தனது தீவிர சிகிச்சைப் பிரிவில் மொபைல்போனில் டாக்டர் நியாஸ் கான் ஒரு விடியோ எடுத்துள்ளார். டாக்டர் கானை சுற்றி மானிட்டர்கள் பீப் ஒலி எழுப்பிக்கொண்டிருக்க, மாஸ்க் அணிந்து சுவாசம் இன்றி இருந்த டாக்டர்கான் ``விஷயங்களை தெளிவுபடுத்துவதற்காக, என்வீட்டுக்கு சௌதி அரேபியாவில் இருந்து எந்த உறவினரும் வரவில்லை. எனக்கு ஒரு மகனும், மனைவியும் உள்ளனர். அவர்களில் யாருக்கும் நோய்த் தொற்று இல்லை. தயவு செய்து ஊடகங்களில் வரும் தகவல்களை நம்பாதீர்கள்'' என்றுஅவர்கூறினார்.

மருத்துவமனை மீது குற்றஞ்சாட்டுவது நியாயமற்றது என்று மற்றொரு டாக்டர் கூறினார்.

``அந்த நோயாளி எங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் 2 நாட்கள் இருந்தபோதிலும், வெளிநாடுகள் செல்லவில்லை என்று எங்களிடம் கூறி, எங்களை ஏமாற்றிவிட்டார்''என்று மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர். டாக்டர் மிட்டல், அவருடைய மனைவி ஆகியோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும், தாம் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தனிமைப்படுத்தல் சிகிச்சையின் இடையில் அவர் ஒரு விடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். ``தயவு செய்து பதற்றம் அடையாதீர்கள்'' என்று அந்த பிரபல டாக்டர் கூறியுள்ளார்.

நகரில் உள்ள குடிமக்களை பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.இதைச் சொல்வது எளிதான விஷயம்.

சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த நிலையில், பில்வாரா நகரம் முழுக்க 300 குழுக்களாக அரசுப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். சுமார் 78,000 வீடுகளின் கதவுகளை அவர்கள் தட்டுகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து விருந்தினர் யாரும் வந்திருந்தார்களா, அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதா அல்லது இந்த நோய்த்தொற்று பாதிப்பு யாருக்காவது உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் தெரியுமா என் றுஅவர்கள் விசாரிக்கிறார்கள்.

இந்தக்கணக்கெடுப்புமார்ச் 18 ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 25ல்நிறைவடையும். ``எங்களுக்குசளி, இருமல், காய்ச்சல் இருக்கிறதா என்று அவர்கள் கேட்கிறார்கள்.

இந்த அறிகுறிகள் ஏதும் இருந்தால் அரசு மருத்துவமனைகளில் வந்து பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்று எங்களிடம் சொல்கிறார்கள்'' என்று குடியிருப்புவாசி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

2.5 மில்லியன் பேர் வாழும், அருகில் உள்ள கிராமங்களுக்கு, மேலும் 1900 குழுக்கள் சென்றுள்ளன.

சந்தேகத்துக்கு உரிய அறிகுறிகளுடன் வீடுகளில் இருப்பவர்கள், தனிமைப்படுத்தல் சிகிச்சையில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இதுவரை அப்படி ஏழாயிரம் பேர்தனிமைப்படுத்தல் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.

நோய்த் தொற்றுவேகமாக அதிகரிக்கும் என்ற அச்சத்தில், மருத்துவமனையில் 30 படுக்கைவசதிகளுடன்உருவாக்கப்பட்ட தனிமைப்படுத்தல் வார்டில், மேலும் 20 படுக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அந்தப் படுக்கைகள் ஏற்கெனவே நிரம்பிவிட்டன. தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு மேலும் 35 படுக்கைகள் வழங்குவதாக ஆறு தனியார் மருத்துவமனைகள் உறுதி அளித்துள்ளன. மக்களை தனிமைப்படுத்தி சிகிச்சைஅளிக்க, - 450 படுக்ககைகளுடன் 13 இடங்கள் - 2,000 படுக்கைகள் வரை இதை அதிகரிக்கமுடியும் - அடையாளம் காணப்பட்டுள்ளன என்று, மாவட்டத்தின் மிக மூத்த அதிகாரி ராஜேந்திபட் என்னிடம் தெரிவித்தார். ``ஒரு போரில் சண்டையிடுவதைப் போல இது உள்ளது. ஆனால் நாங்கள் விழிப்புடனும், எதையும் எதிர்கொல்ளும் மனநிலையுடனும் இருக்கிறோம்'' என்றார் அவர்.

இதற்கிடையில், இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல, இந்த நகரில் வாழும் மக்களும் நீட்டிக்கப்பட்ட முடக்கநிலை மற்றும் ஊரடங்கிற்கு ஆட்பட்டுள்ளனர். கம்ப்யூட்டர் அறிவியல் பேராசிரியரான ராஜ்குமார் ஜெயின், தனது இரண்டுஅடுக்கு மாடி வீட்டில் கூட்டுக்குடித்தனமாக 14 பேருடன் சேர்ந்துமுடக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துவருகிறார். ``நாங்கள் முழுபதற்றத்துடன் இருக்கிறோம்'' என்று அவர் என்னிடம் கூறினார். ``பில்வாரா நகரம் இந்தியாவின் இத்தாலியாக மாறப்போகிறது என்று மக்கள் கூறுகிறார்கள்.''

சுகாதாரப்பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மில்லியன்கணக்கான இந்தியர்கள்தட்டுகளை தட்டி ஒலி எழுப்பினார்கள்.

பிபிசிதமிழ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கீழ் உள்ளதை எப்போது படித்தாலும் அன்றிரவு நித்திரை வராது இனி அப்படியல்ல ஆண்டவன் இருக்கான் .
“முள்ளிவாய்க்கால் வாழ்க்கையில் உங்கள் மனதைத் தாக்கிய சம்பவம் ஒன்றைக் கூறமுடியுமா?”

“ஒன்றல்ல, நிறைய இருக்கின்றன. ஒரு தாய் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு வேறு ஒருவரும் இல்லை. அந்த இரண்டு மகன்கள்தான் அவரிடமிருந்த சொத்து. ஒருவனுக்கு 10 வயது, மற்றவனுக்கு 8 வயது. ‘என்ரை பிள்ளைகளைப் பாருங்கோ, என்ரை பிள்ளைகளைப் பாருங்கோ’ என்று கதறியபடியே இருந்தார். புளியமரத்தின் கீழே உட்கார்ந்திருந்த அவர் மடியின் மீது எட்டு வயதுப் பையனின் தலை கிடந்தது. மூத்தவன் கீழே வெறும் தரையில் சரிந்து படுத்திருந்தான். மூத்த பையனை நான் முதலில் சோதித்தேன். அவன் எப்போதோ இறந்துபோயிருந்தான். அந்த அம்மாவிடம் பையன் இறந்துபோனதைச் சொன்னேன். ‘ஐயோ, ஐயோ’ எனத் தலையிலடித்துக் கதறினார். ‘இவனைப் பாருங்கோ’ என்று மடியில் கிடந்த மற்றவனைக் காட்டினார். அவனுடைய தலையை ஒரு சன்னம் துளைத்து மறுபக்கம் போயிருந்தது. ‘ஒன்றுமே செய்ய முடியாது. சிறிது நேரத்தில் இறந்துவிடுவான்’ என்ற கொடூரமான வார்த்தைகளைச் சொன்னேன். இப்போது அதை நினைத்துப் பார்க்கும்போது என் மேலேயே வெறுப்பு ஏற்படுகிறது. ஓர் ஆறுதல் வார்த்தைகூடச் சொல்ல நேரமில்லை. ஒவ்வொரு நோயாளரையும் பார்த்து முடித்த பின்னர் உதவியாளர் ‘அடுத்தது’ (NEXT) எனக் கத்துவார். நோயாளி வருவார். அவர் போனதும் ‘அடுத்தது’ எனக் கத்துவார். இப்படி என் வாழ்க்கை யந்திரமயமாக மாறியிருந்தது.”

https://www.ibctamil.com/srilanka/80/105714

Link to comment
Share on other sites

இந்தியாவில் நிலைமைகள் மோசமானால், ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தால், பொருளாதார நிலைமைகள் சிக்கலானால், இந்தியா என்ற பல நாடுகள் உடையலாம்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.