Jump to content

கொரோனா வைரஸ்: வெளவால், எறும்புத்தின்னி, புனுகுப்பூனை - எந்த விலங்கிடமிருந்து பரவியது? துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: வெளவால், எறும்புத்தின்னி, புனுகுப்பூனை - எந்த விலங்கிடமிருந்து பரவியது? துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு

ஹெலன் பிரிக்ஸ் பிபிசி நியூஸ்
கொரோனா வைரஸ் எந்த விலங்கிடமிருந்து பரவியது? துப்பறியும் கதை போல நீளும் ஆய்வுGetty Images

உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் எப்படி விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பதைத் தெரிந்து கொள்ள ஹெலன் பிரிக்ஸ் விஞ்ஞானிகளிடம் சென்றார்.

சீனாவில் ஓர் இடத்தில், வானில் பறந்து கொண்டிருந்த நோய் தொற்று கொண்டிருந்த வௌவால் மேலிருந்து கீழே மலத்தைக் கழித்தது. அது ஒரு காட்டில் விழுந்தது. அங்கேயே இருக்கும் ஒரு விலங்கு, (ஒரு எறும்புத்தின்னி) இரையைத் தேடும்போது அந்த மலத்திலிருந்த வைரஸ் தொற்று அதற்குப் பரவியது. அது காட்டிலிருக்கும் பிற விலங்குகளுக்கும் பரவியது . அந்த விலங்கு ஒரு மனிதரிடம் சிக்கியது எனவே அந்த விலங்கின் மூலம் அந்த மனிதருக்கும் வந்திருக்கலாம்.

பிறகு அவரிடமிருந்து அவரின் வேலையாட்கள் என இப்படி உலகம் முழுவதும் பரவுவது தொடங்கியிருக்கலாம்.

கொரோனா வைரஸ் எந்த விலங்கிடமிருந்து பரவியது? துப்பறியும் கதை போல நீளும் ஆய்வுGetty Images

இவ்வாறு பரவியது உண்மையா எனக் கண்டறிய அனைத்து விலங்குகளையும் பரிசோதனை செய்யத் தொடங்கியுள்ளனர், இது துப்பறியும் கதை போல் உள்ளது என்கிறார் லண்டன் விலங்கியல் பேராசிரியர் அண்ட்ரூ கன்னிங்கம் . ஆனால் விலங்குகளிடமிருந்து பரவியிருக்கலாம். குறிப்பாக வௌவால்கள் தான் இதற்கு முன்பு பரவிய கொரோனா வைரஸின் காரணமாக அமைந்தது என்கிறார்.

சீன விஞ்ஞானிகள் ஒரு நோயாளியிடமிருந்து இந்த வைரஸை கண்டறியும்போது வௌவால்களையும் சோதனை செய்தனர்.

பாலூட்டிகள் பெரும்பாலும் கூட்டமாக வாழும் இயல்புடையவை. பல மைல் தூரங்கள் பறப்பவை. அவை பொதுவாக நோய்க்கு ஆளாகக்கூடியவை இல்லை. ஆனால் வைரஸ்களை பரப்ப அதிகம் வாய்ப்புகள் கொண்டவை.

லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் கேட்ஸ் ஜான் கூறுகையில், வௌவால்கள் வைரஸ்களுடன் போராடும் திறன் கொண்டவை. அவை வைரஸால் தாக்கப்பட்டால் தங்களை தாங்களே சரி செய்து கொள்ளும் டிஎன்ஏ கொண்டுள்ளன. இதனால் நோய்களுக்கு உள்ளாவதற்கான முன் அது மீண்டிருக்கலாம். இது இப்போதைக்கு நிலவும் ஒரு கருத்து மட்டுமே என்றார் .

வௌவால்கள் ஒருமுறை வைரஸால் தாக்கப்பட்டால் அது தங்களுக்குள் அந்த வைரஸை வளர்த்துக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வௌவால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ பரப்பி இருக்கலாம் என்கிறார் நாட்டிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோனாதன் பால்.

இந்த புதிரில் அடுத்து சந்தேகப்படும் விலங்கு எறும்புத்தின்னி. உலகம் முழுவதும் மிகச் சுலபமாக மக்கள் இருக்கும் இடங்களுக்கு வரக்கூடிய விலங்கு. அது மட்டுமல்லாமல் இது அழியக்கூடிய நிலையில் உள்ளது . ஆசியாவில் எறும்புத் திண்ணிக்கு கடும் தேவை இருக்கிறது. சீனாவின் பாரம்பரிய மருந்து ஒன்றைத் தயாரிக்க இவை தேவைப்படுகின்றன. மேலும் இதன் இறைச்சியைச் சீனாவில் பலரும் உண்பர். 

Banner image reading 'more about coronavirus' Banner எறும்புத்திண்ணிGetty Images எறும்புத்திண்ணி

எறும்புத்தின்னிகளில் கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்கள் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் முடிவுக்கு வருவதற்கு முன்னர் விஞ்ஞானிகள் மிகவும் கவனமாக இருக்கின்றனர், ஏனென்றால் எறும்புத்தின்னி ஆராய்ச்சிகள் இன்னும் வெளிவரவில்லை. அதனால் இதைச் சரிபார்க்க முடியவில்லை.

பேராசிரியர் கன்னிங்கம் கூறுகையில், எந்த சூழல் மற்றும் எத்தனை எறும்புத்தின்னிகள் இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது முக்கியம் என்கிறார்.

''பல எறும்புத்தின்னிகள் ஆராயப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் பரிசோதனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒன்றை ஆராய்ந்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று தெரிவித்தார் கன்னிங்கம் .

''எறும்புத்தின்னிகள் மற்றும் பிற விலங்குகள் இதில் வௌவால்களும் அடங்கும் , இறைச்சி சந்தையில் வைக்கப்படும். இது ஒரு விலங்கிலிருந்து மற்றொரு விலங்குக்கு வைரஸ் பரவுவதற்குக் காரணமாக அமையும். மேலும் இங்கேயே விலங்கிலிருந்து மனிதர்களுக்குக் கூட வரவும் வாய்ப்புள்ளது,'' என கன்னிங்கம் கூறுகிறார்.

''எறும்புத்தின்னிகள் மற்றும் வௌவால்கள் உட்படப் பிற விலங்குகள் இறைச்சி சந்தையில் வைக்கப்படும். இது ஒரு விலங்கிலிருந்து மற்றொரு விலங்குக்கு வைரஸ் பரவுவதற்குக் காரணமாக அமையும். மேலும் இங்கேயே விலங்கிலிருந்து மனிதர்களுக்குக் கூட வரவும் வாய்ப்புள்ளது,'' என கன்னிங்கம் கூறுகிறார்.

சீனாவின் வூஹானில் கொரோனாத்தொற்று பரவத் தொடங்கி ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சந்தையில் வன விலங்குகளின் மாமிசமும் விற்கப்பட்டன. இதில் உயிருடனும் துண்டுகளாகவும் விற்கப்பட்டன. ஒட்டகங்கள், கோலாக்கள் மற்றும் பறவைகள் ஆகியவை இருந்தன. 

கார்டியனில் வெளிவந்த செய்தியில், அந்த சந்தையில், ஓநாய் குட்டிகள், வண்டுகள், தேள்கள் , எலிகள், அணில்கள், நரிகள், புனுகுப்பூனைகள், முள்ளம்பன்றிகள், பல்லிகள், முதலைகள் மற்றும் ஆமைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

வௌவால்கள் மற்றும் எறும்புத்தின்னிகள் அதில் இல்லை என்றாலும் சீன உளவுத்துறை இதை விசாரித்து வருகிறது. இதில் என்னென்ன விலங்குகள் இருந்தன என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். அப்போதுதான் வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்கிறார் பேராசிரியர் பால்.

இப்போது உள்ள நிலையில் நாம் எதிர்கொள்ளும் பல வைரஸ்கள் வன விலங்குகள் மூலமாகப் பரவுவதுதான். எபோலா , ஹெச் ஐ வி , சார்ஸ் தற்போது கொரோனா வைரஸ். மனிதர்கள் அதை கண்டறிவதால், வனவிலங்குகளுடன் அதிகம் நெருக்கமாவதால் , காட்டை மாற்றியமைப்பதால் , இது போன்ற வைரஸ்கள் வருகின்றன என்கிறார் பேராசிரியர் பால்.

நிலப்பரப்பை மாற்றியமைப்பதன் மூலம் மனிதர்கள் சந்திக்காத பல வைரஸ்களை இப்போது நாம் சந்திக்கிறோம் என்கிறார் அவர்.

கொரோனா வைரஸ்Getty Images

இது எப்படி நடந்தது என்று தெரிந்து கொண்டால், விலங்குகளைத் தாக்காமல் நம்மால் இதைத் தடுக்க முடியும் என்கிறார் பேராசிரியர் கன்னிங்கம். 

"'வெளவால்கள் சுற்றுச்சூழல் சுழற்சிக்கு முக்கியம். வண்டுகளால் பூச்சிகளால் பரவக்கூடிய பல நோய்களைத் தடுக்கிறது. மேலும் சில மரத்தின் விதைகள் பரவ உதவி செய்கிறது என்கிறார்கள்" என்கிறார் அவர்.

2002-2003ல் சார்ஸ் பரவியபோது சீனா மற்றும் சில நாடுகளில் வன விலங்கு சந்தைகள் தடை செய்யப்பட்டன. ஆனால் விரைவிலேயே சீனா, வியட்நாம் மற்றும் சில தெற்காசிய நாடுகளில் அது மீண்டும் திறக்கப்பட்டது.

சீனா தற்போது மீண்டும் வன விலங்கு சந்தைகளை மூடி விட்டது. ஆனால் இது நிரந்தரமாக இருக்கும் என சில அறிக்கைகள் தெரிவித்துள்ளது.

இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தாலும் இப்போது இதைத் தடுக்க முடியாது. ஆனால் இது போன்ற இன்னொரு சம்பவத்தைத் தடுக்க முடியும் என்கிறார் பேராசிரியர் டயானா பெல்.

 

https://www.bbc.com/tamil/science-52054938

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன மருத்துவர்களின் பிரேத பரிசோதனை முடிவுகள் படி, காவிட-19 மிருகத்தால் மனிதனுக்கு கடத்தப்பட முடியாது.

சீனா சொல்லும், us army தான் வைரஸ் ஐ சீனா இதற்ள் கொண்டு சென்று பரப்பியது என்பது ஓர் சாத்யகி கூறாக இருபதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

சீன மருத்துவர்களின் பிரேத பரிசோதனை முடிவுகள் படி, காவிட-19 மிருகத்தால் மனிதனுக்கு கடத்தப்பட முடியாது.

சீனா சொல்லும், us army தான் வைரஸ் ஐ சீனா இதற்ள் கொண்டு சென்று பரப்பியது என்பது ஓர் சாத்யகி கூறாக இருபதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

அப்படியானால் அமெரிக்கா சொந்த செலவில் தனக்குத்தானே சூனியம் செய்துள்ளதா?

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

இது எப்படி நடந்தது என்று தெரிந்து கொண்டால், விலங்குகளைத் தாக்காமல் நம்மால் இதைத் தடுக்க முடியும் என்கிறார் பேராசிரியர் கன்னிங்கம். 

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாருக்கும் சுகாதாரம் பாதுகாப்பே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அப்படியானால் அமெரிக்கா சொந்த செலவில் தனக்குத்தானே சூனியம் செய்துள்ளதா?

எல்லாம் ஊகம் தானே தவிர, ஒன்றும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஸ்ரீமா  காலத்தில், அமெரிக்கா cia இலங்கையின் றப்பர் உற்பத்தி தொழிற்துறையை முடக்குவதற்கு, ரப்பர் மரங்களை  பட்டுப் போகும் படி  செய்யக் கூடிய ஓர் நோயை இலங்கையில் பரப்பியதான ஓர் குற்றச்சட்டு பற்றி உங்களுக்கு  அந்த நேரத்தில் தெரிய வந்ததா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

சீன மருத்துவர்களின் பிரேத பரிசோதனை முடிவுகள் படி, காவிட-19 மிருகத்தால் மனிதனுக்கு கடத்தப்பட முடியாது.

சீனா சொல்லும், us army தான் வைரஸ் ஐ சீனா இதற்ள் கொண்டு சென்று பரப்பியது என்பது ஓர் சாத்யகி கூறாக இருபதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

மிருகங்களில் இருந்து மனிதர்களுக்கு கடத்தப்படமுடியாது என்று அறுதியாகக் கூறமுடியாது. இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றே உலக சுகாதார சபை (WHO) சொல்கின்றது.

அமெரிக்கன் இராணுவம் பரப்பியது என்பது conspiracy theory! வேப்பிலை கட்டினால் கொரோனா அண்டாது என்று ஏழாம் அறிவு படைத்த லெமூரியன் பரம்பரைத் தமிழரிடம் இப்படியான தியரிகள் எடுபடும்தான்!😂🤣

WHO FAQ

Coronaviruses are a large family of viruses that are common in animals. Occasionally, people get infected with these viruses which may then spread to other people. For example, SARS-CoV was associated with civet cats and MERS-CoV is transmitted by dromedary camels. Possible animal sources of COVID-19 have not yet been confirmed.  

To protect yourself, such as when visiting live animal markets, avoid direct contact with animals and surfaces in contact with animals. Ensure good food safety practices at all times. Handle raw meat, milk or animal organs with care to avoid contamination of uncooked foods and avoid consuming raw or undercooked animal products.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

 

அமெரிக்கன் இராணுவம் பரப்பியது என்பது conspiracy theory! வேப்பிலை கட்டினால் கொரோனா அண்டாது என்று ஏழாம் அறிவு படைத்த லெமூரியன் பரம்பரைத் தமிழரிடம் இப்படியான தியரிகள் எடுபடும்தான்!😂🤣

அமெரிக்க இராணுவம் பரப்பியதாக கூறியது சீன அரசு. அதனை அமெரிக்கா மறுத்திருந்தது.  தற்போதைய சூழலில் வல்லரசுகள் கூட Conspiracy theory ஐ பரப்பும் நிலைக்கு வந்துவிட்டதா 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

200130165125-corona-virus-cdc-image-supe என்னை கேட்டால் நல்ல "பார்த் ரெ கேக்கை" மாதிரியாக கொண்டு சப்பயள் ஏன் இந்த வைரஸை ரிசைன் செய்திருக்க படாது.. ?👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அமெரிக்க இராணுவம் பரப்பியதாக கூறியது சீன அரசு. அதனை அமெரிக்கா மறுத்திருந்தது.  தற்போதைய சூழலில் வல்லரசுகள் கூட Conspiracy theory ஐ பரப்பும் நிலைக்கு வந்துவிட்டதா 🤔

சீன அரசு உத்தியோகபூர்வமாகச் சொல்லவில்லை!

ஒரு ராஜதந்திரி ற்விற்றரில் சொன்னதை சீன அரசு சொன்னதாகச் சொல்லக்கூடாது. 

 

Chinese diplomat promotes conspiracy theory that US military brought coronavirus to Wuhan

Coronavirus fact-check: Separating fear from fact

Hong Kong (CNN)  A prominent Chinese official has promoted a conspiracy theory that the United States military could have brought the novel coronavirus to China -- and it did not originate in the city of Wuhan, as thought.

Posting to his more than 300,000 followers on Twitter, Foreign Ministry spokesman Zhao Lijian republished a video of Robert Redfield, the director for the US Centers for Disease Control and Prevention, addressing a US Congressional committee on March 11. 

In the clip, Redfield said some influenza deaths in the US were later identified as cases of Covid-19, the disease caused by the novel coronavirus.

Redfield didn't say when those people had died or over what time period, but Zhao pointed to his remarks in support of a growing conspiracy theory that the coronavirus did not originate in Hubei province in central China. He did not offer any further evidence for the claim.

 

 

2/2 CDC was caught on the spot. When did patient zero begin in US? How many people are infected? What are the names of the hospitals? It might be US army who brought the epidemic to Wuhan. Be transparent! Make public your data! US owe us an explanation!

 
Embedded video
 
 
 
 

 

"CDC was caught on the spot. When did patient zero begin in US? How many people are infected? What are the names of the hospitals? It might be US army who brought the epidemic to Wuhan. Be transparent! Make public your data! US owe us an explanation!" the Foreign Ministry official said.

Hundreds of athletes from the US military were in Wuhan for the Military World Games in October 2019.

The video of Redfield was also published to Twitter by other state media outlets, including national broadcaster CCTV and the popular Global Times tabloid.

On Friday, Zhao's fellow Foreign Ministry spokesman Geng Shuang said there were "varied opinions" on the origin of the virus in the international community.

"China always considers this a scientific question, which should be addressed in a scientific and professional manner," he said, avoiding questions on whether Zhao's tweet represented the Chinese government's official position.

https://edition.cnn.com/2020/03/13/asia/china-coronavirus-us-lijian-zhao-intl-hnk/index.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

சீன அரசு உத்தியோகபூர்வமாகச் சொல்லவில்லை!

ஒரு ராஜதந்திரி ற்விற்றரில் சொன்னதை சீன அரசு சொன்னதாகச் சொல்லக்கூடாது. 

 

 

 

Chinese Ambassador Says Coronavirus Conspiracy ‘Was First Initiated in US’

Subscribe

Ambassador Cui Tiankai has emphasised the importance of suppressing rumours on the origins of COVID-19, noting it is up to scientists to map them. He busted the accusations of covering up data, suggesting Beijing couldn’t alert the world without first verifying the information.

Chinese Envoy to the United States Cui Tiankai stressed it is Washington that first started the coronavirus blame game, acknowledging it is "very harmful" for diplomats and journalists to speculate about the origins of COVID-19 as this is a mission for scientists, he told Axios in an interview. The script of it was posted on the website of the Chinese Embassy on 23 March.

Cui addressed multiple rumours and speculation regarding the spread of the virus, including that the virus was allegedly devised in a Chinese lab, suggesting the conspiracy "was first initiated [in the US]".

The ambassador was asked about Chinese Foreign Ministry spokesperson Zhao Lijian’s assumption that the US Army might have intentionally brought the virus to Wuhan in October 2019. He hit back arguing he is no position to interpret Zhao’s words. He also reiterated that there should be no room for rumours, in a reference to an earlier, 9 February, interview, when he refuted Senator Tom Cotton of Arkansas’ claims that the coronavirus could have been part of China's biological warfare programme as “absolutely crazy".

‘No Covering Up, but Identifying the Virus ’

Separately, Cui vehemently refuted accusations that the Chinese authorities had attempted to cover up the outbreak and suppressed the spread of vital information in the early stages of the epidemic. 

"It's not a process of covering up… It is a process of discovering this new kind of virus, to do a good job in identifying the virus, know more about it, learn more about the routes of transmission and how to respond", Cui said, stressing that after the main bulk of data was gathered, including the sequencing of the coronavirus genome, China shared "everything" with the World Health Organisation and the global community.

He lauded Beijing’s "resolute and determined efforts” to effectively contain the outbreak, stressing the marked downward trenc in the number of cases across China.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் வெளிப்படையாக உண்மை, இதனாலேயே அமெரிக்கா வின் ஆளும் குளாம் சீனாவை தகவல்களை மறைத்தாக  கூறுகிறது.

சீனா தகவல் முழுக்க கையளித்து, டிசம்பர் 2019, இறுதி வாரம்.

அடுத்து வந்த ஓர் மாதம் மிகவும் முக்கியமும், சென்சிடிவ் ஆனா நேரமும்.

இவர்கள் (US மற்றும் மேற்கு), cia எச்சரித்தும், ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நான் முன்பு வேறு திரியில் சொல்லியது போல, senate intteligence commitie இல் அங்கம் வகிக்கும் 3 செனட்டர்கள் அடிபடை கூடிய பங்குகளை (ஹோட்டல், travel) விற்று, விலை ஏறக் கூடிய பங்குகளை (remote presence technology, citrix) வாங்கி இருந்தனர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kadancha said:

ஒன்று மட்டும் வெளிப்படையாக உண்மை, இதனாலேயே அமெரிக்கா வின் ஆளும் குளாம் சீனாவை தகவல்களை மறைத்தாக  கூறுகிறது.

சீனா தகவல் முழுக்க கையளித்து, டிசம்பர் 2019, இறுதி வாரம்.

அடுத்து வந்த ஓர் மாதம் மிகவும் முக்கியமும், சென்சிடிவ் ஆனா நேரமும்.

இவர்கள் (US மற்றும் மேற்கு), cia எச்சரித்தும், ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நான் முன்பு வேறு திரியில் சொல்லியது போல, senate intteligence commitie இல் அங்கம் வகிக்கும் 3 செனட்டர்கள் அடிபடை கூடிய பங்குகளை (ஹோட்டல், travel) விற்று, விலை ஏறக் கூடிய பங்குகளை (remote presence technology, citrix) வாங்கி இருந்தனர்.  

நாட்டு நடப்புக்களை சற்று உற்ருக் கவனித்தால் கொறோனா வைரஸ் திட்டமிட்டு பரப்பப்படுவதாக / உருவாக்கப்பட்டதாக  சந்தேகிக்கத் தோன்றும் 🤔

Link to comment
Share on other sites

திட்டமிட்டு பரப்பப்பட்ட கொரோனா வைரஸ்..? ஹர்பஜன் சிங் வெளியிட்ட அதிர்ச்சியான வீடியோ ஆதாரம் By Karthik...

 



Read more at: https://tamil.asianetnews.com/sports-cricket/harbhajan-singh-feels-corona-virus-spread-is-pre-planned-after-watching-korean-web-series-q7whg7

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.