Jump to content

இலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...!

Recommended Posts

(எம்.மனோசித்ரா)

பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளமையால் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 26 பேர் அந்த பிரதேசத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அத்தோடு குறித்த கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பண்டாரகம பிரதேச செயலகப்பிரிவில் அட்டலுகம என்ற பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளார். 

இவர் சுமார் 26 நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளார். அதற்கமைய மருத்துவ ஆலோசனைகளின் படி குறித்த 26 பேரும் அந்த பகுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் அந்த கிராமத்தவர்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளது. அந்த பிரதேசத்திலிருந்து வெளிச் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்படுகிறது.

மேலும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள 26 பேரும் 14 நாட்களுக்கு முறையான மருத்துவ ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் உரிய சுகாதார அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.

https://www.virakesari.lk/article/78822

Link to comment
Share on other sites

20 ஆயிரம் பேருடன் முடக்கப்பட்டது கிராமம் ; நடந்ததென்ன ? இதோ முழுத் தகவல் ! 

(எம்.எப்.எம்.பஸீர்)

டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகாமல் ஊர் முழுதும் சுற்றித் திரிந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து முஸ்லிம் கிராமம் ஒன்று முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் , பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டுலுகம முஸ்லிம் ஊரே இவ்வாறு வெளித் தொடர்புகளில் இருந்து முற்றாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஊரை சேர்ந்த சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரம் பேர்வை இவ்வாறு அவர்களது வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி முழு ஊரையும் ஒரு தனிமைப்படுத்தல் நிலையம் போன்று முடக்கி வைத்துள்ளதாகவும், 14 நாட்களுக்கு அந்த ஊருக்குள் எவரும் செல்லவோ அங்கிருந்து எவரும் வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டாது என களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சஞ்சய இரசிங்க மற்றும் களுத்துறை மாவட்ட செயலர் யூ.டி.சி. ஜயலால் ஆகியோர் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  குறித்த கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர், மிக நெருங்கிப் பழகிய 26 பேரை அவ்வூருக்குள்ளேயே பொது இடமொன்றில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்த சுகாதார துறையினரும் பாதுகாப்புத் தரப்பினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அட்டுலுகம ஊரின் 6 கிராம சேவகர் பிரிவுகளுக்குள் உள்ளடங்கும் நபர்களே இவ்வாறு அவ்வூரின் சர்வோதய அமைப்பின் கட்டிடம் ஒன்றில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களை அங்கு தடுத்து வைத்து கண்காணிப்பதற்கான வசதிகளை இரானுவத்தினர் அந்த கட்டிடத்தில் ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.

அதன்படி இன்று முதல் இந்த 26 பேரும் மருத்துவ கண்கானிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளதாக இந்நடவடிக்கைகளை கண்காணிக்கும் இராணுவத்தின் கேர்ணல் கமல் ஜயசூரிய தெரிவித்தார்.

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நபர், டுபாய்க்கு குறித்த அட்டுலுகம - மாராவ கிராமத்துக்கு மிக அருகில் உள்ள கலிடெங்மண்டிய கிராமத்தில் உள்ள நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார்.
 
டுபாயில் 2 நாட்கள் தங்கியிருந்த பின்னர் கடந்த 19 ஆம் திகதி  நாட்டுக்கு வந்துள்ளார். இவ்வாறு வருகை தந்த அவர், சுகாதார தரப்புக்கோ அல்லது பாதுகாப்பு பிரிவினருக்கோ அது குறித்து அறிவிக்காமலும் சுய தனிமைபப்டுத்தலில் ஈடுபடாமலும் இருந்துள்ளார். ஊரெல்லம் சுற்றித் திரிந்துள்ள குறித்த நபர் தொடர்பில் கடந்த 24 ஆம் திகதி பண்டாரகம பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந் நிலையில் அன்றைய தினமே குறித்த நபரின் வீட்டுக்கு சுகாதார அதிகாரிகளுடன் பொலிஸார் சென்றுள்ளனர். இதன்போது அந் நபரிடம் பொலிஸார் விசாரித்த போது முதலில் தான் டுபாய் சென்றதை அந்நபர் ஏற்றுக்கொள்ளாமல் மறைத்துள்ளார்.

நீண்ட விசாரணைகளின் போதே அவர் அதனை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரை பொலிசாரும் சுகாதாரத் துறையினரும் அவ்வீட்டுக்குள்ளேயே சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இந் நிலையில் மறுநாள் 25 ஆம் திகதி கொரோனா அறிகுறிகள் தென்படவே அவர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போது அவருக்கு கொரோனா இருப்பது 26 ஆம் திகதி மாலை உறுதியான நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிசார் முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த நபர் டுபாயிலிருந்து வந்த பின்னர் முழு ஊரிலும் சுற்றித் திரிந்துள்ளதாகவும், பலரது வீடுகளுக்கும் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்தே முழு ஊரையும் முடக்கியதாக களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சஞ்சய இரசிங்க கூறினார். அந்த ஊருக்குள் உள் நுழையவோ வெளிச்செல்லவோ எவருக்கும் எக்காரணத்துக்காகவும் அனுமதியில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி அந்த ஊருக்குள் நுழைய, வெளியேற முடியுமான அனைத்து  வழிகளையும் முடக்கியுள்ளதுடன் ஊரை சுற்றி 8 பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்ப்ட்டுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையும் இராணுவத்தினரும் அழைக்கப்பட்டு ஊர் முழுதும் அவ்வப்போது ரோந்து பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

ஊரை சுற்றியும் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அனைவரையும் அவரவர் வீடுகளில் தனிமைப்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த கிராமம் முஸ்லிம் கிராமம் என்ற நிலையில், அங்கு மக்கள் மிகவும் நெருக்கமாக பழகி ஒன்றாக கூடி வாழ்ந்து வந்துள்ளதாகவும் அதனால் இந்த தொற்று பரவலுக்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதை கருத்தில் கொண்டு ஊரையே முடக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தொற்றாளருடன் மிக நெருங்கிய தொடர்புகளை பேணியோரை தனியாக பிரித்தெடுத்து தனிமைப்படுத்தியதாகவும், ஏனையோரை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே தொற்றாளருடன் டுபாய் சென்று திரும்பிய அவரது நண்பருக்கு இதுவரை கொரோனா தொற்று அறிகுறிகள் காட்டாத நிலையில், அவரும் அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அந்நபருடனும் தொடர்புகளை பேணியவர்களை தேடிவரும் பொலிசார் அவர்களையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சஞ்சய இரசிங்க கூறினார்.

இதனிடையே இன்று காலை அட்டுலுகம - மாராவ பகுதியைச் சேர்ந்த கொரோனா தொற்றாளரின் தந்தை மற்றும் சகோதரிக்கு குறித்த தொற்றின் அறிகுறிகள்  தென்பட்டதை அடுத்து 1990& அம்பியூலன்ஸ் வண்டி ஊடாக களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட அட்டுலுகம முடக்கப்பட முன்னர் அங்கு சென்று திரும்பியதாக கூறப்படும் பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இருவரையும் அவ்வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/78834

Link to comment
Share on other sites

14 minutes ago, ampanai said:

பெரும்பான்மை இன  மக்கள்  இந்த சிறுபான்மை மக்கள் மீது தாக்குதலை முன்னெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளைக்கு சுவிஸ் போதகர் தப்பித்தார் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

கொஞ்ச நாளைக்கு சுவிஸ் போதகர் தப்பித்தார் 😂

தெரியாமல் செய்து போட்டார். மன்னிப்போம் மறப்போம். 😂

Link to comment
Share on other sites

இன்று டுவிட்டரில் ஒரு வீடியோ பரவிக் கொண்டு இருக்கு. பேருவளையில் ஊரடங்கை மதிக்காமல் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஜூம்மா தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு போகும் வீடியோ. வீடியோ எடுத்து பரப்பியதும் சமூக பிரக்ஞை உள்ள இன்னொரு முஸ்லிம் அன்பர்.

வீடியோ எந்தளவிற்க உண்மை என தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

தெரியாமல் செய்து போட்டார். மன்னிப்போம் மறப்போம். 😂

தவறை மன்னிக்கலாம் ஆனால் பொறுப்பற்ற தன்மையை மன்னிக்க முடியாது 😡

Link to comment
Share on other sites

6 hours ago, ampanai said:

20 ஆயிரம் பேருடன் முடக்கப்பட்டது கிராமம் ; நடந்ததென்ன ? இதோ முழுத் தகவல் ! 

(எம்.எப்.எம்.பஸீர்)

....

அந்த ஊரை சேர்ந்த சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரம் பேர்வை இவ்வாறு அவர்களது வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

500 குடும்பங்களை சேர்ந்த 20,000 பேர் - ஒரு குடும்பத்தில் சராசரி 40 பேரா? எழுதியவர் எம்.எப்.எம்.பஸீர் - ஒரு முஸ்லிம், தானறிந்த முஸ்லிம் கிராமம் பற்றி தவறாக அதுவும் பிரபலமான வீரகேசரியில் எழுதி இருக்க மாட்டார். அதெப்படி ஒரு குடும்பத்தில் 40 பேர் இருக்க, படுக்க முடிகிறது? பெரிய வீடுகளாக இருக்குமோ? ஒரு தாய், ஒரு தகப்பனுக்கு 38 பிள்ளைகளா? அல்லது ஒரு தகப்பன் நாலு மனைவியர் ஆளுக்கு 8 பிள்ளைகளா? எப்படி இப்படி சாதிக்கிறார்கள்? தமிழ் மக்களுக்கு போரின் பின்னான காலத்தின் தேவையான குடும்ப வளர்ச்சி கலாச்சாரம் இதுவன்றோ? 

Link to comment
Share on other sites

1 minute ago, கற்பகதரு said:

5000  குடும்பங்களாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

20 ஆயிரம் பேருடன் முடக்கப்பட்டது கிராமம் ; நடந்ததென்ன ? இதோ முழுத் தகவல் ! 

(எம்.எப்.எம்.பஸீர்)

டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகாமல் ஊர் முழுதும் சுற்றித் திரிந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து முஸ்லிம் கிராமம் ஒன்று முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் , பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டுலுகம முஸ்லிம் ஊரே இவ்வாறு வெளித் தொடர்புகளில் இருந்து முற்றாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஊரை சேர்ந்த சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரம் பேர்வை இவ்வாறு அவர்களது வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி முழு ஊரையும் ஒரு தனிமைப்படுத்தல் நிலையம் போன்று முடக்கி வைத்துள்ளதாகவும், 14 நாட்களுக்கு அந்த ஊருக்குள் எவரும் செல்லவோ அங்கிருந்து எவரும் வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டாது என களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சஞ்சய இரசிங்க மற்றும் களுத்துறை மாவட்ட செயலர் யூ.டி.சி. ஜயலால் ஆகியோர் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  குறித்த கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர், மிக நெருங்கிப் பழகிய 26 பேரை அவ்வூருக்குள்ளேயே பொது இடமொன்றில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்த சுகாதார துறையினரும் பாதுகாப்புத் தரப்பினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அட்டுலுகம ஊரின் 6 கிராம சேவகர் பிரிவுகளுக்குள் உள்ளடங்கும் நபர்களே இவ்வாறு அவ்வூரின் சர்வோதய அமைப்பின் கட்டிடம் ஒன்றில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களை அங்கு தடுத்து வைத்து கண்காணிப்பதற்கான வசதிகளை இரானுவத்தினர் அந்த கட்டிடத்தில் ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.

அதன்படி இன்று முதல் இந்த 26 பேரும் மருத்துவ கண்கானிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளதாக இந்நடவடிக்கைகளை கண்காணிக்கும் இராணுவத்தின் கேர்ணல் கமல் ஜயசூரிய தெரிவித்தார்.

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நபர், டுபாய்க்கு குறித்த அட்டுலுகம - மாராவ கிராமத்துக்கு மிக அருகில் உள்ள கலிடெங்மண்டிய கிராமத்தில் உள்ள நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார்.
 
டுபாயில் 2 நாட்கள் தங்கியிருந்த பின்னர் கடந்த 19 ஆம் திகதி  நாட்டுக்கு வந்துள்ளார். இவ்வாறு வருகை தந்த அவர், சுகாதார தரப்புக்கோ அல்லது பாதுகாப்பு பிரிவினருக்கோ அது குறித்து அறிவிக்காமலும் சுய தனிமைபப்டுத்தலில் ஈடுபடாமலும் இருந்துள்ளார். ஊரெல்லம் சுற்றித் திரிந்துள்ள குறித்த நபர் தொடர்பில் கடந்த 24 ஆம் திகதி பண்டாரகம பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந் நிலையில் அன்றைய தினமே குறித்த நபரின் வீட்டுக்கு சுகாதார அதிகாரிகளுடன் பொலிஸார் சென்றுள்ளனர். இதன்போது அந் நபரிடம் பொலிஸார் விசாரித்த போது முதலில் தான் டுபாய் சென்றதை அந்நபர் ஏற்றுக்கொள்ளாமல் மறைத்துள்ளார்.

நீண்ட விசாரணைகளின் போதே அவர் அதனை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரை பொலிசாரும் சுகாதாரத் துறையினரும் அவ்வீட்டுக்குள்ளேயே சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இந் நிலையில் மறுநாள் 25 ஆம் திகதி கொரோனா அறிகுறிகள் தென்படவே அவர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போது அவருக்கு கொரோனா இருப்பது 26 ஆம் திகதி மாலை உறுதியான நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிசார் முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த நபர் டுபாயிலிருந்து வந்த பின்னர் முழு ஊரிலும் சுற்றித் திரிந்துள்ளதாகவும், பலரது வீடுகளுக்கும் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்தே முழு ஊரையும் முடக்கியதாக களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சஞ்சய இரசிங்க கூறினார். அந்த ஊருக்குள் உள் நுழையவோ வெளிச்செல்லவோ எவருக்கும் எக்காரணத்துக்காகவும் அனுமதியில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி அந்த ஊருக்குள் நுழைய, வெளியேற முடியுமான அனைத்து  வழிகளையும் முடக்கியுள்ளதுடன் ஊரை சுற்றி 8 பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்ப்ட்டுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையும் இராணுவத்தினரும் அழைக்கப்பட்டு ஊர் முழுதும் அவ்வப்போது ரோந்து பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

ஊரை சுற்றியும் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அனைவரையும் அவரவர் வீடுகளில் தனிமைப்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த கிராமம் முஸ்லிம் கிராமம் என்ற நிலையில், அங்கு மக்கள் மிகவும் நெருக்கமாக பழகி ஒன்றாக கூடி வாழ்ந்து வந்துள்ளதாகவும் அதனால் இந்த தொற்று பரவலுக்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதை கருத்தில் கொண்டு ஊரையே முடக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தொற்றாளருடன் மிக நெருங்கிய தொடர்புகளை பேணியோரை தனியாக பிரித்தெடுத்து தனிமைப்படுத்தியதாகவும், ஏனையோரை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே தொற்றாளருடன் டுபாய் சென்று திரும்பிய அவரது நண்பருக்கு இதுவரை கொரோனா தொற்று அறிகுறிகள் காட்டாத நிலையில், அவரும் அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அந்நபருடனும் தொடர்புகளை பேணியவர்களை தேடிவரும் பொலிசார் அவர்களையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சஞ்சய இரசிங்க கூறினார்.

இதனிடையே இன்று காலை அட்டுலுகம - மாராவ பகுதியைச் சேர்ந்த கொரோனா தொற்றாளரின் தந்தை மற்றும் சகோதரிக்கு குறித்த தொற்றின் அறிகுறிகள்  தென்பட்டதை அடுத்து 1990& அம்பியூலன்ஸ் வண்டி ஊடாக களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட அட்டுலுகம முடக்கப்பட முன்னர் அங்கு சென்று திரும்பியதாக கூறப்படும் பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இருவரையும் அவ்வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/78834

இவர்கள் இருவரும் குணமான பிறகு நீண்ட காலத்திற்கு சிறையில் அடைக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.