Sign in to follow this  
ampanai

“உலக பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்”

Recommended Posts

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால், நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதாரம் 2009ஆம் ஆண்டு அடைந்த வீழ்ச்சியை விட மோசமாக வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார்.

“கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக உலகம் தற்போது எதிர்பாராத தடையை சந்தித்து வருகிறது. இதனால் 2020-21ஆம் நிதி ஆண்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். ஆனால், அது 2021இல் மீண்டும் சரியாக வாய்ப்புள்ளது; அது மிகப் பெரிய எழுச்சியாகவும் இருக்கும். பணப்புழக்க பிரச்சனைகள் கடன் பிரச்சனைகளாக மாறாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்” என்று நேற்று நடந்த சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் குழு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/live/global-52073738

உலகளாவிய நிதி நெருக்கடி 2009 ஐ விட மோசமானதாக இருக்கும்: ஐ.எம்.எப் தலைவர் கருத்து

கொரோனா பாதிப்பானது சீனா, இத்தாலி மட்டுமல்லாது சர்வதேச அளவில் பல நாடுகளில் பாதிப்பை உருவாக்கியுள்ளது. தற்போது பல நாடுகள் முடக்க நடவடிக்கையைக் கையாண்டிருக்கின்றன. இந்த நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு சேர்த்து சர்வதேச பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் வாஷிங்டனை தளமாகக் கொண்டு கடன் வழங்கும் குழுவுடன் ஏற்பட்ட சந்திப்பைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

மேலும், “கடந்த சில வாரங்களில் சந்தைகளில் 83 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளன. அதில் பெரும்பகுதியை ஈடுகட்ட வேண்டுமெனில் உள்நாட்டு வளங்கள் நாடுகளுக்கு போதுமானதாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது அவ்வாறாக ஏதும் இல்லை. ஏற்கெனவே பல நாடுகள் கடன் சுமையில் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.”

“குறைந்த வருவாயைக் கொண்ட 80 க்கும் அதிகமான நாடுகள் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியைக் கோரியிருக்கின்றன. உதவி கோரியுள்ள நாடுகளின் சொந்த இருப்புகள் மற்றும் உள்நாட்டு வளங்கள் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவர்களுக்குப் பெரிய அளவில் உதவாது.” என்று ஜார்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமீபத்தில் அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்த 2.2 டிரில்லியன் டாலர் பொருளாதார தொகுப்பையும் அவர் வரவேற்றுள்ளார். “உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை மெருகூட்டுவதற்கு இந்த நிதி தொகுப்பு முற்றிலும் அவசியம்” என்று கூறியுள்ளார்.

https://www.ndtv.com/tamil/coronavirus-updates-clear-we-have-entered-recession-that-will-be-worse-than-2009-imf-chief-kristalin-2201997?pfrom=home-topscroll

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this