Jump to content

`ஊர் எல்லையில் செக்போஸ்ட்; கை கழுவிய பிறகே அனுமதி!' - கொரோனாவைத் தடுக்கக் களமிறங்கிய தஞ்சை கிராமம்


Recommended Posts

எங்க ஊரைச் சேர்ந்தவர்கள் வெளியே சென்று வந்தாலும் அல்லது வெளியூரிலிருந்து எங்க ஊருக்கு வருபவர்களாக இருந்தாலும் அந்தத் தண்ணீரில் கைகளைச் சுத்தமாகக் கழுவிய பிறகு மாஸ்க் அணிந்து கொண்டுதான் உள்ளே செல்ல அனுமதித்து வருகிறோம்.

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் உள்ள நுழைவாயில்களில் செக் போஸ்ட் அமைத்து அதில் இரண்டு பேர் வீதம் கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், யார் ஊருக்குள் வந்தாலும் மஞ்சள், வேப்பிலை, டெட்டால் கலந்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கைகளைச் சுத்தமாகக் கழுவிய பிறகே ஊருக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.

vikatan%2F2020-03%2Fe1318c41-f602-4b16-9a07-14658117d362%2F3aa4c1ed_35d9_492c_9d58_48272b277566.jpg?rect=0%2C113%2C1276%2C718&w=480&auto=format%2Ccompress

 

தஞ்சாவூர் அருகே உள்ளது காசவளநாடு புதூர் என்ற கிராமம். இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாயிகள் நிறைந்த இந்தக் கிராமத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து கொரோனா பரவாமல் தடுப்பதற்கான செயலில் ஈடுபட்டுள்ளனர். ஊருக்குள் வரும் நபர்களிடம், எப்படி இருந்தால் கொரோனா பரவாமல் தடுக்கலாம் என்றும் எடுத்துக் கூறி அசத்துகின்றனர்.

இதுகுறித்து புதூர் மக்கள் சிலரிடம் பேசினோம், `` உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தற்போது தமிழகத்தை மிரட்டி வருகிறது. இதைத் தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் மக்களாகிய நாம் அதற்கு நல்ல ஒத்துழைப்பைக் கொடுத்தால் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

அந்த வகையில் எங்கள் ஊரில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் கொரோனா பரவாமல் காக்கும் விதமான செயல்களைச் செய்ய முடிவெடுத்தோம். அதன்படி முதலில் எங்கள் ஊரில் உள்ள நான்கு நுழைவாயில்களில் செக்போஸ்ட் அமைத்து அதில் எப்போதும் இரண்டு பேர் வீதம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வைத்தோம்.

அத்துடன் செக்போஸ்ட்டிலேயே மஞ்சள், வேப்பிலை, டெட்டால் கலந்த தண்ணீர் ஒரு கேனில் வைக்கப்பட்டிருக்கும். எங்க ஊரைச் சேர்ந்தவர்கள் வெளியே சென்று வந்தாலும் அல்லது வெளியூரிலிருந்து எங்க ஊருக்கு வருபவர்களாக இருந்தாலும் அந்தத் தண்ணீரில் கைகளைச் சுத்தமாகக் கழுவிய பிறகு மாஸ்க் அணிந்து கொண்டுதான் உள்ளே செல்ல அனுமதித்து வருகிறோம்.

ஒரு சிலர், `ஏங்க இங்கெல்லாம் கொரோனா வருமா?' எனக் கேட்கின்றனர். அவர்களிடம் அதன் விபரீதத்தை எடுத்துக் கூறி எப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை விளக்குவோம். வெளியூரிலிருந்து வரும் நபர்களிடம், `எதற்காக இங்கு வர்றீங்க யார் வீட்டுக்குப் போறீங்க?' என்கிற விவரத்தைக் கேட்டு அவர்களின் முகவரி மற்றும் செல் நம்பர் ஆகியவற்றையும் நோட்டில் குறித்து வைக்கிறோம்.

எங்க ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் ஊரின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் தன்னலத்தோடு ஆர்வமுடன் இதைச் செய்து வருகின்றனர். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் வருமுன் காப்பதுதான் சிறந்த தீர்வு, வந்தபின் புலம்பி எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதனால் முன்னெச்சரிக்கையாக இந்த ஏற்பாட்டை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நாளிலிருந்து செய்து வருகிறோம்.

விவசாயிகளுக்கு சமூகப் பொறுப்புணர்வு என்பது அதிகமாக இருக்கும். அதை நிரூபிக்கும் வகையில், கொரோனா பரவாமல் காக்கும் வகையில் இதை நடைமுறைப்படுத்தி வருகிறோம். பக்கத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட பலரும் எங்களின் இந்தச் செயலைப் பாராட்டி வருவதாகத் தெரிவித்தனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/thanjavur-village-people-awareness-work-against-corona

 

Link to comment
Share on other sites

8 minutes ago, ampanai said:

எங்க ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் ஊரின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் தன்னலத்தோடு ஆர்வமுடன் இதைச் செய்து வருகின்றனர். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் வருமுன் காப்பதுதான் சிறந்த தீர்வு, வந்தபின் புலம்பி எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதனால் முன்னெச்சரிக்கையாக இந்த ஏற்பாட்டை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நாளிலிருந்து செய்து வருகிறோம்.

தமிழக, தமிழீழ கிராமங்கள் இப்படி இந்த முன்மாதிரியை பின்பற்றவேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.