Sign in to follow this  
ampanai

ஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்

Recommended Posts

கொரோனா வைரஸ் காரணமாக தன்னை தனிமைப்படுத்தியுள்ள பிரிட்டனின் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் பிரிட்டனிற்கு செயற்கை சுவாசக்கருவிகள் வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை பொறிஸ்ஜோன்சனை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நான் ஹலோ என தெரிவிப்பதற்கு முன்னரே எங்களிற்கு வென்டிலேட்டர்கள் - செயற்கை சுவாசக்கருவிகள் வேண்டும் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்தார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

trump_jhonson_1.jpg

 

பொறிஸ் துரதிஸ்டவசமாக  கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் இது மோசமான விடயம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் சிறந்த நிலைக்கு திரும்புவார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/78844

 

 

Share this post


Link to post
Share on other sites

நட்பு நாடுகளுக்கு உதவ, 10 நாட்களில் 1 லட்சம் வென்டிலேட்டர்கள்-டிரம்ப்

அடுத்த 10 நாட்களில் ஒரு லட்சம் வென்டிலேட்டர்களை தயாரித்து, தேவைப்படும் நட்பு நாடுகளுக்கு விநியோகிக்க தயார் என  அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

கொரோனா பாதித்த பிரிட்டன் பிரதமரிடம் தாம் தொலைபேசியில் பேசியதாகவும், தனது நாட்டிற்கு அவர் கேட்ட முதல் உதவி வென்டிலேட்டர்கள்தான் என டிரம்ப் கூறியுள்ளார்.

இதேபோல, இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளும் வென்டிலேட்டர்கள் கேட்பதாகவும், தங்களது தேவைக்காகவும் பிற நாடுகளுக்கு உதவுவதற்காகவும் பெரும் எண்ணிக்கையில் அவற்றை தயாரிக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

பிற நாடுகள் செய்ய முடியாதவற்றை செய்யக்கூடிய நிலையில் அமெரிக்கா உள்ளதாகவும், மிக விரைவாக 1 லட்சம் வென்டிலேட்டர்களை தயாரித்து, இத்தாலி பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடையாக அளிக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவக் கருவிகளை தயாரிக்குமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிடும் சட்டத்தின் ஒரு பகுதியை அதிபர் டிரம்ப் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.polimernews.com/dnews/105141/நட்பு-நாடுகளுக்கு-உதவ,-10நாட்களில்-1-லட்சம்வென்டிலேட்டர்கள்-டிரம்ப்

Share this post


Link to post
Share on other sites

எல்லாரும் மாறி மாறி புளுகுறாங்கள்.
பொறிஸ் தம்பிக்கு  இப்ப ரம்பை விட்டால் வேறை ஆக்கள் இல்லை.ஐரோப்பிய யூனியன்லை இருந்தாலாவது மாறிக்கீறி ஏதாவது செய்யலாம். சீனாவிட்டையும் போகேலாது.தாய்வான் நாறல் ஒரு பக்கம்.😂

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this