Jump to content

INTRODUCTION AND HISTORY OF SAIVA SIDDHANTA

Recommended Posts

  • 11 months later...
  • Replies 107
  • Created
  • Last Reply

ஆறுமுக நாவலேரே உங்கள் சேவைக்கு நன்றிகள்.

செய்யுள்களின் செய்திகளை ஆங்கிலப்படுத்துவது மாத்திரமல்லாமல், தமிழ் உரைவடிவிலும் எளிமைப்படுத்தினால் வாழும் சந்ததி வாசித்து அறிவதற்கு இலகுவாக இருக்கும்.

இது எனது தனிப்பட்ட கருத்து மாத்திரமே.

Link to comment
Share on other sites

இந்தக் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.

சின்ன வயசில தேவாரம் சொல்லித் தருவதாக சில பள்ளி நண்பர்கள் முன்வதார்கள்.

'தோடுடைய செவியன்... உது யாருடைய பொடியன்...' என்று சொல்லித் தர, நானும் ஆசிரியரிடம் போய் சொல்லிக் காட்டினேன், பிரம்பால கையில அடிவாங்கியது ஞாபகம்...

இந்து மதத்தைப் பற்றி அறிய மிக ஆவல்... இலகுவான தமிழில் எழுதினால் எழிதில் புரிந்து கொள்ள வாய்ப்புகள் உண்டு. :)

பிறப்பில் கிறிஸ்தவ மதத்தினன் ஆனாலும் தனியே ஒரு மதம் பிடித்த போக்கு எனது. அதனால் ஒரு சமயமும் கைகூடவில்லை.

ஆரம்பக் கல்வியை சைவப் பாடசாலையிலேயே பயின்றேன். (அதற்காக உயர்கல்வியை Oxbridge இல் கற்றேன் என நினைக்க வேண்டாம்)

தேவாராம், திருவாசகம் எல்லாம் முன்பு மனப்பாடம். கேட்க இனிமையாக இருக்கும். சிறு வயதில் திருவாசகத்தில் வார்த்தைகளை மாற்றி பாடி அடி வாங்கியிருக்கிறேன். எல்லா சமய பாடல்களும் பிடிக்கும்.

தமிழ் பாடல்களை (தேவாரம், திருவாசகம் , ஆழ்வார் பாடல்கள், சித்தர் பாடல்கள்.........) எளிமைப்படுத்தி யாழ் போன்ற இணையங்களில் பதிந்தால் பலருக்குப் பயன்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைவோம் இணைந்திருப்போம் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின் வருமாறு எழுதினால் இளைய தலைமுறை, எமது மூதாதையர் விட்டுச் சென்ற பொக்கிசங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து!

உதாரணத்திற்குப் பின் வரும் பாடலை எடுத்துக் கொள்வோம்!

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,

நாரத முனிவற்கேற்ப, நயம்பட உரைத்த நாவும்,

தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்

வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடிலங்கை புக்கான்!

மூலம்- கம்ப ராமாயணம்

யானைகளுடன் மோதியபோது அவற்றின் கூரிய தந்தங்களால் காயப் பட்ட நெஞ்சையும் , திருக்கைலாச மலையைத் தூக்கிய வலிமையான தோள்களையும் , நாரத முனிவர் கேட்டபடி சாமகானம் பாடிச் சிவபெருமானை மகிழ்வித்த நாக்கையும், இந்தப் பூவுலகை ஆண்ட பத்துத் தலைகளில் இருந்த அரச முடிகளையும், சிவபெருமானால் உவந்தளிக்கப் பட்ட வீர வாளையும், வீரத்தையும் போர்க்களத்தில் போட்டு விட்டு வெறுமையாக இலங்கைக்குத் திரும்பினான், இராவணன்!!!

Link to comment
Share on other sites

  • 6 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.