Jump to content

ஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பெருமாள் said:

நீங்கள்  எவை வரலாற்று புத்தகங்கள் என்று   நம்பி படித்திர்களோ அவை ஒன்றிலும் இல்லை இருந்தால் கம்பு சுற்றலாம் . முஸ்லீம் இனத்தில் அதிலும் இலங்கையில் இருந்து அல்ல எழுதப்பட்டது 1)  முஸ்லீம் நாடோடியின் குறிப்பில் சிவனொளிபாத மலை பற்றி இந்துக்கள் வழி பாடு செய்யும் மலை பற்றி போறபோக்கில் எழுதி உள்ளார் மற்றபடி முஸ்லீமுக்கும் அந்த மலைக்கும் எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை   ஆதாமுக்கும்  ஏவாளுக்கும் அவர்கள் பூமியில் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு மலை இருப்பதே தெரியாது .   பவுத்தம் பற்றி சொல்லவே தேவையில்லை  இந்தியாவில் இருந்து வந்த நாடோடி இனம் தம்மை இலங்கையின் பூர்வகுடி போல் காட்டி கொள்வதுக்கு  வெட்கமில்லாமல் பூர்வகுடிகளாகிய  தமிழர்களின் சைவத்தலங்களின்  இடங்களுக்கு அருகிலே வன்முறையுடன்  துண்டை போட்டு முதலில் இடம் பிடித்து பின்பு தமதாக்கி கொள்வது வழக்கம் இன்றும் அது தொடர்கிறது உதாரணம் திருகோணமலையில் உள்ள புத்தர் சிலை ,கன்னியா வெந்நீரூற்று இப்படி பல இடங்கள் .

2) உணவுக்கு மதம் மாறிய முஸ்லிமாகினும்  கிறிஸ்தவமாகினும் தங்கள் உண்மையான வரலாற்றை திரும்பி பார்ப்பதில்லை அப்படியானவர்களிடம்  இருந்து வன்முறையும் விதண்டாவாதமும் தான் பல்கி பெருகும் சைவசமயத்தவர்களிடம் உள்ள பரந்த தன்மை உலகில் உள்ள வேறு சமயங்களில் இல்லை . 3) ஒரு சைவனால்  அல்லாஹ்வையும் தொழ  முடியும் இயேசுவிடம் மன்றாட முடியும் ஆனால் முஸ்லீமோ அல்லது கிறித்தவர்களால்  அல்லுலோயாக்களால் ஒரு சைவனின்  வழிபாட்டு இடத்துக்கு போனேன் கும்பிட்டன்  என்று நெஞ்சை நிமிர்த்தி தங்கள் சமயத்தவரிடம் பெருமையாக சொல்ல முடியாது .

இங்கு சைவர்களை  அடிமையாக நடத்தும் பூசாரிகளை நான்  திட்டுவது உண்டு ஆனால் 4) உங்களின் மத கசப்புணர்வு கருத்துக்களை கண்டும் காணாமல் போக முடியவில்லை .

கூள்டவுண் மிஸ்ரர் பெருமாள். பிளட் பிறசர் உடலுக்குக் கேடு. உடல் நலன் முக்கியமல்லோ. கூள்டவுண். கூள்டவுண்.😀

1) நீங்கள் கூறும் வரலாற்றுப் புத்தகம் எது என்று கேட்டிருந்தேன். பதில் தரவில்லை. உந்தக் கதைகளெல்லாம் நானும் கேட்டிருக்கிறேன். நானும் அதை மறுக்கவில்லை. ஆனால் புத்தகத்தின் பெயர் தெரியாவிட்டால் தெரியாது என்று கூறுங்கள். அதில் பிழையில்லை. ஆனால் அதற்கும் என்னை திட்டுவது சரியா 😀

2) இதுதானே வேணாங்கிறது. உங்கள் சமயத்தில் உங்களுக்கு பற்றிருப்பது நல்லவிடயம்தானே. அதற்கேன் பிற சமய நம்பிக்கையாளரை இழிவுபடுத்துவான் ? 😡பிற சமயங்களை இழிவுபடுத்தித்தான் சைவ சமயத்தை சிறந்த சமயமாக காட்டவேண்டுமா? அப்படியொரு தேவை சைவ சமயத்திற்கு இன்னும் ஏற்படவில்லை.👍

3) உண்மை. ஏற்றுக்கொள்கிறேன். எல்லாவற்றையும் நன்மனதுடன் பார்க்கும் பண்பு சைவ சமயத்திற்குண்டு. அதனால்தான் அதன் மீது எப்போதுமே எனக்கு நன் மதிப்புண்டு. 👍

ஆனால் சைவர்கள் பலருக்கு சைவ சமயத்தின் மகத்துவம் புரியவில்லை அதனால் தான் பிறம் சமய நம்பிக்கையாளர்களை எப்போதுமே சோற்றிற்கு மதம் மாறியதாக மதில் மேல் நின்று விசிலடிப்பர் 😜

4) உங்கள் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் சமயங்களை இழிவுபடுத்திய எனது பதிவுகள் எங்கேனும் காட்டமுடியுமா ? 😢

எப்போதெல்லாம் பிற சமய நம்பிக்கையாளரை இழிவுபடுத்துகிறீர்களோ அப்போதெல்லாம் குறுக்கே வருகிறேன். 💪

உங்களுக்கொரு சின்னக் கேள்வி. முடிந்தால் பதில் தாருங்கள்.

அரன், அரனி. இவற்றிற்கான பொருள் என்ன ?

கேள்விக்கான பதில் பின்பு. 

குட் லக் 👍

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
On 3/28/2020 at 1:50 PM, போல் said:

தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னரும் இதையே தான் பிக்குகள் செய்தனர். அப்பொழுது குண்டுகளை வீசினர், தமிழ் மக்கள் மீது. 

Link to comment
Share on other sites

பெற்றோரால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மதத்தில் அறிவுக்கு ஒவ்வாத வடி கட்டிய மூடத்தனங்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. அவை குறித்து நான் இங்கு கேள்வி எழுப்பினால் அதற்கு தர்க்க ரீதியாக பதில்   மூடத்த்தனங்களை நம்புபவர்களுக்கு இல்லாததால்  உடனே சிலர் வந்து மாற்று மதங்களை  திட்ட தொடங்கி விடுவர். அல்லது எங்கோ ஒரு மூலையில் நடந்த வேறு ஒரு  மத மூடத்தனங்களை சுட்டிக்காட்டி அங்கு  ஒரு சில பைத்தியக்காரர்கள் இருப்பதால் இங்கும் அது இருந்தால் என்ன என்பது போல்,  எம்மில் அதைவிட 100 மடங்கு அதிகமாக உள்ள மூடத்தனங்களுக்கு  வக்காலத்து வாங்குவர்.

காலத்தின் வளர்சியில் மதங்கள் விதைத்த மூடத்தனங்கள் விமர்சிக்கப்படும். அது இயல்பானது. இதன் மூலம் யார் மனதும் புண்படப் போவதில்லை. அவ்வாறு   புண்படுவதாக கூறுவது எவரையும் சிந்திக்க விடாமல் தடுக்கும் ஒரு உத்தியே தவிர வேறல்ல. உண்மையில் அவர்களுக்கு இவை எல்லாம் மூடத்தனங்கள் தான் என்பது எம்மைவிட  நன்றாகவே தெரியும் அதனால் தான் ஆத்திரப்படுகிறார்கள்.  உதாரணத்திற்கு கடவுள் இல்லை என்று ஒருவன்  கூறினால் கடவுளை உண்மையாக  நம்புபவனுக்கு கோபம் வரக்கூடாது. அப்படிக் கோபம்  வந்தால் அவனுக்கும் அந்த சந்தேகம் மனதுக்குள்  உள்ளது என்றே அர்ததம்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்கள் எது ,எது மூடத்தனம் என்று கருதுகிறீர்களோ அது,எது என்று சுட்டிக் காட்டி அது பற்றி மட்டும் விவாதீங்கள்...முழு மதத்தையும் நக்கலடிப்பதை விடுங்கள் 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

நீங்கள் எது ,எது மூடத்தனம் என்று கருதுகிறீர்களோ அது,எது என்று சுட்டிக் காட்டி அது பற்றி மட்டும் விவாதீங்கள்...முழு மதத்தையும் நக்கலடிப்பதை விடுங்கள் 

ஒன்றா இரண்டா எடுத்துச சொல்ல. 😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் புனிதநீர் தெளிப்பதால் யாருக்கு என்ன பிரச்சனை?

ஒருவேளை வடக்கு கிழக்கு வான் பரப்பில் சென்று தெளித்திருந்தால் அவர்கள் மூட நம்பிக்கைகளை எம்மீது திணிக்கிறார்கள் என்று ஆத்திரப்படலாம்.

புலம்பெயர்ந்த தமிழர்களும் தாயக தமிழர்களும் பலர் வடக்கு கிழக்கு தவிர்ந்த இடங்களை எமது நாடு என்று சொல்லி பெருமை பட்டுக்கொள்வதில்லை,

இலங்கையில் உள்ள சிங்களவர்கள் பலர் வடக்கு கிழக்கு மக்களை எமது மக்கள் என்று சொல்லி ஆசை ஆசையாக பார்ப்பதில்லை.

இந்த நிலையில் அவனது பிரதேசத்தில் அவனது வழிபாட்டுமுறைகளையும் நம்பிக்கைகளையும் கைகொள்ளும்போது அது தவறென்று விமர்சிக்க நாம் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் எது ,எது மூடத்தனம் என்று கருதுகிறீர்களோ அது,எது என்று சுட்டிக் காட்டி அது பற்றி மட்டும் விவாதீங்கள்...முழு மதத்தையும் நக்கலடிப்பதை விடுங்கள் 

சில மதங்களில் மூட தனங்கள் இருக்கிறது 
சில மூட தனங்கள மட்டுமே   மதமாக இருக்கிறது 
இந்த வேறுபாடுகளையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் 

Link to comment
Share on other sites

47 minutes ago, Maruthankerny said:

சில மதங்களில் மூட தனங்கள் இருக்கிறது 
சில மூட தனங்கள மட்டுமே   மதமாக இருக்கிறது 
இந்த வேறுபாடுகளையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் 

உண்மையான கருத்து. நன்றி

Link to comment
Share on other sites

17 minutes ago, tulpen said:

உண்மையான கருத்து. நன்றி

1. சில மதங்களில் மூட தனங்கள் இருக்கிறது - எந்த மதம் , மதங்கள் ?
2. சில மூட தனங்கள மட்டுமே   மதமாக இருக்கிறது - எவை அவை ? 

Link to comment
Share on other sites

நிறுவனப்படுத்தப்பட்ட  அனைத்து மதங்களுமே , மூட தனங்களை  மட்டுமே  மூலதனமாகக்  கொண்டு இயங்குகின்றன.

Link to comment
Share on other sites

25 minutes ago, zuma said:

நிறுவனப்படுத்தப்பட்ட  அனைத்து மதங்களுமே , மூட தனங்களை  மட்டுமே  மூலதனமாகக்  கொண்டு இயங்குகின்றன.

மனித இனத்திற்கு  உரித்தானவை : ஆசை, பயம், பாசம். 
இதற்குள் தான் நம் எல்லோருமே சுழலுகிறோம். 

இவற்றில் குறிப்பாக பயத்தை வைத்தே வளர்ந்தது மதம்.

அந்த மனித பயத்தை மனிதனே சில இடங்களில் உருவாக்குகிறான், தனது ஆசைக்கு.  

Link to comment
Share on other sites

9 hours ago, பெருமாள் said:

நீங்கள்  எவை வரலாற்று புத்தகங்கள் என்று   நம்பி படித்திர்களோ அவை ஒன்றிலும் இல்லை இருந்தால் கம்பு சுற்றலாம் . முஸ்லீம் இனத்தில் அதிலும் இலங்கையில் இருந்து அல்ல எழுதப்பட்டது  முஸ்லீம் நாடோடியின் குறிப்பில் சிவனொளிபாத மலை பற்றி இந்துக்கள் வழி பாடு செய்யும் மலை பற்றி போறபோக்கில் எழுதி உள்ளார் மற்றபடி முஸ்லீமுக்கும் அந்த மலைக்கும் எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை   ஆதாமுக்கும்  ஏவாளுக்கும் அவர்கள் பூமியில் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு மலை இருப்பதே தெரியாது .   பவுத்தம் பற்றி சொல்லவே தேவையில்லை  இந்தியாவில் இருந்து வந்த நாடோடி இனம் தம்மை இலங்கையின் பூர்வகுடி போல் காட்டி கொள்வதுக்கு  வெட்கமில்லாமல் பூர்வகுடிகளாகிய  தமிழர்களின் சைவத்தலங்களின்  இடங்களுக்கு அருகிலே வன்முறையுடன்  துண்டை போட்டு முதலில் இடம் பிடித்து பின்பு தமதாக்கி கொள்வது வழக்கம் இன்றும் அது தொடர்கிறது உதாரணம் திருகோணமலையில் உள்ள புத்தர் சிலை ,கன்னியா வெந்நீரூற்று இப்படி பல இடங்கள் .

உணவுக்கு மதம் மாறிய முஸ்லிமாகினும்  கிறிஸ்தவமாகினும் தங்கள் உண்மையான வரலாற்றை திரும்பி பார்ப்பதில்லை அப்படியானவர்களிடம்  இருந்து வன்முறையும் விதண்டாவாதமும் தான் பல்கி பெருகும் சைவசமயத்தவர்களிடம் உள்ள பரந்த தன்மை உலகில் உள்ள வேறு சமயங்களில் இல்லை . ஒரு சைவனால்  அல்லாஹ்வையும் தொழ  முடியும் இயேசுவிடம் மன்றாட முடியும் ஆனால் முஸ்லீமோ அல்லது கிறித்தவர்களால்  அல்லுலோயாக்களால் ஒரு சைவனின்  வழிபாட்டு இடத்துக்கு போனேன் கும்பிட்டன்  என்று நெஞ்சை நிமிர்த்தி தங்கள் சமயத்தவரிடம் பெருமையாக சொல்ல முடியாது .இங்கு சைவர்களை  அடிமையாக நடத்தும் பூசாரிகளை நான்  திட்டுவது உண்டு ஆனால் உங்களின் மத கசப்புணர்வு கருத்துக்களை கண்டும் காணாமல் போக முடியவில்லை .

அருமையான பதிவு!
சாக்கடைக்குள் வீழ்ந்திருந்து பொய்களையும், புரட்டுக்களையும் அள்ளி வீசுபவர்களுக்கு இவை புரிந்தாலும் புரியாத மாதிரி திரிவீனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/29/2020 at 11:07 PM, பெருமாள் said:

உங்களின் மதமான முஸ்லீம் மதத்துக்கும் சிவனொளிபாத மலைக்கும் என்ன சம்பந்தம் ? ஒன்றுமில்லையே பிறகு என்ன இழவுக்கு அங்கு சென்று வழிபாடு செய்கிறீர்கள் முஸ்லீம் வரலாற்று புத்தகங்களில் எங்காவது ஓரிடத்தில் தன்னும் இந்த சிவனொளி பாத மலை பற்றி வருகிறதா

10 hours ago, பெருமாள் said:

முஸ்லீமோ அல்லது கிறித்தவர்களால்  அல்லுலோயாக்களால் ஒரு சைவனின்  வழிபாட்டு இடத்துக்கு போனேன் கும்பிட்டன்  என்று நெஞ்சை நிமிர்த்தி தங்கள் சமயத்தவரிடம் பெருமையாக சொல்ல முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

பெற்றோரால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மதத்தில் அறிவுக்கு ஒவ்வாத வடி கட்டிய மூடத்தனங்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. அவை குறித்து நான் இங்கு கேள்வி எழுப்பினால் அதற்கு தர்க்க ரீதியாக பதில்   மூடத்த்தனங்களை நம்புபவர்களுக்கு இல்லாததால்  உடனே சிலர் வந்து மாற்று மதங்களை  திட்ட தொடங்கி விடுவர். அல்லது எங்கோ ஒரு மூலையில் நடந்த வேறு ஒரு  மத மூடத்தனங்களை சுட்டிக்காட்டி அங்கு  ஒரு சில பைத்தியக்காரர்கள் இருப்பதால் இங்கும் அது இருந்தால் என்ன என்பது போல்,  எம்மில் அதைவிட 100 மடங்கு அதிகமாக உள்ள மூடத்தனங்களுக்கு  வக்காலத்து வாங்குவர்.

காலத்தின் வளர்சியில் மதங்கள் விதைத்த மூடத்தனங்கள் விமர்சிக்கப்படும். அது இயல்பானது. இதன் மூலம் யார் மனதும் புண்படப் போவதில்லை. அவ்வாறு   புண்படுவதாக கூறுவது எவரையும் சிந்திக்க விடாமல் தடுக்கும் ஒரு உத்தியே தவிர வேறல்ல. உண்மையில் அவர்களுக்கு இவை எல்லாம் மூடத்தனங்கள் தான் என்பது எம்மைவிட  நன்றாகவே தெரியும் அதனால் தான் ஆத்திரப்படுகிறார்கள்.  உதாரணத்திற்கு கடவுள் இல்லை என்று ஒருவன்  கூறினால் கடவுளை உண்மையாக  நம்புபவனுக்கு கோபம் வரக்கூடாது. அப்படிக் கோபம்  வந்தால் அவனுக்கும் அந்த சந்தேகம் மனதுக்குள்  உள்ளது என்றே அர்ததம்.    

துல்பேன், நீங்கள் நல்ல ஒரு கருத்தாளர். ஆரோக்கியமான கருத்துக்களை கண்ணியமாக எழுதக்கூடியவர்.
ஏனோ தெரியவில்லை பெரும்பாலான உங்கள் கருத்துக்கள் தெரிந்தோ தெரியாமலோ சைவ (இந்து) மதம் சார்ந்து கொஞ்சம் தூக்கலாகவே வெளிப்படுகிறது. சிலவேளைகளில் நீங்கள் சார்ந்த மதம் தான் சைவம் என்ற  பிறப்புரிமை காரணமாகவோ தெரியவில்லை அவை சுட்டு நீட்டுகின்றன. உங்கள் கருத்துக்களுக்கு நீங்கள் தான் உரிமையாளர். அது வேறு சிலரை விசனமடைய செய்கிறது என்ற யாதார்த்தையன்றி நீங்கள் செய்வது சரி, தவறு என்று தீர்ப்பு சொல்ல முடியாது. நீங்கள் கடவுள் மறுப்புக்கு கொள்கை உடையவர் என்றால் அது சார்ந்து உங்கள் சித்தாந்தங்கள், பட்டறிவுகள், நீங்கள் கற்றவை போன்ற அறிவு சார்ந்த வாதங்களை வைத்து எங்களை போல இங்கும் இல்லாமல், அங்கும் இல்லாமல் இருப்போரை சிந்திக்க வைக்கலாம் என்பது என்னுடைய தாழ்ந்த கருத்து.
 
Link to comment
Share on other sites

7 minutes ago, Sasi_varnam said:

இப்படியான மிகவும் பண்பான மனிதர்களும் யாழ் களத்தில் எழுதுவது உண்டா?

நம்பக் கடினமாக இருக்கிறது.

நல்லவர் ஓருவர் உளரேல் - அவர்

பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

ஐயா, உங்களை போன்றவர்களால் தான் உலகை அழிக்கும் கொரொனா வைரஸ் போன்றவை வந்து போனாலும் மனிதம் தப்பி பிழைத்து வாழ்கிறது. 

Link to comment
Share on other sites

On 3/28/2020 at 1:50 PM, போல் said:

கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது

பொதுவாக நானும் பிரான்ஸ்க்கு விடுமுறையில் சென்ற பொழுது, உறவினர்கள் லூட்ஸ் தேவாலயத்திற்கு கூட்டிச்சென்றனர். 

அங்கே ஒரு புனித நீர் அடங்கிய வேளாங்கன்னி ( என எண்ணுகிறேன்) ஒன்றை கொண்டு வந்து வீட்டில் வைத்திருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

ஒன்றா இரண்டா எடுத்துச சொல்ல. 😂😂😂

முடிந்தால் எடுத்து சொல்லுங்கள் பார்ப்போம் ...வேண்டுமானால் மருதரிடம் உதவி கேட்கலாம் ...உங்களிடம் மத காழ்ப்புணர்வைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று தெரியும் ...தெரிந்திருந்தால் இவ்வளவு காலத்திற்கு எழுதி இருக்க மாட்டீ ர்களா ?
 
Link to comment
Share on other sites

10 minutes ago, ரதி said:

முடிந்தால் எடுத்து சொல்லுங்கள் பார்ப்போம் ...வேண்டுமானால் மருதரிடம் உதவி கேட்கலாம் ...உங்களிடம் மத காழ்ப்புணர்வைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று தெரியும் ...தெரிந்திருந்தால் இவ்வளவு காலத்திற்கு எழுதி இருக்க மாட்டீ ர்களா ?
 
ரதி கைப்புண்ணுக்கு  கண்ணாடி கேட்கின்றீர்கள். ஏற்கனவே பலவற்றை கூறி உள்ளேன். நீங்களும் கலந்து கொண்டிருக்கின்றீர்கள். பரவாயில்லை நேரம் கிடைக்கும் போது சுட்டிக்காட்டுகிறேன். 

மேலும  மதக் காழ்புண்வு என்றால என்ன என்பதே உங்களுக்கு தெரியவில்லை.   ஒரு மதத்தை தீவிரமாக நம்பிக்க்கொண்டு மற்ற மதத்தை நம்பும் மக்கள் மீது வெறுப்பை உமிழ்வதற்கு பெயரே மதக்காழ்புணர்வு. அதை எனக்கு உபயோகிப்பதால் உங்களுக்கு மதிழ்சசி என்றால் தாராளமாக அந்த மகிழ்சியைப் பெறுக. 

Link to comment
Share on other sites

33 minutes ago, ரதி said:

முடிந்தால் எடுத்து சொல்லுங்கள் பார்ப்போம் ...வேண்டுமானால் மருதரிடம் உதவி கேட்கலாம் ...உங்களிடம் மத காழ்ப்புணர்வைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று தெரியும் ...தெரிந்திருந்தால் இவ்வளவு காலத்திற்கு எழுதி இருக்க மாட்டீ ர்களா ?
 
ரதி கைப்புண்ணுக்கு  கண்ணாடி கேட்கின்றீர்கள். ஏற்கனவே பலவற்றை கூறி உள்ளேன். நீங்களும் அந்தத் திரிகளில்  கலந்து கொண்டிருக்கின்றீர்கள். பரவாயில்லை நேரம் கிடைக்கும் போது சுட்டிக்காட்டுகிறேன். 

மேலும  மதக் காழ்புண்வு என்றால என்ன என்பதே உங்களுக்கு தெரியவில்லை.   ஒரு மதத்தை தீவிரமாக நம்பிக்க்கொண்டு மற்ற மதத்தை நம்பும் மக்கள் மீது வெறுப்பை உமிழ்வதற்கு பெயரே மதக்காழ்புணர்வு. அதை எனக்கு உபயோகிப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் தாராளமாக அந்த மகிழ்ச்சியைப் பெறுக. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெகோவா மதம் ஏனைய சகல மதங்களையும் எதிர்க்கும் மதம் என்பதனை இங்கே அறியதருகின்றேன்.அவர்கள் தாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்பதை எல்லா இடத்திலும் நிரூபிக்க முயல்பவர்கள். ஜெகோவா மதத்தினர் சைவ இந்து வரலாறுகளை நன்கு படித்து கரைத்து குடித்து விட்டுத்தான் வாதாட வெளிவருவார்கள். இவர்கள் தங்களை யாரென்று வெகு சீக்கிரம் அடையாளம் காட்ட மாட்டார்கள்.அதிலும் சுவீஸ் தமிழ் ஜெகோவா பற்றி யாழ்களத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டு விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

ரதி கைப்புண்ணுக்கு  கண்ணாடி கேட்கின்றீர்கள். ஏற்கனவே பலவற்றை கூறி உள்ளேன். நீங்களும் கலந்து கொண்டிருக்கின்றீர்கள். பரவாயில்லை நேரம் கிடைக்கும் போது சுட்டிக்காட்டுகிறேன். 

மேலும  மதக் காழ்புண்வு என்றால என்ன என்பதே உங்களுக்கு தெரியவில்லை.   ஒரு மதத்தை தீவிரமாக நம்பிக்க்கொண்டு மற்ற மதத்தை நம்பும் மக்கள் மீது வெறுப்பை உமிழ்வதற்கு பெயரே மதக்காழ்புணர்வு. அதை எனக்கு உபயோகிப்பதால் உங்களுக்கு மதிழ்சசி என்றால் தாராளமாக அந்த மகிழ்சியைப் பெறுக. 

எனக்கு முந்தி கடவுள்  இருந்தது ...இப்ப இல்லை .ஆனால் ,எனது மதத்தை எந்த வித காரணமும் இல்லாமல் எதற்கெடுத்தாலும் அவமதிப்பதையும், வேற்று மதத்தவர்  எமது மதத்தினரியின் இயலாமையை பயன்படுத்தி மதம் மாத்துவதை என்னால் பொறுத்து கொள்ள முடியாது 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

ஜெகோவா மதம் ஏனைய சகல மதங்களையும் எதிர்க்கும் மதம் என்பதனை இங்கே அறியதருகின்றேன்.அவர்கள் தாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்பதை எல்லா இடத்திலும் நிரூபிக்க முயல்பவர்கள். ஜெகோவா மதத்தினர் சைவ இந்து வரலாறுகளை நன்கு படித்து கரைத்து குடித்து விட்டுத்தான் வாதாட வெளிவருவார்கள். இவர்கள் தங்களை யாரென்று வெகு சீக்கிரம் அடையாளம் காட்ட மாட்டார்கள்.அதிலும் சுவீஸ் தமிழ் ஜெகோவா பற்றி யாழ்களத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டு விட்டது.

எனக்கு உந்த மதம் மாறின கூட்டத்தில் நிறைய பிரண்ஸ் இருக்கினம் ...என்ட பெஸ்ட்  பிரண்ட் கூட  அல்லேலூயா தான் ...அவர்கள் ஒருத்தர் கூட இயேசுவை நம்பி போகவில்லை என்பது தான் உண்மை ...அவர்கள் எதற்காக மதம் மாறினார்கள் என்பது எனக்குத் தெரியும்...மதம் மாறின பிறகு மற்றவர்களை மாத்துவதற்காக இயேசுவை நம்புங்கள் எல்லாம் சரி வரும் என்று கதை விடுவார்கள் …  தேவைகளுக்கு ஏற்ப சபைகளையும் மாத்துவார்கள் 

Link to comment
Share on other sites

10 minutes ago, குமாரசாமி said:

ஜெகோவா மதம் ஏனைய சகல மதங்களையும் எதிர்க்கும் மதம் என்பதனை இங்கே அறியதருகின்றேன்.அவர்கள் தாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்பதை எல்லா இடத்திலும் நிரூபிக்க முயல்பவர்கள். ஜெகோவா மதத்தினர் சைவ இந்து வரலாறுகளை நன்கு படித்து கரைத்து குடித்து விட்டுத்தான் வாதாட வெளிவருவார்கள். இவர்கள் தங்களை யாரென்று வெகு சீக்கிரம் அடையாளம் காட்ட மாட்டார்கள்.அதிலும் சுவீஸ் தமிழ் ஜெகோவா பற்றி யாழ்களத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டு விட்டது.

திரியில் விவாதிக்கப்படும் விடயத்தை திசை திருப்பி மதமாற்றத்தைப் பற்றி எழுதுவது இயலாமையின் வெளிப்பாடு. 

Link to comment
Share on other sites

On 3/31/2020 at 3:54 AM, Sasi_varnam said:

துல்பேன், நீங்கள் நல்ல ஒரு கருத்தாளர். ஆரோக்கியமான கருத்துக்களை கண்ணியமாக எழுதக்கூடியவர்.
ஏனோ தெரியவில்லை பெரும்பாலான உங்கள் கருத்துக்கள் தெரிந்தோ தெரியாமலோ சைவ (இந்து) மதம் சார்ந்து கொஞ்சம் தூக்கலாகவே வெளிப்படுகிறது. சிலவேளைகளில் நீங்கள் சார்ந்த மதம் தான் சைவம் என்ற  பிறப்புரிமை காரணமாகவோ தெரியவில்லை அவை சுட்டு நீட்டுகின்றன. உங்கள் கருத்துக்களுக்கு நீங்கள் தான் உரிமையாளர். அது வேறு சிலரை விசனமடைய செய்கிறது என்ற யாதார்த்தையன்றி நீங்கள் செய்வது சரி, தவறு என்று தீர்ப்பு சொல்ல முடியாது. நீங்கள் கடவுள் மறுப்புக்கு கொள்கை உடையவர் என்றால் அது சார்ந்து உங்கள் சித்தாந்தங்கள், பட்டறிவுகள், நீங்கள் கற்றவை போன்ற அறிவு சார்ந்த வாதங்களை வைத்து எங்களை போல இங்கும் இல்லாமல், அங்கும் இல்லாமல் இருப்போரை சிந்திக்க வைக்கலாம் என்பது என்னுடைய தாழ்ந்த கருத்து.
 
என்னைப் பற்றிய தங்களின் புரிந்துணர்வுக்கு  நன்றி  சசிவர்ணன். எனது கருத்துக்களுக்கு தர்ககரீதியில் பதிலையே நான் எதிர்பார்க்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

ஜெகோவா மதத்தினர் சைவ இந்து வரலாறுகளை நன்கு படித்து கரைத்து குடித்து விட்டுத்தான் வாதாட வெளிவருவார்கள்.

சைவத்திலிருந்து ஜெகோவாவுக்கு மாறியவர்கள் என்று வெளிப்படையாக சொல்லுங்கோ சாமி. ஜெகோவாவுக்கு போனபின் சைவத்தை கரைச்சுகுடிக்க நேரமுமில்லை, அவசியமுமில்லை அவர்களுக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.