• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
 • 0
குமாரசாமி

கொரோனா குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்?

கோவிட் 19 குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்?  

17 members have voted

 1. 1. கொரோனா குணமாகும் போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்?

  • புதிய சுகாதார நடைமுறைகள் உருவாகி சட்டமாக அமுல்படுத்தப்படும்.
  • ஒவ்வொரு பொது / தனியார் அமைப்பிற்கும் தூய்மைதான் முதல் முன்னுரிமையாக இருக்கும்.
  • முகமூடிகள், கையுறைகள் மற்றும் கண்ணாடிகள் நம் ஆடையின் ஒரு பகுதியாக மாறும்.
  • முன்பு இருந்தது போல் மீண்டும் அதே நிலைக்கு திரும்புவர்.


Question


கொரோனா குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்? 

கொரோனா இந்த உலகையே பிரட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு நாடுகளும் நாளைய பொழுது எப்படியிருக்குமென்ற நிலை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கொரோனா குணமாகிய பின் உலகம் எப்படியிருக்குமென வாக்களித்து கருத்துக்களையும் வையுங்கள். 

Edited by குமாரசாமி
 • Like 4
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

12 answers to this question

Recommended Posts

 • 0

இயற்கையின் படைப்பில் உயிர்கள் அனைத்தும் இத்யாதி குணம் கொண்டிருந்தாலும் தங்கள் சந்ததிகள் நலமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதில் அதிக அக்கறைகொள்வதைக் காணலாம். கோத்தபாயவின் சித்தமும் தன்பிள்ளைகள் நலமே வாழவேண்டும் என்பதில்தான் அக்கறை கொள்ளும். ஆகவே....

நான் முதல் இரண்டையும் தெரிவு செய்தேன்.  

Share this post


Link to post
Share on other sites
 • 2

முதலாளித்துவ பொருளாதராத்தில் மருத்துவத்தை பொது மக்கள் சார்பாக அரசுகள் மேம் படுத்த வாய்ப்பில்லை. தற்போது கூட  இருக்கும் சுவாச கருவிகளையும் வசதிகளையும் யாருக்கு முன்னுரிமை கொடுத்து பயன்படுத்துவது என்றே முதலில் சிந்திக்கின்றார்கள். இதன் பொருள் வயதானவர்களை சாக விடுவதுதான். இதனால் அரசுகளுக்கு லாபம் தான் பாராமரிப்பு செலவும் மிச்சம் அவர்கள் சேமித்த பென்சன் பணமும்  அரசுக்குதான். இவ்வாறான அனுகூலத்தால்  எதிர்காலத்தில் வயதானவர்களை கொல்லக் கூடிய கிருமிகளை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

இவ்வளவு காலமும் அணுகுண்டுகள்  அதிவேக விமானங்கள் ஏவுகணைகள் ஆளில்லா விமானங்கள் பெரும் ராணுவக் கட்டமைப்புகள் என்று பெரும் பணத்தை  செலவளித்த அரசுகளுக்கும் சரி அவர்களின் எதிரிகளுக்கும்  சரி இந்த கொரோன புதியதொரு நம்பிக்கையை கொடுத்திருக்கின்றது  அதுவனது  ஒரு நாட்டை  அடக்க முடக்க பொருளாதராத்தை நிரமூலமாக்க இதுவரை இருப்பதில் இதுவே பலமான ஆயுதம்..

கொரொனாவிடம் மனிதன் சிக்கி கொண்டானா இல்ல மனிதனிடம் கொரொனா சிக்கிக்கொள்ள போகின்றதா  என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.  

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites
 • 1
 • முன்பு இருந்தது போல் மீண்டும் அதே நிலைக்கு திரும்புவர்..

இவர்களை, குறிப்பாக 'ஆசியக் கண்டத்தவர்'களை ஆயிரம் கொரானா வந்தாலும் திருத்த முடியாது. tw_glasses:

(அது சரி, என்ன ஓட்டெடுப்புகளில் இறங்கிவிட்டீர்கள்..? பொழுது போகலை..? :))

Share this post


Link to post
Share on other sites
 • 1

நியூயோர்க்கில் அமெரிக்கா முழுவதையும் உள்ள கொரோனா நோயாளர்களை விட கூடுதலானவர்கள் ஏன் மூன்றில் ஒரு பகுதியானவர்கள் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
நாளாந்தம் விழிப்புணர்வைப் பற்றி தொலைக்காட்சி வானொலி பத்திரிக்கைகள் என்று மாறிமாறி சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
முதியவர்கள் ஆடிப்போய் வீட்டில் இருக்கிறார்களே தவிர அனேகமான இளையோர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டே திரிகிறார்கள்.
இதனாலேயே அமெரிக்கா மிகவும் தாக்கத்திற்கு உள்ளாகிறது.

கண்ணுக்கு முன்னாலேயே ஒவ்வொரு நாளும் சனம் மடிவதைப் பார்த்தும் அடங்கி இருக்காதவர்கள் நாளை இயல்புநிலை வந்த பின் கொரோனாவைப் பற்றியா யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

எனவே எனது வாக்கு
முன்பு இருந்தது போல பழைய நிலைக்கு திரும்புவர்.

Share this post


Link to post
Share on other sites
 • 1

முக்கியமாக சுகாதாரம், மருத்துவம்  மற்றும் உணவுப் பதார்த்தங்களைக் கையாள்வதில் புதிய நடைமுறைகள் ஏற்படும்.இவை சட்டமாகவும் அமுல்படுத்தப் படும்.....!

Share this post


Link to post
Share on other sites
 • 1
Posted (edited)

ஆட்கள் சந்தித்தவுடன்...  கை கொடுக்கும் பழக்கம் மறைந்து,
ஹலோ... சொல்லும் பழக்கம் ஆரம்பித்து இருக்கும்.

அநேகமானவர்கள் முகமூடியுடன் திரிவதால்....
தெரிந்தவர்களை கூட...  யாரோ என்று நினைத்து, கடந்து சென்று விடுவோம்.:grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
 • 1

21-F9-CD92-BD37-4-F53-9048-A6-C0-B141829

இன்று நியூயோர்க் வந்த நேவி ஆஸ்பத்திரி கப்பலைப் பார்க்க படமெடுக்க கூடியுள்ள கூட்டம்.

திருந்துமா அமெரிக்கா?

Share this post


Link to post
Share on other sites
 • 0
17 hours ago, ஈழப்பிரியன் said:

21-F9-CD92-BD37-4-F53-9048-A6-C0-B141829

இன்று நியூயோர்க் வந்த நேவி ஆஸ்பத்திரி கப்பலைப் பார்க்க படமெடுக்க கூடியுள்ள கூட்டம்.

திருந்துமா அமெரிக்கா?

இதையே எங்கடை சனம் செய்திருந்தால் கழுவி ஊத்தியிருப்பம்.
வீட்டுக்கு வீடு வாசற்படி எண்டால் சனம் எங்க கேக்குது?

Share this post


Link to post
Share on other sites
 • 0
Posted (edited)

முன்பு இருந்தது போல் மீண்டும் அதே நிலைக்கு திரும்புவர்.

தக்கன பிழைக்கும்!!

கொலோரா, பிளேக் கொள்ளை நோய், தொழுநோய், காசநோய்: பாக்டீரியா மனிதர்களை கொன்றொழித்த காலமும் இருந்தது. 

அது கொன்ற தொகைக்கு அருகில் கூட வைரசு ஒருபோதும் வரவில்லை.

மனிதன் இறுதியில் வென்றான். இன்று பாக்டீரியாவினால் பயம் இல்லை. பிராங்கிளினின் பென்சிலினும், பாஸ்டரின் நுண்ணுயிரிலும் மனிதனின் பெரு வெற்றி.

அடிக்கடி தன்னை மாற்றி அமைத்துக் கொள்வதால், மனிதனின் பிடிக்குள் வைரஸ் இன்னும் சிக்கவில்லை.

ஆனாலும் இந்த மாத்தி அமைத்துக் கொள்ளும் தன்மையினாலேயே மனிதனும் தப்பித் பிழைக்கின்றான். 

எத்தனை வித்தியாசமான வடிவங்கள் எடுக்கும் என்பதே மனிதனின் பொறுமையான அவதானிப்பு. 

அது முடிந்தால், வைரசுவும் அடக்கப்படும்.

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites
 • 0

"" முன்பு இருந்தது போல் மீண்டும் அதே நிலைக்கு திரும்புவர்."" 

மனிதர்கள் இயல்பாகவே மறக்கும் குணத்தையும், அதிகளவு ஆசையும் கொண்டவர்கள். 

ஆகையால். அடுத்தே வைரஸ் வரும் வரை, அதி அடுத்த 20-50 வருடங்களும் எடுக்கலாம், மனிதன் மீண்டும் ஆசை என்ற மரத்தில் ஏறிவிடுவான். 

Share this post


Link to post
Share on other sites
 • 0

ஒன்றும் நாலும் எனது தெரிவு. 
சனத்தை திருத்த முடியாது. மேலே  சிலர் சொன்னது போல்  அரசு எவ்வளவு சொல்லியும் இத்தனை மக்கள் பாதிக்கப்பட்டும் இறந்து போயும் உள்ள நிலையில் பல மக்கள் உதாசீனம் செய்ததால் தான் இன்று அமெரிக்காவில் இத்தனை மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

முதலாவது தெரிவு சட்டத்தை போட்டு மருந்தை கண்டு பிடித்து ( சில வேளை அரசின் அனுசரணையுடன் தனியார்) அதனை மக்களை போட ( பெரும்பாலும் ஊசி மருந்து)  சொல்வார்கள். இதன் மூலம் பல  பில்லியன் களை அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களும்  தமது பாக்கெட்டில் போட்டுக்கொள்வார்கள். 

Share this post


Link to post
Share on other sites
 • 0

முந்தி இருந்ததை  விட  கொஞ்சம் திருந்தி இருப்பார்கள்... குறைந்தது கை கழுவும் பழக்கமாவது  ஒட்டிக் கொள்ளும்...ஒவ்வொரு நிறுவனங்களும் சுத்தம் ,சுகாதாரம் ,தூய்மை போன்றவற்றிக்கு முன்னுரிமை கொடுப்பார்  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Answer this question...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.