Sign in to follow this  
உடையார்

தலைகீழாய் மாறும் வரலாறு: அமெரிக்கர் நுழையக்கூடாதென மெக்சிகோவில் போராட்டம்

Recommended Posts

மெக்சிகோ: சட்டவிரோதமாக மெக்சிகோ வழியாக பிற நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைவதாக குற்றம்சாட்டி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'பிற நாட்டு மக்களை அனுமதிக்கக் கூடாது' என, மெக்சிகோ அரசைக் கடுமையாக கண்டித்தார். மேலும், பிற நாட்டினரின் ஊடுருவலைத் தடுக்க, அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில், மிக நீண்ட சுவரை கட்டும் பணியையும் துவக்கினார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.


 

latest tamil news


 

இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உறுதிசெய்துள்ளது. உலகிலேயே அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அரசின் மெத்தனமே வைரஸ் வேகமாகப் பரவியதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.


latest tamil news


 

 

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மெக்சிகோ எல்லையில், மெக்சிகோ மக்கள், கடந்த மூன்று நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'மெக்சிகோவில் இதுவரை 700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் மெக்சிகோவுக்கு வந்தால், இங்குள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும். இதனால் அமெரிக்கர்களை மெக்சிகோவிற்குள் நுழையவிடக்கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அமெரிக்காவிலிருந்து மெக்சிகோ வரும் அனைவருக்கும் முறையான மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்' என்றனர்.


latest tamil news


 

மேலும், 'மெக்சிகோ எல்லையை மூடுங்கள்... அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்' என்ற பதாகைகளை ஏந்தியபடி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அமெரிக்கர்கள் நுழைய முடியாத படி, மெக்சிகோவின் எல்லைகளை மூடும் பணிகள் துவங்கியுள்ளன.

 

 

Southbound traffic into Mexico is closed at the DeConcini Port of Entry. Please use Mariposa Port of Entry. NPD is conducting traffic control, please be patient as officers direct traffic.

 
 
 
 

 


 


latest tamil news


 

 

அமெரிக்கா எல்லையை மூடிய நிலை அப்படியே தலைகீழாக மாறி, 'அமெரிக்கர்கள் மெக்சிகோவுக்குள் நுழையக்கூடாது' என, மெக்சிகோ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது, உலகளவில் அனைத்து நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2511110

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZஅந்த கோட்ட தாண்டி நீயும் வரப்படாது ; நானும் வரமாட்டன் 👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • வலுவேறாக்கம் இல்லாத- இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறையும் ராஜபக்சக்களும் ஈழத் தமிழர்களின் அரசியல்சார்ந்த விவகாரங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் சுயாதீனமற்ற தன்மை       இலங்கை ஒற்றையாட்சி அரசின் (Unitary State) நீதித்துறை எப்போதும் சுயாதீனமாகச் செயற்பட்டதாகக் கூற முடியாது. சில நேரங்களில் சுயாதீனமாகச் செயற்பட்டது என்று கூறினாலும் அது சிங்கள நிலை சார்ந்ததாக அமைந்திருக்கும். ஆனாலும் ஆட்சியாளர்களின் தேவை கருதி சில முக்கியமான சந்தர்ப்பங்களில், சுயாதீனத் தன்மை இழந்ததும் உண்டு. 1999 ஆம் ஆண்டு சந்திரிகா இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் சிறாணி பண்டாரந்யாக்கவை மூப்பு நிலைக்கு மாறாக உயர் நீதிமன்ற நீதியரசராக நியமித்திருந்தார். அப்போது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும் போராட்டமே நடத்தியிருந்தனர்- ஆனால் எதுவுமே நடக்கவில்லை. 2013ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அவரை பிரதம நீதியரசராகப் பதவி உயர்த்தியிருந்தார்.   ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான அதிகாரப் பங்கீடுகள் பற்றிய பேச்சுக்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் உண்டு- இதனாலேயே, தமிழ்த்தேசியம் என்ற கோட்பாட்டை முன்வைத்து இலங்கை அரசாங்கத்தோடு அன்று பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன   ஆனால் 2014ஆம் ஆண்டு அவரைப் பலத்காரமாகப் பதவியில் இருந்து நீக்கியிருந்தார். 1999ஆம் ஆண்டு அவரது நியமனத்தை எதிர்த்த ஐக்கிய தேசியக் கட்சி 2014இல் அவருக்காக நாடாளுமன்றத்தில் பிரேரணைகளை நிறைவேற்றிப் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை சட்டத்திற்கு மாறானதென நிரூபித்தது. ஆனாலும் மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரம் நாடாளுமன்றத்தை விட மீயுயர் அதிகாரம் கொண்டது எனச் சுட்டிக்காட்டி, மொகான் பீரிஸை பிரதம நீதியரசராக அவசர அவசரமாக நியமத்திருந்தார். மாகாண சபைகளின் நிதி அதிகாரங்களை பறிக்கும் சட்டமூலம் ஒன்று தொடர்பான சிறாணி பண்டாரநாயக்காவின் வியாக்கியானம் தன்னுடை நோக்கத்துக்கு மாறானது என்ற காரணத்தினாலேயே அவரைப் பதவி நீக்கி, மொகான் பீரிஸ் மூலமாக அந்தச் சட்ட மூலத்திற்குச் சார்பான வியாக்கியாணத்தை மகிந்த பெற்றிருந்தார். தற்போது கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தல் விவகாரத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறி செயற்படுவேன் என்ற தொனியில் அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துக்களை முன்வைக்கிறார். எச்சரிக்கையும் விடுகிறார். இலங்கை அரசியல் யாப்பில் ஜனநாயகத்துக்கு முரணான சில சரத்துகள் இருப்பதாக அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியர்கள் பலர் ஏலவே கூறியிருக்கின்றனர். குறிப்பாக ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான அதிகாரப் பங்கீடுகள் பற்றிய பேச்சுக்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் உண்டு- இதனாலேயே, தமிழ்த்தேசியம் என்ற கோட்பாட்டை முன்வைத்துப் புலிகள் இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுக்களை நடத்தியிருந்தனர். (தமிழ்த் தேசியம் என்பது தமிழ் ஈழம் அல்ல) பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் மூத்த உறுப்பினர்களுக்குக் கூட அரசியல் யாப்பில் உள்ள முரண்பட்ட தன்மைகள், நீதித்துறையின் சுயாதீனம் அற்ற நிலைகள் குறித்து நன்றாகவே புரியும்--- ஆனால் ஆளும் கட்சியாக மாறும்போது அவை தங்களுக்கும் சாதகமாகத் தேவைப்படும் என்ற நோக்கில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ஏதோ ஜனநாயக மீட்பர்கள் போன்று கத்திவிட்டுப் பின்னர் அமைதியாகி விடுவர்.   தமிழ்த்தேசிய அரசியல் சிந்தனை மக்களிடம் தாராளமாகவே உண்டு. நாடாளுமன்றக் கலைப்பையடுத்து கோட்டாபய ராஜப்சவுக்கும் இலங்கை நீதித்துறைக்கும் தற்போது ஏற்பட்டுள்ள அதிகார இழுபறியும் அதன் பின்னரான அரசியல் சூழலும் நிச்சயம், தமிழர்களுக்கு சிங்கள ஆட்சியாளர்கள் பற்றிய விழிப்புணர்ச்சியைக் கொடுக்கலாம்   அதுவும் ஈழத் தமிழர் சார்ந்த விடயங்களில் நீதித்துறை மாறான தீர்ப்புகளை வழங்கும்போது மகிழ்ச்சியோடு அமைதியாக இருப்பார்கள். குறிப்பாக வடக்குக் கிழக்குப் பிரிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், காணி அபகரிப்பு, கைதாகும் இராணுவத்தினர் பிணையில் விடுதலை செய்யப்படுதல், அல்லது பொது மன்னிப்பு வழங்கப்படுதல் போன்ற விடயங்களில் அமைதியாக இருப்பர். (அப்போது சிங்கள தேசம் என்ற உணர்வு மேலோங்கியிருக்கும்) வேண்டுமானால் அந்தக் கட்சிகளில் அங்கம் விகிக்கும் தமிழ் உறுப்பினர்கள் சும்மா ஒப்பாசாரத்துக்காக ஆவேசமாகச் சத்திட்டு அறிக்கை விடுவர்- அதுவும் அரசியல் நாடகம் என்று சிங்களத் தலைவர்களுக்கும் புரியும். ஆகவே தமிழ்க் கட்சிகள் இந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் நின்று கொண்டு சாதாரண கட்சி அரசியலில் ஈடுபடும் அதேவேளை, தமிழ்த் தேசியக் கோட்பாட்டின் அடிப்படையில் இருதரப்புப் பேச்சுக்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான நிலையில் கடந்த ஒரு தசாப்பத காலத்தில் அதற்கான தற்துணிவு தமிழ்க் கட்சிகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாகத் தமிழரசுக் கட்சி 1950-60களில் வெளிக்காட்டிய தமது அரசியல் இயலாமைகளில் இருந்து பாடம் கற்காமல் முப்பது ஆண்டுகால போரின் பின்னரும் மீண்டும் அந்த இயலாமைகளையே தமது மிதவாத அரசியலாகவும் புதிய ஜனநாயகப் பண்பாகவும் கண்பித்து மற்றுமொரு அழிவை நோக்கிச் செல்கின்றதா என்ற கேள்விகளும் எழாமலில்லை. தமிழ்த்தேசிய அரசியல் சிந்தனை மக்களிடம் தாராளமாகவே உண்டு. நாடாளுமன்றக் கலைப்பையடுத்து கோட்டாபய ராஜப்சவுக்கும் இலங்கை நீதித்துறைக்கும் தற்போது ஏற்பட்டுள்ள அதிகார இழுபறியும் அதன் பின்னரான அரசியல் சூழலும் நிச்சயம், தமிழ் இளைஞர்களுக்கு சிங்கள ஆட்சியாளர்கள் பற்றிய விழிப்புணர்ச்சியைக் கொடுக்கலாம். அது மாற்று அரசியல் தளத்திற்கான, ஜனநாயகக் கட்டமைப்பின் கீழான தேசிய இயக்கம் ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனையைத் தோற்றுவிக்கலாம். https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=1559&fbclid=IwAR3rjsCxhVsjzvYb2jszFhFethRrngR8nn7zNSbKsUXx73oyCsKL7IoxX28
    • The National Guard has been activated in Washington D.C. to help protect the White House From CNN’s Greg Clary and Cat Gloria The National Guard has been activated in Washington, D.C. to assist police handling protests around the White House, according to a statement from the DC National Guard on Facebook. The DC National Guard (DCNG) ultimately reports to the President but was activated at the direction of the Secretary of the Army, according to the statement. https://www.cnn.com/us/live-news/george-floyd-protests-05-30-20/index.html https://www.cnn.com/us/live-news/george-floyd-protests-05-30-20/h_14f63a8756d1020cf821227fba10b8ad
    • அமெரிக்க மண்ணில் புதிய வரலாறு : 2 நாசா விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது எலான் மஸ்க்கின் "ஸ்பேஸ்எக்ஸ்" தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட் 2 அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் அமெரிக்க மண்ணிலிருந்து நேற்று நாசா சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது. வர்த்தகரீதியான விண்வெளி பயணத்துக்கு புதிய விடியலாக இந்த பயணம் அமைந்து புதிய வராலாற்றையும் படைத்துள்ளது. அமெரிக்க மண்ணில், அமெரிக்க ராக்கெட்டில் , அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் ராக்கெட் நாசாவுக்கு பாய்ந்துள்ளது. விண்வெளிக்கு இதுநாள் வரை எந்த தனியார் நிறுவனமும் மனிதர்களை அனுப்பியதில்லை. வரலாற்றிலேயே முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் எனும் பெருமையை “எலாம் மஸ்க்கிற்கு சொந்தமான " ஸ்பேஸ்எக்ஸ்"நிறுவனம் பெற்றது.       இதற்கு முன் மனிதர்களை விண்ணுக்கு அமெரி்க்கா, ரஷ்யா, சீனா அரசுள் மட்டுமே அனுப்பி இருந்தன.முதல்முறையாக தனியார் நிறுவனம் மனிதர்களை அனுப்பியுள்ளது கடந்த 2011-ம் ஆண்டுக்குப்பின் ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அமெரிக்க மண்ணிலிருந்து ராக்கெட்டை அனுப்பவில்லை. ஏறக்குறைய 10ஆண்டுக்குப்பின் அமெரி்க்க மண்ணிலிருந்து இரு அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் நாசாவுக்கு முதல்முறையாக ஸ்பேக்எக்ஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ப்ளோரிடாவில் உள்ள கேப் கெனரவலில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இரு மனிதர்களைச் சுமந்துகொண்டு அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 3.22மணிக்கு விண்ணில் ராக்கெட் சீறப்பாய்ந்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் நிருபர்களிடம் கூறுகையில் “என்னுடையது மட்டுமல்லாமல் ஸ்பேஸ்எக்ஸ்ஸி்ல் உள்ள ஒவ்வொருவரின் கனவும் உண்மையாகி இருக்கிறது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரின் மதிப்பிடமுடியாத உழைப்பும் இந்த பயணத்தின் வெற்றிக்கு பங்களித்துள்ளது. இந்த பயணம் வெற்றியாக அமைய ஏராளமானோரின் பங்களிப்பும் இருக்கிறது. அமெரிக்க மண்ணில், அமெரிக்க விண்வெளி வீரர்களுடன், அமெரிக்க ராக்கெட் விண்ணுக்கு புறப்பட்டுள்ளது புதிய சாகப்தம்.” எனத் தெரிவித்தார்   இந்த ராக்கெட்டில் நாசா விண்வெளி வீரர்களான அமெரி்க்காவைச் சேர்ந்த பாப் பெக்கென்(49), டாக் ஹர்லி(53) இருவரும் பயணித்தனர். இந்த ராக்கெட் 19 மணிநேரம் விண்ணில் பயணித்து விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள நாசா விண்வெளி மையத்தை சென்றடையும். கடந்த வாரமே இந்த ராக்கெட் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கரோனா வைரஸால் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்டு ஒரு லட்சம் உயிர்களை பலிகொடுத்துவிட்டு, 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 4 கோடி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு மனிதர்களை அனுப்பியது அந்தநாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறது ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் வெற்றிகரமாக இரு விண்வெளி வீர்ர்களுடன் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதைப் பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்கிற்கு வாழ்த்துத் தெரிவித்தனர். விண்வெளிக்கு ராக்கெட் வெற்றிகரமாக சென்றதைப் பார்த்த அதிபர் ட்ரம்ப் நிருபர்களிடம் கூறுகையில் “ இந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள். அமெரிக்க மக்கள், நாசா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த நிகழ்வைப் பார்த்தபோது உற்சாகமாக இருந்தது. ராக்கெட் பறக்கும்போது ஏற்பட்ட சத்தம், தீப்பிளம்பு பார்க்கவேமிரட்சியாக இருந்தது. இந்த பயணம் நாட்டுக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியாக அமையும். நமது நாடு சிறப்பாக செயலாற்றி வருகிறது. கரோனாவால் நாம் பல துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில்இந்த பயணம் உற்சாகத்தை அளிக்கிறது” எனத் தெரிவித்தார் ராக்கெட் புறப்படும் முன் அதில் பயணிக்கும் இரு விண்வெளி வீரர்களுடனும் அதிபர் ட்ரம்ப் பேசினார். மேலும் ராக்கெட் வெற்றிகரமாகச் சென்றபின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்கிடமும் அதிபர் ட்ரம்ப் பேசினார். இதற்கிடையே அமெரிக்கா வரும் 2024-ம் ஆண்டில் அர்டிமிஸ் திட்டத்தில் நிலவுக்கு முதல் பெண்ணையும், அடுத்த ஆண் வீரரையும் அனுப்பத் திட்டமிட்டுள்ளது https://www.hindutamil.in/news/world/557144-history-in-the-making-spacex-propels-two-nasa-astronauts-into-orbit-3.html        
    • கருப்பினத்தவர் கொலை! கலவர பூமியாக மாறும் அமெரிக்கா: தயார் நிலையில் ராணுவம் அமெரிக்காவில் கருப்பின இளைஞரின் கழுத்தை நெரித்து கொன்ற, போலீஸ் அதிகாரி மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவம் தயார் நிலையில் உள்ளது. பதிவு: மே 31,  2020 06:37 AM வாஷிங்டன் அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ஆம் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார்.இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னபொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன. மினசோட்டா,ஜார்ஜியா,ஓஹியோ,கொளராடோ,விஸ்கான்சின்,கென்டக்கி,உட்டா,டெக்சாஸ்,கொலம்பியா ஆகிய மாநிலங்களில் நிலமை மோசமாக உள்ளது போராட்டங்கள் வெடித்து உள்ளன இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரி டெரெக் சவுவின், 44, கைது செய்யப்பட்டு, அவர்மீது, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, நேற்று முன்தினம் இரவு, 8:௦௦ மணி முதல், நேற்று காலை, 6:௦௦ மணி வரை, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் ஊரடங்கை பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மக்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். உணவகம், வங்கி ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல மணி நேரமாக எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுப்படுத்தினர். இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க இராணுவத்தின் போலீஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.ஆனாலும் லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட பல நகரங்களில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. புரூக்ளினில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.ஹூஸ்டனில் நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/31063724/George-Floyd-protests-spread-nationwide.vpf